"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 30, 2023

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 6

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவாக நம் குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கை காண உள்ளோம். காண்பதை விட கருத்தில் ஏற்றுவது பெரிதாக உள்ளது. பெரிதினும் பெரிது கேள் என்று சொல்ல கேட்டிருப்போம். ஆம். நம் குருநாதர் நமக்கு உரைக்கும் வார்த்தைகள் மிக மிக பெரியது.இவற்றை வெறும் வார்த்தைகளாக கொள்கின்றோமா? இல்லை. வாழ்க்கையாக கொள்கின்றோமா? என்பதில் தான் அர்த்தம் உள்ளது. மதுரைக்கு முன்பாக கோயம்பத்தூரில் குருநாதர் வாக்குகள் அருளியுள்ளார். இதில் யாருமே கூறாத தான, தருமம் பற்றி உரைத்துள்ளார். இவற்றையெல்லாம் நாம் கேட்டு, வாழ்வில் பின்பற்ற வேண்டும்.  குருநாதரின் வாக்கிற்கு அனைவரும் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டிய நிகழ்வை இன்று காண இருக்கின்றோம். குருநாதரின் உபதேசம் எப்படி எல்லாம் இருக்கும் என்று யார் அறிவார்?ஆனால் நாம் தான் எதையெதையோ தேடிக்கொண்டு இருக்கின்றோம். குருவை இறுக இரு கை கொண்டு சிக்கென பிடித்தாலே போதும். நமக்கு வேண்டியது கிடைக்கும். வாழ்வு சிறக்கும்.

நேற்றைய நாளில் குருவின் அருள் கண்டு நாம் மெய் மறந்தோம். ஆம். ஒரு அருள் பெற்ற வாக்கு பற்றிய நிகழ்வு அது. இதனை பின்னர் அறிய தருகின்றோம்.

இப்பதிவை குறைந்தது மூன்று முறைகளாவது படித்தால் தான் குருநாதர் நமக்கு உரைக்கும் பாடம் நன்கு புரியும். குருநாதர் நமக்கு ஆசிகள் என்று ஒரு வார்த்தை அருளினாலே போதும். அந்த ஒற்றை வார்த்தையில் நம் வாழ்வே அடங்கி விடும். குருவின் வழியை பின்பற்ற குருவின் மொழியை வேதமாக கொண்டு கேட்க வேண்டும். குருவின் மொழியை கேட்க கேட்க குருவை தரிசிக்க வேண்டும். பின்னர் குருவின் பதத்தை நம் காப்பாக கொள்ள வேண்டும். இதனைத் தான் குருவின் வாக்கில் பெற்று வருகின்றோம் 

ஓம் குரு வழியே ஆதி ஆதி

ஓம் குரு மொழியே வேதம் வேதம்

ஓம் குரு விழியே தீபம் தீபம்

ஓம் குரு பதமே காப்பு காப்பு


அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - அடியவர் ஒருவர் இல்லத்தில் உரைத்த வாக்கு - 04.09.2023 ( பகுதி 6)

இந்த வாக்கின் முந்தைய பகுதி கீழே உள்ள பதிவில் படிக்கவும்

https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

(பகுதி 6 - வாக்கு ஆரம்பம் ) 


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

இன்பங்களே கொடுத்து கொண்டு இருந்தால்….. சிந்திக்கவே மாட்டான் அப்பா. எப்படியப்பா யான் நல்லது செய்வது?

குருநாதர்:- அப்பனே, வாழ்க்கை என்பது என்ன?

அடியவர்:- பிறருக்கு உபகாரமாக இருப்பது.

குருநாதர்:- அப்பனே, உந்தனுக்கே அதாவது உபகாரமாக நீ இல்லையப்பா எப்படியப்பா பேசுகின்றாய்?

அடியவர்:- (அடியவர்கள் அமைதி. சில நொடிகளுக்கு பின்னர் ஒர் அடியவர்) ஐயா ஜெயிக்க முடியாது ஐயா. அகத்தியப்பெருமானிடம் பேசி.

குருநாதர்:- அப்பனே எழுந்து நில் அப்பனே.

(இங்குதான் அந்த மகத்துவம் மிக்க மகிமை புகழ் நிகழ்வு பூலோகத்தில் பல ஆயிரக்கணக்காண ஆண்டுகளுக்குப்பின் நடந்தது. குருநாதர் நேரடியாக சீடர்களுக்கு பாடம் எடுப்பது போல ஆரம்பித்தார் சில நல் ஆத்மாக்களுக்கு. நாடி வாக்கே பலருக்கு கிடைக்கவில்லை என்ற நிலையில், ஆனால் இந்த அடியவர்கள் குருநாதரின் நேரடி வகுப்பில் குருநாதரின் பாடங்களை கற்கும் வாய்ப்பு கிட்டியது. எப்பேர்ப்பட்ட பாக்கியம் அந்த அடியவர்களுக்கு)

அடியவர்:- (அடியவர் எழுந்து நின்றார்)

குருநாதர்:- அப்பனே ஒரு காலில் நில்.

அடியவர்:- (ஒரு காலில் நிற்க ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே கைகளை மேலே தூக்கி ,

அடியவர்:- ( இரு கைகளை மேலே தூக்கி ஒற்றைக்காலில் நிற்க ஆரம்பித்தார்)

குருநாதர்:- ஏதாவது அனைவருக்கும் ஓர் உரை, உரை.

அடியவர்:- (அடியவர் மெதுவாக பேசினார்)

குருநாதர்:- அப்பனே, உன் மனதிலேயே தான் நீ சொன்னாய் எனபேன் அப்பனே. அனைவருக்கும் பலமாக எடுத்துரை என்பேன் அப்பனே.

அடியவர்:- எல்லோரும் அன்பாக இருங்கள். எல்லோரையும் அகத்தியப்பெருமான் பார்த்துக்குவார். 
( இப்போது ஒற்றைக்காலில் நிற்கும் அடியவர் , நிற்க இயலாமல் ஆடிக்கொண்டே இதை அனைவருக்கும் உரைத்தார். )

குருநாதர்:- அப்பனே, ஏன் ஆடினாய்,? அப்பனே இவையே உன்னால் நிற்க முடியவில்லையே அப்பனே வாழ்க்கை எப்படியப்பா வாழ்வாய்? அப்பா. அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இப்படித்தான் மனிதன் பிறந்து விடுகின்றான். பின் வாழத்தெரியாமல் வாழந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. அப்பனே இப்பொழுது சொன்னானே , ஆடினானே இதுபோலத்தான் அப்பா. ஆடிக்கொண்டிருக்கின்றான் மனிதன். கர்மாவில் மிதந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. ஆடாமல் நிற்கவேண்டும் என்றால் அப்பனே எங்களை நிச்சயம் சரண்டதல் அதாவது எங்களை சரணடையத் தேவை இல்லை. நீங்கள் புண்ணியம் செய்து கொண்டிருந்தாலே யான் உங்களை நோக்கி வருவோம். அப்பனே (ஒரு) பாடலைப்பாடு முருகனை நோக்கி.

அடியவர்:- (முருகன் பாடலை பாட ஆரம்பித்தார் அடியவர். ஆனால் கால் ஊன்றிவிட்டு - திரு.அருணகிரிநாதர் அருளிய திருப்புகழில் உள்ள - வாதினை அடர்ந்த  (பழமுதிர்ச்சோலை) என்ற பாடலை பாட ஆரம்பித்தார்.)

குருநாதர்:- அப்பனே, நிறுத்து. அப்பனே கால்களை யான் ஊனச்சொன்னேனா என்ன?

அடியவர்:- (மறுபடியும் இந்த அடியவர் குருநாதர் உத்தரவை ஏற்று ஒரு காலில் நின்று கையை தூக்கி பாட ஆரம்பித்தார். அந்த திருப்புகழ் பாடல் படித்து முருகனை உளம் உருகி தொழுது உய்யுங்கள்.

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து ...... தெளியேனே

மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து ...... பணியேனே

ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று ...... தெரியேனே

ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப ...... தறியேனே

நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து ...... திரிவேனே

நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே

சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்

சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.




குருநாதர்:- (இந்த பாடலை முழுவதும் பாடி முடிக்கும் முன்னரே , இடையிலேயே குருநாதர் குறுக்கிட்டு ) அப்பனே, நிறுத்து. அப்பனே கர்மா வைத்துக்கொண்டிருக்கின்றாய் அப்பனே. இதிலிருந்தே தெரிகின்றது என்பேன் அப்பனே. ஆடி ஆடி பாடுகின்றாய் என்பேன் அப்பனே. உன் பக்கத்தில் இருப்பவனை எழச்சொல்.

அடியவர்:- ( அடியவர் எழுந்து நின்றார்)

குருநாதர்:- அப்பனே இது போலே நில். ( ஒற்றைக்காலில், இரு கைகளை தலைக்கு மேலே தூக்கி)

அடியவர்:- (அடியவர் குருநாதர் சொன்னது போல் நின்றார்)

குருநாதர்:- அப்பனே, முருகனைப்பார்த்து ஒரு பாடலைப்பாடு.

அடியவர்:- (திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதியில் உள்ள பின் வரும் பாடலை பாட ஆரம்பித்தார்)

உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே.

குருநாதர்:- அப்பனே, இறைவனை நம்பினாலும் ஓர் பக்குவப்படுத்த அப்பனே ஒர் ஆள் தேவையப்பா. உன்னால் ஒன்றுமே அதாவது பக்கத்தில் உள்ளவன் கெட்டியாக (ஒற்றைக்காலில் நிற்கும் உன்னை) பிடித்தான். அதுபோலத் தானப்பா மனிதனுக்கு சில சில வினைகளில் யாங்களே வந்து அப்பனே அப்படியே பிடித்துக்கொள்வோம் அப்பனே. புரிந்து கொண்டாயா அப்பா? உன் நிலைமையும் உந்தனுக்கு அதனால்தான் அப்பனே வாக்குகள் உந்தனுக்கு கொடுக்கவில்லை என்பேன் அப்பனே. சில கர்மாக்களை எதை என்று அறிய அறிய சம்பாதித்து அப்பனே அனுபவித்துக்கொண்டிருந்தாய். ஆனாலும் அப்பனே சிறுக சிறுக முருகனே அதை நீக்கிவிட்டான். அதனால் நிச்சயம் அப்பனே பாடலை பாடு. அப்பனே காலை கீழே விடாதே.

அடியவர்:- (அதே முருகன் பாடலை பாட ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை இதைக்கூட சரியாக செய்யவில்லை என்பேன் அப்பனே. ஆனால் நீங்கள் என்னென்ன கேட்கின்றீர்கள் அப்பனே. அவை எல்லாம் யான் தரவா முடியும் அப்பனே. எவை என்று அறிய இதை சரியாக எவை என்று கூற யான் சொல்லியதை சரியாக பின்பற்றினால்தான் அப்பனே பின் அனைத்தும் செய்ய முடியும். ஏனென்றால் அப்பனே ஏன் எதற்காக சொல்கின்றேன் என்றால் அவ்கர்மாவை நீக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே கர்மாவை பற்றி இப்படியே எடுத்து கூறு நீ.

அடியவர்:- கர்ம வினை என்பது நாம் செய்கின்ற பாவ புண்ணியங்கள் ஏற்ப வரும். நல்லது பண்ணா நல்லது வரும். கெட்டது பண்ணா கெட்டதை வரும்.

குருநாதர்:- (தனிப்பட்ட வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் உரைத்தார். அந்த பதிவுகள் நீக்கப்பட்டது. அந்த அடியவர் இல்லத்திலே குருநாதர் இருப்பதாக உரைத்தார்.) இறைவன் தான் செய்த வினைகளுக்கு ஏற்பவே அப்பனே சில சில துன்பங்கள் கொடுத்துக்கொண்டு இருக்கின்றான். இது தவறா?

அடியவர்:- சரிதான்.

குருநாதர்:- அப்பனே எதை என்று கூற நீங்கள் இன்னும் அப்பனே தவறு செய்துவிட்டு தவறு செய்து விட்டு , தவறு செய்து விட்டு என்னிடத்தில் வந்தால் எப்படியப்பா யான் கொடுப்பது? அப்பனே. சொல்லுங்கள் நீங்களே.

அடியவர்:- (அனைவரும் அமைதியானார்கள்.)

குருநாதர்:- அதனால் அப்பனே, உன் பக்கத்திலேயே இருக்கின்றானே இவன்தன் ( தனி நபர் வாக்கு நீக்கப்பட்டது) தாய்க்கு பல உதவிகள் சேவை செய்ய வேண்டும் அப்பொழுதுதான் இறைவன் சேவைகள் செய்வான். தாயை பாரத்து ஒரு பாடல் பாடு.

அடியவர்:- (பாடல் ஒன்றை பாடினார்)

குருநாதர்:- அப்பனே அனுதினமும் உன்தாயை வணங்கிக்கொண்டே வா அப்பனே. நிச்சயம் மாறுதல் ஏற்படுத்துகின்றேன் அப்பனே. முதலில் அப்பனே தாய் தந்தையரை வணங்குதல் வேண்டும். இதை வணங்காதவர்கள் (உலகில் உள்ள அனைவருக்கும் ) அப்பனே, எப்படியப்பா கொடுப்பது? அதனால் உங்களுக்கு அருகிலேயே யான் இருக்கின்றேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவே இல்லையப்பா. அதனால்தான் சில சில கஷ்டங்களை உங்களுக்கு யானே வைத்தேன் அப்பனே.

அடியவர்:- ( அனைத்து அடியவர்களும் அமைதி)

குருநாதர்:- இதனால் அப்பனே உணருங்கள். அப்பனே, (உங்களால்) சிறிது நேரம் கூட நிற்க முடியவில்லை என்பேன் அப்பனே. வாழ்க்கை எப்படித்தான் வாழப்போகின்றீர்கள் என்பேன் அப்பனே? ஆனால யான் இருக்கின்றேன் அப்பனே. பாதை காட்டுகின்றேன். வையுங்கள் காலை கீழே.









இன்றைய பதிவில் முருகப் பெருமான் பாடல்(திருப்புகழ், கந்தர் அநுபூதி) படித்தோம் அல்லவா? அதன் பொருட்டு முருகப் பெருமான் தரிசனம் கண்டு இன்புறுவோமாக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

Wednesday, November 29, 2023

அண்ணாமலையானே...! அகத்தியப்பனே...!! அகத்தீசப்பனே...!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் திருஅண்ணாமலை தீப தரிசனம் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. நம்மால் என்ன செய்து விட முடியும்? அனைத்தும் குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது என்று ஒவ்வொரு நிகழ்விலும் உணர்த்தப்பட்டு வருகின்றோம். திருஅண்ணாமலை தீப தரிசனம் காண ஏற்பாடானதும், எங்கிருந்து?எப்படி? காண உள்ளோம்? 30 லட்சம் பக்தர்கள் கூட்டத்தில் நமக்கு வாய்ப்பு கிடைக்குமா? அந்த ஞான ஜோதியை இந்த ஊனக்கண் கொண்டு காண நமக்கு தகுதி உள்ளதா? என்று நினைத்து, குருவிடம்..நீரே துணை.. தீப ஜோதி காண அருளுங்கள் அப்பனே! என்று மனதுள் வேண்டி சென்றோம்.

குருவிற்க குறைவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அப்படியொரு ஆனந்த தரிசனம் கொடுத்தார். அங்குமிங்கும் ஓடி, இங்கு இருந்து பார்த்தால் தெரியுமா? என்று அலைந்த போது, ஒரு தங்கும் விடுதியின் மேலே செல்ல வாய்ப்பு கிடைக்க, ஒரு 10 முறை மாடி படி ஏறி, மேலே சென்று பார்த்தால், அடியார்கள் படை சூழ, பஞ்சாட்சரம் ஓதிக் கொண்டே நேரில் கார்த்திகை தீப தரிசனம் கண்டோம்.

எதுவும் என்னுடையது அல்ல,அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா! 

என்று வேண்டுவதையே வாழ்வில் கை கொள்ள வேண்டும்.

இனி குருநாதர் அருளிய கார்த்திகை தீப வாக்கினை படித்து, அன்றைய நாள் நாம் திருஅண்ணாமலையில் நேரில் பெற்ற கார்த்திகை தீப தரிசனத்தை காண உள்ளோம். கண்டு நம்முள் இருத்துவோம்.

27/11/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் சித்தர்கள் ப்ரிய ஸ்தலம் உத்ரகாவேரி நதிக்கரை. 

கார்த்திகை தீபம் 26/11/2023

அப்பனே அண்ணாமலையில் கூட நேற்றைய பொழுதிலே யான் பார்த்து விட்டேன் அப்பனே!!!

பல பேருக்கு பல கஷ்டங்களப்பா!!!

ஓடோடி வந்து எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அப்பனே அண்ணாமலையே!!!! அண்ணாமலையானே!!! எங்கள் குறை தீர்!!!!

எங்கள் குறை தீர் !!!

என்று அப்பனே !!!

எவை என்று கூறிய புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே....

அண்ணாமலையானும் கூட எதை என்று கூட பின் உண்ணாமுலை தேவியிடம் பின் பார்த்திட்டு நிச்சயம் சில பரிச்சைகளை வைத்து அனைத்தும் திருத்துவான் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே பின் சில பேருக்கும் அப்பனே பின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஆனாலும் ஈசன் அப்பனே அனைத்தும் பின் மேல் நோக்கி அனைவரின் மீதும் அப்பனே தூவினான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய வருண பகவானை தூவு என்று அனைவருக்குமே ஆசிகள் என்று அப்பனே!!!

(கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலை சுற்றி 40 லட்சம் பக்தர்கள் திரண்டதால் திருவண்ணாமலை புறநகர் பகுதிகளில் சுமார் 4 வழியாக வரும் அனைத்து பாதைகளும் 10 கிலோ மீட்டருக்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் நகரத்திற்கு அருகில் வந்து மலையில் எரிகின்ற தீபத்தை காண முடியாமல் போய்விட்டது சிலர் தூரத்தில் இருந்து தான் பார்த்தார்கள் ஆனாலும் ஈசன் கருணை கொண்டு அனைவரும் என்னை காண வந்திருக்கின்றார்கள் என்று அனைவரின் மீது என்னுடைய ஆசீர்வாதமாக மழையினை பெய் என்று வருண பகவானுக்கு கட்டளையிட்டு தீபம் ஏற்றிய உடன் திருவண்ணாமலை சுற்றிலும் மழை பெய்து சிறிது நேரம் அனைவருக்கும் ஈசனின் ஆசிர்வாதமாக பொழிந்தது)

இப்பேர்ப்பட்ட கருணை உள்ளவன் அப்பனே..... பின் மனிதனுக்கு நல்லதை செய்ய மாட்டானா?????? அப்பனே கூறுங்கள் !!!!!!

( அண்ணாமலை உண்ணாமுலை)

கருணை மிகுந்தவர்கள் தான்!!!

ஆனால் நீங்களோ அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அதனால்தான் பிறவியிலேயே ஒரு ஈனப்பிறவி மனித பிறவியப்பா!!!!! 

மனிதன் எதை எவை என்று கூட பின் கொலை செய்யவும் தயங்க மாட்டான் கலியுகத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இனிமேலும் அப்பனே பின் எதை என்று கூட அனைத்தும் தவறுகள் செய்துவிட்டு பின் கிருஷ்ணார்பணம் அப்பனைப் பின் சிவார்ப்பணம் என்று சொல்லிவிட்டால் அவந் தனை அப்பனே எங்கே அடிப்பேன் என்றும் அப்பனே எதை என்று அறிய அறிய இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே அப்பனே அவந்தனக்கு நோய் வராமலா பின் சென்று இருக்கின்றது அப்பனே கூறுங்கள் என்னென்ன கஷ்டங்கள் என்று கூட அப்பனே தவறை செய்து விட்டு இவந்தன் எதை என்று கூட 

எச்சரிக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய இனி மேலும் இதை சொன்னால் அப்பனே  

எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே மற்றவர் பின் மனதையும் காயப்படுத்துவது அப்பனே அதுவும் ஒரு பாவமப்பா.... எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனால் சொல்வான் அப்பனே நீங்கள் மட்டும் பின் எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் சித்தர்களை பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே

ஏனென்றால் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே... பொய் சொல்லி தான் நடத்த வேண்டும் என்று

ஆனாலும் கலியுகத்தில் யாங்கள் விடமாட்டோம் அப்பனே.... பார்ப்போம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே 

அகத்தியனை தெரிந்து கொண்டவன் மௌனத்தை சாதிப்பான் அப்பனே அமைதி கொள்வான் என்பேன் அப்பனே

அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று சொல்வான் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் அனைவருக்குமே பின் அண்ணாமலையும் உண்ணாமுலையும் முருகனும் எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட பிள்ளையோனும் எதை என்று அறிய அறிய பின் அனைவருக்குமே எதை என்று அறிய அறிய எங்களால் பின் நெருங்க முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும் கூட

(அண்ணாமலை நெருங்க முடியாமல் தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கும் அண்ணாமலை நோக்கி வர முடியாமல் மனதிலேயே நினைத்துக் கொண்டவர்களுக்கும்)

அப்பனே ஆசிகள் கொடுத்து விட்டார்கள் அப்பனே இது ஈசனின் கருணையால்

இனி அண்ணாமலையானை..நம் அன்பில் கலந்தவனை நேரில் தரிசிக்க உள்ளோம்.


முதலில் பேருந்தில் இருந்து இறங்கியதும் நாம் கண்ட அருள்நிலையாக அண்ணாமலையார் தரிசனம் பெற்றோம்.




சுமார் 5 கி.மீ க்கு முன்பாக இறங்கி, அங்கிருந்து மீண்டும் பேருந்து, ஆட்டோ மூலம் அண்ணாமலையார் கோயில் அருகே சென்றோம். ராஜ கோபுரம் தரிசனம் பெற்றோம். கோபுர தரிசனம் ..கோடி புண்ணியம் பெற்றோம்.

40 லட்சம் பக்தர்கள் கூட்டத்தில், மக்கள் ஆங்காங்கே தீப தரிசனம் பெற மலையை நோக்கிக் கொண்டு இருந்தார்கள். சரியான கூட்டம் வேறு. நாமும் ராஜ கோபுரம் நோக்கி சென்று கொண்டே மலையை பார்த்தோம்.,முன்னேறி செல்ல ,செல்ல மலை தெரியவில்லை. பின்னர் மீண்டும் பின்னோக்கி நடந்து வந்தோம். சரியாக 05:50 மணி அளவில் நாங்களும் ஒரு விடுதியின் முன்னே நின்று மலையை நோக்கி கொண்டிருந்தோம்.அப்போது ஒரு அடியார் விடுதியின் மேலே சென்று பார்க்கலாமா ? என்று கேட்க, நாமும் சுமார் 10 முறை படிக்கட்டில் ஏறி, மேலே சென்று பார்த்தோம்.

குருவின் கருணைக்கு எல்லையேது? என்று மீண்டும் உணர்ந்தோம்.



நேருக்கு நேராக அண்ணாமலையார் தரிசனம். எத்தனை பேருக்கு இந்த அருள்நிலை கிடைக்கும்? 


தீபமேற்றி வழிபாட்டிற்கு தயார் நிலையில்.


அடியார்கள் புடை சூழ, பஞ்சாட்சரம் ஓதிக் கொண்டே இருந்தோம்.







அடுத்து அந்த நொடிக்காக காத்திருந்தோம். இதோ நீங்களும் பார்த்து கண்ணில் ஒற்றிக் கொள்ளுங்கள்.சரியாக 05:59 மணி அளவில் கார்த்திகை தீப தரிசனம் பெற்றோம்.














பட்டாசுகள், வான வேடிக்கை என ஆரம்பித்து, தீப தரிசனத்தில் திருஅண்ணாமலையார் கோயில் மின்னியது. நாமும் மனதுள் அந்த அருள் நிலையை ஏற்றினோம். 

எதுவும் என்னுடையது அல்ல,அனைத்தும் உன்னுடையதே, அருளாளா அருணாசலா! 

என்று மனதுள் சமர்பித்தோம்.அடுத்து அன்பர்கள் தீபம் காட்டி, நமக்கு அருளினார்கள். நீங்களும் எடுத்துக் கொள்ளுங்கள்.




அடுத்து மீண்டும் மீண்டும் அண்ணாமலையார் தீப தரிசனம் பார்த்துக் கொண்டே இருந்தோம். 














நேரம் ஆக, ஆக , தீபம் சுடர் விட்டது. நம்மிலும் அகா இருள் நீங்க வழிபாடு செய்து, பௌர்ணமி நிலவை கண்டு வணங்கினோம்.


பின்னர் கீழே வந்து , ஞானியர் தரிசனம் பெற்றோம். மூவரையும் நன்கு வணங்கினோம்.





இந்த வாய்ப்பை வழங்கிய ஸ்ரீ சரவணா லாட்ஜ் க்கு  நன்றி கூறி வெளியே வந்தோம். கூட்டம் அலைமோதியது. இதில் நம்மால் கிரிவலம் செல்ல இயலாது என்று முடிவெடுத்து, மீண்டும் ஊருக்கு செல்ல வந்தோம். அப்போது தான் நம் தளம் சார்பில் 500 சிவபுராண சிறு நூல்கள் நாம் வைத்து இருந்தது தெரிந்தது. பின்னர் அங்கேயே நின்று, கோயிலுக்கு செல்லும் அடியார்களுக்கு கொடுக்க பணிக்கப்பட்டோம்.





பின்னர் சிவபுராணம் நூற்கள் கொடுத்து மீண்டும் நடந்து சென்ற போது , ஜோதி தரிசனத்தில் மனது நிறைந்து இருக்க, வள்ளல் பெருமானை வழிபட வாய்ப்பு கிடைத்தது.




வள்ளல் பெருமானை வணங்கி, அருட்பெருஞ்சோதி மந்திரம் கூறு, அன்றைய நாளுக்கான அருள்நிலைக்கு நன்றி கூறி அப்படியே சென்று கொண்டிருந்தோம்.


அப்பொழுது அங்கே அன்னசேவை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாமும் பெற்று, உண்டு மகிழ்ந்தோம். பொதுவாகவே இது போன்ற அன்னசேவை உணவு, இறையருளால் ருசி மிகுந்து காணப்படும். அன்று பிரிஞ்சி சாதம் வேறு? சொல்லவா வேண்டும்? அன்று காலை முதல் உணவு அருந்தா நிலையில் பிரிஞ்சி சாதத்தை நன்கு உண்டு, பசியாறி, மீண்டும் பேருந்து நிலையம் நோக்கி புறப்பட்டோம்.

நாம் அன்றைய தினம் பெற்ற வள்ளலார் தரிசனம், அன்னசேவை உணவிற்கு ஒரு காரணம் இருக்கின்றது. அது என்ன? என்று வரும் பதிவில் பேசுவோம்.



மீண்டும் பேருந்து நிலையத்தில் இருந்து கார்த்திகை தீப தரிசனம் பெற்றோம். இதோ. பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, அண்ணாமலையார் தரிசனம் பெற்று ஆரம்பித்த அருள்நிலை, மீண்டும் பேருந்து நிலையத்தில் முழுமை பெறுகின்றது.  அன்று மாலை புற சூழலில் அண்ணாமலையார் தரிசனத்தில் மனம் எங்கோ ஓடிக்கொண்டிருந்தது. நிறைவாக அக சூழலில் மனம் ஒடுங்கி, அகா இருள் நீங்கி, ஒளி நம்மில் படர்ந்து, நாம் சிவத்தை உணர்வோம் என்று வேண்டுவோமாக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - ஓதிமலை தரிசனம்! - 03.12.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/03122023.html

அந்த நாள் - இந்த வருடம் - 2023 - கோடகநல்லூர்! - (1) - https://tut-temples.blogspot.com/2023/11/2023-1.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - திருவண்ணாமலை தீப தரிசனம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_32.html

அன்புடன் அகத்தியர் - எண்ணத்தில் என்னை வை! - நற்பவி - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_24.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 5 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-5.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html