அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இதற்கு முந்தைய பதிவில் அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18.10.2021 தொகுப்பு பற்றி கண்டோம். அன்றைய தினம் யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்றே உணர்த்தப்பட்டோம். இவை வெறும் வார்த்தைகள் அன்று, இவற்றை நம் வாழ்க்கையில் கொணர வேண்டும். இதனை தான் அகத்தியம் பேசி வருகின்றது. இன்றைய பதிவின் தலைப்பை பார்க்கும் போது, உங்கள் அனைவருக்கும் நம் சொல்ல வரும் செய்தி புரிந்து இருக்கும்.
பதிவின் உள்ளே செல்லும் முன்னர் அந்தநாள்>>இந்தவருடம் - கோடகநல்லூர் - 18.10.2021 அன்று சில செய்திகளை பகிர்கின்றோம். ஏற்கனவே சித்தன் அருள் வலைப்பதிவில் நடந்த நிகழ்ச்சிகளை பார்த்தாயிற்று. இது நம்முடைய பார்வையில் கிடைத்த நிகழ்வின் சாராம்சம் ஆகும்.
1. தாமிரபரணி தாய்க்கு மலர் தூவி, தீபமேற்றி வழிபாடு செய்தோம்
2. தாமிரபரணியில் அன்றைய தினம் ஸ்நானம் செய்ய வாய்ப்பு கிட்டியது.
3. கோடகநல்லூர் பெருமாள் தரிசனம் - சொல்லில் அடங்கா அருள்நிலை
4. இனிப்புடன் கூடிய தயிர் சாதம் அன்னதானத்தில் இணைத்தோம். நமக்கு வழிகாட்டி ஒரு நாள் முன்னர் ஏற்பாடு செய்து கொடுத்த சின்னாளப்பட்டி ஶ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு நன்றிகள்
5. சித்தனருள் வலைத்தளம் மூலம் ஶ்ரீ அகத்தியர் வழிபாட்டில் குருவாக நம்மை வழிநடத்தும் திரு. அக்னிலிங்கம் ஐயா சந்திப்பு, ஆசி
6. சித்தனருள் திரு. அக்னிலிங்கம் ஐயாவிடம் பெற்ற அருள் பிரசாதம் ( 3 ஆண்டு வழிபாட்டில் நேற்று தான் பெற்றோம்)
7. பாண்டிச்சேரி ஶ்ரீ அகத்தியர் ஞான இல்லம் மூலம் ஶ்ரீ அகத்தியர் வழிபாட்டில் குருவாக நம்மை வழிநடத்தும் திரு. சுவாமிநாதன் ஐயாவுடன் சந்திப்பு & அருளாசி
8. நம் தளம் சார்பில் பூஜை பொருட்கள் (பச்சைக் கற்பூரம்,மஞ்சள், வஸ்திரம்) கொடுத்தோம்.கூடுவாஞ்சேரியில் பூஜைப் பொருட்கள் வாங்கி கொடுத்த திரு.சத்யராஜ் அவர்களுக்கும், பூஜை பொருட்களை பெற்று அன்றைய தினம் கோயிலில் சேர்த்த திரு.சரவணன் ஐயா அவர்களுக்கும் நன்றி
9. அகஸ்தியர் அதிர்ஷ்டதீபக் குழு மூலம் சக்திகள பூஜை நேரில் காணும் வாய்ப்பு.
10. மதுரை இறையருள் மன்றம் மூலம் ஶ்ரீ அகத்தியர் வழிபாட்டில் குருவாக நம்மை வழிநடத்தும் திரு பரமசிவம் ஐயாவுடன் சந்திப்பு & ஆசி
11. நம் குழு அன்பர்கள் திரு.சரவணன் ஐயா, திரு பாலகிருஷ்ணன் ஐயா என நேரில் சந்தித்தோம்
12. அகத்தியர் அடியார்கள் , சாதுக்கள் சந்திப்பு என அன்றைய தினம் அருளாசி பெற்ற தினமாக அமைந்தது.
இந்த பூஜையை மிக சிறப்பாக செய்ய உதவிய, அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், குருநாதர் உத்தரவின் பேரில் முன் நின்று நடத்திய திருமதி.லக்ஷ்மி குழுவினருக்கும், கோவில் நிவாகத்திற்கும், லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கும், நீளா பூமி சமேத ப்ரஹன்மாதவருக்கும் நன்றிகளையும், வணக்கங்களையும் நம் தேடல் உள்ள தேனீக்கள் குழுவின் மூலம் இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
சென்ற பதிவில் சித்தன் அருள் தளத்தில் சிறு குறிப்பு ஒன்று இருந்தது. அதிலிருந்து அப்படியே தருகின்றோம்.
ஒரு சிறு குறிப்பு:-
"ஏன் அய்யா! உங்களுக்கு மட்டும் இந்த வருடம்
இரண்டு பிறந்தநாள் பூசையா? அதன் விசேஷம் என்ன? என வினவியதற்கு,
பெருமாளுக்கும் இரண்டாவது பூசையை செய்யச் சொல்கிறார். இதில் என்னவோ ஒரு
சூட்சுமம் உள்ளது. அதை பற்றி மேலும் அகத்தியப்பெருமானிடம் கேட்டுள்ளேன்.
பதில் வந்ததும் தெரிவிக்கிறேன்.
இதோ அதற்கான பதிலும் கீழே தருகின்றோம்.
https://siththanarul.blogspot.com/2021/12/1048-kodaganallur.html
வணக்கம்! அடியவர்களே!
கோடக நல்லூர் பிரஹன் மாதவ
சுவாமிக்கு அகத்தியர் பெருமான் செய்கிற இரண்டாவது அபிஷேக பூஜை இந்த மாதம்
12ம் தியதி, ஞாயிற்று கிழமை காலை 10 மணிக்கு நடை பெறுகிறது.
என் அனைத்து சேய்களும் பங்கு பெறும் விதமாக அமய வேண்டும் என அவர் விருப்பம்.
திரு.ராகேஷ், தேடல் உள்ள தேனீக்கள் குழு அடியவர் முன் நின்று இந்த பூசையை நடத்துகிறார். அவர் தொடர்பு எண்ணை கீழே தருகிறேன்.
+917904612352
அனைவரும் தொடர்பு கொண்டு பங்கு பெற்று குருவருள் பெற்றுக் கொள்ளுங்கள்.
மற்றவை பின்னர் பார்ப்போம்.
இங்கு நாம் ஒரு செய்தியை தெளிவுபடுத்த விரும்புகின்றோம். இங்கு நம்மால் ஆவது ஒன்றும் இல்லை. அனைத்தும் குருநாதர் அருளால் தான் நடைபெற உள்ளது. TUT குழு என்று அல்லாது அனைத்து அகத்திய அடியார்களும் இணைந்து இந்த இரண்டாம் பூஜையை நடத்த வேண்டும் என்பது தான் இங்கே கவனிக்க வேண்டியது ஆகும். இது நம் குழுவிற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். வழிபாடு ஞாயிற்றுக்கிழமை என்பதால் முன்கூட்டியே பயண ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். மேலும் ஏதேனும் தேவை என்றால் நம்மைத் தொடர்பு கொள்ளவும். இந்த வழிபாடு சிறப்பாக நடைபெற்று லோக ஷேமத்திற்காக தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
நம் குருதாதர் ஸ்ரீ அகஸ்திய பெருமான் அருளின்படி, இம்மாதம் நம் தளம் சார்பில் நடைபெற உள்ள வழிபாடுகள் கீழே தொகுத்து தந்துள்ளோம்.
1. ஓதிமலை - 09.12.2021 - வியாழன்
2. கோடகநல்லூர் - 12.12.2021 - ஞாயிறு
3. உத்தரகோசமங்கை - மார்கழி திருவாதிரை
4. ஶ்ரீ அகஸ்தியர் ஜெயந்தி - 23.12.2021 - வியாழன் - கூடுவாஞ்சேரி மற்றும் அனைத்து ஶ்ரீ அகத்தியர் கோவில்கள்
5. பாபநாச ஸ்நானம் - 16/12/2021 முதல் 13/01/2022க்குள் வருகிறது.
இங்கு குறிப்பிட்ட நாள்களை பார்த்து கிடைத்தற்கரிய இந்த வழிபாட்டில் இணைந்து குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.
இந்த வழிபாட்டில் உதவி செய்ய விரும்பினால், நம்மைத் தொடர்பு கொள்ளவும்
நன்றி
வணக்கம்
ஓம் அகத்தீஸ்வராய நமஹ.
ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
அகத்தீசாய நம
ReplyDeleteஓம் அகத்தீஸ்வராய நமஹ
Deleteகுருவே சரணம்