"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, November 11, 2023

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தள அன்பர்களுக்கும், நம்மோடு சேவையில் தொடர்ந்து இணைந்துள்ள அருளாளர்களுக்கும், அருளுதவி மற்றும் பொருளுதவி செய்து வருகின்ற அனைவருக்கும்   TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின்  தீபாவளி நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். 






திருவிழாக்கள் என்றாலே அன்பின் பரிமாற்றம் தானே. ஒவ்வோராண்டும் தீபாவளி திருநாள் சிறுவயது முதல் பெறுவதாக இருந்தது.ஆனால் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு மலர்ந்த பின்னர், நம்மால் முயன்ற அளவில் கொடுக்க ஆரம்பித்தோம். அன்பின் வெளிப்பாடு தான் கொடுப்பது, பெறுவது இன்பம் என்றால் கொடுப்பது பேரின்பம் ஆகும்.

எம்மொழியிலும் இல்லா சிறப்பு நம் தமிழ் மொழியில் உள்ளது. திருவிழா என்று பிரித்து பாருங்கள். திரு விழா..நம்மிடம் உள்ள திரு விழாது இருத்தல் என்று கொள்ளலாம். திரு என்றால் உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற என்று பொருள் கொள்ளலாம். நம்மிடம் உள்ள திரு என்றால் அந்த இறையே ஆகும். இறை நம்மிடம் இருந்து விழாது இருக்க நாம் கொண்டாடுவதே திருவிழா ஆகும். இறை என்றால் என்ன? அன்பே சிவம் ஆகும். அந்த உயர்ந்த, மேன்மை பொருந்திய,ஒப்பற்ற இறைக்கு அன்பு என்றும் சொல்லலாம். நம்மிடம் உள்ள அன்பு விழாது இருக்கவே திருவிழா ஆகும்.இது தான் தமிழின் சிறப்பு. இந்த வகையில் தான் நம் TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு திருவிழாவை கொண்டாடி வருகின்றது.

உலகின் ஆதி குரு , மாமுனிவர் , குருநாதர் அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு:- 




"*இங்கு கொண்டாடப்படுகிற பண்டிகைகள் எல்லாம், ஒரே எண்ணத்தில் உருவானவை. வாழ்க்கையில் உள்ள ஏற்ற தாழ்வுகளை உணர்த்தி, இருப்பவன், இல்லாதவர்களுக்கு கொடுப்பதின் மூலம், ஒரு சமூகத்தில் தர்மம் வளர்ந்தால், அங்கு இறையருள் நிறைந்து நிற்கும். அவன் குடும்பம் நிம்மதியில் வாழும். இன்னும் மேலான தர்மங்கள் ஏதென உரைக்க இறைவன் எங்களுக்கு கட்டளையிடுவார்."

குருநாதர் அருளால் நம் தளம் சார்பில் இந்த ஆண்டிலும் தீபாவளி சேவை மிக மிக சிறப்பாக நடைபெற்றது. சில காட்சிப்பதிவுகளை இங்கே அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

1. ஐப்பசி பௌர்ணமி அன்று தேனியில் 14 மகளிருக்கு சேலை 
2. சின்னாளப்பட்டி அரசுப்பள்ளியில் ஒற்றை பெற்றோர் குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் 
3. திருச்சி இறைமடம் அமைப்பிற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை 
4. மதுரை இறையருள் மன்றம் சேவைக்கு சிறு தொகை 
5. சின்னாளபட்டியில் 20 அன்பர்களுக்கு மூன்றாம் ஆண்டாக புத்தாடை சேவை 


                                                     தேனியில் 14 மகளிருக்கு சேலை 




சின்னாளப்பட்டி அரசுப்பள்ளியில் ஒற்றை பெற்றோர் குடும்பத்திற்கு மளிகைப் பொருட்கள் 




சின்னாளபட்டியில் 20 அன்பர்களுக்கு மூன்றாம் ஆண்டாக புத்தாடை சேவை 

இது போன்ற சேவை குருவருள் துணை கொண்டு நடைபெற்று வருகின்றது என்பதை மீண்டும் மீண்டும் இங்கே உணர்த்தப்பட்டு வருகின்றோம்.

இன்றைய நன்னாளில் சிறு சிந்தனையை தூண்டுவோம்.

இனி மேலும் சில சிந்தனையை கேள்வி, பதில் தொகுப்பாக தருகின்றோம்.

கேள்வி - அறம், தர்மம் எல்லாமே இங்கே ஆளாளுக்கு மாறுபடுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் இருக்கிறது. ஒவ்வொரு சமயங்களும் தங்களுக்கென்று தனித் தனியான தர்மங்களை வகுத்து வைத்துள்ளன. இதில் இதுதான் சரியான அறம் என்ற,தர்மம் என்றோ நாம் எப்படிக் கண்டு கொள்வது ?

இராம் மனோகர் - சமயங்களை ஏன் சொல்லுகிறீர்கள் ? திருக்குறள் சொல்லும் வகையில் அறத்தைக் கடை பிடியுங்களேன் ? அது பொது மறைதானே ? நானும் கூட எப்பொழுதும் சொல்வது பொதுவான அறம் பற்றிதான். எத்தனை அற வழிகள் வகுக்கப்பட்டிருந்தாலும், அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் என்றுமே மாறுவதில்லை. அவரவர் சமயங்கள் தோன்றிய இடம், காலம், பழக்க வழக்கங்களுக்குத் தோதாக அறங்கள் வகுக்கப்பட்டிருக்கும். ஆனால், தர்மம் என்பது உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவானது. அதை யாராலும் மாற்ற முடியாது. தர்மம் என்பது இயற்கையின் விதி. அற வழிகளைப் பொருத்த வரை நல்லது, கெட்டது என்று வரையறுக்கும் பொழுதுதான் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. மேலும் அவரவர்களுக்கு வகுக்கப்பட்ட அற வழிகளை அவரவர்கள் காலத்திற்கேற்ப மாற்றியமைத்து கடைபிடித்து ஒழுகும் பொழுது தர்மத்தின் சாரம் முற்றிலுமாக அங்கே தொலைந்து போகிறது.

அந்நிலையில் புண்ணியச் செயல்களுக்கேற்ப பல பிரிவினைகள் ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பிட்ட புறத் தோற்றங்களை வழிபடுவதும், குறிப்பிட்ட கிரியைகளைச் செய்வதும், குறிப்பிட்ட நம்பிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதும்தான் அறம் என்றும், தர்மம் என்றும் அவரவர்கள் அழுத்தமாக எண்ணிக் கொள்கிறார்கள். இது ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கும் பொழுது பிரிதொருவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் போய் விடுகிறது. இருப்பினும் ஞானிகள், சான்றோர்கள் இத்தகைய முரண்பாடுகளை, சமயப் பூசல்களை வேரறுக்க உண்மையின், இயற்கையின் தர்மத்தை எடுத்து விளக்கியிருக்கிறார்கள். அவர்கள் சொல்வது என்னவென்றால் முதலில் எது புண்ணியம் ? எது பாவம் ? என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள். எது புண்ணியம் ? எது பாவம் ?

தனக்கோ, மற்றவர்களுக்கோ அல்லது மற்ற உயிரினங்களுக்கோ துன்பம் ஏற்படுத்துவதும், அவர்களது இயற்கையோடு இசைந்த வாழ்வில் அமைதியைக் குலைப்பதுமான செயல்களைச் செய்வதும்தான் பாவமாகும். அதற்கு மாறாக, மற்றவர்களுக்கு உதவுவதும், அவர்களது இசைவான வாழ்க்கைக்கும், அமைதிக்கும் உதவி செய்வதும் புண்ணியமாகிறது. இது எந்தவொரு இடத்திற்கோ, காலத்திற்கோ கட்டுப்பட்ட விதியல்ல. இது எல்லோருக்கும், எல்லாவிடத்திலும் பொதுவான இயற்கையின் விதியாகிறது. இதுவே தர்மமாகிறது. இந்த அடிப்படை தர்மத்திற்கு பங்கம் நேராமல் நடந்து கொள்வதுதான்அறமாகிறது. இந்த அறம் எந்த நிலையில் மீறப்படுகிறது அல்லது அடிப்படை தர்மம் அடியோடு குலைந்து போகிறது ? என்பதைப் பற்றி நாம் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இயற்கையின் நியதிப்படி அமைந்த வாழ்வில் ஒருவர் கோபம், பயம், வெறுப்பு போன்ற உணர்வுகளை மனதில் ஏற்படுத்திக் கொள்ளாத வரை பிற உயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு செய்யப் போவதில்லை. இத்தகைய தீய, கொடுமையான உணர்வுகள் மனதில் எழும் பொழுதுதான் ஒருவர் பிறருக்கு தீங்கிழைப்பதோடு மட்டுமல்ல தனக்குத் தானேயும் நரக வேதனைகளை அனுபவிக்கிறார். அதைப் போலவே ஒருவர் மனதில் அன்பும், கருணையும், நல்லெண்ணமும் விளங்குமேயானால் அவரால் பிற உயிரினங்களுக்கோ, மனிதர்களுக்கோ தீங்கு செய்ய முடியாது. அத்தகைய நல்ல பண்புகளை உடையவர்கள் பிறருக்கு நன்மைகள் செய்வதோடு, தனக்குள் தானே ஆனந்தத்தையும், அமைதியையும் அடைந்து கொள்கிறார்கள். எனவே மற்றவர்களுக்கு தீங்கிழைப்பவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்கிறான். மற்றவர்களுக்கு நன்மை செய்வபவன் தனக்குத் தானே நன்மை செய்து கொள்கிறான். இதுவே தர்மம். இதுவே சத்தியம். இதுவே இயற்கையின் தர்ம நியதி. இதை கடைபிடிப்பதற்கு எந்த சமயங்களும் தடை விதிப்பதில்லை.

இவையெல்லாம் குருவருளால் தான் என்பது கண்கூடு. விழாக்கள், பண்டிகைகள் அனைத்தும் அன்பின் வெளிப்பாடு தானே. அந்த அன்பை நமக்கு வெளிப்படுத்த வாய்ப்பளித்த குருவருளுக்கு என்றும் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கின்றோம். ஏனென்றால் இந்த தீபாவளி சேவை கடநத 5 ஆண்டுகளாக சிறிய அளவில் மட்டுமே நடைபெற்று வருகின்றது. சென்ற ஆண்டில் மிக மிக மிக சிறப்பாக நடைபெற்றது. இவை அனைத்திற்கும் பொருளுதவி, அருளுதவி செய்த அனைவருக்கும் நன்றிகளை இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்து நம் தளத்தில் தீபாவளி என்றாலே சஷ்டி தீருவிழா பதிவுகள் என்று இந்த ஆண்டில் தொடர முருகப்பெருமானிடம் வேண்டுகின்றோம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-

அகத்தியர் பதிகமும், கூடுவாஞ்சேரி அகத்தியர் ஐப்பசி ஆயில்ய ஆராதனை அழைப்பும்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_5.html

கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

தேடல் உள்ள தேனீக்களாய் குழு (TUT) - தீபாவளி பரிசு - 04.11.2021 - https://tut-temples.blogspot.com/2021/11/tut-04112021.html

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/10/tut_26.html

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/11/tut-2020.html

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2021 - https://tut-temples.blogspot.com/2021/11/tut-2021.html

TUT - தேடல் உள்ள தேனீக்களாய் குழு - தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2020 - https://tut-temples.blogspot.com/2020/11/tut-2020.html

No comments:

Post a Comment