"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, June 21, 2020

ஆனி மாத இறைப்பணியும், மோட்ச தீப வழிபாடும்

அன்பர்கள் அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் பதிவுகளில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஆம். கடந்த இரண்டு நாட்களாக பதிவுகள் தரவில்லை. பதிவுகளில் தான் தொய்வே தவிர, நம் சேவைகள் வழக்கம் போல் குருவருளால் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்தப் பதிவில் நேற்று நடைபெற்ற ஆனி மாத மோட்ச தீப வழிபாடும், அமாவாசை அன்னதானம் பற்றி சில செய்திகள் உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகின்றோம்.


 ஆனி மாத மோட்ச தீப வழிபாடானது ஆத்ம தீப வழிபாடாக குருநாதர் ஸ்ரீ அகத்தியர் ஆசியால் நடைபெற்றது.இதோ உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கின்றோம்.  அதற்கு முன்பாக மோட்ச தீபம் பற்றி சில வார்த்தைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.


10 ம் ஆண்டில்  வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம் குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை அப்படியே பகிர்கின்றோம்.

இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது.  துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.





மோட்ச தீபம் பற்றி அறிய கீழே உள்ள இணைப்பு படத்தை பார்க்கவும்.





இனி ஆனி  மாத ஆத்ம தீப வழிபாடு பற்றிய அனுபவம் காண்போம். ஆத்ம தீப வழிபாடு என்றதும் நமக்கும் புதிதாக இருந்தது. ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் திரு. பாலா ஐயாவிடம் இதற்கு ஆசி கேட்டு அன்றைய தினம் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம்.




முதலில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானை வழிபட்டோம்.



பின்னர் ஆத்ம தீப வழிபாட்டிற்கு தீபம் தயார் செய்த போது 



                                        இதோ...ஆத்ம தீபம் ஏற்றப்பட்ட நிலையில்.
                      


பின்னர் அப்படியே தீபத்தின் முன் அமர்ந்து நாம் வழக்கமாக பிரார்த்தனை செய்தோம். ஒவ்வொரு முறையும் தீபத்தின் அழகு, அருள் கண்டு ரசித்தோம். நீங்களும் இதனை உள்வாங்கும் பொருட்டு பகிர்கின்றோம். மிக மிக மெதுவாக தீபத்தின் அருளை அப்படியே பெற்றுக் கொள்ளுங்கள்.













மோட்ச தீப மந்திரம்,  பீஜ மந்திரம் ஜெபம் செய்தோம். மீண்டும் தீப தரிசனம் பெற்றுக் கொள்ளுங்கள். 






குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் முன்னர் போன்று தீபமேற்றி வழிபாடு செய்தது நம்மை இன்புற செய்தது.  இந்த மோட்ச தீப வழிபாடு நம்மை புது அனுபவத்திற்கு இட்டு சென்றது. நேரம் ஆக, ஆக தீபம் காற்றில் அங்கும் ,இங்குமாக பல சொரூபங்களில் கண்டோம்.  







சுமார் 1 மணி நேரம் அங்கேயே இருந்தோம். காற்றில் தீப சொரூபம் மாறிக்கொண்டு இருந்தது நமக்கு ஆச்சர்யம் தான். ஏனெனில் பலத்த காற்று அவ்வப்போது வீசிக்கொண்டிருந்தது. பின்னர் குருநாதரிடம் விண்ணப்பம் வைத்து விட்டு, அங்கிருந்து விடை பெற்றோம்.  இங்கே நாம் ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம். அன்றைய தினம் நம்மால் வழக்கமான வழிபாடு செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் குருநாதர் சொல்லிய வண்ணம் ஆத்ம தீப வழிபாட்டை செய்தோம். 



மீண்டும் பல முறை நம் குருநாதரை தரிசனம் செய்தோம். 

மேலும் ஒரு சிறப்பு செய்தியாக, 

கூடுவாஞ்சேரி விநாயகர்

என்னப்பா? எப்போது பார்த்தாலும் கூடுவாஞ்சேரி விநாயகர் தானா? என்று நாம் பேசும்போதும், நம் தளத்தின் பதிவுகளிலும் நாம் கண்டு வருகின்றோம். இன்று (20.05.2020) தான் அதற்கு சிறப்பான ஆசி நம் முருகப்பெருமானிடம் இருந்து கிடைத்தது. அகத்தியர் சூட்சுமத்தில் பூஜிக்கும் கணபதி என கூடுவாஞ்சேரி விநாயகர் என்று முருகப்பெருமான் அருள் வாக்கு கொடுத்துள்ளார்.

ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.

நம் தளத்தின் இறைப்பணி பற்றி அடுத்த பதிவில் காண்போம்.

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html

மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020  - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html

தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html

 மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html

ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... -  https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html

 ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019  - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019)  - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html

 ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm

No comments:

Post a Comment