"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, August 23, 2022

அந்த நாள் இந்த வருடம் (24.08.2022) - ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய நன்னாளில் அந்த நாள் இந்த வருடம் என்ற தொகுப்பின் மூலம் இன்று ஓதியப்பர் வழிபாடு நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற ஓதியப்பர் வழிபாட்டை அடுத்த பதிவில் கண்டு அருள் பெறுவோம். இன்றைய பதிவில் ஓதியப்பரின் புகழை ஓதுவோம். முருகா என்று சொல்வதற்கு நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். முருகா என்று ஓதினால் நாம் எதற்கும் பயம் கொள்ள தேவையில்லை. இதோ கீழே உள்ள இரு பாக்களை படித்து இன்னும் முருகன் அருள் பெறுவோம்.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும் 

வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில் 

ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும் 

முருகா என்று ஓதுவார் முன்.


முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே 

ஈசன் மகனே ஒரு கை முகன் தம்பியே

நின்னுடைய தண்டைக் கால் எப்பொழுதும் 

நம்பியே கை தொழுவேன் நான்.

இந்த அந்தநாள் >> இந்த வருடம் தொகுப்பின் மூலம் நாம் ஓதிமலை, பாபநாசம் ஸ்நானம், அகத்தியர் மார்கழி குரு பூசை, நம்பி மலை, கோடகநல்லூர் என சென்று வருகின்றோம். 

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

24/08/2022 -ஆவணி மாதம் - புதன்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் (மாலை 3.35 முதல்).

இன்று ஓதிமலையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது. இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை வழிபாடு நடைபெறும். மேலும் தரிசனம் செய்ய விரும்பும் அன்பர்கள் நாளை மதியம் வரை இந்த சிறப்பு நேரத்தை அதாவது ஆவணி மாதம் திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் என்று கணக்கில் வைத்து கொள்ளலாம். நாம் என்ன கணக்கு வைத்தாலும் அவன் கணக்கில் தானே அனைத்தும் நடைபெற்று வருகின்றது.



ஓதிமலையாண்டவர்: 

ஒருமுறை பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டார். படைக்கும் தொழிலை செய்து வந்த முருகப்பெருமானுக்கு அந்த சமயம் ஐந்து முகங்களும், எட்டு கரங்களும் இருந்தது. முருகன், சிவபெருமானின் அம்சம் அல்லவா? அதனால்தான் எம்பெருமானை போலவே, முருகனும் இத்தலத்தில் ஐந்து முகத்துடன் காட்சி தருகின்றார். முருகப்பெருமான், படைக்கும் தொழிலில் ஈடுபட்டபோது இருந்த இந்த உருவத்தில் தான் ஓதிமலையாண்டவராக இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றார். இந்த உருவத்தில் முருகனை வேறு எந்த கோவிலிலும் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முருகனுக்கு ‘கவுஞ்சவேதமூர்த்தி’ என்ற மற்றொரு பெயரும் உள்ளது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, இக்கோவிலின் மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு ரூபமாக காட்சி தரும் விநாயகரை வழிபட்ட பின்பே, முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். முருகன், ‘பிரம்மாவிடம் இருந்து பெற்ற படைக்கும் தொழிலை, திரும்பவும் பிரம்மா இடமே கொடுக்க வேண்டும்’ என்பதை கூறுவதற்காக கைலாயத்திலிருந்து சிவபெருமான் மட்டும்தான் இந்த இடத்திற்கு வந்தார். இதனால் இத்தலத்தில் அம்பிகைக்கு என்ற எந்த தனி சந்நிதியும் இல்லை. சிவபெருமானுக்கு மட்டும் மலை அடிவாரத்தில் ஒரு தனிக் கோவில் இருக்கின்றது. பிரம்மாவிடம் இருந்து படைக்கும் தொழிலை முருகப்பெருமான் பெற்றுக்கொண்டு பிரம்மாவை இரும்பு சிறையில் அடைத்து விட்டார். இதனாலேயே இந்த ஊருக்கு ‘இரும்பறை’ என்ற பெயர் வந்ததாக வரலாறு கூறுகிறது. 



போகர் சித்தர் ஒரு முறை பழனி முருகரை தரிசிப்பதற்காக இந்த வழியில் வந்தார். அப்போது அவருக்கு பழனிக்கு செல்ல சரியான பாதை தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் முருகப் பெருமானை நினைத்து தவமிருந்தார். அப்போது இத்தலத்தில் உள்ள ஐந்து தலை முருகப்பெருமான், ஒரு தலை முருகனாக மாறி போகர் சித்தருக்கு பழனி மலைக்கு வழியை காட்டினார். ஒருமுகமாக அவதாரமெடுத்த முருகப்பெருமான் இத்தலத்தில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறுமுக அவதாரத்தில் இருக்கும் முருகப்பெருமான், தன் உருவத்தை ஒரு முகத்துடன் மாற்றி போகருக்கு வழிகாட்ட சென்றதால், ஓதி மலையில் ஐந்து முகத்துடன் இருக்கின்றார் என்றும், மீதமுள்ள ஒரு முகத்தோடு குமாரபாளையத்தில் இருக்கின்றார் என்றும் ஒரு வரலாறு கூறுகின்றது. 


தல வரலாறு: 

பிரம்மதேவன் ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்வதற்காக கைலாயத்திற்கு சென்றார். வழியில் இருக்கும் விநாயகரை மட்டும் தரிசனம் செய்துவிட்டு, முருகப்பெருமானை வணங்கிகாமலே சென்றுவிட்டார். பிரம்மதேவனை விட்டுவிடுவாரா முருகர்! பிரம்மாவை அழைத்து பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கேட்டார். வகையாக மாட்டிக் கொண்டார் பிரம்மதேவர். பிரம்மாவிற்கு பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியவில்லை. ‘பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் தெரியாத நீ படைக்கும் தொழிலை செய்யக்கூடாது’ என்று கூறிய முருகப்பெருமான், பிரம்மாவை சிறையில் அடைத்துவிட்டு, படைக்கும் தொழிலை முருகப்பெருமானே ஏற்றுக்கொண்டார். முருகப் பெருமானின் இந்த படைப்பு ‘ஆதிபிரம்மசொரூபம்’ என்று அழைக்கப்பட்டது. முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தது. இதனால் அவர்களுக்கு இறப்பு இல்லாமல் பூமியில் பாரம்தாங்க முடியவில்லை. பூமாதேவி தவித்து போய்விட்டாள். இதனால் படைப்புத் தொழிலை முருகப்பெருமானிடம் திரும்பவும் பெற்று, பிரம்மாவிடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பூமா தேவி சிவபெருமானிடம் வைத்தார்கள். பூமாதேவியின் கோரிக்கையை ஏற்ற சிவபெருமான் முருகப் பெருமானிடம் சென்று, பிரம்மாவை விடுவித்து அவருக்கே படைக்கும் தொழிலை கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். சுவாமிமலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப்பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததால் இத்தலம் ‘ஓதிமலை’ என்ற பெயரை பெற்றதாக கூறுகிறது வரலாறு. இந்த சம்பவத்திற்குப் பின்பு பிரம்மாவிற்கும் பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை கூறி, சிறையில் இருந்து விடுவித்து படைக்கும் தொழிலை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் முருகப்பெருமான். 



பலன்கள்: 

எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு அதன்பின்பே தொடங்குவார்கள். இது தொழிலுக்கு மட்டுமல்ல. வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்தாலும் இந்த முருகப்பெருமானிடம் வரத்தைக் கேட்டு விட்டுத்தான், தங்களது வீட்டில் நல்ல காரியங்களை தொடங்குகிறார்கள் இந்த ஊர் மக்கள். கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும் இந்த முருகப் பெருமானை வேண்டிக் கொள்ளலாம். 

இனி சில தரிசன அருள்நிலைகளை இங்கே தருகின்றோம்.







சென்ற ஆண்டில் குருவருளால் நாம் பெற்ற ஓதியப்பர் வழிபாட்டின் சில துளிகளை இங்கே காட்சிப்பதிவுகளாக தருகின்றோம்.



















சென்ற ஆண்டில் ஓதியப்பர் வழிபாட்டில் குருநாள் அன்னசேவையாக சுமார் 30 அன்பர்களுக்கு ஓதிமலை அடிவாரத்தில் உணவு கொடுத்தோம். மேலும் இனிப்பு,காரம் கொண்ட பொட்டலங்கள் சுமார் 50 அன்பரக்ளுக்கு கொடுத்து, மூத்தோனை அடிவாரத்தில் வணங்கி. சாதுக்களின் ஆசி பெற்று, ஒவ்வொரு படியிலும் கற்பூரம் ஏற்றி, படி பூஜை செய்து அன்று மதியம் 1 மணி அளவில் ஓதிமலை முருகப்பெருமான் சன்னிதி அடைந்தோம். அகத்தியர் சக்திகள தீபமேற்றி லோக க்ஷேமம் வேண்டி பிரார்த்தனை செய்து சிவபுராணம் கொடுத்து என இறை அருளில் திளைத்த நாள் அது! மீண்டும் அது போன்ற ஒரு நாளிற்கு ஏங்கி நிற்கின்றோம். அன்றைய தினம் வழங்கப்பட்ட பூ மாலை நம் குழு அன்பர் திரு.சரவணன் ஐயா வீட்டில் அருள்பாலிக்கும் முருகப் பெருமானிடம் மீண்டும் சேர்ந்தது. மீண்டும் அடுத்த பதிவில் விரிவாக பேசுவோம்.


ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

ஓதிமலை ஆண்டவருக்கு அரோகரா!

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

மீள்பதிவாக:-

அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் - 2022-23 - https://tut-temples.blogspot.com/2022/04/2022-23_30.html

சித்தன் அருள் - 1052 - அந்தநாள்>>இந்தவருடம்-கோடகநல்லூர்-இரண்டாம் அபிஷேக பூசை! - https://tut-temples.blogspot.com/2021/12/1052.html

சித்தன் அருள் - 1048 - அந்தநாள் >> இந்த வருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர்! - https://tut-temples.blogspot.com/2021/12/1048.html

 அந்தநாள் >>இந்தவருடம் இரண்டாம் பூஜை - கோடகநல்லூர் - 12.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/12122021.html

 TUT கோடகநல்லூர் யாத்திரை - 10.11.2019 - https://tut-temples.blogspot.com/2021/10/tut-10112019.html

அந்த நாள் >> இந்த வருடம் - கோடகநல்லூர்! - 18.10.2021 - https://tut-temples.blogspot.com/2021/10/18102021.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut_32.html

 "சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_4.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html

அந்தநாள் >> இந்த வருடம் - TUT கோடகநல்லூர் யாத்திரை - https://tut-temples.blogspot.com/2020/10/tut.html 

 கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

இறைவா...அனைத்தும் உன் செயலே! - அனைவருக்கும் நன்றி - https://tut-temples.blogspot.com/2022/04/blog-post_14.html

ஆறாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2022/04/tut.html

 ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5)  - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

No comments:

Post a Comment