"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, December 21, 2021

குருவடி சரணம் - தென்காசி இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 23.12.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் ஆசியால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நம் தளத்தின் சேவைகள் குருவருளால் நடைபெற்று வருகின்றது. தினசரி மாலை 7 மணி அளவில் ஜூம் கூட்டுப் பிரார்த்தனை 70 நாட்களை தாண்டி குருவருளால் நடைபெற்று வருகின்றது. தினசரி கூட்டுப் பிரார்த்தனையும் முதலில் சிறு புள்ளியாக ஆரம்பித்து, இன்று தினசரி 6 அன்பர்களுடன் நடைபெற்று வருகின்றது. நாம் ஏற்கனவே கூறியது போல் எண்ணிக்கை முக்கியமல்ல; எண்ணங்களே முக்கியம் என்று நாம் குருவின் கை பிடித்து, பாதம் தொட்டு பயணித்து வருகின்றோம். நம் குருநாதர் அனுதினமும் பிறருக்காக ஏதாவது ஒரு செயலை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிறருக்காக வாழ வேண்டும் என்ற கொள்கையை பிடித்தால், உந்தனுக்காக இறைவன் வாழ்வான் என்று கூறியுள்ளார். தினசரி கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டால் இது சத்தியமாக சாத்தியமாகி விடும்.

தினமும் மார்கழி ஆயில்ய வழிபாட்டிற்கான அழைப்பிதழ் கண்டு வருகின்றோம். ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா,  பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 ,  பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021, சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 , பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) ,  மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021, தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 23.12.2021   என பதிவுகளை பார்த்து வருகின்றோம். இந்த வரிசையில் இன்றைய பதிவில் இலஞ்சி ஸ்ரீ அகஸ்தியர் பாத குருபூஜை - 23.12.2021 பற்றி இங்கே காண இருக்கின்றோம்.

முதலில் புரட்டாசி மாத ஆயில்ய நட்சத்திரம் அன்று நாம் பெற்ற தென்காசி இளஞ்சி முருகர் ஶ்ரீ அகத்தியர் பாதம் வழிபாடு அருள்நிலையை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.



அன்றைய தினம் நாம் பெற்ற மூன்று தரிசனத்தையும் இணைத்துப் பாருங்கள். இதோ..கீழே தருகின்றோம்.

ஆஹா. அற்புதம், ஆனந்தம். பக்தி,யோகம்,ஞானம் என மூன்று தத்துவங்களில் குருநாதர் தரிசனம் அன்று பெற்றோம்.


காரணமின்றி காரியமில்லை என்பதில் மீண்டும் குருநாதர் பாத தரிசனம் இலஞ்சியில் நாம் பெற்ற போது புரிந்தது. இனி..சென்ற வார ஞாயிற்றுக்கிழமை நாம் பெற்ற தரிசனத்தை இங்கே தொடர உள்ளோம்.

முதலில் இலஞ்சி ஸ்ரீ முருகர் கோயில் பின்னே சென்றோம். இங்கே இருந்து தான் நாம்  ஸ்ரீ அகஸ்தியர் பாதம் தரிசனம் செய்ய உள்ளோம்.



அங்கிருந்த பாதை  வழியே சென்றோம். இதோ, மிக அருகில் நெருங்கி விட்டோம்.



ஏற்கனவே அங்கே எம் தம்பி அங்கே இருந்து பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். குருக்கள் அங்கே உள்ள இடத்தை சுத்தம் செய்ய கூறினார். திரு.ரவி அவர்களும் அங்கே சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள், 








அடுத்து குருக்கள் குருநாதர் பாதத்திற்கு மலர்கள் சூட்டி, தூபம் காட்டி வழிபாட்டை ஆரம்பித்தார்கள்.
நாம் மனதால் இங்கே ஒன்றி, குருவின் சரணம் கூறி, குருவின் பாதத்தை நம் சிரத்தில் ஏற்ற முயற்சி செய்து கொண்டிருந்தோம். 








ஐயனே போற்றி போற்றி அருள்பெற்ற தேவே போற்றி
மெய்யனே போற்றி போற்றி மெய்சுடர் அணிந்தாய் போற்றி
கையனே போற்றி போற்றி காசினி முனிவா போற்றி
உய்யனே எனையாட் கொண்ட உந்தியில் உதிக்குந்தேவே
உந்தியிலுதிக்குந்தேவே ஒருபொருள் உகந்தாய் போற்றி
சிந்தையில் நினைந்த போதே திருநட மிட்டாய் போற்றி
வந்தித்தேன் உந்தன் பாதம் வானமுந் திறந்தாய் போற்றி
அந்தித்தேன் குருவே ஐயா அடியினைப் போற்றி போற்றி

என்று போற்றிக் கொண்டே இருந்தோம்.

இங்கே  தூபம் காட்டி பின்னர் நமக்கு இனிப்பு வழங்கி, பூக்கள் கொடுத்தார்கள். பெற்றுக் கொண்டோம். பின்னர் குருக்களிடம் வருகின்ற 23.12.2021 அன்று நடைபெற உள்ள குருநாதரின் வழிபாட்டிற்கு நம் தளம் சார்பில் பூஜை பொருட்கள் கொடுத்தோம். குருக்களும் அன்றைய தினம் காலை 6 மணிக்கு வந்திடுங்கள் என்று நம்மை பணித்தார்கள். அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீ அகஸ்தியர் பாத தரிசனம் இங்கே அனைவருக்கும் குருவருளால் தருகின்றோம்.




மகான் புலத்தியர் - 3.

போற்றென்ற அடியேன் உள்ளம் பூரண மதுவும் காட்டி
சாற்றென்று யோக ஞானம் சாதனம் அதுவுங்காட்டி
ஆற்றென்ற கபால தீட்சை அருள்பெற்ற சமாதி காட்டி
யேற்றென்ற வாசி காட்டி யெனையாண்ட சரணம் போற்றி
சரணத்தில் விழுந்தேன் கோவே சச்சிதானந்த மூர்த்தி
சரணத்தில் முன்ன மின்னம் தானது கருக்கஎன்னக்
கரணத்தில் வழலை தானுங் கபாலத்தில் ஒழிந்து போக
அரணத்தில் உதித்த பாதம் அறுசுவை ஒழித்துப்போடே

மகான் புலத்தியர் - 4.

குருவடி பொற்றாள் சரண்சரணம் கும்பமுனியே சரண்சரணம்
திருவடி நாதா சரண்சரணம் சித்தர்களின் அருளே சரண்சரணம்
அருள்வடி வானாய் சரண்சரணம் அமரர்கள் கோவே சரண்சரணம்
பொருளடி மூலங் காட்டிற்று போதித்த குருவே சரண்சரணம்
போதித்த குருவே சரண்சரணம் பொதிகை வளர்அம்பலர் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் மெய்ஞ்ஞானம
சாதித்த தேவே சரண்சரணம் சமுசயந்தீர்த்தாய் சரண்சரணம்
ஓதித்தருவாய் சரண்சரணம் உண்மைப்பொருளே சரண்சரணம்.

மகான் புலத்தியர் - 5.

லபிக்கவழி(சித்திக்க வழி) சொல்லுகிறேன் ஆத்தாளே நந்திதிருமூலரையும்
லபிக்கக்காளாங்கியையும் ஆத்தாளே நாதாந்தபோகரையும்
சத்திசிதம்பரமும் ஆத்தாளே சட்டமுனி பூசைசெய்வாய்
உத்தமக்கொங்கணரை ஆத்தாளே உசிதமாய் பூசைசெய்வாய
கருவூரார் ஆனந்தர் ஆத்தாளே கண்டு வழிதெரிந்தோர்
ஒருநெறியாய் இவர்களையும் ஆத்தாளே உண்மையுடன் பூசைசெய்தால்
சண்டாளன் ஆனாலும் ஆத்தாளே தான் வேதைகாண்பானே
கண்டசேதி சொன்னேன் நான் ஆத்தாளே.

மகான் அழுகண்ணர் - 6.

அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோர் ஆவார்
அம்மம்மா வெகுதெளிவு அவர் வாக்குத்தான்
அகத்தில் உறைபொருள் எல்லாம் வெளியாய்ச் சொல்வார்
அவர்வாக்கு செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரின் அடையாளம் பொதிகைமேரு
அவர்மனது அவரைப் போல் பெரியார் உண்டோ.



அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் 

அகத்திய மஹரிஷி பாதம் காப்பு

தென்காசி இலஞ்சி ஸ்ரீ முருகப்பெருமான் ஆலய பின்புறம் உள்ள ஸ்ரீ அகஸ்தியர் பாதத்தில் வரும் வியாழக்கிழமை 23.12.2021 காலை 6 மணி முதல் 8 மணி வரை  மார்கழி மாத ஆயில்ய பூசை சிறப்பாக நடைபெற உள்ளது.  அடியவர்கள் அனைவரும் இந்த பூசைக்கு வந்திருந்து குரு மகரிஷி அகத்தியர் - அன்னை லோபமுத்திரா அருளும் ஆசியும் பெற வருக என இருகரம் கூப்பி வரவேற்கிறோம்.

அகத்திய மஹரிஷி புகழ் ஓங்குக

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_19.html

மதுரை பசுமலை அகத்திய மஹரிஷி குரு பூசை - மார்கழி ஆயில்யம் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_20.html


பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம் - ஸ்ரீ லோபாமாதா ஸ்ரீ அகத்தியர் மஹா குரு பூஜை (23.12.2021) - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_74.html

சின்னாளப்பட்டி ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_18.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021_16.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 23.12.2021 - https://tut-temples.blogspot.com/2021/12/23122021.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 10 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2021/12/10.html

 ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 9 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/12/9.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 02.01.2021 - https://tut-temples.blogspot.com/2020/12/02012021.html

 பாலராமபுரத்தில் ஸ்ரீ அகத்தியர் திரு நட்சத்திர விழா! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post_22.html

 பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html

தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/13012020_10.html

 தூசி கிராமத்தில் அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_57.html

பாலராமபுரத்தில் அகத்தியர் திரு நட்சத்திர விழா ! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_31.html

தென்பொதிகை கைலாயம் - ஸ்ரீ லோக குரு அகத்திய மகரிஷி ஜெயந்தி விழா - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_87.html

பாடல் பெற்ற தலங்கள் (9) - கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் & ஸ்ரீ கும்பமுனிவர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/01/9.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020_6.html

அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_6.html

அன்பும் அருளும் ஓங்குக - 2 ஆம் ஆண்டு அகத்தியர் குரு பூசை விழா - 13.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/2-13012020.html

பனப்பாக்கம் ஸ்ரீ லோபமாதா சமேத ஸ்ரீ அகத்தியர் முனிவர் ஆயில்ய வழிபாடு அழைப்பிதழ் - 12.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/12012020.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 8 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - https://tut-temples.blogspot.com/2020/01/8.html


அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html

குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5.html

நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

TUT தளத்தின் 100 ஆவது சிறப்புப் பதிவு - தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே! - https://tut-temples.blogspot.com/2019/07/tut-100.html

No comments:

Post a Comment