அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
திருஅண்ணாமலை, திருவண்ணாமலை என்று கேட்டாலோ, படித்தாலோ நம்முள் ஒரு வித உணர்வு ஏற்படுகின்றது. இது நம்மை அன்பே சிவம் என்ற நிலை நோக்கி நகர செய்கின்றது அல்லவா? இது தான் அண்ணாமலையாரின், நம் அன்பில் கலந்தோன் உணர்த்தும் நிலை. நாம் பல முறை திருஅண்ணாமலை சென்றாலும் மீண்டும் மீண்டும் ஒரு காந்தமாக இருந்து இரும்பாகிய நம்மை ஈர்க்கும் மலை திருஅண்ணாமலை. நினைத்தாலே முக்தி தரும் மலை. பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக இருக்கும் மலை. மேலும் திருஅண்ணாமலை என்று சொன்னாலே கிரிவலமும் பிரசித்தம். நம் மானிடப் பிறப்பின் நிலை அறிய கிரிவலம் ஒன்றே மாமருந்து என்பதில் துளி அளவும் ஐயமில்லை. இது மட்டுமா? பகவான் ரமணர், சேஷாத்திரி.விசிறி ஸ்வாமிகள் என அருள் ததும்பும் மலையாக திருஅண்ணாமலை இருக்கின்றது.
ஆன்மிகத்திலும் வரலாற்றிலும் புகழ்பெற்ற இடமாக திகழ்கிறது திருவண்ணாமலை. பஞ்சபூத்த்தலங்களில் ஒன்றாகவும் சைவக்குரவர்களால் பாடல் பெற்றத்தலமாகவும் சிறப்புபெற்ற திருக்கோயில்.
இங்குள்ள அண்ணாமலையார் கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு தொடர்ந்து சோழர்கள், பாண்டியர்கள், சம்புவராயர்கள், போசளர்கள், விஜயநகர அரசர்கள், நாயக்க மன்னர்கள், நகரத்தார்கள், குறுநில மன்னர்கள், ஐமின்தார்கள் என பல்வேறு அரசர்களின் பங்களிப்பு இக்கோயில் கட்டடக்கலை வரலாற்றில் உள்ளன. இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன. இக்கோயிலில் 100 க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன.
இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும்.
இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். இக்கோயிலில் அருள்மிகு அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலை மூலவராக அமைந்துள்ளனர். மலைவலப்பாதையில் அமைந்துள்ள எழுத்து மண்டபம் ஓவிய கூடமாக திகழ்கிறது. இவை தவிர கந்தாஸ்ரமம், பவழக்குன்று, ரமணாஸ்ரமம், கிரிவலப்பாதை, அஷ்டலிங்கங்கள் பார்க்கத்தகுந்த இடங்களாகும்.
திருமுறைக் கழகம் சார்பில் கூட்டு வழிபாடு தினமும் நடைபெற்று வருகின்றது. நாமும் ஒரு நாள் நேரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
மீண்டும் கோபுர தரிசனம் காண இருக்கின்றோம்.
கோடி புண்ணியம் தருகின்ற கோபுர தரிசனத்தை நேரில் காண, விளக்கேற்றி கிரிவலம் செல்ல குருவிடம் வேண்டி வருகின்றோம். பதிவின் தலைப்பை மீண்டும் படித்து,கோபுரத்தை தரிசனம்
செய்யுங்கள்.
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா!
- மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_29.html
தமிழ்நாட்டு திருவிழாக்கள் தொகுப்பு - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_48.html
யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_98.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(5) - https://tut-temples.blogspot.com/2019/12/5.html
தீபங்கள் பேசும் - கார்த்திகை தீப தொடர்பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/12/3.html
மெய் விளக்கே விளக்கல்லால் வேறுவிளக்கில்லை (2) - https://tut-temples.blogspot.com/2019/12/2.html










































































No comments:
Post a Comment