"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, November 23, 2023

கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - குமர கோட்டம் குமரனுக்கு அரோகரா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருவருளால் இன்று  மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் காண வாய்ப்பு கிடைத்தது. கும்பாபிஷேகம் காண்பது மிக மிக சிறப்பான தரிசனம் ஆகும். இன்றைய அருளில் இறை தரிசனம் கண்டு, நம் அகத்திய அடியார்கள் தரிசனம் பெற்றோம். நம் தளம் சார்பில் சிறு தொகை சமர்ப்பித்து இருந்தோம். மேலும் 500 சிவபுராண சிறு நூல்கள் கொடுக்க பணிக்கப்பட்டோம். மேலும் இறை பிரசாதமாக அன்னப்பிரசாதம் பெற்றுக் கொண்டோம். இவை அனைத்தும் இன்றைய நாளில் குருநாதர் அருளால் நடைபெற்றது கண்டு மகிழ்வுற்றோம். உணவு உண்ணும் போது சிவபுராணம் கேட்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தோம். சற்று நேரத்தில் கோயிலில் திருவாசக முற்றோதுதல் நடைபெற துவங்கியது கண்டு குருநாதர் பதம் பற்றினோம்.

இந்த காத்திகை மாத வழிபாட்டில் முருக வழிபாடாக தினசரி கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று வருகின்றது. நேற்றைய 555 ஆம் கூட்டு வழிபாடு இன்னும் நம் உள்ளத்தில் நிறைவாக நிற்கின்றது.அப்படி என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. இதை பற்றி இனிவரும் பதிவுகளில் பேசுவோம்.

இன்றைய பதிவில் குமர கோட்டம் குமரனுக்கு அரோகரா! என்று கூறி, காஞ்சிபுரம் குமர கோட்டம் தரிசனம் பெற உள்ளோம். கந்த கோட்டமா? குமர கோட்டமா? என்று ஒரு சந்தேகமும் தோன்றியது? 
( படங்களை சேமிக்கும் போது கந்த கோட்டம் என்று தலைப்பில் சேமித்தோம். இது பதிவு தயார் செய்யும் போது நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது)  எந்த கோட்டமாக இருந்தாலும் அது நம் முருகக் கோட்டம் தானே . அதுவும் நம் சொந்தக் கோட்டம் தானே!


மேலே நீங்கள் காணும் ஓம் மந்திரம் குமர கோட்டம் கோயிலில் இருந்து பகிரப்படுகின்றது. 






பல்லவ சாம்ராஜ்யத்தின் தலை நகரமாக காஞ்சி விளங்கியது. அதில் நானகு கோட்டங்கள் உண்டு. வரதராஜபெருமாள் கோயில் கொண்டுள்ள புண்ணிய கோட்டம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் கொண்டுள்ள ருத்திரகோட்டம். அன்னை காமாட்சி ஆட்சி புரியும் காமக்கோட்டம். மேல ராஜ வீதியில் விஸ்தாரமாக அமைந்துள்ள இந்த குமரக் கோட்டத்திற்கு தான் நாம் இப்பொழுது செல்லப்போகிறோம்.

நுழைவுவாயில்

மேற்கு நோக்கிய ராஜகோபுரத்தின் வழியே உள்ளே நுழைகிறோம். நுழைந்ததுமே இரு புறங்களிலும் இரு திண்ணைகள் மிக மிக உயரமாக இருக்கின்றன. அதன் விஸ்தாரமான சுவர்களில் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்க்கை நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்த அற்புததற்தை வைத்து தீட்டப்பட்டிருக்கிறது. ராஜகோபுரம் ஐந்து நிலை கோபுரம், இடது புறம் கோயில் நிர்வாக அலுவலகம். வலது புறம் பதினாறு தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று காணப்படுகிறது. இது தான் கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம்.




குமரக்கோட்டம் வரலாறு

ஒரு நாள் படைக்கும் தொழிலை மேற்கொண்ட பிரம்மதேவர், தேவர்கள் படை சூழ கயிலை நாதரை தரிசிக்க வந்தார். முதல் வாயிலேயே தன்னுடைய லட்சத்து ஒன்பது வீரர்கள் சூழ கந்த பெருமான் விளையாடி கொண்டிருந்தார். இதை கண்ட தேவர்கள் மகிழ்ந்து முருக பெருமானை வணங்கினார்கள். ஆனால் பிரம்மா மட்டும் வணங்க வில்லை. செருக்குடன் சென்ற பிரம்மாவை குமரப் பெருமான் அழைத்தார். பிரணவத்தின் பொருள் தெரியுமா? என்று கேட்டார் குமரக்கடவுள். பிரம்மா தலையை சொரிந்தார். ஓம் எனும் பிரணவத்தின் பொருள் தெரியாத நீர் எப்படி படைக்கும் தொழிலை செய்கிறீர்? என்று தலையில் குட்டி பிரம்மாவை சிறையில் அடைத்தார். பிரம்மா பல காலம் சிறையில் இருந்தார். குமர பெருமானே படைக்கும் தொழிலை மேற்கொள்கிறார். பிரம்மாவிற்குரிய கமண்டலத்தையும், ஜெபமாலையையும் கைகொண்டு பிரம்ம சாஸ்தாவாக தோற்றம் கொண்டார். முருகனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் நல்லவைகளாக பாவம் செய்யாதவைகளாக இருந்தன. இதனால் பவாம் புண்ணியங்கள் எனஜ்ற தீர்ப்பே இல்லாமல் போயிற்று. உயிரினங்கள் துயரமே அனுபவிக்கவில்லை. காலனுக்கும் வேலை இல்லை. பூமாதேவி பாரம் தாங்காமல் தவித்தாள். கடைசியில் சிவனாரே நேரில் வந்து முருகனை சமாதானம் செய்து பிரம்மாவை விடுவித்தார். பிரம்மா சிறையிலிருந்த வெளியே வந்து முருகனிடம் பிரணவ உபதேசம் பெறுகிறார். சிவபெருமானிடம் காதோடு கந்தபெருமான் பிரணவ பொருளை சொன்னார். சிவனார் மகிழ்ந்தார். எனினும் முருகனிடம் குமரா. நீ முதலில் எமது ஆணையை ஏற்கவில்லை. நந்தியெம் பெருமானை விரட்டி விட்டாய். நீ ஊழி காலத்திலும் அழியாமல் நிற்கும் பிருத்வி தலமான காஞ்சிமாநகரம் சென்று உன் திருப்பெயரால் தேவசேனா பதீசம் என்ற திருக்கோயில் அமைத்து எனை பிரதிஷ்டை செய்து வழிபாடுவாயாக என்று இட்டார்.





கொடிக்கவி பாடி கொடிமரம் வழியாக உள்ளே சென்றோம்.



முருகப் பெருமானை தரிசித்து உள்ளே பிரகாரம் வலம் வந்தோம்.


முருக அடியார்கள் தரிசனம் பெற்றோம். அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் சுவாமிகள் மற்றும் கச்சியப்ப சிவாச்சாரியார் என கண்களில் பெற்ற தரிசனம் இன்னும் நெஞ்சில் இருக்கின்றது.




வேதம் வேண்டாம், சகல வித்தை வேண்டாம்,கீத 
நாதம் வேண்டாம், ஞான நூல் வேண்டாம் , ஆதி 
குரு புகழை மேவுகின்ற கொற்றவன்தாள் 
போற்றும் திருப்புகழைக் கேளீர் தினம் 

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

அருவம் ஒரு நான்காகி உருவம் ஒரு நான்காகி அவைஇரண்டும்

மறுவியுள உருவருவம் ஒன்றாகி முத்திறமும் வழுத்தவொண்ணாப் 

பெருவெளிக்கும் அப்பாலாய் உள்ள பொருள் ஈதெனவே பெரிதும் சேயோன் 

ஒருவனையே புகழ்ந்த அருள்அருணகிரி சேவடிப்போது உளத்துள் வைப்பாம்!!!


திருமுருக வாரியார் சுவாமிகள் அருளியுள்ள அருணகிரிநாதர் பாராயணத் துதி

விருப்புடன் உபய சரணமென் மலரை வேண்டுவார் வேண்டுவதளிக்கும்

பொருப்புகள் தோறும் நின்றருள் ஒருவன் புகழினை அகநெகப் புகன்று

கருப்புகுதாத கதிதனைக் காட்டும் கலையுணர் புலவர்கள் திலகம்

திருப்புகழ் அருணகிரி எமதடிகள் திருவடி குருவடிவாமே.

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!



ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும்
உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறு நினதுபுகழ் பேச வேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்
மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும் நோயற்ற
வாழ்வில் நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே
தண் முகத்துய்ய மணி உண் முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே 


கருணைபெய் கனமுகிலே கடமுனி பணிமுதலே
அருண் அயன் அரன் எனவே அகநினை எனதெதிரே
மருமலர் அணிபலவே மருவிடு களமயிலே
குருபல வவிர்மயிலே கொணர்தியுன் இறைவனையே.


காஞ்சிபுரத்தில் உள்ள பழமையான சுப்பிரமணியர் கோயில் அருணகிரிநாதரின் பாடல்களால் போற்றப்படுகிறது . காஞ்சிபுரம் நகரத்தில் சோமாஸ்கந்த அமைப்பில் காமாக்ஷி மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோவில்களுக்கு இடையில் அமைந்துள்ளது .காஞ்சிபுரத்தில் உள்ள எந்த ஒரு சிவாலயத்திலும் அம்பாளுக்கு தனி சன்னதி இல்லை என்பதும், ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள சோமாஸ்கந்த சன்னதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது . மேலே காட்டப்பட்டுள்ளது, காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் (கச்சி ஏகம்பம்).

குமார கோட்டம் இரண்டு பிரகாரங்கள் மற்றும் பரிவார தேவதைகளின் முழுமையான தேவதைகள் அந்தந்த சன்னதிகளில் பொதிந்துள்ள நன்கு பார்வையிடப்பட்ட கோவிலாகும். கார்த்திகை நட்சத்திரம் ஒவ்வொரு மாதமும் ஏராளமான மக்களை ஈர்க்கிறது. இங்குள்ள அர்ச்சகர்கள் ஸ்கந்த புராணத்துடன் தொடர்புடைய கச்சியப்ப சிவாச்சாரியாரின் பரம்பரையில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது . இங்கு தினமும் ஆறு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இங்கு ஆண்டு விழா வைகாசி மாதத்தில் ( சின்ன காஞ்சியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலைப் போலவே ) மற்றும் தமிழ் மாதமான ஐப்பசியில் ஸ்கந்த சஷ்டியும் கொண்டாடப்படுகிறது.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் நாயன்மார்களின் தேவாரப் பாடல்களாலும் ஆழ்வார்களின் பிரபந்தப் பாடல்களாலும் போற்றப்படும் பல சைவ மற்றும் வைணவக் கோயில்கள் உள்ளன .




கந்தபுராணம்:

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கச்சியப்ப சிவாச்சாரியார். பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர். தந்தை பெயர் காளத்தி சிவாச்சாரியார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கிய கச்சியப்பரிடம் முருக பெருமான் கனவில் வந்து கந்தபுராணத்தை தமிழில் பாடும்படி பணித்தார். எளியேன் எப்படிப் பாடுவேன்உ என்று மயங்கினார் கச்சியப்பார். உடனே ஆறுமுக பெருமான் திகடச் சக்கர என்று அடியெடுத்து கொடுத்தார். உடனே கச்சியப்பர் திகச் சக்கர செய்முகம் ஐந்துள்ளான் என்று காப்புச் செய்யுளில் தொடங்கி நாள் ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம் எழுதினார். தாம் பாடிய பாடல்கள் நிறைந்த ஏட்டு சுவடிகளை தினமும் பூஜையறையில் குமர பெருமானின் திருவடிகளில் வைத்து விட்டு உறங்க போவார். என்ன ஆச்சர்யம்? மறுநாள் காøயில் அந்த ஏட்டுச்சுவடியில் ஆங்காங்கே திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும். இதை பார்த்து கச்சியப்பர் ஆச்சர்யப்படுவார். இதை தான் தன் சரித்தை தானே சரிபார்த்து கொடுத்த சரித நாயகன் என்று வாரியார் சுவாமிகள் குறிப்பிட்டு சொல்வார்.







கந்தபுராண அரங்கேற்றம்

இந்த கந்தபுராணத்தை அரங்கேற்றம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. சான்றோர்களும், ஆன்றோர்களும், புலவர்களும் குமரக்கோட்டம் அமர்களப்பட்டது. கச்சியப்பர், குமரப் பெருமானை வணங்கி, திகடச் சக்கர செம்முகம் ஐந்துள்ளான் என்று ஆரம்பித்தார். அவ்வளவு தான் நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று புலவர்கள் ஆரவாரித்தனர். கச்சியப்பர் நிறுத்தினார். என்ன ஆயிற்று ? என்று கேட்டார். தாங்கள் செய்யுளில் இலக்கண பிழை உள்ளது என்றார்கள். புலவர்களே இது முருகன் தந்த தமிழ் தொடர். இதற்கு விடை குமர பெருமானின் அருளால் நாளை அவையில் கிடைக்கும் என்று கூறி ஓலைச்சுவடிகளை சுருட்டி கொண்டு எழுந்து விட்டார். இரவு உண்ணாமல் கந்த புராண சுவடிகளை பூஜையறையில் உள்ள குமரப்பெருமானின் காலடியில் வைத்து விட்டு அழுது கொண்டே உறங்கிபோனார். கனவில் வந்த கந்த பெருமான் “ச்சியப்பா. நாளை மாலை யாமே அவைக்கு வந்து ஐயத்தை தீர்த்து வைப்போம் என்று கூறி மறைந்தார்.




ஐயம் தீர்க்க வந்த குமரப்பெருமான்

மறு நாள் சபை கூடியது. அனைவரும் திகைக்கும்படி சோழ தேசத்து புலவர் ஒருவர் வந்து நின்றார். புலவர்களே நீங்கள் திகடச் சக்கர என்ற வார்த்தைக்கு பொருள் கிடையாது என்று கூறினீர்கள். வீர சோழியம் என்ற இலக்கண நூலில் 18 வது பாடலில் திகட என்ற பதத்திற்கு பொருள் உள்ளது. திகழ்+தசம் என்ற இரு சொற்கள் சேர்ந்தால் திகடசம் என்ற மாற்றம் பெறும். திகடச் சக்கர செம்முகம் ஐந்துள்ளான் என்பதற்கு பொருள். பத்து கரங்களும், ஐந்து திருமுகங்களையும் உடைய சிவபெருமான் என்று பொருள் என்று விளக்கினார். வீரசோழியம் என்ற இலக்கண நூலிருந்து விளக்கம் கொடுத்த சோழ தேசப் புலவரின் எழிலில் அனைவரும் மயங்கி போனார்கள். புலவராக வந்த குமரப்பெருமானோ ஐயம் இப்பொழுது நீங்கிற்றோ? என்று கேட்டு மறைந்தார். இதற்கு பிறகு கந்தபுராண அரங்கேற்றம் இனிதே தொடங்கி நிறைவேறியது. இந்த கந்த புராண விளக்க சொற்பொழிவு ஓராண்டு காலம் நடைபெற்றது. நிறைவு நாளில் தொண்டை நாட்டின் 24 கோட்டத்தாரும் ஒன்றாய் சேர்ந்து கச்சியப்பரையும், கந்தபுராணத்தையும் தந்த பல்லக்கில் வைத்து ஊர் முழுவதும் உலா வரச்செய்து சிறப்பு செய்தனர். சைவ சமயத்தின் முக்கண்களாக பெரிய புராணம், கந்தபுராணம், திருவிளையாடல் புராணம் என்று மூன்று புராணங்களையும் கூறுவர்.


இங்கு தான் கந்தபுராண அரங்கேற்றம் நிறைவேறியது. நம் மனதுள் ஏதேதோ தோன்றியது. ஐயம் தீர்க்க முருகப் பெருமான் வந்த இடம் இது அல்லவா! மனதுள் முருகா ! முருகா !! என்று ஓதிக் கொண்டே இருந்தோம். 


உள்ளம் உருகுதைய்யா ..முருகா என்று வேண்டினோம்.





மீண்டும் ஒரு முறை கோயில் வெளிப்பிரகாரம் சுற்றி வந்தோம்.









இதோ மீண்டும் நீங்கள் கந்தபுராணம் அரங்கேறிய மண்டபம் காண்கின்றோம்.

இவ்வாறாக, விநாயகர் சதுர்த்தியொட்டி நாம் இங்கே முருகப் பெருமான் தரிசனம் பெற்றோம். இது எப்படி நிகழ்ந்தது? விநாயகர் சதுர்த்தி முன்பாக நாம் சென்னை சென்று, நம் குருநாதர் உரைத்த பஞ்சபூத தல தரிசனத்தில் மண் தலமான காஞ்சிபுரம் தரிசனம் செய்ய சென்றோம். அப்படியே இரண்டு நாட்கள் காஞ்சிபுரத்தில் குமர கோட்டம் தரிசனம் பெற்றோம். அடுத்த நாள் காலை குருவருளால் சுமார் 50 உணவுப் பொட்டலங்கள் வாங்கி, காஞ்சிபுரத்தில் பசியாற்ற குருவருள் நம்மை பணித்தார்கள். ஏகாம்பரேஸ்வரர் கோயில், குமர கோட்டம்,  காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை என அடியார்களுக்கு பசியாற்றுவிக்க நமக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு குருமார்களின் பாதம் பணிகின்றோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

மதுரை - கொடிமங்கலம் அருள்மிகு வாலைத்தாய் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் - 23.11.2023 - https://tut-temples.blogspot.com/2023/11/23112023.html

 ஓம் ஐம் க்லீம் சௌம் பாலாம்பிகை தேவியே வருக! வருக!!  - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_21.html

 வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய கும்பாபிஷேகம் - உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_16.html

 அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - முருகன் வழிபாடு & அறுபடை வீடுகள் தரிசனம்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_20.html

அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு! - பிரார்த்தனை - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_19.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - கார்த்திகை மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_18.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 2 - https://tut-temples.blogspot.com/2023/11/2.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

 கர்ம வட்டமா? தர்ம வட்டமா?  - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html


வாணத்திரையன் பட்டினம் கிராமம் , அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/07/blog-post_31.html

நெடார் கிராமம் , அருள்மிகு நித்யகல்யாணி அம்பாள் உடனுறை ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2023/08/blog-post_4.html

 இன்றைய கும்பாபிஷேக அறிவிப்புகள் - 13.07.2022 - https://tut-temples.blogspot.com/2022/07/13072022_12.html

 பழைய பாபநாசம்(கல்யாண தீர்த்தம்) - அருள்மிகு லோபாமுத்ரா அகஸ்தியர் பிரதிஷ்டை & மஹா கும்பாபிஷேக விழா - 23.06.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/23062022.html

அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்யநாயகி உடனுறை நந்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் - 06.02.2022 - https://tut-temples.blogspot.com/2022/06/blog-post_9.html

பாக்கம் பாளையம், அருள்மிகு உமாமகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_29.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 4 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-4.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 3 - https://tut-temples.blogspot.com/2023/11/04092023-3.html

 அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

No comments:

Post a Comment