அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம்
தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய
நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை
செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். வைகாசி மாத
மோட்ச தீப வழிபாடு சுமார் 10 பேர் அளவிலே நடைபெற்றது. ஆனி மாத மோட்ச தீப வழிபாடு ஆத்ம தீப வழிபாடாக குருவருளால் நடைபெற்றது. இன்று காலை 10:20 மணி முதல் நாளை பிற்பகல் 1 மணி வரை
ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான
பூசை இம்முறை நடைபெறும்.
தற்போது நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின், குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி இல்லத்திலே வழிபாடு செய்ய வேண்டுகின்றோம்.
அகத்தியம். பேச பேச திகட்டாதது. கேட்க கேட்க இனிமையானது. உண்ண உண்ண
அமிர்தமானது. அகத்தியம் தருவது ஜீவ அமிர்தமே ஆகும்.
இனி. வைகாசி மாத ஆயில்ய ஆராதனை காண்போமா?
வழக்கமாக பூசைக்கு தேவையான பொருட்கள் தயார் செய்தோம். வழக்கமான அபிஷேகங்கள் நடைபெற்றது. வைகாசி ஆயிலாம் அன்று குருவின் குருவாம் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு கிருத்திகை நட்சத்திர பூசையும் நடைபெற்றது. இந்தப் பதிவில் குருவாம் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும், குருவின் குருவாம் ஸ்ரீ முருகப்பெருமான் தரிசனமும் ஒரு சேர காண இருக்கின்றீர்கள். அபிஷேகம் முடிந்து இதோ. குருநாதரின் அகங்காரம் நீங்கும் அலங்கார தரிசனம்.
அடுத்து அகத்தியர் தீபம் என்று அழைக்கப்படும் சக்திகள தீப பூசை செய்வதற்கு ஆயத்தமானோம். இந்த தீபம் பிரமிடு வடிவிலானது. அன்றைய தினம் நம் குழுவில் இருந்து திரு. சத்யராஜ், திரு.சரவணன் ஐயா அவர்கள் வந்து வழிபாட்டிற்கு தேவையான உதவிகள் செய்தார்கள். சக்திகள தீபம் தயார் செய்தோம். இந்த தீபம் வெட்டவெளியில் ஏற்றுவது கடினம். ஆனால் குருநாதரிடம் விண்ணப்பம வைத்து, ஸ்ரீ அகத்தியர் முன்பு ஏற்ற விரும்பினோம்.
அடுத்து விநாயகர் வழிபாடு செய்து விளக்கு பாடல், வேல் விளக்கு பாடல், சித்தர்கள் போற்றி, நால்வர் போற்றி, ஆழ்வார்கள் போற்றி, 63 நாயன்மார்கள் போற்றி, அன்னை போற்றி, பெருமான் போற்றி, பெருமாள் போற்றி, பைரவர் போற்றி, முருகப்பெருமான் போற்றி என போற்றிக் கொண்டே இருந்தோம். பின்னர் உலக நன்மைக்காக கூட்டுப்பிரார்தனை செய்தோம்.
காற்று பலமாக வீசியது. மேலும் இந்த சக்தி கள தீபத்தின் சுடர் மிக மிக மெல்லிய திரியால் ஆனது. எனவே தீபத்தை ஸ்ரீ முருகப்பெருமானிடம் வைத்து வழிபாடு செய்தோம்.
இதோ..குறு சிஷ்ய தரிசனம் ஒருங்கே காண நீங்கள் தயாரா?
அடுத்து மகா தீபாராதனை காண உள்ளோம்.
உலக நன்மைக்காக சங்கல்பம் செய்து காட்டப்பட்ட தீபாராதனை. கண்களில் மட்டுமின்றி கருத்திலும் ஒற்றிக் கொள்ளுங்கள்.
மீண்டும் மீண்டும் அங்கே சுற்றிக் கொண்டே இருந்தோம். தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கப்ட்டது. குருவை வழிபட எண்ணி நாம் சென்றோம். குருவோடு திருவையும் சேர்ந்து வணங்கி அருள்பெற்றோம் என்று நினைக்கும் போது எல்லாம் கைகூடும் என்று நமக்கு தோன்றுகின்றது. முதன்முதலாக சக்திகள தீப வழிபாடு செய்து ஸ்ரீ அகத்தியர் வழிபாடு செய்தது நம் அகத்திலுள்ள அழுக்குகளை நீக்கியதை உணர்ந்தோம். அன்றைய வழிபாட்டின் காணொளி கீழே இணைக்கின்றோம்.
இந்த காணொளி பாருங்கள். ஒரு சிறப்பான தரிசனம் நமக்கு கிடைத்தது. அது என்ன என்று கூறுங்கள் பார்ப்போம் . திரு.சரவணன் ஐயா அவர்கள் துதிக்க நாமும் பின்னே பாடியது இன்னும் நம்முள் உயிர்ப்பாக இருக்கின்றது.
மீண்டும் ஒரு முறை நம் குருநாதரின் தரிசனம் பெறுவோமா?
இது மட்டுமா? இன்னும் நம் குருநாதர் பல ஆசிகளை தந்து வருகின்றார். நம் நண்பர் திரு.சத்யராஜ் அவர்களின் திருமணம் இன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்றது. முதல் சக்திகள தீபமேற்றி தடைகளை தகர்த்து இன்றைய திருமணம் நடைபெற்றதை நாமும் நேரில் சென்று கண்டோம். நம் கையில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் குருவின் பாதத்தில் தான் இருக்கின்றது என்று ஒவ்வொரு நாளும் உணர்ந்து வருகின்றோம். இந்தப் பதிவை படிக்கும் அன்பர்கள் இன்று இல்லறத்தில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் திரு. சத்யராஜ் & திருமதி ஜனனி தம்பதியரை வாழ்த்தும் படி வேண்டுகின்றோம்.
இன்றைய ஆயில்ய நட்சத்திரத்தில் நம் குருநாதர் தரிசனம் மீண்டும் பெறுவோம். இனிப்பு என்றால் திகட்டவா செய்யும்? அப்படி திகட்டினால் நேரம் கழித்து வந்து மீண்டும் இனிப்பு சாப்பிடவும். இன்று பூமாலை உபயம் செய்ததும் நம் நண்பர் சத்யராஜ் தான். மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யுங்கள்.
முதலில் இன்று நாம் பெற்ற தரிசனம்.
மலர் மாலை சூடிய பிறகு நம் குருநாதரின் கவின்மிகு தரிசனம்.
மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....
ஆனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள். ஓம் அகத்தீஸ்வராய நமஹ என்று 108 முறை ஓதி வழிபாடு செய்து குருவின் பாதம் பற்றுங்கள்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html
மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....
ஆனி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள். ஓம் அகத்தீஸ்வராய நமஹ என்று 108 முறை ஓதி வழிபாடு செய்து குருவின் பாதம் பற்றுங்கள்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html
arumai ayya
ReplyDeleteகுருவின் அருளாலே குருவின் தாள் வணங்கி
Deleteநன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻