"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, December 31, 2021

இளைய பொன்னம்பல சுவாமிகள் குரு பூஜை - 03.01.2022

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சித்தர்கள் அறிவோம் என்ற தொடர் பதிவில் சூட்டுக்கோல் செல்லப்ப சுவாமிகள், ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள், யோகி ராம் சுரத் குமார், பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள், ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள், கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள், ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள், ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர், கண்ணப்ப சுவாமிகள், ஸ்ரீ சற்குரு சுவாமிகள், அருள்மிகு வீரராகவ சுவாமிகள், கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள், ரோம மகரிஷி, பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர், மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், என தரிசனம் பெற்று வருகின்றோம்.  இன்றைய பதிவில் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் சுவாமிகள் பற்றி சிறிது உணர்வோம். நாம் சில ஆண்டுகளுக்கு முன்னர்  சிவராத்திரி தரிசனத்தில் சுவாமிகள் தரிசனம் பெற்றோம். அதற்கு பின்னர் இன்று நம் தலத்தில் சுவாமிகள் பற்றி பேசுகின்றோம் என்றால் காரணமின்றி காரியமில்லை தானே !

முதலில் இளைய பொன்னம்பல சுவாமிகள் குரு பூஜை - 03.01.2022 தகவலை இங்கே பகிர்கின்றோம்.


ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் திருமடாலயம் செம்பாக்கம்.(திருப்போரூர் to செங்கல்பட்டு சாலை) செங்கல்பட்டு மாவட்டம்.
வணக்கம்,
வருகின்ற 03/01/22 (மார்கழி 19 -ம் நாள் ) திங்கட்கிழமை, இளைய பொன்னம்பல சுவாமிகள் குருபூஜை (பூராடம் நட்சத்திரம்) நடைபெற உள்ளது, காலை 10.00 மணிக்கு - கலசபூஜை , 
11.00 மணிக்கு மகாஅபிஷேகம்,
12.00 மணி அளவில் மகாதீபாரதணை , மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது,
இதில் கலந்து கொண்டு சுவாமிகளின் அருள் பெற அழைக்கின்றோம்.
வருக! வருக!




இங்கே நாம் மேற்கண்ட நித்ய பூஜை பற்றிய அறிவிப்பை கண்டோம். குருவருளால் இன்று 01.01.2022 அன்று நம் தளம் சார்பில் நித்ய பூஜைக்கு காணிக்கை செலுத்தி உள்ளோம். புதிய ஆண்டினை குருவருள் துணை கொண்டு இங்கே வழிபாடு செய்து துவக்குகின்றோம் என்றால் குருவருள் இன்றி நமக்கு துணை இல்லை என்பது நன்கு தெளிவாகின்றது. அப்படியே பொன்னம்பல சுவாமிகள் பற்றி அறிவோம்.


“உற்றார் எனக்கில்லை உன்பதமே - மேவுகின்றேன் நற்றணையாம் - பொன்னம்பல நாத - சற்குருவே நின்னடியை நாடுகின்ற நாயேனை காத்தருள்வாய் துன்னுகின்ற துன்பத்தை தேய்த்து”




ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் திருஅவதாரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், தற்போதைய திருப்போரூர் வட்டம், செம்பாக்கம் எனும் கிராமத்தில் திருச்சீற்றம்பல முதலியார் - சொக்கம்மாள் ஆகிய இருவரும் இல்லறத்தில் நல்லறம் புரிந்து வாழ்ந்து வந்தனர். திருச்சிற்றம்பல முதலியார் வேளாண்மையோடு நெசவுத் தொழில் மேற்கொண்டு நித்யதவ ஒழுக்கத்தோடு சிவசிந்தனையுடன் வாழ்க்கை நடத்திவரும் காலத்தில் திருமணமாகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவருத்தத்துடன் இருந்தனர். தம்பதிகள் இருவரும் எல்லாம் வல்ல அழகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலை வலம் வந்து ப்ரார்த்தனை செய்து வணங்கி வரும் காலத்தில், திருப்போரூர் திருகிருத்திகை தினத்தையட்டி பல்வேறு பகுதியில் இருந்து சந்நியாசிகளும், சித்தர்களும் பாதயாத்திரையாக நடந்து வந்து செம்பாக்கத்தில் வீடுதோறும் 'பவதி பிச்சாந்தேகி' என்று பிச்சை எடுத்து உண்டு திண்ணையில் படுத்துறங்கி செல்வது வழக்கம்.

அதுபோல ஒரு மாத கிருத்திகை தினத்தன்று ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் வலம் வந்து வணங்கிவரும்போது ஒரு அதி தீவிர சிவசந்தியாசி ஒருவர் கோயிலில் அமர்ந்து தியானத்தில் இருந்தார். அவரைப் பார்த்த சிற்றம்பல முதலியாருக்கு மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி உண்டானது. அவர் தியானத்தில் இருந்து விழித்ததும் அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு படைத்து அருள்பெற வேண்டும் என நினைத்து காத்திருந்தார். தியானத்தில் இருந்து விழித்த சந்நியாசியிடம் சாஷ்டாங்காக நமஸ்கரித்து தாங்கள் உணவு உண்ணவில்லை என நினைக்கிறேன். தாங்கள் என் வீட்டிற்கு எழுந்தருளினால் உணவு படைத்து தங்களின் பசியாற்றிய பெரும் சிவபுண்ணியம் செய்த பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் என வேண்டினார். அதற்கு அந்த சன்னியாசி அப்பா நான் தினம் உணவு அருந்தும் பழக்கம் அற்றவன். வாரத்தில் ஒருநாள் ஒருவேளை உணவு மட்டுமே அருந்துவேன். அதுவும் மற்றவர்கள் சமைத்து கொடுத்த உணவை உண்பது வழக்கமல்ல.

நானே சமைத்து உண்பதுதான் என் வழக்கம். ஆகையால் உனக்கு சிவ புண்ணிய பலனை அளிப்பது என்னால் முடியாது என்று கூறி எழுந்து புறப்பட, சிற்றம்பல முதலியார் காந்தத்திடடிம் ஈர்த்த ஈரும்பை போல மனம் அவரின் பின் தொடர்ந்தது. மறுமுறையும் அவரிடம் சென்று வணங்கி "சுவாமிகள்" தாங்களே சமைத்து சாப்பிடுங்கள், உங்களுக்கு வேண்டிய அரிசியை நானே தருகிறேன். இங்கேயே சமைத்து உண்ணுங்கள் என்று கெஞ்சினார். இதைக் கண்ட சிவ சந்நியாசி மனம் இறங்கி சரி என ஒப்புக் கொண்டு, தாங்கள் சிவாலயத்திலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். தன் மனைவி சொக்கம்மாளிடம் நடந்தவற்றை சொல்லி மகிழ்ந்து தன் வீட்டில் இருக்கும் அரிசியை தன் துண்டில் முடிந்து கொண்டு, தன் வீட்டில் இருந்த சிறிய மண்பானை ஒன்றையும் எடுத்துக் கொண்டு, ஒரு மணிநேரம் கழித்து கோவிலுக்கு வரும்படி கூறி கோயிலுக்கு விரைந்தார்.

சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன்

கோவிலில் அமர்ந்திருந்த சிவசந்நியாசியிடம் அரிசியும் மண்பானையையும் கொடுத்து உணவு சமைத்து உண்ணும்படி கேட்டுக் கொள்ள, அகழி குளத்தில் பானையில் நீர் முகர்ந்து அரிசியை களைந்து கழுவி உலைநீர் விட்டு கல்லை அடுப்பாக்கி காய்ந்த சருகு கிளைகளை ஒடித்து சமையலுக்கு சிற்றம்பலம் முதலியார் உதவி செய்ய சிவசந்தியாசி சாதம் சமைத்து உப்பில்லாமல் சாப்பிடும் நேரத்தில் சொக்கம்மாள் அங்கு வர இருவரும் வணங்கி நிற்க, சிவசன்னியாசி மகிழ்ந்து உண்ணும் சாதத்தில் ஒரு பிடியை கொடுத்து "இதை சாப்பிடம்மா" என்று கூறி கிருத்திகைக்க நெல்குத்தி அரியாக்கி வைத்துள்ளதை தனக்கு என்று சிறிதும் எடுக்காமல் கணவன் கேட்டதும் எடுத்துக் கொடுத்த சொக்கத்தங்கம்! உனக்கு "பொன்னம்பலம்" தருகிறேன் பெற்றுக் கொள் என்று கூறி தர, அதை வாங்கிய சொக்கம்மாள் சிவபிரசாதமாக உண்டு மகிழ்ந்தாள். சிற்றம்பல முதலியாரின் ஆத்மபக்குவம் கருதி சிவசந்தியாசி சிவ தீட்சை செய்வித்து உயிர் உடலை விடும் மட்டும் சிவநாம ஜெபம் செய்து சிவபதம் அடைவாய் என்று அனுக்கிரஹம் செய்து பிரியாவிடைபெற்று திருப்போரூர் விரைந்தார் சிவசந்தியாசி. இந்நிகழ்ச்சி நடந்த சில மாதத்திலேயே சொக்கம்மாள் மணிவயிறு வாய்த்து 10வது மாதம் ஒரு நன்னாளில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் சிவசந்நியாசி குறிப்பிட்டதுபோல குழந்தைக்கு "பொன்னம்பலம்" என்று பெயர்சூட்டி அழைத்து மகிழ்ந்தனர்.

தீராத நோய்களையும், விபூதியால் தீர்த்த ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் :

இறக்கக் கிடந்தானை எழுப்பியதை அறிந்த ஊனமனம் கொண்ட ஈனர்கள் சிலர் ஒன்று சேர்ந்து பொன்னம்பல சுவாமிகளின் அருள் அனுபவத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாது, அவரின் மீது ஏதேனும் களங்கம் சுமத்த வேண்டி தன்னில் ஒருவனை இறந்தவனைப்போல மூச்சை அடக்க நடிக்க வைத்து, அவனை வேறொருவன் தோள் மீது சுமந்து வந்து பொன்னம்பல சுவாமிகளின் வீட்டில் கிடத்தி காப்பாற்றும்படி கதறி அழுது பாசாங்கு செய்தனர். அவர்கள் மீது மனமிறங்கி ஆறுதல் சொல்வதைப்போல் சுவாமிகள் திருநீற்றை அள்ளி எடுத்து இறந்தவனைப்போல் பாசாங்கு செய்யும் தீயவன் மீது தூவி இவனுக்கு இனி வரும்காலம் இறந்தகாலம், இவன் இனி பிரயோசனம் அற்றவன் இறந்துவிட்டான் என்று கூறினார்.

தீடீரென்று அழுவதுபோல பாசாங்கு செய்தவர்கள் ஆணவம் தலைக்கேறி சிரித்துக் கொண்டே அவனை எழுப்ப முயற்சி செய்தனர். அவன் கண்விழித்த பாடில்லை; அதில் ஒருவன் நாடி பிடித்துப் பார்த்தான்; வேறொருவன் இதயத்தின் மீது தன் காதை வைத்து இதயத்துடிப்பை அறிய முற்பட்டான். இதனால் கலக்கம் அடைந்த ஈனர்கள் சுவாமிகளின் காலில் விழுந்து கதறி அழுது, அறியாமையால் உங்கள் மீது பொறாமை கொண்டு இவ்வாறு செய்து விட்டோம் என மன்னிப்பு கேட்க, பொன்னம்பல சுவாமிகள் திருநீற்றை அள்ளித் தூவி "பிழைத்து போ" எனக்கூற இறந்தவன் அலறி எழுந்தான். இவர்கள் பின் நாளில் சுவாமிகளை தூஷித்த பாவத்தினால் தீரா வியாதியால் துன்பமுற்று அழிந்ததாக இப்போதும் அவ்வூரில் சொல்லப்படுகிறது.


சகல ஜீவராசிகளையும் விபூதியால் தீராத நோய் தீர்த்த சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் வைத்தியத்தால் தீராத நானாவித வியாதிகளுக்கு ஒரே மருந்தாக ஊரில் உள்ள அனைவருக்கும் விபூதியைக் கொடுத்து நோய்வாய்ப்பட்டவர்களின் உடலில் பூசியும் உள்ளுக்கு சாப்பிட சில நாட்களில் நோய் நீங்கி நலம் அடைந்தனர். கால்நடைகளும் பால் சுரந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சுற்றுவட்டார மக்கள் சுவாமிகளின் அருள்ஆற்றலை ஏற்று நன்றி தெரிவித்தனர்.

இளைய ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் வாழ்க்கை:

சற்குரு சித்தபுருஷர் ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகளின் மகன் சிவலிங்கத்திற்கும், சொர்ணம்மாள் தம்பதியருக்கு இளைய மகனாக ஸ்ரீ பொன்னம்பல சுவாமிகள் 08.12.1914ஆம் ஆண்டு அவதரித்தார். இவர் சிறுவயதில் இருந்து இறைவன் திருவருளாலும் தனது தாத்தாவின் குருவருளாலும் சதாசிவ சிந்தனையடனும், தனது தாத்தாவின் நினைவுடனும் வாழ்ந்து தனது தாத்தாவையே குருவாக ஏற்க வேண்டி மிகுந் வைராக்கியத்துடன் அவரே தனக்கு தீட்சை அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு சதா அவரையே நினைத்து நினைத்து தியானம் செய்துவரும் காலத்தில் ஒருநாள் கண்ணாடியில் தனது தாத்தாவான சித்த புருஷர் காட்சி தந்து ஆசி கூறினார். அதுமுதல் தனது தாத்தாவின் ருத்திராட்ச மாலை அணிந்து, அவர் பூஜை செய்துவந்த பாணலிங்கத்தையும் தனது தாத்தாவின் காலடி சுவடியை பின்பற்றி அவரது வாழ்க்கை போலவே வாழ்ந்து இறை தொண்டாற்றி மக்கள் சேவையும் செய்து வந்தார். இவரும் தனது குருவைப் போலவே செங்குந்த மரபின் உறவின்முறைத் தலைவராக இருந்து நியாயத்தையும் தர்மத்தையும் நிலைநாட்டினார்.



21.12.1976 அன்று இரவு அவரது சீடருக்கு பேரொளியோடு விண்ணிலிருந்து பல்லக்கு வருவதை கண்ணுற்ற தனது குருவின் வீட்டிற்கு விரைந்தார். நள்ளிரவு சுவாமிகளின் ஆத்மஜோதி சிவத்துடன் கலந்தது.

குறிப்பு : மெய்கண்ட சந்தான மரபு திருவண்ணாமலை துறையூர் திருமுதுகுன்றத்து வீர சைவ ஆதீனம் 24 ஆம் பட்டத்து சீர்வளர்சீர் இரத்தினவேலாயுத சிவப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடைபெறும்.



சென்ற ஆண்டு சிவராத்திரி நிகழ்வில் நாம் கண்ட அருள்நிலைகளை தந்துள்ளோம்.




அமைவிடம் : சென்னையிலிருந்து செம்பாக்கம் 55 கி.மீ. தூரத்திலும் மாமல்லபுரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவில் பொன்னம்பல சுவாமிகள் ஜீவசமாதி உள்ளது.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் 92 ஆம் ஆண்டு ஆராதனை விழா - 06.01.2021 - https://tut-temples.blogspot.com/2021/01/92-06012021.html

யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

 பிரம்ம ஸ்ரீ எத்திராஜா ராஜயோகி சுவாமிகள் - 50 ஆம் ஆண்டு குருபூஜை - 08.12.2020 - https://tut-temples.blogspot.com/2020/12/50-08122020.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

No comments:

Post a Comment