"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, January 20, 2020

தேனி மாவட்டம் - அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்டேஸ்வர சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நமது அன்பர் திரு.சோமசுந்தர காமாட்சி  ஐயாவிடம் இருந்து கீழ்க்கண்ட செய்தி நமக்கு கிடைத்தது.

அன்பே சிவம்
மெய்யன்பீர்

மனதாலே சிவனாருக்கு ஆலயம் எழுப்பி கும்பாபிஷேகம் செய்த நாயனார் கதை நாம் அறிந்த்தே
நாம் எடுத்துக் கொண்ட 1500 ஆண்டு கால பழமை வாய்ந்த உப்பார்பட்டி சிவன் கோயில் திருப்பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகிறது.கும்பாபிஷேக விழா நாள் 07/02/2020 வெள்ளிக் கிழமை நடைபெற உள்ளது.எஞ்சியுள்ள திருப்பணிகள் மற்றும் கும்பாபிஷேக பணிகளுக்கு 5 லட்சங்கள் வரை தேவை உள்ளது.கையேந்தி யாசிக்கின்றோம்.நீங்கள் கொடுக்க நினைக்கும் ஒரு சிறு தொகையும்,சிவ ஆலயப் பணியில் பெரிய அளவில் உதவும்.தங்களது மேலான உதவியை எதிர் நோக்கும் திருப்பணி குழுவில் கடையேன் கரியன்

திரு.சோமசுந்தர காமாட்சி  ஐயா அவர்களை நேரில் சந்தித்தது இல்லை. அலைபேசியில் மட்டுமே அவ்வப்போது பேசி வந்துள்ளோம். இந்த செய்தி நமக்கு கிடைத்ததும் நாம் நேரில் சென்று கோயிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதே போன்று பொங்கல் விடுமுறையில் தேனிக்கு சென்ற போது காணும் பொங்கல் அன்று தை மாத முதல் வெள்ளி அன்று வீரபாண்டி சென்று அருள்மிகு ஸ்ரீ கௌமாரிஅம்மன் தரிசனம் செய்தோம். அன்றைய தின அஷ்டமி அன்னதானம் அங்கேயே செய்தோம். பின்னர் அங்கிருந்து உப்பார்பட்டி சென்றோம். 

உப்பார்பட்டி ஊரானது சதுர்வேதமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றது. ஊரினுள் சென்று நன்கு பார்க்கும் போது தற்போது கோயில் இருக்கும் இடத்தை பார்க்கும் போது, ஊரானது கோயிலைத் தாண்டி வெளியே சற்று இடம் பெயர்ந்துள்ளதாக தெரிகின்றது. கோயிலில் நாம் கல்வெட்டை பார்க்க முடிந்தது.

இந்த திருக்கோயிலுக்கு அகத்தியத்திற்கும் தொடர்பு உண்டு. இங்கே திருஅண்ணாமலை ஸ்ரீ லோபாமாதா சமேத ஸ்ரீ அகத்திய ஆசிரம ஸ்ரீ ல ஸ்ரீ சிவகுரு மங்கள கந்தர்வா அவர்களும்,  ஸ்ரீ ல ஸ்ரீகுரு  மங்கள கந்தர்வா அவர்களும் தங்கி அன்னதானம் செய்து இருக்கின்றார்கள் என்பது சிறப்பு செய்தி ஆகும். அகத்திய அடியார்கள் ஒவ்வொருவரும் இங்கே வந்து ஸ்ரீ அன்னபூரணி அம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீ திருநீலகண்டேஸ்வர சுவாமி தரிசனம் பெறுவது இம்மைக்கு சிறப்பாக அமையும் என்பது கண்கூடு. அட..இப்போது தான் அம்மையின் பெயரைக் கண்டோம். 19.01.2020 முதல் நாம் ஒரு கைங்கர்யம் செய்து வருகின்றோம். அது இங்கே நாம் வழிபட்ட அன்னையின் அருளாலே தான் கிடைத்துள்ளது.

சரி..கோயில் தரிசனம் பெறலாமா?


நம்மை வரவேற்கும் கோயிலின் நுழைவாயில்.




உள்ளே சென்றதும் 1500 வருட பழமையின் புனிதம் உணர்ந்தோம். சாரம் கட்டி கும்பாபிஷேக ஏற்பாடுகள் நடைபெறுவது கண்டோம்.




மூலவர் கோபுரம் வண்ணப்பூச்சு கண்டு சற்று தயார் நிலையில் கண்டோம்.







கோயில் வெளியே சுற்று சுவர் முழுதும் கல்வெட்டு இருப்பதை பார்த்தோம்.




இங்கேயும் கல்வெட்டு எழுத்துக்கள் காண முடிந்தது.






சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்த கோயில் என்று கல்வெட்டு பார்க்கும் போது தெரிந்தது.


வழக்கத்திற்கு மாறாக இங்கே நாம் கோயிலை சுற்றி வந்தோம். அப்போது பிரகாரத்தில் இறை மூர்த்தங்களை கண்டோம். பாலாலயம் செய்யப்பட்டு இருந்தமையால் சரியாக இறை மூர்த்தங்கள் காண முடியவில்லை. மீண்டும் ஒரு தரிசனத்தால் மனம் நிறைவோம்.

கோயிலை வலம் வந்த போது, வலப்புறதே கிணறு இருந்தது.







கிணற்றை ஒற்றி அழகிய பூந்தோட்டம் இருப்பது கண்களுக்கு விருந்தாக இருந்தது.







இதோ..கோயிலின் நுழைவு வாயில் . நந்தியம் பெருமான் தரிசனம் கண்டு உள்ளே சென்றோம்.



         கோயில் மடப்பள்ளி வேலைகள் ஆயத்தப்பணியில் இருந்தது உங்கள் பார்வைக்கு.




உள்ளே சென்று முதலில் ஸ்ரீ திருநீலகண்டேஸ்வர சுவாமி தரிசனம் பெற்றோம். அடுத்து அருள்மிகு ஸ்ரீ அன்னபூரணி அம்மன் தரிசனம் கண்டோம்.


தரிசனம் முடித்து வெளியே வந்து அமர்ந்து சற்று பேசிக்கொண்டு இருந்தோம்.




திரு.சோமசுந்தர காமாட்சி  ஐயா அவர்களிடம் நம் தளம் சார்பில் சிறு தொகையை கோயில் கும்பாபிஷேகப்பணிக்கு வழங்கினோம்.




இதோ. கும்பாபிஷேக அழைப்பிதழ், வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு இறையருள் பெற நம் தளம் சார்பில் அழைக்கின்றோம்.



மீண்டும் ஒருமுறை பதிவின் ஆரம்ப செய்தியை படித்து பார்க்கவும். கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி, அருளுதவி செய்து அம்மையப்பரின் அருள் பெற வேண்டுகின்றோம். 

மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

குறிஞ்சி ஆண்டவரே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_19.html

No comments:

Post a Comment