அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கோடகநல்லூர் ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு, இரண்டாவது அபிஷேக பூஜையை நம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அவர் எண்ணப்படியே நடத்தி எடுத்துக்கொண்டார். இவ்வுலகில் அதர்மம் வளர்ந்துபோய், காலத்தில் கலியின் விளையாட்டால், விஷம் ஏறிப்போய், மிக ஆபத்தான "கிரகநிலைக்குள்" பூமி அகப்பட்டுக்கொண்டு, காலசர்ப்ப தோஷமும், "தூமகேதுவின்" வரவுக்குள் மனிதம் மிகவே சிரமங்களை அனுபவிக்கும் என்றறிந்து, காலசர்ப்ப தோஷத்தை நிர்வீர்யமாக்க, பெருமாளின் அருள் தேடி, நம்மை ஒன்று சேர வைத்து, அவரை அபிஷேக பூசை செய்து குளிரவைத்தார். இதுதான் நடந்த உண்மை. ஒருமுறை கூட நிதானமாக படித்துப்பார்த்தால், எத்தனை பெரிய விஷயத்துக்கு, நம்மை எல்லாம் அகத்தியப்பெருமான் ஒன்று சேர்த்து, லோகஷேமத்திற்கு உபயோகப்படுத்திக் கொண்டார் என்பது விளங்கும்.
பூசை முடிந்து, கோவிலை சுற்றி மட்டும் பெய்த மழையே, பெருமாள் நம் பிரார்த்தனையை, மனமகிழ்ந்து, அபிஷேக பூசையுடன் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு ஒரு நற்சான்று.
இந்த வருடத்தின் மற்றொரு நிகழ்ச்சியாக, அனைத்து அடியவர்களும் மனம் மகிழ்ந்து பங்கு கொள்ளும் "நம் குருநாதரின் மார்கழி-ஆயில்ய திருநட்சத்திரம்" வருகிற 23.12.2021 வியாழக்கிழமை அன்று வருகிறது. நம்மை பொறுத்தவரை அந்தநாள் மிக முக்கியமான தினம். ஆம்! அவரது இரண்டாவது முறை வருகிற நட்சத்திர நாள். 2022இல் மார்கழி-ஆயில்யம் வருவதில்லை. 2023இல் ஜனவரி 09ம் தியதி மறுபடியும் வரும். ஆனால் அதை கொண்டாட நாம் ஒரு வருடத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்.
இன்றைய பதிவிலும் அகத்தியம் தான்..அன்பு தான்..ஆனந்தம் தான். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் அவதார பெருவிழா என்று நமக்கு அழைப்பிதழ் கிடைத்தது. அழைப்பிதழ் பார்த்ததும் என்னே அகத்தியரின் அருள் என்று தான் உணர்ந்தோம். நாம் அளித்துள்ள அனைத்து அகத்தியர் சார்ந்த பதிவிலும் அகக்தியர் தனியாக இருப்பார், இல்லையென்றால் வேறு சிலரோடு இருப்பார். ஆனால் கூடுவாஞ்சேரி அகத்தியரும், அரும்பாக்கம் அகத்தியரும் நமக்கு ஒரே அருள்நிலையில் இருப்பதாக உணர்கின்றோம். இருவரும் இருப்பது விநாயகர் கோயிலில். அதாவது கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள அகத்தியர் நமக்கு அருள் செய்து வருகின்றார். அதே போன்று இந்த அழைப்பிதழில் ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில் அகத்தியர் பூசை நடைபெற உள்ளது. என்ன ஒரு ஒற்றுமை...
மேலும் இதற்கு முன்னர் இங்கே நடைபெற்ற விழாக்களின் காட்சிகளை இங்கே பதிவிடுகின்றோம். பார்க்கும் போதே ஏக்கம் பிறக்கின்றது. தவமாய் தவமிருந்து குருவினைக் காண வேண்டி நிற்கின்றோம்.
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!
மீண்டும் சிந்திப்போம்.
No comments:
Post a Comment