அகத்தியம் என்ற பயணத்தில் அனைவரும் இணைந்து இருக்கின்றோம். அகத்தியம் சொல்வது என்ன? அன்பைத் தான் அகத்தியம் பேசுகின்றது. அகத்தியம் பக்தியைக் காட்டி, அன்பை ஊட்டி, ஞானத்தை போதிக்கும் என்பதை நாம் தற்போது கண்டு வருகின்றோம். நம் குருநாதர் ஜீவ நாடி வாயிலாக நமக்கு வழிகாட்டி வருகின்றார். அகத்தியம் என்பது கடல் போன்றது. அதில் ஜீவ நாடி என்பதும் உள்ளது. நாமெல்லாம் ஜீவ நாடி வாயிலாக சில துளிகளை மட்டுமே பருகி வருகின்றோம். இந்த ஜீவ நாடி அற்புதங்களில் பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் பற்றி பார்த்தோம். அதே போல் நம் அன்பர் மூலமாக சென்னை சித்தாலப்பாக்கத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில் பற்றியும், ஆலய திருப்பணிக்கு உதவி வேண்டியும் விண்ணப்பிக்கின்றோம்.
இத்துடன் இந்த வார கூட்டுப்பிரார்த்தனை அறிவிப்பு பதிவின் இறுதியில் தருகின்றோம்.
முதலில் திருக்கோயில் திருப்பணி அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.
சென்னை ஒரு சித்த பூமி என்று சொல்லலாம். குன்றத்தூர் என்று எடுத்துக் கொண்டால் கந்தலீஸ்வரர் கோயில், திருஊரகப் பெருமாள், குன்றத்தூர் முருகன் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் திருஒற்றியூர் என்று எடுத்துக் கொண்டால் சுமார் 30க்கும் மேற்பட்ட உயிர்நிலைக்கோயில்கள் உள்ளது. குறிப்பாக வடிவுடையம்மன் கோயிலை கூறலாம். இதே போல் மயிலை என்று கூறினால் மயிலையே கயிலை. கயிலையே மயிலை என்றும் கூறுவதுண்டு. கொடுப்பதும் பெறுவதும் பிரசித்தி பெற்ற அறுபத்து மூவர் திருவிழா இங்கு சிறப்பாக இருக்கும். சென்னை காளிகாம்பாள் கோயில், அஷ்டலட்சுமி கோயில், வடபழனி முருகன் கோயில், பார்த்தசாரதி கோயில் என எண்ணிலடங்கா கோயில்கள் உண்டு. இது தவிர நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிபட்ட தலங்கள் எனவும் பல உண்டு.
இது ஒரு புறமிருக்க , சென்னையில் உள்ள ஒவ்வொரு ஊரின் பெயரும் காரணம் பெற்றே உள்ளது.
அசோகரின் தூண் மாதிரி அமைத்த நகர் - அசோக் நகர்
அடையாரின் ஆற்றின் கரையோரம் உள்ள ஊர்- அடையாறு
பிரம்மன் சிவனை வழிபட்டு தன் படைப்பு தொழில் தொடங்க ஆதாரமான ஊர் - அயனாவரம்
ஆனை காத்த புது ஊர் - அனகாபுத்தூர்
சூரியனின் கதிர்கள் முதலில் எழும் ஊர் - எழும்பூர் ( எழும்பூர் என்று ஆங்கிலத்தில் சொன்னால் யாருக்கும் தெரியாது. எஃக்மோர் என்று தமிழில் சொன்னால் தான் தெரியும்..ஹி ..ஹி ...)
பிருங்கி மகரிஷி யாகம் செய்து தனது கிண்டியை வைத்த இடம் - கிண்டி
குளங்கள் அதிகமாக இருந்த ஊர் - கொளத்தூர்
கார்கோடகன்பாம்பு சிவனை வழிபட்ட இடம் - கோடம்பாக்கம்
ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்த போது , அவரது மகன்கள் குதிரையை கட்டிய இடம் - கோயம்பேடு
சின்ன தறி பேட்டை - சிந்தாதிரிப்பேட்டை
செங்கல் சூளை அதிகம் இருந்த இடம் - சூளை மேடு
தாம புரிஸ்வரம் - தாம்பரம்
மஹா வில்வ வனம் - மாம்பழம்
ஆடு மாடு மந்தை மேய்ந்த பகுதி - மந்தைவெளி
ஸ்ரீ சந்தானப்பெருமாள் சந்நிதி மகப்பேறு - முகப்பேறு
மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் - மயிலாப்பூர்
இலங்கை செல்லும் முன்பு ராமன் பிருங்கி மகரிஷியை வணங்க, அவர் நந்தவனம்
உருவாக்கிய இடம் - நந்தம்பாக்கம்
காஞ்சி மகான் திருமகள் வாழும் ஊர் என பெரியரிட்டர் - நங்கநல்லூர்
திருநீலண்கண்டேஸ்வரர் கோயில் கொண்ட ஊர் - நீலாங்கரை
பனை மரங்கள் அதிகமாக இருந்த ஊர்- நுங்கம்பாக்கம்
பல நாயன்மார்கள் திருவல்லீஸ்வரர் பெருமானை பாடியதால் - பாடி
பல்லவர்கள் வாழ்ந்த ஊர் - பல்லாவரம்
பிருங்கி முனிவர் தவம் செய்த மலை பிருங்கி மலை தற்போது பரங்கி மலை
புகழ் சோழ நல்லூர் - பொழிச்சலூர்
புரசை மரங்கள் அதிகம் இருந்த பகுதி - புரசைவாக்கம்
சிலைகள் அதிகமாக செதுக்கப்பட்ட ஊர் - சேலையூர்
தென்னை மரம் பேட்டை - தேனாம்பேட்டை
திரு வேர்காடு -திருவேற்காடு
திரு வால்மீகி ஊர் -திருவான்மியூர்
திரு ஒற்றிஸ்வரர் கோயில் இருக்கின்ற ஊர் - திருஒற்றியூர்
திரு சூலநாதர் கோயில் உள்ள ஊர் - திரிசூலம்
திரு அல்லி கேணி - திருவல்லிக்கேணி
திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் பாட பழநியில் முருகப்பெருமான் இரண்டு முறை அசைந்தார். இது தென் பழநி . வடக்காக அமைந்த இந்த பழநி - வட பழநி - வடபழனி
வண்டல் ஊர் - வண்டலூர்
நான்கு வேதங்களும் முழங்கிய ஊர் - வேதேஸ்ரேணி - வேளச்சேரி
வில்வ ஆரண்யம் - வில்லிவாக்கம்
வியாசர் பாடிய தலம் - வியாசர்பாடி
பல்லவர் கால நரசிம்மர் மற்றும் தண்டீஸ்வரர் கோயில் பணியாளர் வாழந்த பகுதி - மடி (தூய்மை) நிறைந்த பகுதி - மடிப்பாக்கம்
அப்பப்பா..பெயர்க்காரணம் பார்க்கும் போது தான் சென்னையின் பெருமை நன்கு விளங்குகின்றது.
இந்த வரிசையில் சித்தாலப்பாக்கத்தில் உள்ள ஈசனை நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் வழிபட்டுள்ளார். அகத்தியர் பெருமானை ஏனைய சித்தர்களும், மகான்களும் வழிபட்டமையால் இந்த ஊர் சித்தர்கள்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. தற்போது இதுவும் மருவி சித்தாலப்பாக்கம் என்று அழைக்கப்பட்டு வருகின்றது.
ஆலய வரலாறு கீழே உள்ள இணைப்பில் தந்துள்ளோம்.
ஸ்ரீ அகத்தியர் வழிபாடு செய்த தலம். ஒவ்வொரு பௌர்ணமியில் நிலவொளி ஈசனின் மேல் பட்டு பிரகாசிக்கும் என்பது இங்கே சிறப்பு. இவரை வழிபட, வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது கண்கூடு.
நாம் ஏற்கவே சொல்லியவாறு, இந்த திருக்கோயில் திருப்பணி தற்போது நடைபெற்று வருகின்றது.
இதோ. சில திருப்பணி படங்களை தங்கள் அனைவரின் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். அதற்கு முன்பு, நாம் இந்த ஆண்டு சிவராத்திரியின் போது சென்று தரிசனம் செய்த அருள்நிலையைத் தருகின்றோம்.
அன்றைய தினம் சிவராத்திரி 4 ஆம் கால பூசை நம் தளம் சார்பில் நடைபெற்றது. அந்த சிவராத்திரி அனுபவம் தனிப்பதிவில் காண்போம்.
கும்பாபிஷேகத்தை நோக்கி அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்
அனைவருக்கும் பணிவான வேண்டுகோள்..!
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் வட்டம், சித்தாலப்பாக்கம் கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த சிவாலயம் அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில்.
இத் திருத்தலதிற்கு என்று சிறப்பு அம்சங்கள் நிறைய உள்ளன:
அதில் மிக முக்கியமான அம்சங்களில் சில :
மாமமுனி ஸ்ரீ அகத்தியர் வழிப்பட்ட ஸ்தலம்...!
எம்பெருமான் சதுர ஆவுடையாராக காட்சி அளிக்கிறார்..!
ஸ்ரீ அங்காரகனுக்கு உகந்த ஸ்தலமாக சிறப்பு பெற்றது..!
ஆலய திருப்பணி
இங்கு முலவருக்கு தனி சன்னதி, அம்பாளுக்கு தனி சன்னதி, மகா மண்டபம், ஸ்ரீ அகத்தியருக்கு,
ஸ்ரீ கணபதிக்கு, ஸ்ரீ முருகர் வள்ளி தெய்வயானைக்கு, ஸ்ரீ பைரவருக்கு தனி சன்னதி மற்றும் நவகிரகம் அமைக்கும்பணி நிறைவு பெற்றது.
மீதம் உள்ள திருப்பணிகள்:
1. முகப்பு கோபுரம். (அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.)
2. மின் சார்ந்த வேலைகள்.
(தொடங்கி உள்ளது.)
3. பிளம்மிங்.
(தொடங்கி உள்ளது.)
&
4. வர்னம் அடிக்கும் பணிகள்.
குறிப்பு :
மின் சார்ந்த வேலைக்கு & பிளம்மிங் வேலைக்கு, பொருட்கள் வாங்கி தர விருப்பம் உள்ளவர்கள், வாங்கி தரலாம்.
திருப்பணியை முடிக்க தேவையாவை:
1. தரைக்கு பளிங்கு கற்கள்
(மொத்தம் 1200 சதுர அடி)
Floor Granite on Maha Mandabham
(Total Sq Feet = 1200 Sq ft).
2. பேவர் ப்ளாக்
(மொத்தம் 6000 சதுர அடி)
Paver block
(Total Sq Feet = 6000 sq ft).
3. சிமென்ட்டில் கடவுள் சிலை
(போட வேண்டிய சிலைகள் - 30 No
இதற்கு சுமார் 1.20 லட்சம் வரை ஆகலாம், சிலையின் உயரம் பொருத்து மதிப்பு கூறப்படும்).
God statue in Cement
(Pending silai = 30 No, cost comes around 1.20 Lakhs).
Note: Rate varies depends on statue size.
4. இரும்பு கதவு
(இதை செய்ய ரூ16000 ஆகும்)
Grill Gate for arch
(Making cost ₹16000)
5. அம்பாள் சன்னதிக்கு மரக்கதவு
(இதை செய்ய ரூபாய் 30000 ஆகும்)
Wooden door for ambal Sannadhi.
(Making cost ₹ 30000.)
கோயில் தேவைக்கு:
1. சோமாஸ்கந்தர் ஐம் பொன் சிலை
உயரம் - 2 1/2 அடி
கிலோ - 180 கிலோ
மதிப்பு - 2.50 லட்சம்
somaskandar ipon silai
Total height - 2 ½ ft
Weight - 180 kg
Amount - 2.50 Lakhs
2. மின்சார சாதனங்கள்
# குளிர்சாதன பெட்டி
# காற்று குளிரூட்டும் கருவி
# துணி துவைக்கும் இயந்திரம்
# கண்காணிப்பு கருவி
மின் சாதன பொருட்கள் :
# 1.5 ton AC : 1 No for moolavar sannadhi,
# 190 L fridge : 1 No
# Automatic washing machine : 1 No
# CCTV Camera : 3 No.
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று இதுவரை 70% பணிகள் முடிவடைந்துவிட்டது.
மீதம் உள்ள 30% பணிகளை முடிக்க சுமார் 7 லட்சம் ரூபாய் தேவைபடுகின்றது.
இத்தருணத்தில் தங்களின் உதவி மிக மிக அவசியமாக உள்ளது. மேலும் எங்கள் பணி முழுவீச்சில் நடைபெற தங்களால் இயன்ற பொருளோ பணமோ வழங்கி உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..!
அனைவரும் ஓன்றினைத்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து எஞ்சியுள்ள பணிகளை முடித்து அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடணுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயிலின் கும்பாபிஷேக பணியை நிறைவு செய்வோம்.
ஒரு சிவன் கோயிலில் கட்டுமான பணி செய்தால் ஏழு ஜென்ம பிறவி பயனை அடையலாம்.
மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி எண்கள்:
98849 42159/ 9283294939/7904612352
சரி..அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூட்டுப்பிரார்த்தனை பற்றிய அறிவிப்பு தருகின்றோம்.
தவம், தியானம், விரதம் முதலானவை கடினமானவை. கூட்டுப் பிரார்த்தனை இலகுவானது.
இது வீட்டில் ஒற்றுமையை வளர்க்கும். வெளியிடங்களில் சகோதரத்துவத்தை உருவாக்கும்.
ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும்.
அதுபோல், குடும்பத்திற்காகவும், தேசத்தின் பாதுகாப்புக்காகவும் ஒட்டு மொத்தமாக கூடி பிரார்த்தனை செய்வோம்.
நம் கோரிக்கை இறைவனால் நிறைவேற்றப்படும்.
முதலில் கூட்டுப்பிரார்த்தனை தினமும் செய்து வரும் அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். சென்ற கூட்டுப்பிரார்த்தனை பதிவில் அருப்புக்கோட்டை திரு.சிவபெருமாள் ஐயாவிற்கு பூரண உடல்நலம், பொருளாதார உதவி வேண்டி பிரார்த்தனை செய்தோம். நம்முடைய கூட்டுப்பிரார்த்தனையால் மருத்துவமனையில் இருந்த திரு.சிவபெருமாள் ஐயா உடல்நலம் தேறி தற்போது அவர் வீட்டில் உள்ளார். மருத்துவமனை செலவிற்கென பல வழிகளில் பொருளாதார உதவியும் கிடைத்தது. எம்பெருமானின் கருணைக்கும் நாம் நன்றி சொல்வோம்.
பிரார்த்தனை 1:
அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்திருப்பணிக்கு உதவி தேவை
இந்த பதிவை மீண்டும் படியுங்கள். ஆம். அருள்மிகு ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலயத்திருப்பணிக்கு பொருளுதவி செய்ய வேண்டி தினமும் கூட்டுப் பிரார்த்தனை செய்து வாருங்கள்.
பிரார்த்தனை 2:
உலக நன்மை வேண்டியும், தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் உள்ள கிருமி நோய் தொற்று விரைவில் நீங்கி, மக்கள் இயல்பான சூழ்நிலைக்கு திரும்பவும், தற்போது மக்களுக்கு தேவைப்படும் மருத்துவ உதவி, உணவு போன்ற அறப்பணி அனைவருக்கும் கிடைக்கவும் பிரார்த்திக்க வேண்டுகின்றோம்.
இங்கே நாம்
கொடுத்துள்ள பிரார்த்தனை நேரத்தில் பிரார்த்தனை செய்ய முடியாதவர்கள்
நீங்களே காலை, மாலை ஒரு நேரத்தை எடுத்துக்கொண்டு , நெய் தீபமேற்றி
தொடர்ந்து பிரார்த்தனை செய்து வரவும்.
இல்லையேல் இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள், பதிவை படித்த பிறகு, அப்படியே ஒரு 15 நிமிடம் அமைதியாக குரு வழிபாடு செய்து, அப்படியே பிரார்த்தனை கோரிக்கையை படித்து மனதுள் உள்வாங்கி பிரார்த்தனை செய்யும் படி வேண்டுகின்றோம்.
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன் முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
மீண்டும் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html
அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html
தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html
நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment