இன்று வைகாசி மாத கடைசி நாள். நாளை வைகாசி மாத ஆனித் திங்கள் பிறக்க இருக்கின்றது.பிறக்கும் ஆனி மாதம் அனைவருக்கும் மகிழ்ச்சி தர குருவிடம் வேண்டுகின்றோம். பதிவின் தலைப்பை பார்த்து, நாம் இன்று என்ன சிந்திக்க இருக்கின்றோம் என்று கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். தெரியவில்லையா? ஆம். நம் தளத்தின் ஆதாரமாக விளங்கும் அன்னதானம் பற்றி இன்று பேச இருக்கின்றோம். இன்றைய அன்னதானத்தின் துளிகளை நீங்கள் அனைவரும் அறிய வேண்டியும். முதன் முதலாக கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பும் இன்று செய்ய இருக்கின்றோம்.
அன்னதானம் பற்றி மகா பெரியவா கூறும் அனுபவத்தை இங்கே முதலில் காண இருக்கின்றோம். ஒரு முறை அல்ல, பல முறை படித்துப் பாருங்கள். சொல்லும் செய்தி நமக்கு நன்கு புரியும். அதனுடன் மகாபெரியவா, அந்த மகேஸ்வரனோட அம்சம்தான்கறது மீண்டும் தெளிவாக இந்த அனுபவம் மூல புரியும் என்று நாம் நம்புகின்றோம்.
"அன்னத்தால மட்டும்தான் ஒருத்தரை பூரணமா திருப்தி பண்ண முடியும். அதை ஒரு தரம் பண்ணிட்டா, அடுத்த வேளைக்குத்தான் பசிக்கும். ஆனா அரைகுறையா திருப்தி பண்ணினா இன்னமும் சாப்டலாம்னு தானே தோணும்"- மகாபெரியவா.
( பொட்டலமா மடிச்சுக் குடுக்காம உட்காரவைச்சு திருப்தியாகறாப்ல அன்னம் பரிமாறுங்கோ. அதுதான் புண்ணியம்" )
1960-ம் வருஷம் க்ஷேத்ர யாத்ரை பண்ணிண்டு இருந்த சமயத்துல, திருச்சியில் ஒரு இடத்துல சில நாட்கள் தங்கினார் மகாபெரியவா. சுத்துவட்டாரத்துல இருந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து ஆசார்யாளை தரிசனம் பண்ணிண்டு இருந்தா. பக்தர் கூட்டம் ரொம்ப அதிகமா இருந்ததாலே வரிசை நகர்கறதுக்கு ரொம்பவே நேரமாச்சு.
வயசுல பெரியவா,சின்னவா, குழந்தைகள்னு நிறையப்பேர் வரிசையா வந்ததால், " எல்லாரும் ரொம்ப தூரத்துலேர்ந்தெல்லாம் வர்றா....யாராவது முடிஞ்சா அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யலாமே!" அப்படின்னார் மகாபெரியவா.
அவர் நினைச்சா அன்னதானம் பண்ணுங்கோன்னு உத்தரவே போடலாம். ஆனா, அவர் ஒருபோதும் அப்படிச் சொன்னதில்லை.கோரிக்கை மாதிரிதான் சொல்வார்.
அன்னதானம் செய்யலாம்னு ஆசார்யா சொன்ன அன்னிக்கே, மடத்துக்காராளும் , பக்தர்களும் சேர்ந்துண்டு அதைத் தொடங்கினா. ஆரம்பிச்ச அன்னிக்கே அன்னதானம் நடந்த இடத்துல கூட்டம் நெருக்கித் தள்ளிண்டு நிறைஞ்சுது. ஒருத்தருக்கும் இல்லைன்னு சொல்லாதபடிக்கு அன்னதானம் நடந்தது
அந்த சமயத்துல முதல் பந்தியில உட்கார்ந்து சாப்பிட்ட சிலர், ஆறாவது,ஏழாவது பந்தியிலயும் சாப்பிடறதுக்கு வந்தா. சிலர்,கடைசிப் பந்திக்கு வந்தா. அவாளை அடையாளம் கண்டுபிடிச்சுட்ட மடத்து சிப்பந்திகள் சிலர், இலையில உட்கார்ந்தவாளை எழுப்பி வெளியில அனுப்பிட்டா. ஒருவழியா அன்னிக்கு அன்னதானத்தை முடிச்சா......!
தரிசன நேரம் முடிஞ்சதும்,சாயங்கால அனுஷ்டானங்களை முடிச்சுட்டு, மடத்து சிப்பந்திகளை எல்லாம் கூப்பிட்டார் மகாபெரியவா.
"என்ன அன்னதானமெல்லாம் நன்னா நடந்ததா? ஏதாவது விசேஷம் உண்டா?" அப்படின்னு கேட்டார்.
"ரொம்ப பிரமாதமா நடந்தது பெரியவா. எல்லாரும் திருப்தியா சாப்டா.ஒரே ஒரு குறை. கூட்டம் நெருக்கித் தள்ளிண்டு வந்ததால சமளிக்க முடியலை. அதனால அன்னத்தைப் பொட்டலமா கட்டிக் குடுக்கலாம்னு நினைக்கிறோம். நீங்க உத்தரவு குடுத்தேள்னா ...அப்படியே செஞ்சுடலாம்"-சில ஊழியர்கள் சொன்னார்கள்.
எல்லாத்தையும் கேட்டுண்ட மகாபெரியவா, "எல்லாருக்கும். வயறு நெறையாப்ல திருப்தியா போட்டதா சொன்னேளே. அப்படி நெறைஞ்சிருந்தா, ஒரு பந்தியில ஒக்கார்ந்து சாப்டவா, ரெண்டு மூணு பந்திக்கு அப்புறம் ஏன் திரும்பி வரப்போறா? அன்னத்தால மட்டும்தான் ஒருத்தரை பூரணமா திருப்தி பண்ண முடியும். அதை ஒரு தரம் பண்ணிட்டா, அடுத்த வேளைக்குத்தான் பசிக்கும். ஆனா அரைகுறையா திருப்தி பண்ணினா இன்னமும் சாப்டலாம்னு தானே தோணும்.
தப்பை ஒங்கமேல வைச்சுண்டு சாப்டவந்தவாளை எலைலேர்ந்து எழுப்பி அனுப்பறது பாவம் இல்லையோ?
நடந்த எல்லாமும் தனக்குத் தெரியும்கற மாதிரி கேட்டார் மகாபெரியவா
சர்வ வியாபியான ஈஸ்வரன் கிட்டே இருந்து எப்படி எதையும் மறைக்க முடியாதோ ,அதேமாதிரி அந்த பரமேஸ்வரனோட அம்சமான ஆச்சார்யாகிட்டே இருந்தும் எதையும் மறைக்க முடியாதுங்கறதை உணர்ந்து அமைதியா தலைகுனிஞ்சுண்டு நின்னா எல்லாரும்
"ம்....அப்புறம் என்ன சொன்னேள்? பொட்டலமா மடிச்சுக் குடுத்துடலாம்தானே? உட்காரவைச்சு அன்னம் பரிமாறது கஷ்டமா இருக்கறதால இந்த முடிவுக்கு வந்தேளாக்கும்? நீங்க சொல்றாப்புல பொட்டலமா கட்டிக் குடுத்தா, எங்கே வைச்சுண்டு சாப்பிடுவா? எலையை எங்கே போடுவா? குடிக்க ஜலம்,கை அலம்ப ஜலத்துக்கெல்லாம் எங்கே போவா? இதையெல்லாம் யோசிச்சேளோ?" பெரியவா சொல்லச் சொல்ல பதில் பேச முடியாம நின்னுண்டு இருந்தா எல்லாரும்.
மகாபெரியவாளே தொடர்ந்தார்; " ஒங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமோ? யாத்ரை வந்துண்டு இருக்க சமயத்துல ஒரு மடத்துல குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட எலையில மிச்சம் மீதி ஒட்டிண்டு இருந்த பதார்த்தங்களை எல்லாம் நரிக்குறவா சேமிச்சுண்டு இருந்ததைப் பார்த்தேன்.அதையெல்லாம் காயவைச்சு சேமிச்சு வைச்சுண்டு சாப்ட எதுவும் கிடைக்காதப்போ பயன்படுத்திப்பா..! அவா எடுத்துண்டு தூக்கிப் போடற எலைகள்ல ஒட்டிண்டு இருந்ததை நாய்கள் திங்கறது.அதுக்கப்பறம் மீதி உள்ள எலையை மாடுகள் சாப்டறது. நீங்க பொட்டலமா மடிச்சுக் குடுத்தா,இத்தனை ஜீவன்களுக்கும் அது கிடைக்குமா? அதனால உட்காரவைச்சு திருப்தியாகறாப்ல அன்னம் பரிமாறுங்கோ. அதுதான் புண்ணியம்" சொல்லி முடிச்சார் மகாபெரியவா.
மகாபெரியவா சொன்ன காட்சிகளை நாமளும் கூட பலசமயங்கள்ல வழியில் பார்த்திருப்போம். ஆனா, நாம சாப்பிடறச்சே, அதையெல்லாம் மனசுல வைச்சுக்கறதோ, மத்தவாளுக்கும் உணவு கிடைக்கணும்னு நினைக்கறதோஇல்லை. பரமேஸ்வரன் மட்டும்தான் லோகத்துல உள்ள சகல உயிர்களுக்கும் படியளந்து எதுவும் பட்டினியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கறதா புராணங்கள் சொல்றது.
அதையே இந்த அனுபவத்தின் மூலமா நிரூபிச்ச மகாபெரியவா, அந்த மகேஸ்வரனோட அம்சம்தான்கறது சந்தேகம் இருக்க முடியுமா என்ன?
இந்த அனுபவத்தை படித்த பிறகு, இன்றைய அன்னசேவையில் நாம் உணர்ந்த செய்திகளை கீழே தருகின்றோம்.
1. துப்புரவு தொழிலார்களுக்கு அன்னசேவை
2. தேவைப்படும் எண்ணிக்கையில் உணவுப் பொட்டலங்கள் வழங்கல்
3. உணவில் இனிப்பு மற்றும் தண்ணீர் புட்டி கொடுத்தோம்
4. ஒரு அன்பர் யாசகம் கேட்ட போது, பொருள் கொடுத்தோம், அவர் அரிசி கேட்க, உடனே நம் அன்பர் அரிசி,எண்ணெய், புளி போன்ற சில பொருட்களை வாங்கி கொடுத்தார்.
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
5. உணவு பெற்ற அனைவரும் நன்றி சொல்லி வாழ்த்தினார்கள்.
6. சிலர் சரியான நேரத்தில் உணவு வழங்கி எம் தேவையை பூர்த்தி செய்து விட்டீர் என மகிழ்ந்தார்கள்.
இதோ..நாம் மேற்சொன்ன செய்திகள் கீழே உள்ள இணைப்பு படங்களில் தெரியும்.
சரி..அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூட்டுப்பிரார்தனை பற்றிய அறிவிப்பு தருகின்றோம்.
தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது.
இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும்.
ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும்.
அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம்.
நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.
பிரார்த்தனை 1:
நம் தளத்தில் பலமுறை சென்னை - திருநின்றவூர்; ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய கலசவிழா பற்றி பேசி உள்ளோம். இதோ. அங்கு நடைபெற உள்ள நிகழ்விற்காக கூட்டுப்பிரார்தனை செய்யுங்கள்.
நம் குழுவில் உள்ள அனைவருக்கும் வணக்கம்!
நாளை மதியத்திற்கு மேல் நம் ஆலயத்திலேயே பஞ்சலோக சிலை உருக்கி ஊற்றி, சிலைகள் வடிக்கும் நிகழ்வு நடப்பதால்,
இன்று மாலை கூட்டு பிராத்தனையாக!
"பஞ்சலோக சிலைகளை சிறப்பாக வடிப்பதற்கும், நல்வடிவம் பெறுவதற்கும், இதன் மூலம் தெய்வங்களின் பரிபூரண அருளை மானிடர்கள் பெறுவதற்கும்", நம் குழுவில் உள்ள அடியார்கள் அனைவரும், இன்று மாலை 06:30 மணியளவில் கூட்டு பிராத்தனை செய்வோம் !
கூட்டு பிராத்தனை மிக சக்தி வாய்ந்தது!
திருச்சிற்றம்பலம்!
பிரார்த்தனை 2:
சிவ சிவ!
நம் ஆலயப்பணி குழுவில் உள்ள திரு. கோபால் (அருப்புக்கோட்டை - விருதுநகர் மாவட்டம்) அய்யா அவர்களின் நண்பர் திரு. சிவபெருமாள் (அருப்புக்கோட்டை) அய்யா அவர்கள் தீவிரமான அகத்தியர் அடியார்.
திரு. சிவபெருமாள் (அருப்புக்கோட்டை) அய்யா அவர்கள், தினமும் 110 நபர்களுக்கு மேல் அன்னதானம் செய்து கொண்டிருக்கிறார்.
"அன்னசேவையே பிரதானம்" என்று எண்ணி தினம் தினம் அன்னதானத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்.
திரு. சிவபெருமாள் (அருப்புக்கோட்டை) வசிக்கூடிய ஊரில், கடினமான சூழலில் வாழ்வை நடத்திக் கொண்டிருந்த மக்களுக்கு, ரூ. 10,00,000/- (பத்து இலட்சம்) மேல் பணத்தை கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திய உயர்ந்த கருணை உள்ளம் கொண்டவர்.
திரு. சிவபெருமாள் (அருப்புக்கோட்டை) அய்யா அவர்களுக்கு, சில தினங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டு தலைப்பகுதியில் பலத்த அடி ஏற்பட்டு, அய்யாவை மருத்துவமனையில் சேர்த்து சகிச்சை பெற்று வருகிறார். தலைபகுதியில் பலத்த அடி காரணமாக நேற்று கீறல் சகிச்சையும் (Operation) செய்து இருக்கிறார்கள்.
ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் அருளால், குருநாதர் அகத்தியனார் அருளால் அய்யாவின் உடல்நலம் மேம்பட்டு, பரிபூரணமாக குணமடைய நம் குழுவில் உள்ள அடியார்கள் அய்யாவிற்காக பிராத்தனை செய்வாேம்!
கூட்டு பிராத்தனை மிக சக்தி வாய்ந்தது!
கூட்டு பிராத்தனைக்காக, அய்யாவின் புகைப்படம் இணைத்துள்ளோம்.
அய்யாவிற்கு இன்னும் மருத்துவம் பார்க்க ரூ. 2.7 இலட்சம் தேவைப்படுவதால், நம் குழுவில் உள்ள அன்பர்கள் யாராவது உதவ மனமிருந்தால், நம்மை தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு : 7904612352
திருச்சிற்றம்பலம்!
இங்கே நாம் கொடுத்துள்ள பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள் நீங்களே காலை, மாலை ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு , நெய் தீபமேற்றி தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரவும்.
இல்லையேல் இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள், பதிவை படித்த பிறகு, அப்படியே ஒரு 15 நிமிடம் அமைதியாக குரு வழிபாடு செய்து, அப்படியே பிரார்த்தனை கோரிக்கையை படித்து மனதுள் உள்வாங்கி பிரார்த்தனை செய்யும் படி வேண்டுகின்றோம்.
பதிவை மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்குங்கள். மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html
தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment