"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, November 12, 2023

TUT குழு - கந்த சஷ்டி வழிபாடு அழைப்பிதழ் - 13.11.2023 முதல் 19.11.2023 வரை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நேற்றைய தீபாவளி கொண்டாட்டங்கள் நிறைவு பெற்று, இன்று கந்த சஷ்டி வழிபாட்டிற்கு அனைவரும் தயாராகி இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். தீபாவளி சேவையில் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற சேவையாக வஸ்திரமும், அரிசியும் வழங்கப்பட்டது. இதற்கு சிரமேற்கொண்டு ஏற்பாடுகள் செய்த திரு.சத்யராஜ் அவர்களுக்கு நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்து மகிழ்கின்றோம். ஏனென்றால் ஒவ்வொரு நிகழ்விற்கு முதலில் பொருள் தயார் செய்ய வேண்டும். அடுத்து அதற்கேற்ப நாம் சேவையை தீர்மானிக்க வேண்டும். இவற்றை நாம் தான் செய்கின்றோம் என்றால் நம்மால் ஒன்றுமே செய்ய இயலாது. குருவின் அருளால் அந்த பரம்பொருள் நமக்கு கொடுப்பதை நாம் மற்றவருக்கு கொடுக்க பணிக்கப்பட்டுள்ளதாக எண்ணும் போது தான் சேவைகளை தொடர்ந்து செய்ய இயலும். 

முருகா! எந்தனுக்கு ஏதும் தெரியாது. மனிதனாகப் பிறந்து விட்டோம். அனைத்தும் நீயே! அனைத்தும் நீயே செய்து தா! அனைத்தும் நீயே செய்து கொண்டிருக்கிறாய். இன்னும் செய்து தா!

என்று வேண்டுவது ஒன்று தான் நம் கையில் இருக்கின்றது.

இது ஒருபுறமிருக்க, இன்றைய கந்த சஷ்டி வழிபாடு நம் தளம் சார்பில் கூட்டுப் பிரார்த்தனையில் முருக வழிபாடாக இன்று முதல் ஆறு நாட்களாக நடைபெற உள்ளது. இதற்கு நம் குழு சார்பில் அனைவரையும் மாலை 7 மணி அளவில் டெலிக்ராம் செயலியில் இனணயும்படி வேண்டுகின்றோம்.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
   கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!

உருவாக, உருவமில்லாததாக, உள்ளதாக, இல்லாததாக, நறுமணமாக, மலராக, மணியாக, உலகின் மூலப்பொருளாக, உயிருக்கு உயிராக, வீடுபேறை அடைகின்ற விழியாக விளங்கும், என் முருகா, வந்து அருள் புரிவாய்!





கந்தபுராணம் கூறும் ஸ்கந்தஷஷ்டி - விரதமுறை

ஸ்ரீ முருகப்பெருமானின் முக்கிய விரதங்களில் ஓன்று ஸ்கந்த_ஷஷ்டி விரதம்.இந்த விரதத்தை எவ்வாறு அனுசரிக்கவேண்டும் என்ற முறையினை 
ஸ்ரீ கச்சியப்பசிவாச்சாரியர் கந்தபுராணத்தில் பாடியுள்ளார்..

1) ஷஷ்டி விரதம் எப்பொழுது மேற்கொள்ளவேண்டும்.. ?

"வெற்பொடும் அவுணன் தன்னை வீட்டிய தனிவேல்  செங்கை
அற்புதன் தன்னைப் போற்றி அமரரும் முனிவர் யாரும் 
சொற்படு துலையின் திங்கள் சுக்கில பக்கம்  தன்னில்
முற்பகல் ஆதி யாக மூவிரு வைகல் நோற்றார். "           

கிரவுஞ்சமலையுடன் தாரகனை அழித்து ஒப்பற்ற வேலினை தம் திருகரத்தில் கொண்டுள்ள முருகனை வேண்டி விரதமிருந்து திருவருட்பலனை உடனே பெற்றிட, ஐப்பசிமாதம் வளற்பிறையில் பிரதமை முதல் ஷஷ்டி வரை உள்ள ஆறுநாட்கள் விரதம் மேற்க்கொள்ளவேண்டும்..        

2) ஷஷ்டி விரதம் எவ்வாறு கடைப்பிடிக்கவேண்டும்? 

  "முந்திய வைகல் ஆதி மூவிரு நாளும் காலை ,
அந்தமில் புனலின் மூழ்கி ஆடை ஓர் இரண்டும் தாங்கி,
 சந்தியில் கடன்கள் செய்து தம்ப பிம்ப  கும்பத்தில் ,
கந்தனை முறையே பூசை புரிந்தனர் கங்குல் போதில்."        

விரதத்துக்குரிய ஆறுநாட்களும் காலை மாலை குளிர்ந்த நீரில் நீராடி இரண்டு ஆடைகளை உடுத்திக்கொண்டு ( ஒற்றை துணி கூடாது) ,,அன்றாடம் செய்துவரும் அனுஷ்டானம் ஜெப தபங்களை முடித்துக்கொண்டு, 
முருகனை  விசேஷமாக கும்பத்தில் / அக்னியில் / உருவத்தில் ( சிலை அல்லது படம்) ஆவாஹனம் செய்து முறையாக பூஜித்து ஆறுநாட்களும் வழிபட்டு கடைப்பிடித்து வரவேண்டும்.. 

 (தம்பம் - அக்னி / கும்பம் - கலசம் / பிம்பம் - உருவச்சிலை அல்லது வேல் அல்லது முருகனது படம் ) 

3 ) விரத நாட்களில் கந்தனை எவ்வாறு வழிபடவேண்டும் ?

  " நிறைதரு கட்டி கூட்டி நெய்யினால் சமைக்கப்பட்ட 
குறைதவிர் மோதகத்தைக் #குமரநாயகர்க்கு  அருத்திப்
பிறவுள விதியும்  செய்து பிரான் திருப்புகழ்  வினாவி,
உறுபுனல் சிறிது மாந்தி உபவசித்து இருந்தார் மாதோ"

ஷஷ்டி விரதம் ஆறுநாட்களிலும் இனிப்போடு கூடிய மோதகம் (தேன் திணை / சக்கரைப்பொங்கல் )  போன்ற இனிப்பு பலகாரங்களை நிவேதனம் செய்து, மற்றுமுள்ள வழிபாட்டு முறைகளை ( குரு வாக்கியப்படி )  கடைப்பிடித்து ,

முருகனது புகழினை பாடும் கந்தபுராணம் / திருப்புகழ் / கந்தர்கலிவெண்பா / கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி ,சஷ்டி கவசம் போன்ற பாடல்களை பரராயணம் செய்தும் கந்தபுராணத்தை பாராயணம் செய்தும் கேட்டும், சிறிதளவு நீரைப் பருகி உபவாசம் இருக்கவேண்டும்.

(உபவாசம் - உணவின்றி பட்டினியாக விரதம் இருத்தல்.  இது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப கடைப்பிடிக்கவேண்டும்) சரீர தர்மம் முக்கியம் ...

4) ஷஷ்டி விரத்தால் ஏற்படும் பலன் யாது? 

"ஆரண முனிவர் வானோர் அங்கதன் மற்றை வைகல்
சீரணி முருக வேட்குச் சிறப்பொடு பூசை ஆற்றிப்
பாரணம் விதியில்  செய்தார் பயிற்றும் இவ் விரதம்  தன்னால்
தாரணி அவுணர் கொண்ட தம்பதத் தலைமை பெற்றார்."

இவ்வாறு இந்த ஸ்கந்த ஷஷ்டி விரதத்தை ,வேதங்களை கற்ற முனிவர், தேவர்கள் என அனைவரும் ஆறுநாட்களும் ஷஷ்டி விரதம் இருந்து, 

      ஏழாம் நாள் ஸப்தமி அன்று முருகனுக்கு விசேஷபூஜை செய்து, அதன்பின் உணவு உட்கொண்டனர். இவ்வாறு ஷஷ்டி விரதம் கொண்டதால் ,அசுரர்கள் கவர்ந்துகொண்ட தம்தம் உலகபதவிகளை தலைமையை மீண்டும் பெற்றனர்.

#பாரணம் - விரதம் பூர்த்தி செய்தபின் உண்ணுதல். 

(ஷஷ்டி விரத பலனால் குழந்தை பேறும் / வெற்றியும் / மேலான பதவியும் கிட்டும் என்பதாம்) 

5) ஷஷ்டி விதர பலனை பெற்றவர்கள் யாவர்?

ஸ்ரீ முசுகுந்தமன்னன் இவ்விரதம் மேற்கொண்டு பலன் பெற்றார்.

6) முசுகுந்த மன்னனுக்கு முருகப்பெருமான்  எத்தகைய பலனை அருளினார்? 

" என்ற காலையில் முசுமுகம் உடையவன் எந்தாய்,
நன்று பாரெலாம் எனது செங்கோலிடை நடப்பான்... "

என்றபடி இவ்வுலகத்தையே ஆளும் வரத்தை முருகப்பெருமான் அளித்தார். அதோடு தமது இலட்சத்து ஒன்பது வீரர்களையும் முசுகுந்த மன்னனுக்கு படைத்துணையாக தந்தருளினார்.

எனவே ஷஷ்டி விரதம் மேலான பதவி / வேண்டிய பலன்களை தருவதோடு தக்க நேரத்தில் தகுந்தவர் துணையையும் தந்து வேலும் மயிலும் நம்மை காத்தருளும் என்பதாம்.




முருகன் அருள் முன்னிற்க, கந்த சஷ்டி வழிபாட்டில் பாட நாம்  பாராயணம் செய்ய தேடிக்கொண்டு இருந்த போது , நேற்று ஸ்ரீமத் குமாரசுவாமியம் என்ற நூல் பற்றி செய்தி கிடைத்தது. இன்று முதல் முருகன் அருளால் முதல் முறையாக அத்தியாச்சிரம சுத்தாத்வைத வைதிக சைவ சித்தாந்த ஞானபானு பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய ஸ்ரீமத் குமாரசுவாமியம் பாராயணம் செய்ய உள்ளோம். இணையத்தில் இந்த நூலை தேடிப்பார்த்தால் மற்றொரு ஜோதிட நூல் கிடைக்கும். இது அந்த நூல் அன்று . இந்த நூலில் கந்த ஷஷ்டி வழிபாட்டில் கண்டிப்பாக முதல்வன் புராண முடிப்பு படிக்க வேண்டும் என்று பாம்பன் சுவாமிகள் அருளியுள்ளார்கள்.




அன்பர்கள் அனைவரும் படிக்க, முதல்வன் புராண முடிப்பு பாடலையும் இங்கே தருகின்றோம்.


கந்தபுராணம் பாராயணம் செய்த பயன் பெறலாம். கந்த சஷ்டி விரத காலத்தில் பாராயணம் செய்ய ஏற்றது.இத்தகு அறிய ஞான நூலை பாராயணம் செய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றால் அது குருவருளால் தான் என்பதை மீண்டும் இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.



அழைப்பிதழ் PDF வடிவில் இங்கே காணலாம்

நம்மை வழிநடத்தும் அனைத்து குருமார்களுக்கும் நன்றி கூறி பதிவை முழுமை செய்வோம். வாய்ப்புள்ள அன்பர்கள் கந்த சஷ்டி வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்.

வாழ்த்து: 

"ஆறிருதடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் 
கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்."

சர்வம் குஹார்ப்பணம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  - https://tut-temples.blogspot.com/2019/10/2019.html

 சஷ்(ட்)டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு (1) - https://tut-temples.blogspot.com/2019/10/1.html

 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... குரு பெயர்ச்சி சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_24.html

பழமுதிர்ச்சோலை பரமகுருவே வருக! வருக!! (6) - https://tut-temples.blogspot.com/2020/11/6.html

குன்றுதோறாடும் குமரா போற்றி (5) - https://tut-temples.blogspot.com/2020/11/5.html

திருவேரகம் வாழ் தேவா போற்றி! போற்றி!! (4) - https://tut-temples.blogspot.com/2020/11/4.html

திருவா வினன்குடி சிறக்கும் முருகா (3) - https://tut-temples.blogspot.com/2020/11/3.html

செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா (2) - https://tut-temples.blogspot.com/2020/11/2.html

திருப்பருங்குன்றுரை தீரனே குகனே (1) - https://tut-temples.blogspot.com/2020/11/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

அகத்தியர் பதிகமும், கூடுவாஞ்சேரி அகத்தியர் ஐப்பசி ஆயில்ய ஆராதனை அழைப்பும்! - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_5.html

கர்ம வட்டமா? தர்ம வட்டமா? - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post_4.html

அகத்திய பிரம்ம ரிஷி அருள்வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-2.html

அகத்திய பிரம்ம ரிஷி வாக்கு - மதுரையில் 04.09.2023 உரைத்த வாக்கு - பகுதி 1 - https://tut-temples.blogspot.com/2023/10/04092023-1.html

 (மீண்டும்) அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/11/blog-post.html

அகத்தியப் பெருமானின் உத்தரவு! - ஐப்பசி மாதம் - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_30.html

 ஓம் ஸ்ரீ தாமிரபரணி தாயே போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_38.html

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக! - https://tut-temples.blogspot.com/2022/08/blog-post_3.html

நவ கைலாய திருத்தலங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_18.html

மார்கழி சிறப்பு பதிவு - நவ கைலாய திருத்தலங்கள் தரிசிக்கலாமே - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_22.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 06.11.2022 - https://tut-temples.blogspot.com/2022/10/06112022.html

 திருவாசகம் ஓதுக! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_27.html

தினம் ஒரு முருகன் ஆலயம் - 14 - குமாரசுவாமி கோவில், கிரௌஞ்ச கிரி, செண்டூர், பெல்லாரி மாவட்டம், கர்நாடகா! - https://tut-temples.blogspot.com/2023/10/14.html
 
அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 26.10.2023 ( ஐப்பசி உத்திரட்டாதி) - https://tut-temples.blogspot.com/2023/10/26102023.html

குருவருளால் நவராத்திரி சேவையும்! ஓர் அருள் பெற்ற வாக்கும்!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_24.html

வெள்ளிக்கிரி வேதியனே! போற்றி! போற்றி!! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_22.html

குருநாதர் ஸ்ரீ அகஸ்தியர் பெருமானின் அருள் மொழிகள் - 1 - https://tut-temples.blogspot.com/2023/10/1.html

நவராத்திரியைக் கொண்டாடுவோம் ! நல்லன யாவும் பெறுவோம் !! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_16.html

பெருமாளும் அடியேனும் - ஓம் ஸ்ரீ குருவே போற்றி! - https://tut-temples.blogspot.com/2023/10/blog-post_11.html

சீல அகத்திய ஞான தேனமுதைத் தருவாயே! - https://tut-temples.blogspot.com/2021/10/49.html

No comments:

Post a Comment