கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக அனைவரும் கொண்டாடி இருப்பீர்கள் என்று விரும்புகின்றோம். நாமும் தேனியில் உள்ள எம் வீட்டில் கார்த்திகை தீபத் திருவிழா குருவருளால் சிறப்பாக கொண்டாடினோம். வழக்கமாக கார்த்திகை தீபத் திருவிழா கூடுவாஞ்சேரியில் இருந்து கொண்டாடுவோம். இந்த ஆண்டில் கொண்டாட்டங்கள் அவ்வப்போது மாறி வருகின்றது. இருப்பினும் நம் வழக்கமான சேவை எந்த தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றது. இப்போது தான் 2020 ஆண்டில் காலடி எடுத்து வைத்து இருப்பது போன்று இருந்தது. அதற்கும் வருட இறுதிக்குள் வந்து விட்டோம். ஒவ்வொரு நாள் நாட்காட்டி தேதி பார்க்கும் போது நாம் இன்னும் செய்ய வேண்டிய சேவைகள் அதிகமாக உள்ளது. நம் குழுவை மருத்துவ சேவையில் ஈடுபடும்படி நம் குருநாதர் சென்ற ஆண்டில் கூறினார்கள். இன்னும் நாம் அந்தப் பக்கம் செல்லவில்லை. இந்த ஆண்டில் தொற்றுக்கிருமி காரணத்தால் நாம் உழவாரப்பணி, ஆலய தரிசனம் போன்ற நிகழ்வுகளை நிகழ்த்தவில்லை. ஆனால் பிற சேவைகளான அன்னசேவை, மோட்ச தீபம், ஆயில்ய ஆராதனை, ஆலயங்களுக்கு தீப எண்ணெய் வழங்குதல் உங்கள் அனைவரின் பொருளுதவியால் நடைபெற்று வருகின்றது.
அதே போல் சென்ற ஆண்டு நம் தளத்தின் தரிசனப் பதிவுகள் என பல பதிவுகள் இன்னும் நம் கையில் உள்ளது. நம் கையில் உள்ள பதிவுகளை உங்கள் இதயத்தில் இடம்பெற விரைவில் முயற்சி செய்கின்றோம்.
இன்றைய நாளில் இரு குருமார்களின் குருபூஜை நடைபெற்றுள்ளது. காலம் தாழ்த்தி நாம் இங்கே பதிவை அளித்தாலும், உங்கள் மனதில் இந்த இரு மகான்களை பற்றி நீங்கள் இருத்த வேண்டும் என்ற விருப்பமே இந்தப் பதிவின் நோக்கம் ஆகும்.
இன்றைய குரு பூஜை நாளில் யோகி ராம் சூரத் குமார் போற்றுவோம்.
யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா!
திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி
சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து
திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்’ என
அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். ஸ்ரீயோகி ராம்சுரத்குமார்
சுவாமிகள், வாரணாசிக்கு அருகில் உள்ள நாராதாரா கிராமத்தில் டிசம்பர் 1,
1918-ம் ஆண்டில் ராம்தத் குவார் - குசும்தேவி தம்பதியருக்கு இரண்டாவது
மகனாக அவதரித்தார்.இவருக்கு மரைக்கன் குவார் மற்றும் ராம்தகின் குவார் என
இரு சகோதரர்கள். குழந்தைப் பருவத்திலேயே யோகிகளையும் துறவிகளையும்
சந்திப்பதில் ஆர்வத்துடன் இருந்தார். கங்கை ஆற்றாங்கரையில் உலவுவது,
துறவிகளுடன் உறவாடுவது என இருந்தார்.
ஆன்மிகத் தேடலில் ஈடுபட்டிருந்தவருக்கு ஸ்ரீரமண தரிசனம் அற்புதமாக
அமைந்தது. `இவரே... இவரே... இவரே என் குரு’ என்றவருக்கு, மிகப் பெரிய கேவல்
எழுந்தது. அதே நேரம் ஸ்ரீஅரவிந்தரைப் பற்றி அறிந்து, பாண்டிச்சேரியை
நோக்கிப் பயணப்பட்டார். ஆனால் அவரை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும்,
சூட்சுமமாக அரவிந்தர் தரிசனம் கிடைத்தது. மறுபடி திருவண்ணாமலை வந்தார்.
அடுத்த விடுமுறையில் வடக்கே பயணப்பட்டார். இமயமலைச் சரிவுகளில் அலைந்தார்.
அந்தச் சமயத்தில் திருவண்ணாமலையில் ஸ்ரீரமண மகரிஷி முக்தியடைந்தார்;
பாண்டிச்சேரியில் அரவிந்தர் சித்தி அடைந்தார் என்பது தெரியவர,
இடிந்துபோனார்.
மங்களூருக்கு அருகில் கஞ்சன்காடு கிராமத்தில் இருந்த பப்பா ராமதாஸை நோக்கி
பயணத்தைத் தொடங்கினார் ராம்சுரத். ராமதாஸரின் ஆஸ்ரமத்தில் தங்கினார். பப்பா
ராமதாஸ் அவருக்கு ராம நாமத்தை உபதேசித்தார். ''இடையறாது ராம நாமம் சொல்''
என்றார். ராம்சுரத்குமார் குருவின் கட்டளையை மீறவில்லை. ராம நாமம்
அவருக்குள் மிக விரைவிலேயே மாற்றத்தை ஏற்படுத்தியது. அவரின் உள்ளொளி
பொங்கியது. உடுப்பதும் உண்பதும்கூட மறந்து, ராம நாமம் சொல்வதே வேலையாக
இருந்தது.
உள்ளுக்குள் ராம நாமம் பொங்க, எந்த நியதிக்கும் அவரால் கட்டுப்பட
முடியவில்லை; எதுவும் புலப்படவில்லை. அவர் தன்வசம் இழந்தவராக,
சின்மயமானவராக எல்லா இடத்திலும் இருப்பவராக உணர்ந்தார். ஆனால், பொது
வாழ்க்கையில் இந்த நிலை `பித்து’ என்று வர்ணிக்கப்படும். `பைத்தியக்காரன்’
என்ற பட்டப்பெயர் கிடைக்கும். ராம்சுரத்குமாருக்கும் இப்படி பட்டப்பெயர்
கிடைத்தது. அதனால் ராம்சுரத்குமார், ஆஸ்ரமத்தில் இருந்து மென்மையாக
வெளியேற்றப்பட்டார்.
உன்மத்த நிலையோடே வீடு வந்தார். வீடு அவரை விநோதமாகப் பார்த்தது. மனைவி
கவலையானார். அவரை சரியான நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால்
உன்மத்தம் அதிகமானது. கிராமத்தின் மரத்தடிகளில் அமர்ந்து வேலைக்குப்
போகாமல் திரும்பத் திரும்ப ராம நாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தார்.
தன்னந்தனியே கங்கைக்கரையோரம் திரிந்து கொண்டிருந்தார்.
உணர்தல் என்ற விஷயமே கடவுள் தேடல் தொடர்பான விஷயம்தான். தன்னை உணர
முற்படுகிறபோது இது பிரமாண்டமாக விரிவடைகிறது. எல்லா இடங்களிலும் அது
நீக்கமற நிறைகிறது. அப்போது அவருக்கு, தான் என்ன செய்கிறோம் என்கிற
நினைப்பு இல்லை. இந்த உலகாயதமான மரியாதைகள் அவருக்குத் தெரியவில்லை. அவர்
தனக்குள் பேசியபடி தன்னையே பார்த்தபடி இருக்கிறார். தன்னை உற்றுப்
பார்ப்பவருடைய அவஸ்தை மற்றவரைப் பார்க்க விடுவதில்லை. தனக்குள் உள்ள அந்த
'தான்' என்பதை அனுபவிக்கிறபோது, வேறு எதுவும் மனதுக்குப் புலப்படுவதில்லை.
இதுவொரு கலக்கமான நேரம். கலங்கியதுதான் தெளியும். விரைவில் தெளிந்தது.
மிகப் பெரிய உண்மை ஒன்று எளிதில் புலப்பட்டது. அவர் குடும்பத்தைவிட்டு
மறுபடியும் திருவண்ணாமலை நோக்கிப் பயணப்பட்டார்.
திருவண்ணாமலைக்கு வந்தவர், ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து இடையறாது ராம
நாமத்தைச் சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு அவர் குடும்பத்தை
நோக்கிப் போகவே இல்லை. கட்டு அறுந்து போயிற்று; கடவுளோடு பிணைப்பு
உறுதியாயிற்று.கங்கை நதி மீது அவருக்கு இருந்த பக்தி, காசியில் தகனம்
செய்யப்படும் உடலைப் பார்த்ததும் அவருக்கு ஏற்பட்ட ஞானத்தேடல், புத்தரின்
நினைவாக தனது மகளுக்கு `யசோதரா’ என்று பெயர் சூட்டியது, பகவான் ரமணரைச்
சந்தித்தது, அரவிந்தரைச் சந்தித்தது... இப்படி யோகி ராம்சுரத்குமாரின்
வாழ்க்கையே ஆன்மிகத் தேடலாக இருந்துவிட்டது.
ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமண மகரிஷியிடமிருந்து தவத்தையும்,
சுவாமி ராமதாஸரிடமிருந்து பக்திநெறியையும் கேட்டுத் தெளிந்தார். குரு
ராமதாஸரிடமிருந்து, 'ஓம் ஶ்ரீ ஜெய்ராம் ஜெய் ஜெய்ராம்' எனும் மந்திர தீட்சை
பெற்றார்.யோகி ராம்சுரத்குமார் சித்தியடையும் வரை இந்த மந்திரத்தை
ஜெபித்துக்கொண்டே இருந்தார். தமிழ் மண்ணில் பிறக்க நாம் புண்ணியம் செய்து
இருக்க வேண்டும். ஒரு மகான் வடக்கில் பிறந்து, தெற்கில் நம் மண்ணில் வந்து
சித்தி அடைவதென்றால் ஏன்? நமக்காக தானே. நாம் உண்மை நிலை உணர தானே.
யோகியின் வழியில் நாமும் மந்திர ஜெபத்தை பிடிப்போம்.
நம் அன்பர் திரு.ஹரிஹரன் அவர்கள்
இரண்டு ஆண்டுகளாக நம்மை கூடுவாஞ்சேரியில் யோகியாரின் ஆசிரமம்
உள்ளது,சென்று தரிசியுங்கள் என்றார். நாமும் எங்கெங்கோ தேடி கடைசியில்
கண்டோம், அருள் பெற்றோம். அவற்றை பதிவின் இடையில் தந்துள்ளோம்.
இந்த பதிவின் மூலம் திரு.ஹரிஹரன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அடுத்து நாம் காண இருப்பது ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தர் தரிசனம் ஆகும். இன்று நடைபெற்ற குருபூஜை தரிசனம் உங்களுக்கு தருகின்றோம்.
கார்த்திகை 16ஆம் நாள்:01.12.2020 செவ்வாய்க்கிழமை 101வது குருபூஜை விழா
ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தர் என்பவர் தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பகுதிக்கு அருகே இருக்கும் வேட்டைக்காரன்புதூரில் வாழ்ந்த ஒரு சித்தராவார். இவருடைய ஜீவ சமாதியை இப்போது கோவிலாக்கி வழிபடுகின்றனர். இவர் கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் பிறந்ததாக கூறப்படுகிறது. இவருடைய பிறப்பு, இயற்பெயர், ஊர் ஆகியவைப் பற்றி பக்தர்களுக்குத் தெரியவில்லை. இவர் எப்போது குளிக்கிறார் என்பதை அறியாத மக்கள், இவரை அழுக்குச் சாமியார் என்று அழைக்க அதுவே இவருடைய பெயராக நிலைத்துவிட்டது.
இவர் 1918ம் ஆண்டு கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திரத்தில் வேட்டைக்காரன் புதூரிலேயே ஓரிடத்தினைத் தேர்ந்தெடுத்து ஜீவ சமாதியானார். அவருடைய ஜீவ சமாதி தற்போது அழுக்கு சாமியார் கோவில் அமைந்துள்ளது. அழுக்கு சாமியார் ஜீவ சாமியான கார்த்திகை மாதம் மிருகசீரிசம் நட்சத்திர தினத்தன்று அவருக்கு குரு பூசை கொண்டாடப் படுகிறது. இந்நாளில் அழுக்கு சாமியாருக்குப் பிடித்த கம்பஞ் கஞ்சியை பக்தர்களுக்குத் தருகிறார்கள்.
ஸ்ரீலஸ்ரீ அழுக்குச்சித்தரின் ஜீவசமாதி பொள்ளாச்சி to டாப்ஸ்லிப் செல்லும் வழியில் ஆனைமலையை அடுத்து உள்ள வேட்டைக்காரன்புதூரில் அமைந்துள்ளது.
அழுக்குச்சித்தர் அழுக்கு சுவாமிகள் தன்னுடைய இளம் வயதிலேயே (சுமார் 30 முதல் 40 வயதிற்குள்) 1919 ஆம் ஆண்டில் கார்த்திகை மாதத்தில் மிருகசீரிடம் நட்சத்திரம் சமாதிநிலையை அடைந்தார். இவருடைய ஜீவசமாதியில் சுமார் 30 நிமிடங்கள் அமர்ந்து இருந்தாலே நம் உள்நிலையில் ஏற்படும் மாற்றங்களை உணரலாம். மிகவும் சக்தி வாய்ந்த இடம். சேலத்தில் ஜீவசமாதி அடைந்த அப்பா பைத்தியம் சுவாமிகள் அழுக்குச்சித்தரின் சீடர் ஆவார்.
நாம் இன்னும் நேரில் சென்று தரிசனம் பெற வில்லை. ஆனால் பல அடியார்கள் சொல்ல கேட்டிருக்கின்றோம். இந்த குருபூஜை நாளில் விரைவில் ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தர் தரிசனம் பெற அவரிடமே கோரிக்கை வைக்கின்றோம்.
ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html
கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html
புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html
புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html
சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html
திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html
TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html
எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html
சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html
சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html
சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html
சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html
சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html
உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html
கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html
ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html
பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3) - https://tut-temples.blogspot.com/2019/09/3.html
பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html
சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html
தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html
நினைத்ததை
நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் -
04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html
களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html
நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html
சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html
குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html
சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html
அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html
No comments:
Post a Comment