"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, January 31, 2020

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.


ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. ஒவ்வொரு நிகழ்விலும் நாம் நெக்குருகி போகின்றோம். ஆப்பூர் பெருமாள் கோயில் சென்று உழவாரப் பணி செய்ய அருள் கிடைத்ததை பார்த்தோம். ஒரு அண்மைக்கால அற்புதக் கோயில் பற்றி ஜீவ நாடி அற்புதங்கள் பகுதியில் பார்த்தோம். நம் குருநாதர் அகத்தியரின் அருளாசியினால் லிகித ஜெபம் பற்றி  கண்டோம். இது ஒரு துளி மட்டுமே. காரைக்குடி அகத்தியர் திருமகன் ஐயா அவர்களின் சந்திப்பு, மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் சந்திப்பும் நமக்கு ஜீவ நாடி அற்புதங்களே. மதுரை பரமசிவன் ஐயா அவர்களின் தொண்டிற்கு நாம் தலை வணங்குகின்றோம். மதுரை இறையருள் மன்றத்தின் சேவையும் பாராட்டுக்குரியது. சில பதிவுகளுக்கு முன்னர்  பதிவில் ஜீவ நாடி என்றால் என்ன என்று பார்த்தோம். அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி கேட்டு பதிவு சமர்பித்தோம். மேலும் இரு அன்பர்களின் ஜீவ நாடி அற்புதங்களைப் பார்த்தோம்.

நம் குருவின் குருவாக முருகப் பெருமானை நம் தலத்தில் பல பதிவுகளில் கண்டு வருகின்றோம். ஓதிமலை முருகர், வள்ளிமலை முருகன், குறிஞ்சி ஆண்டவர், பூம்பாறை முருகர்,தோரண மலை முருகர்,  குராவடி முருகர், செங்கல்பட்டு அருகே செம்மலை முருகன் ,வயலூர் முருகன், மருதமலை முருகன்,சிவன் மலை ஆண்டவர்  என நாம் அருள் பெற்று வருகின்றோம். இந்தப் பதிவையும் ஜீவ நாடி அற்புதங்கள் தொடரில் நாம் எடுத்துக் கொள்ளலாம். 

கலியுகத்தில் கண்கண்ட கடவுளாம்  முருகப் பெருமான் பல தலங்களில் அருள் பாலித்து வருகின்றார். முருகப் பெருமான் தமிழ் நாட்டில் பல நாட்டில் அற்புதங்கள் நிகழ்த்தி வருகின்றார். அறுபடை வீடுகள் மட்டுமின்றி பல தலங்களில் நம்மை வழிநடத்தி அருள் பெற அருளாட்சி செய்து வருகின்றார் என்பது கண்கூடு. இது தவிர அவ்வப்போது ஜீவ நாடிகள் வழியாக பல்வேறு தலங்கள் வெளிப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு திருத்தலம் தான் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம். 





ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி திருக்கோயில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள விளாங்குட்டை புதுக்காடு கிராமத்தில் அமைத்துள்ளது. இந்த ஆலயத்தில் பின்னே உள்ள மலையை பார்த்தாலே உங்களுக்கு சித்தர்களின் அருள் கிடைக்கும். ஆம். அகத்திய பெருமான் இந்த ஆலயத்தின் பின்னே உள்ள மலையில் சயன கோலத்தில் காட்சி தருகின்றார்.இது முருகப்பெருமான் நாடி மூலமும் அருளாசியாக கிடைத்துள்ளது என்பது அதிசயம் ஆகும்.






இங்கு மூலவர் ஸ்ரீ பாலசுப்ரமண்யர்  மற்றும் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி என்று அருள்பாலிக்கின்றார்.உற்சவராக ஸ்ரீ பாலசுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீகல்யாண சுப்ரமண்யர்  என்று காட்சி தருகின்றார்கள்.வள்ளி தெய்வானையுடன் கந்தனின் பாதமும் இங்கே உள்ளது என்பது கூடுதல் சிறப்பு.




திருஅண்ணாமலை மீனாட்சி நாடியில் இந்த ஆலயம் 2500 ஆண்டுகள் பழமையானது என்று சொல்லப்பட்டுள்ளது.முருகன் ஜீவநாடியில் தோன்றி அருள்வாக்கு சொல்லும் அற்புத தலம் இது. முருகனின் பாதம் பட்ட தலம் என்றும் ஜீவநாடியில் சொல்லப்பட்டுள்ளது.

அனைத்தும் இங்கே இரண்டாக இருப்பது சிறப்பு.  இரண்டு மூலவர்கள், ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி மற்றும் பாலசுப்ரமண்யர். இருவருக்கும் முன்பாக இரண்டு வாகனங்கள் மயில் வாகனம் மற்றும் கஜ வாகனம். இரண்டு பலிபீடங்கள் உண்டு. இரண்டு விநாயகர் உண்டு.ஒருவர் வலம்புரி விநாயகர். மற்றொருவர் இடம்புரி விநாயகர். முருகப் பெருமானுக்கு முன்பாக 18 சித்தர்களை குறிக்கும் வண்ணம் 18 அடி வேல் ஒன்றும் உண்டு. இது போகர் தவம் செய்த இடம் ஆகும்.






மாதம் தோறும் அமாவாசை பூசை சிறப்பாக இங்கே நடைபெற்று வருகின்றது. நாம் இன்னும் இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள வில்லை. முருகன் அருளுக்காக காத்திருக்கின்றோம். அமாவாசை பூசையில் வராஹி ஹோமம் இங்கே செய்யப்படுகின்றது. இன்னும் ஒரு சிறப்பாக இங்கே வைகாசி விசாகம் அன்று குழந்தைப்பேறுக்கு மருந்து தரப்படுகின்றது. இதுவரை நூற்றுக்கணக்கான அன்பர்கள் இங்கு வந்து வைகாசி விசாக மருந்து பெற்று பெரும் பேறாகிய குழந்தைப்பேறு பெற்று உள்ளார்கள். 

இங்கு முருகப் பெருமான் ஜீவ நாடியில் அனைவருக்கும் வழிகாட்டுவது சிறப்பாகும்.இதன் மூலம் எண்ணற்ற அன்பர்கள் பலன் பெற்று வருகின்றார்கள். உடல் நலம், திருமணம், குழந்தைப்பேறு, ஆன்மிகம் என அனைத்திற்கும் இங்கே தீர்வு உண்டு. ஞான ஸ்கந்த உபாசகர் திரு.ஜெகதீஸ்வரன் அவர்கள் இங்கே வரும் அனைவருக்கும் முருக நாடி மூலம் வழி காட்டி வருகின்றார். 




நாமும் கடந்த மூன்று வருடங்களாக ஞான ஸ்கந்த உபாசகர் மூலம் நம் தல பணிகள்,சேவைகள் மற்றும் நம் இல்வாழ்விற்கு நாடி பார்த்து வருகின்றோம். சென்ற ஆண்டு 2019 ஆண்டில் என் திருமணம் முருகப் பெருமான் ஆசியால் திருச்செந்தூரில் நடைபெற்றது. அனைத்துமே முருகனருள் தான். ஏற்கனவே நம் தலத்தில் ஜீவ நாடி அற்புதங்கள் என்று தொடர் பதிவு அளித்து வருகின்றோம். அனைவரும் படித்து பயன் பெறுமாறு வேண்டுகின்றோம்.





இன்றைய சஷ்டி நாளில் முருகப் பெருமான் அருள் அனைவருக்கும் கிடைக்க நாம் பிரார்த்தனை செய்கின்றோம்.

உள்ளம் உருகுதையா என்று ஆடிப் பாடி தைப்பூசத்தையும் வரவேற்போம்.

உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
பாடிப் பரவசமாய் உனையே
பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
ஆடும் மயிலேரி
முருகா ஓடி வருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைத்திடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
பாசம் அகன்றதய்யா
பந்த பாசம் அகன்றதய்யா
உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே
ஈசன் திருமகனே எந்தன்
ஈனம் மறைந்ததப்பா
உள்ளம் உருகுதய்யா
ஆறு திருமுகமும்
ஆறு திருமுகமும்
அருளை வாரி வழங்குதய்யா
ஆறு திருமுகமும் உன்
அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும்
வீரமிகு தோளும் கடம்பும்
வெற்றி முழக்குதப்பா
உள்ளம் உருகுதய்யா
கண்கண்ட தெய்வமய்யா
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
கண்கண்ட தெய்வமய்யா
நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல்
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா
உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள்
ஆசை பெருகுதப்பா முருகா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா
உள்ளம் உருகுதய்யா

இந்தப் பாடல் பற்றி அடுத்த பதிவில் பேசுவோம்.


மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html


ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment