அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
2020 ஆம் ஆண்டில் குருமார்களின் ஆசியால் நம் தேடல் உள்ள தேனீக்கள் - TUT குழு மூலம் பல்வேறு சேவைகள் செய்து வருகின்றோம். இதில் வள்ளலார் பெருமானின் ஆசியினால் அருட்பெருஞ்சோதி அகவல் உரை தினமும் ஒவ்வொன்றாக பகிர்ந்து வருகின்றோம். 50 நாட்கள் நாம் பகிர்ந்த தொகுப்பை இங்கே ஒரே பதிவில் வெளியிட உள்ளோம். இவை எளிதில் பாராயணம் செய்ய உதவியாக இருக்கும். இங்கே சின்னாளபட்டி வந்த பிறகு வள்ளலார் அருட்கருணையில் திளைத்து வருகின்றோம். வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தன்று கூட்டுப் பிரார்த்தனையில் அகவல் பாராயணம் நம் குழு நண்பர்களோடு முழுதும் செய்தோம். இவை அனைத்தும் நம் உள்ளத்தில் இருந்த ஆசைகளே. இவை ஒவ்வொன்றாக நடைபெற்று வருவதை பார்க்கும் போது இறைவா...அனைத்தும் உன் செயலே! என்று சரணாகதி அடைவதை தவிர வேறொன்றும் நமக்கு தோன்றவில்லை.
பதிவின்இறுதியில் முழு தொகுப்பும் PDF வடிவில் தரமிறக்கி கொள்ள இணைப்பும் கொடுத்துள்ளோம்.
PDF வடிவில் தரவிறக்க :-
https://drive.google.com/file/d/16W2kk_xjZSMt6fhOFFSyJd-rxehzvWlS/view?usp=sharing
நித்தமும் இதனை வடிவமைத்து, பகிர்ந்து வரும் எம் இல்லத்தரசி ஸ்ரீ வித்யா அவர்களுக்கும், வழக்கம் போல் இவற்றை படித்து, பகிர்ந்து நமக்கு கருத்து பரிமாற்றம் செய்து வரும் அன்பர்களுக்கும், திரு. மங்களா பிரபு ஐயா அவர்களுக்கும் இங்கே எம் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
Great rakesh anna!💐💐💐
ReplyDeleteThanks for your comment.
Delete