"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, August 3, 2022

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆடி மாதம் சக்தியைப் பெருக்கும் மாதம். ஆடி மாதம் அம்மன் வழிபாடு சக்தியைப் பெருக்கி வருகின்றது."சக்தி"யின் அவதாரங்கள் தான் எத்தனை எத்தனை! சிவனாரிடம் உமையவளாகவும், ஸ்ரீ நாராயணரிடம் லட்சுமி தேவியாகவும், பிரம்மனிடம் சரஸ்வதியாகவும் கண்டு வருகின்றோம்.இது ஆதி சக்தியின் அம்சம். இது போன்று சந்திரனிடத்தில் ரோகிணியாகவும், இந்திரனிடம் இந்திராணியாகவும், காமதேவனிடம் ரதி தேவியாகவும், அக்னியிடம் சுவாஹாதேவியாகவும், ( யாகத்தில் சுவாஹா என்று அழைப்பது இதனால் தான்) யமனிடத்தில் சுசீலா அருந்ததியாகவும், வசிஷ்டரிடம் அருந்ததியாகவும், காஷ்யபரிடம் அதிதியாகவும், அகத்தியரிடம் லோபாமுத்திரையாகவும், கௌதமரிடம் அகல்யையாகவும், திகழ்கிறது சக்தியின் அம்சம்.இந்த சக்தி குபேரனிடம் செல்வதாகவும், கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவிரி, வைகை என புண்ணிய நதிகளாகவும் திகழ்வதை நாம் காண முடிகின்றது. எனவே பல திருநாமங்களில் திகழும் சக்தியை வணங்கிட, சகல தேவர்களின் அருளும், முனிவர்களின் ஆசியும் பெற்று சிறப்பிக்கலாம். இதனால் நாம் அருளும் பொருளும் பெற முடிகின்றது.

மற்றொரு வழியில் பார்த்தால் நதி வழிபாடு நம் ஆதி வழிபாடு ஆகும். நதி வழிபாட்டின் மூலம் அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்ற தத்துவத்தில் நம் உடலில் உள்ள நீர் சக்தியைப் பற்றி, போற்ற வேண்டும் என்ற செய்தி நமக்கு உணர்த்தப்படுகின்றது. இன்றைய பதிவில் நாம் செய்து வருகின்ற நதி வழிபாடு பற்றி இங்கே பகிர விரும்புகின்றோம்.

முதலில் 2019 ஆம் ஆண்டில்  ஆடிப் பெருக்கு கொண்டாட்டத்தில் பெற்ற காவிரித் தாயின் தரிசனம் தர இருக்கின்றோம்.

.


காவிரி தந்த கருணையாளர் யார்? நம் குருநாதர் அகத்திய பெருமான் ஆவார். முதலில்  அவரின் தாள் பணிவோம்.

 தாமிரபரணி, வைகை, பாலாறு என தமிழகத்தின் பல ஊர்களில் நதிகள் இருந்தாலும், நதிதேவதையைக் கொண்டாடுகிற பழக்கம், ஆடிப்பெருக்கு எனும் பெயரில் வழிபடுகிற விஷயம், காவிரி நதிக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பு!

கர்நாடக மாநிலத்தில் பிறந்து, ஒகேனக்கல், மேட்டூர், ஈரோடு, கரூர், திருச்சி வழியே புகுந்து புறப்பட்டு, தஞ்சை தேசத்தை அடைந்து, பிறகு கும்பகோணம், மயிலாடுதுறை வரை பாய்ந்து, பூம்புகாரில் கடலுடன் கலக்கிறது காவிரி. அதனால்தான் பூம்புகாரை காவிரி புகும்பட்டினம் என்றே அழைத்தார்கள். அது பின்னாளில் காவிரிப்பூம்பட்டினம் என மருவியது.

அன்றைய தினம் மாலை அம்மாமண்டபம் முன்பு உள்ள படித்துறைக்கு சென்றோம். ஏன் இது போன்ற மண்டபங்கள் கட்டினார்கள் என்று யோசித்தோம்.

காவிரி ஆற்றையொட்டி கரைப் பகுதிகளில் அந்தக் காலத்தில் மண்டபங்கள் கட்டப்பட்டன. காவிரி பாய்ந்தோடி வருகிற வேளை என்பதால், மக்கள் நதியில் இறங்கி வணங்கும்போது சுழலில் சிக்கி, அதன் வேகத்துக்கு அவர்களை இழுத்துக் கொள்ளாதபடி, கரைப் பகுதியில் கொஞ்சம் மேடான இடமாகப் பார்த்து மண்டபங்கள் கட்டப்பட்டன. திருச்சியில் அகண்ட காவிரியாக பிரமாண்டத்துடன் ஓடிவரும் காவிரித்தாயை வரவேற்கவும் வணங்கவும் ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபத்தில் மொத்த மக்களும் கூடுவார்கள். நாங்கள் அம்மா மண்டபத்துக்கு முன்னே உள்ள இடத்திற்கு  மாலை 5 மணி அளவில் சென்றோம். கூட்டம் சற்று இருந்தது. மாலை நேரம் இப்படி என்றால் அன்று காலை கூட்டம் அமோகமாக இருந்திருக்கும் என்று தோன்றியது.



ஆரம்ப காலத்தில் விவசாயம் செழிக்கவேண்டும், காடு கரையெல்லாம் நீரால் நிறைந்திருக்கவேண்டும், போட்ட விதையெல்லாம் பொன்னெனத் திகழ வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இன்று இல்லம் செழிக்கும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது. குடும்பம் சகிதமாக அனைவரும் வந்திருந்தார்கள்.

அனைவரும் காவிரி நீரில் நீராடி பின்னர் படையலிட்டு வணங்குவதைக் கண்டோம். புதுமண தம்பதிகள் ஆடிப் பெருக்கு அன்று தாலி பிரித்து போட்டு கொண்டாகின்றார்கள்.


நாமும் அப்படியே காவிரித்தாயை தொட்டு,உள்ளே இறங்கினோம். அகத்தியரை வேண்டினோம், சகல குருமார்களையும் சில நொடிகளில் வேண்டினோம். புனித நீரை தலையில் தெளித்துக்கொண்டு மூத்தோனின் ஆசி பெற விநாயகரை வேண்டினோம்.அங்கிருந்தே நேரே பார்த்தால் அட..நம்ம உச்சிப்பிள்ளையார். வேறென்ன வேண்டும்? அப்படியே திரும்பினோம்.


அப்படியே திரும்பி ரங்கநாதரை வேண்டினோம். பின்னர் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி அகிலாண்டேஸ்வரி அம்மையையும், ஜம்புகேஸ்வரரையும் மனதார வேண்டினோம்.


இல்லத்தரசியார் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு பொங்கல் படையலிட்டு, வாழை இலையிட்டு, பூ, குங்குமம், வெற்றிலை, பழம், மங்கல பொருட்களைக் கொண்டு காவிரியை
வணங்கிக் கொண்டிருந்ததை கண்டோம். அங்கே நாமும் நோன்பு இருப்பவரிடம் ஆசி வாங்கி, கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டோம்.










அடுத்து அங்கே ஒரு பிள்ளையார்  ஆல மரத்தடியில் அருள் தந்து கொண்டிருந்தார். அங்கு சப்த கன்னியர்களும் இருந்தார்கள். ஆல மர விநாயகர் மிகவும் விசேஷம் என்பார்கள்.


சப்த கன்னியரை மஞ்சள் தூவி, மஞ்சள் நூல் அந்த மரம் முழுதும் கட்டி வழிபட்டார்கள். பின்னர் தீபமேற்றி விநாயகரை வழிபட்டார்கள்.



பிள்ளையார் பல்வேறு மரத்தின் அடியில் இருந்து பலவிதமாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

அடுத்து தாமிரபரணி தாயார் தரிசனம் காண இருக்கின்றோம்.






 தாமிரபரணி தோற்றம் பற்றி 

"திங்கள் முடிசூடும் மலை
தென்றல் விளையாடும் மலை
தங்கும் முகில் சூழும் மலை
தமிழ் முனிவர் வாழும் மலை
அங்கையற்கண் அம்மைதிரு
அருள் சுரந்து பொழிதெனப்
பொங்கருவி தூங்குமலை
பொதிய மலையென்மலையே”

என குற்றால குறவஞ்சியில் குற்றால குறத்தியிடம் பொதிகை மலை குறத்தி பொதிகை மலை பெருமையை கூறுவதாக உள்ள பாடல் இது. குற்றால மலையை திரிகூட மலை என்று கூறுவார்கள். தாமிரபரணி தோன்றும் இடத்தை ஐந்து தலை பொதிகை என்பர். தாமிரபரணி பற்றி தனியாக தொகுத்து தரும் அளவிற்கு செய்திகள் நமக்கு கிடைத்திருக்கின்றது. குருவருளால் மட்டுமே இதனை பற்றி நாம் சிந்திக்க முடியும். நதி,நீர்நிலைகள் வழிபாடு என்பது நம் முன்னோர்கள்,சித்தர்கள் வழிபாட்டில் மிக மிக முக்கியமானது. இதனை நாம் தொடர் வேண்டும் என்பதே சிறப்பு செய்தியாகும்.தினசரி வழிபாட்டில் நாம் நீர்நிலைகளை நினைத்து வழிபட வேண்டும்.அன்றைய காலத்தில் நீர்நிலைகள் அருகில் தான் பல பூசைகள் நடைபெறும்.ஆனால் இன்று நீர்நிலை என்பது வெறும் எழுத்தின் மூலம் தான் சொல்ல முடிகின்றது.இருக்கின்ற நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். இது நம் பொறுப்பும் கடமையும் கூட.

தாமிரபரணி தரிசனம் நாம் பாபநாசம் முதல் சேர்ந்தபூமங்கலம் வரை நவகைலாய யாத்திரையில் சென்ற மாதம் பெற்று வந்தோம். இந்த ஆண்டு மாசி மக கும்ப ஹோமத் திருவிழா அன்றும் தாமிரபரணி அன்னையை தொழுதோம். முதன் முதலாக சில ஆண்டுகளுக்கு முன்னர் பங்குனி உத்திரம் அன்றும் பாபநாசத்தில் தாமிரபரணி தாயை மலர் தூவி வணங்கினோம். அன்றைய தினத்தில் இருந்து சில காட்சிகள் இங்கே பகிர்கின்றோம்.













அடுத்த நாள் பங்குனி உத்திரம் அன்று பாபநாசம் ஆற்றில் நந்தி வழிபாடு பிரசாதத்தை நன்கு சங்கல்பம் செய்து ஆற்றில் சமர்பித்தோம். இதே முறையை கல்யாண தீர்த்தத்திலும் செய்தோம்.










தற்போது கல்யாண தீர்த்தம் சென்று இங்கே செல்ல குருக்களிடம் பேசி அங்கே உள்ள சிறு கதவை திறந்து தான் செல்ல முடியும். 

அடுத்து கோடகநல்லூர் தாமிரபரணி தாய்க்கு சென்ற ஆண்டில் 12.02.2021 அன்று நடைபெற்ற வழிபாட்டின் துளிகளை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.






தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பித்தல்.





இன்னும் நதி வழிபாடு நம்மை ஆதி பரம்பொருள் நோக்கி ஈர்த்து வருகின்றது. பதிவின் நீளம் கருதி அடுத்து பதிவில் தொடர்வோம். இது  வழிபாடுகளை நமக்கு அளித்து வாழ வழி காட்டி வரும் நம் குருநாதர்களின் பாதத்தை என்றும் வணங்கி மகிழ்கின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

-மீண்டும் சிந்திப்போம்.


மீள்பதிவாக:-

ஆடிப்பெருக்கு - அருளும் பொருளும் பெருகட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post.html

 சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்! - https://tut-temples.blogspot.com/2022/07/blog-post_31.html

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_10.html

ஆடிப்பூரம் - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2021/08/blog-post_11.html

முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே - திருஆடிப்பூரம் வழிபாடு - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_23.html

 கூடுவாஞ்சேரி திருஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, ஆடித்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_92.html

நம்மை ஆண்டாள் - ஆண்டாள் திருவடிகளே சரணம் ! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_78.html

பிறந்தது ஆடி...பணிவோம் தாயை நாடி.. - 2020 - https://tut-temples.blogspot.com/2020/07/2020.html

 மார்கழி சிறப்பு பதிவு : திருப்பாவையும், திருவெம்பாவையும் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_17.html

 ஸ்ரீ உரகமெல்லணையான் பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_59.html

No comments:

Post a Comment