"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Tuesday, May 5, 2020

எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தற்போது நாம் உள்ள அசாதாரண சூழலில் பல செய்திகள் நம்மை வாழ்க்கை என்றால் என்ன என்று புரிய வைத்து வருகின்றது. சிலருக்கே பெற்றோருடன் அருகில் இருக்கும் வாழ்க்கை கிடைத்துள்ளது. எத்தனையோ பேர் பெற்றோரை பிரிந்து அங்கும், இங்குமாக வாழ்ந்து வருகின்றோம். இது தவறு என்று நாம் சொல்லவில்லை. காலத்தின் பிடியில் நாம் வாழும் போது அனைத்தையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இந்த அசாதாரண சூழல் நமக்கு நம் பெற்றோரின் மகிமையை, மூத்தோரின் சொல்லை இன்னும் உயிர்ப்பிக்க செய்கின்றது. பதிவின் தலைப்பும் இந்த பதிவிற்கு இயல்பாக கிடைத்து விட்டது.

அகத்தியர்

சித்தர்களுக்கெல்லாம் தலைமை சித்தர். எத்துனை முறை படித்தாலும், திகட்டாத அருள் களஞ்சியம். முருகப் பெருமானின் முதல் மற்றும் தலையாய சீடர். தமிழைத் தந்தவர். நமக்கு பல குருமார்கள் வழிகாட்டி வருகின்றார்கள். ஆதி குருவாம் வேதாத்திரி மகரிஷி, ஞான குருவாக ஸ்ரீ அகத்தியர், சற்குருமார்களாக 18 சித்தர்கள், தற்போது பகவான் ரமணர் என சொல்லிக்கொண்டே போகலாம். இவை அனைத்தும் இந்த ஒரு பிறவியில் கிடைத்ததா? புல்லாகி,பூடாகி,புழுவாகி மரமாகி என்ற தொடர் பரிணாமத்தில் நாம் ஏக்கம் கொண்டிருப்போம் என்றே நமக்கு தோன்றுகின்றது.

நம் வாழ்க்கையின் நோக்கம் ஒரு குருவை நாடி என்பதே தெளிவு.ஆனால் இன்றைய காலகட்டத்தில் தடுக்கி விழுந்தால் யோகம்,குரு என்று இருந்தாலும்,நாம் கரை சேர்ந்த பாடில்லை.இன்னும் எத்தனை பிறவிகள் எடுத்து குருவினை அடைய போகின்றோம்? இன்றைய நாளில் ஏகப்பட்ட சித்த மார்க்கங்கள் பார்த்தும் வருகின்றோம்.ஆனாலும் விடியல் இல்லை என்றால் தவறு நம்மிடம் தான் என்று என்றாவது சிந்தித்ததுண்டா?





இது போன்ற நிலையில், சற்று ஆழமாய் சிந்தித்த போது,ஏன் இந்த நிலை கடினமாக உள்ளது? குருவினை அடைவது எப்போது? சீடன் தயார் என்றால் குரு தானாக வந்து ஆட்கொள்வார் என்று சொல்கிறார்களே என்று சிந்தனை ஓட்டங்கள் நாலா புறமும் ஓடின.அப்போது தான் கண்டிப்பாக ஒரு மெய் வழி இருக்கும்,அதுவும் மிக மிக எளிதாக இருக்கும் தோன்றியது.

அந்த வழியை இங்கே,இந்த பதிவில் சொல்ல விழைகின்றோம். ஆம் ! உண்மை குருவினை அடையும் எளிதான வழி. நாம் எப்படி இவ்வுலகிற்கு வந்தோம்.நம் பெற்றோர் மூலம் தானே.ஆம் !என்றாவது ஒரு நாள் நாம் அவர்களை குரு ஸ்தானத்தில் பார்த்ததுண்டா? அதனை உணர்தத் தான்
மாதா,பிதா,குரு,தெய்வம் என்றார்கள்.




எனவே, நம் பெற்றோரே நமது முதல் குரு. இதை உள்ளத்தில் நிறுத்தி,அவர்களை போற்றிப் பணிந்து,அவர்களின் வழி நடத்தலை ஏற்று,நாம் நடந்தால் அடுத்த கட்டமான மெய்யான குரு நம்மிடம் தோன்றுவார்.இதை உணர்த்தவே சீடன் தயார் என்றால் குரு தாமாகவே வந்து வழிகாட்டுவார். உண்மையில் சீடன் தயார் என்று எப்படி உணர்வது? அதை உணரச் செய்வதே பெற்றோரை குருவாய் கைக்கொள்வது.பின்பு நமக்கு குரு கிடைத்து விட்டால், நாம் எதைத் தேடுகின்றோமோ அதை நமக்குக் காட்டுவார்.

சித்தரியல் காட்டும் உண்மையும் இது தான்.அந்த வகையில் அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் எனும் நூலில் கூறும் சில செய்திகள் தங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.இது நம் முதல் முயற்சியே.




பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.

திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே


கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு




பற்பல நூல்களை தேடிப் பிடித்து, அவற்றை அறிந்து பக்குவமடைய இந்த வாழ்நாள் போதவே போதாது.சிறிய வயது முதலே மகத்தான குருவை தேடி கண்டு,அவருக்கு அணுக்கமாய் இருந்து கற்க வேண்டிய செய்திகளை கற்க வேண்டும் என்கிறார். இன்றைய அதிவிரைவான காலத்தில் இதெல்லாம் சாத்தியமா? என்று தாங்கள் கேட்கும் கேள்வி நம் காதுகளுக்குள் எட்டுகின்றது.
இது போல், நாம் குருவின் வழியை கடைபிடித்தால் தான், நமக்கு குருவானவர் தீட்சை கொடுத்து பற்பல மௌனத் திறங்கள்,நிஷ்டை முறைகள்,காயகற்ப வகைகள் என உபதேசிப்பார்கள்.இவ்வாறு குருவின் கருணையில் வழி நடத்தப்பட்டால் காயசித்தியும்,புத்திக்கூர்மையும், தீப ஒளி வழியாக பேரானந்த நிலை அடையலாம் என்கிறார்.


அப்ப்பா ! இத்துணை விஷயங்களா? என்று மூக்கின் மேல் விரல் வைக்காதீர்கள்.இங்கே நாம் குருவின் செய்தியை தொட்டு மாட்டும் காட்டினோம். விரிக்க கூறின் இது விரியும். எனவே இன்று முதல் பெற்றோரை குருவாய் நினைத்து, அவர்களின் பாதத்தில் தஞ்சம் அடையுங்கள். மற்றவை தானாக நடக்கும்.இதைத்தான் அவ்வைப் பாட்டியும் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் " என்று உணர்த்தினார்கள்.இங்கே ஒன்றை சொல்ல விரும்புகின்றோம். பெற்றோரை குருவாய் கொள்ள நம்பிக்கை கொள்ள வேண்டாம்.ஏனெனில் யாராவது  உங்களிடம் இதை பற்றி வேறொரு கோணத்தில் பேசினால்,உங்கள் நம்பிக்கை பொய்யாகிவிடும். ஆனால் பெற்றோரை குருவாய் கொள்ள புரிந்து கொள்ளுங்கள்.பின்பு நீங்களே அசைந்தாலும், குரு  ஸ்தானம் மாறாது.

மீண்டும் பதிவின் தலைப்பை ஆசையுடன் அசை போட்டு பாருங்கள்.

மீள்பதிவாக:-

அகத்தியர் தேவாரத் திரட்டு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_10.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_8.html

இந்திரகீழ ஷேத்திர இறைவா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post.html

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (02/08/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/02082019.html

ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு (2) - வேல்மாறல் அகண்ட பாராயணம் - 27/08/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/2-27082019.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை சிறப்பு பதிவு (1) -https://tut-temples.blogspot.com/2019/07/1_24.html


பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_70.html


குமராவென அனுமக் குமரனாய் நின்ற மலைக்கு அரோகரா - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_14.html

ஓம் ஸ்ரீ அனுசுயா தேவி சமதே ஸ்ரீ அத்ரி மகரிஷி போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_10.html

ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத ஸ்ரீ கைலாசநாதர் பொற்பாதம் சரணம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_9.html

 வாருங்கள்...நவபுலியூர் யாத்திரை செல்வோம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_6.html

 நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்... - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_8.html

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

 TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

 சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

 வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_60.html

 அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html

 மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_5
நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_24.html

 வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - https://tut-temples.blogspot.com/2019/07/1_23.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

No comments:

Post a Comment