அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம்
தளத்தின் மூலம் மாதந்தோறும் அமாவாசை அன்று மோட்ச தீப வழிபாடு, ஆயில்ய
நட்சத்திரம் அன்று ஸ்ரீ அகத்தியர் வழிபாடு, உழவாரப் பணி மற்றும் அன்னசேவை
செய்து வருகின்றோம். இது அனைவருக்கும் தெரிந்த செய்தி ஆகும். வைகாசி மாத
மோட்ச தீப வழிபாடு சுமார் 10 பேர் அளவிலே நடைபெற்றது. வருகின்ற வியாழக்கிழமை அதிகாலை 05:30 மணி முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி வரை ஆயில்யம் நட்சத்திரம் வருகின்றது. வழக்கமான
பூசை இம்முறை நடைபெறும்.
தற்போது
நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும்
நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள்
இன்று நாம் குறிப்பிட்ட ஆயில்ய நேரத்தில் உங்களுக்கு தெரிந்த சித்தர்களின்,
குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி இல்லத்திலே வழிபாடு செய்ய
வேண்டுகின்றோம்.
அகத்தியம். பேச பேச திகட்டாதது. கேட்க கேட்க இனிமையானது. உண்ண உண்ண
அமிர்தமானது. இன்றைய பதிவில் 2018ம் ஆண்டில் நம் தளம் கொண்டாடிய அகத்தியர் ஜெயந்தி விழாவின் துளிகளை இங்கே பகிர உள்ளோம்.
திருச்செந்தூரில் திருவிழா, பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல
திருக்கல்யாணத்திற்கு வாங்க!, தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி
(26/12/2018), அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை
பெருவிழா (26/12/2018), கும்பமுனி குருவே சரணம்! சரணம்!!, ஸ்ரீ வினை
தீர்த்த விநாயகர் ஆலயம் - 7 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா,
அகத்தியரே...உன்னையே சரணடைந்தேன்! என்று அகத்தியர் ஜெயந்தி அழைப்பிதழ்
பதிவுகள் நம் தலத்தில் அளித்தோம். நாம் அன்றைய தினம் நம் TUT நண்பர்களோடு
பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு சென்று
வந்தோம்.
அன்று மாலை நம் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் அகத்தியர்
ஜெயந்தியை கொண்டாடினோம். சென்ற ஆண்டு(2017) 108 தீபமேற்றி கொண்டாடினோம்.
2018 ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் அகத்தியர் ஜெயந்தி கொண்டாடினோம்.
இம்முறையும் 108 தீபமேற்றி வழிபட்டோம்.
பாண்டிச்சேரியில் இருந்து சரியாக மாலை 5 மணி அளவில் கூடுவாஞ்சேரி வந்து
சேர்ந்தோம். அப்படியே அகல் விளக்கு கடைக்கு சென்று அகல் வாங்கி வந்து
வெற்றிலை மீது தீபமேற்ற விரும்பி, வெற்றிலையை இரு முக்கோண வடிவில் வைக்க
ஆரம்பித்தோம்.
ஒரு முக்கோண வடிவம் வந்த பின்னர் நெய் ஊற்ற ஆரம்பித்தோம்.
அன்றைய தினம் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி கொண்டாட்டம் இருந்தபடியால் கூட்டம் இருந்தது.
சரியாக நம்மால் முன்னேற்பாடு செய்ய முடியவில்லை. இருக்கும் அளவில் நம்மால்
இயன்றதை செய்தோம். அகத்தியருக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் 108 தீபம்
எப்படியாவது ஏற்ற வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.
இதோ..அனைத்தும் தயார். பஞ்சபூத வழிபாட்டை மேற்கொள்ள இருக்கின்றோம்.
குருமார்களை கொண்டாட இருக்கின்றோம். தீவினை வேரோடு அழிய தீபம் ஏற்ற இருக்கின்றோம்.
மீண்டும் ஒரு முறை 108 விளக்குகள் உள்ளதா என சரிபார்த்தோம்.
இதோ..இரண்டாண்டு ஆசை நிறைவேறப் போகின்றது. அகத்தியரை அரசராக கிரீடம் வைத்து
பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறியது.எத்துணை ஆயில்ய ஆராதனை
செய்திருக்கின்றோம். ஆனால் அகத்தியர் ஜெயந்தி அன்று தான் ராஜ அலங்காரம்
நமக்கு கிடைத்து. திரு.சிவசங்கர் & பெரம்பலூர் சதீஷ்குமார்
இருவருக்கும் நம் நன்றி.
கருணை விழியால் நம்மை ஆட்டுவிக்கும் ராஜாவே..நின் தாள் சரணம்.
அடுத்து குருக்களை அழைத்து முதல் தீபம் ஏற்ற வேண்டினோம்.
இதோ ...108 தீபமேற்றியாகி விட்டது. மீண்டும் அகத்தியர் சந்நிதி நோக்கி
சென்றோம். நம் தல அன்பர்கள் அனைவருக்கும் சங்கல்பம் செய்து பிரார்த்தனை
செய்தோம். அன்று மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக குமார் குருக்களின்
தந்தையார் அன்று பூசித்தார். மிகவும் சந்தோஷப்பட்டார். இது போன்று
சித்தர்களை போற்றுங்கள் என்று கூறி நம்மை ஆசிர்வதித்தார். வேறென்ன வேண்டும்
நமக்கு? இது போதுமே என்று ஆனந்தத்தில் திளைத்தோம்.
அகத்தியர் ஜெயந்தி கொண்டாட்டம் நம் தளம் சார்பில் அருமையாக ஆரம்பித்து
விட்டோம். மீண்டும் அடுத்த நாள் பூசையும் உண்டு. அடுத்த பதிவிலும்
கொண்டாட்டம் தொடரும். யோசித்து பாருங்கள். இந்த ஆண்டிலும் 108 தீபமேற்றி,
சித்தர்களை போற்றி, ராஜ அலங்கார தரிசனத்தில், மிக உயர்ந்த பெரியோரின்
ஆசியில் அகத்தியர் ஜெயந்தி விழா TUT தளம் சார்பில் கொண்டாப்படுகின்றது
என்றால் அது சித்தர்களின் அருள் தானே !
இதோ... சித்திரை மாத ஆயில்ய வழிபாட்டின் அருள்நிலைகளை இங்கே பகிர்கின்றோம். மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....
வைகாசி மாத ஆயில்ய நட்சத்திரத்தில் கூட்டு வழிபாடு மேற்கொள்ளுங்கள்.
- மீண்டும் அடுத்த பதிவில் கொண்டாடுவோம்.
மீள்பதிவாக:-
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html
கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html
ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html
மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html
குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html
மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html
மீண்டும் ஒரு முறை. நினைவூட்டுகின்றோம்....

No comments:
Post a Comment