அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நாம் வழக்கமாக சென்று தரிசித்து வரும் ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் ஜீவாலயம் பெருங்களத்தூரில் உள்ளது. நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் இது தான். முதன் முதலில் இங்கு தான் உழவாரப்பணி முறையாக அறிவித்து செய்தோம். வருடம் தோறும் ஐயாவின் குரு பூஜை கண்டு வருகின்றோம். இந்த ஆண்டில் 3 ஆம் ஆண்டாக தொடர்கின்றோம்.சில காரணங்களால் இங்கே செல்ல இயலவில்லை. ஆனால் குருவின் அருள் நேற்று நம் வீடு தேடி வந்தது. இதோ ..ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம், மேலும் 97 ஆவது ஆண்டு, 96 ஆவது ஆண்டின் அழைப்பித்தாலும் சேர்த்து தருகின்றோம்.
ஆன்மிகத்தோடு இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அற்புதமான இடம். மாதம் ஒரு முறையாவது இங்கு வந்து செல்லுங்கள், உங்கள் வாழ்வில் கண்டிப்பாக மாற்றம் பெறுவதை நீங்கள் உணர்வீர்கள். இது போன்ற ஒரு ஜீவ ஆலயம் நம் அருகில் இருப்பது நாம் செய்த புண்ணியமே. இந்த ஜீவ ஆலயத்தில் ஆன்ம லயம் பெற ஒவ்வொரு தமிழ் மாத மகம் பூஜையில் கலந்து குருவிற்கு தொண்டு செய்யுங்கள். உழவாரத்தோடு நாம் இங்கே "தமிழ் கூறும் நல்லுலகம் " என்ற சிந்தனை நிகழ்ச்சியை இங்கே நடத்தினோம். அதன் அனுபவத்தையும் கீழே கொடுத்திருக்கின்றோம்.மேலும் நாம் நம் TUT குழுவின் இரண்டாம் ஆண்டு விழாவினை இங்கே குருவருளால் நடத்தினோம். இன்னும் அந்த பசுமை நினைவுகள் நம் மனதுள் உள்ளது. ஒரு விழாவினை நடத்துவது என்றால் சும்மாவா? அதுவும் சென்னையின் புறநகரில் நடத்துவது என்றால் இன்னும் கடினமே. ஆனால் அன்றைய தின விழாவும் தான், அகத்தியரே நம்மை வழிநடத்தி, அகத்தியர் கீதம் இசைக்க செய்து..அப்ப்பா..குருவருள் பரிபூரணம் என்பது நம் தல அன்பர்களுக்கு கண்கூடு.
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html
நாம் வழக்கமாக சென்று தரிசித்து வரும் ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் ஜீவாலயம் பெருங்களத்தூரில் உள்ளது. நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு பிள்ளையார் சுழி போட்ட இடம் இது தான். முதன் முதலில் இங்கு தான் உழவாரப்பணி முறையாக அறிவித்து செய்தோம். வருடம் தோறும் ஐயாவின் குரு பூஜை கண்டு வருகின்றோம். இந்த ஆண்டில் 3 ஆம் ஆண்டாக தொடர்கின்றோம்.சில காரணங்களால் இங்கே செல்ல இயலவில்லை. ஆனால் குருவின் அருள் நேற்று நம் வீடு தேடி வந்தது. இதோ ..ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 98 ஆவது ஆண்டு குருபூஜை விழா - 10.02.2020 அழைப்பிதழை இங்கே பகிர்கின்றோம், மேலும் 97 ஆவது ஆண்டு, 96 ஆவது ஆண்டின் அழைப்பித்தாலும் சேர்த்து தருகின்றோம்.
உலக மக்களின் அறியாமை என்னும் இருளை அகற்றவும், அறிவு ஒளி பெருகவும் ஆன்ம ஒளி நல்கவும் தஞ்சைத் தரணியில் அவதரித்து தத்தாத்ரேய பீடம், சுயம்பிரகாச சுவாமிகளென்னும், திருவிடைமருதூர் மௌனசுவாமிகளின் சீடராகி உலக மக்களின் துன்பம் நீவி இன்பம் அடைவதற்காக தவங்கனிந்து, நவங்கனிந்து, சிவங்கனிந்து இறையனுபூதி பெற்று, இரண்டற்ற, ஏகமான இறைவனில் இரண்டறக் கலந்து, மறைபொருளின் சத்தியமாய், ஓங்காரமாய், நித்தியமான பேருணர்வில் பிரம்மதத்துவாய் ஒளிரும் சத் - குரு பூஜ்யஸ்ரீ ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் காரண குருவாய், காரிய உருவாய், சிவவடிவமாய் பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டி , சென்னையில் ஆலப்பாக்கம் சதானந்தபுரத்தில் எழுந்தருளியுள்ளார்.
சுவாமிகளின் இந்த வருடத்திய 97 ஆவது மகா குரு பூஜைக்கு விழா சிறப்புடன் நடைபெற இருக்கின்றது. நிகழும் விகாரி வருடம் தைத்திங்கள் 27ம் நாள் (10.02.2020 திங்கட்கிழமை மகம் நட்சத்திரம் கூடிய சுபதினத்தில் ஆன்மிக அன்பர்கள் மூலமாக நடக்க உள்ள குருபூஜை விழாவில் பங்கேற்று சத்-குருவின் திருவருளும், அருளாசியும் பெற்று விழாவினை சிறப்பிக்க வேண்டுமாய் ஸ்ரீ சதானந்த சுவாமிகள் அறக்கட்டளை சார்பாகவும், நமது தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பாகவும் அழைக்கின்றோம்.
நம்மைப் பொறுத்தவரை, நாம் உழவார செய்ய பிள்ளையார் சுழி போட்ட இடம், அங்கே தொடங்கிய பயணம் இன்னும் நீண்டு கொண்டே செல்கின்றது. யாரைத் தெரியும், எப்படி செய்ய போகின்றோம் என்று பல கேள்விக்குறியோடு தான் ஆரம்பித்தோம். குருவருளால் சிறப்பாக எந்தவொரு தடையுமின்றி, தடங்களுமின்றி. ஒவ்வொரு உழவாரத்தின் அனுபவமும் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் படி நடை பெற்று வருகின்றது என்றால், அது குருவருளால் தான். மனதில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளதா? மனம் சஞ்சலப் படுகிறதா? இதோ வருகின்ற மகம் பூஜைக்கு வாங்க..தெளிவோடு சொல்லுங்க...சுமார் 20 நிமிடம் சதானந்த சுவாமிகள் அதிஷ்டானத்தில் அமர்ந்து தங்களின் நியாயமான கோரிக்கையை பிரார்த்தனையாக வைக்கவும். மற்றதை சத்-குரு பார்த்துக் கொள்வார்.
இதோ.. 97 ஆவது ஆண்டு அழைப்பிதழில் உள்ள முகப்பு படம் கீழே.
குரு பூசைக்கு உபயம் நல்க விரும்புவோர் கீழே உள்ள பொருட்களை சரிபார்த்து, ஆசிரம நிர்வாகி திரு.ஆனந்த் அவர்களை தொடர்பு கொண்டு உதவலாம்.
96 ஆவது ஆண்டு அழைப்பிதழில் உள்ள முகப்பு படம் கீழே.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post.html
ஸ்ரீமத் சதானந்தபிரம்ம குருதேவதத் சுவாமிகள் மகம் பூசை (06-07-2019) - https://tut-temples.blogspot.com/2019/07/06-07-2019.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
No comments:
Post a Comment