"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, May 27, 2020

கணபதியே வருவாய் அருள்வாய் ! - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக நிறைவு பணியில் இருப்பதால் மீண்டும் பொருளுதவி கேட்டு இன்றைய பதிவில் தொடர்கின்றோம். இந்தப் பதிவில் நாம் இரண்டு வித உதவிகளை கேட்கின்றோம். ஒன்று பொருளுதவியாக வேண்டுகின்றோம். பொருளுதவி செய்ய விரும்பும் அன்பர்கள் தாராளமாக பொருளதவி செய்து எம் பெருமான் அருள் பெற வேண்டுகின்றோம்.  இரண்டாவது உங்களிடம் அருளுதவி எதிர்பார்க்கின்றோம். இதனை நீங்கள் உங்கள் உடல் உழைப்பால் செய்யலாம். இதனை அன்பர்கள் கூட்டுப் பிரார்த்தனையாக செய்திட உங்களிடம் வேண்டுகோள் வைக்கின்றோம்.

முதலில் கூட்டுப்பிரார்தனை பற்றிய செய்தியை தங்களிடம் பகிர விரும்புகின்றோம்.
                           

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் :



இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில், மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் திருக்கோவில். திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்கக்கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டப்படுகின்ற ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. தற்போது திருப்பணிக்கு நிதி தேவைப்படுகிறது.

சென்னை - திருநின்றவூர் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமானின் ஜீவநாடி வாக்கு

ஜீவநாடி வாசிக்கப்பட்ட நாள் : 17/05/2019(வெள்ளி)

ஈரோடு - அந்தியூர் முருகப்பெருமான் ஜீவநாடியில் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் பற்றி முருகப்பெருமான் உரைத்த ஸ்தல புராணம் :

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம். பதினெண் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும். அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம். பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம். சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப்பட்ட திருத்தலம். உன்னத சக்திகள் நிரம்பப்பெற்ற  தலம். பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும், அது தக்க காலத்தில் வெளிப்படும். இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும். குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன், ஆடலரசன், ரிஷிகள், நவகோடி சித்தர்கள், லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும் லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மீகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும். போகர், பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில். தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  ஸ்ரீ ஞானஸ்கந்தமூர்த்தி ஜீவநாடியில் முருகப் பெருமான் உரைத்தார்.










மேலே நீங்கள் காண்பது சோம வார பிரதோஷ தரிசனம் ஆகும். 


முருகப்பெருமான் ஜீவநாடி வாக்கு :

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உதித்த ஷேத்ரம் நம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம்.

பொருள் கேட்போருக்கு  பொருளும் ,

அருள் கேட்போருக்கு அருளும்,

பிள்ளை கேட்போருக்கு பிள்ளையும்,

தொழில்  கேட்போருக்கு தொழிலும்,

பணம் கேட்போருக்கு பணமும்,

முக்தி கேட்போருக்கு முக்தியும்,

என அவரவர் விருப்பம் போல்  நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் படி அளப்பார்.

இந்த ஆலயப்பணியில் இணைந்து திருப்பணி செய்யும் மக்களுக்கு, ஆதிரை மண்டலத்தில்(ஒரு நட்சத்திர தொகுதி) அவர்கள் பெயரை பதிய வைப்பார் ஈசன்.

அடுத்த ஜென்மத்தில் பிறப்பில்லா நிலை அடைவர்.

ஆலயத் திருப்பணி முன்நின்று செய்யும் மக்களுக்கு ஈசனின் ஆசி பரிபூரணமாக உண்டு.

குடமுழுக்கு சிறப்பாக நடைபெற, தடைகள் விலக குழுவினர்கள் இணைந்து, அவரவர் இல்லத்திலே அமர்ந்து, விநாயகரை பிராத்தனை செய்து, வாரந்தோறும் 
 வியாழக்கிழமை விநாயகர் அகவலை ஓத வேண்டும்.

குடமுழுக்கு நாள் வரை அடியார்கள் ஒன்றிணைந்து, குருவாரம் தோறும் 
 விநாயகர் அகவலை ஓதி வர வேண்டும்.

இவ்வாறு முருகப்பெருமான் ஜீவநாடியில் உரைத்துள்ளார்.

ஆலய குடமுழுக்கு சிறப்பாக நடைபெற, நம் குழுவில் உள்ள அடியார்கள் ஒன்றிணைந்து,  வாரந்தோறும் வியாழக்கிழமை விநாயகர் அகவலை ஓத ஓத, விநாயகப் பெருமானே முன்னின்று ஆலய குடமுழுக்கை நடத்தி வைப்பார்

விநாயகர் அகவலை ஓத அடியார்கள் அனைவரும் ஒன்றிணைவோம்!

பிராத்தனையாக!

"ஓம் கம் கணபதியே நம"!

"விநாயகப்பெருமானே! ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலய திருக்குடமுழுக்கிற்கு இருக்கும் தடைகளை வினைகளை விலக்கி, திருக்குடமுழுக்கு சிறப்பாக நடைபெற  அருள்புரிந்து, விநாயகப் பெருமானே தாங்களே முன்னின்று திருக்குடமுழுக்கை நடத்தி வைப்பீர்களாக!" என்று திடமான பிராத்தனை செய்துவிட்டு,

பின், விநாயகர் அகவலை ஓத வேண்டும்!

விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும் வழிபாடு ஆகும். இதில் பல சூட்சும செய்திகள் அடங்கியுள்ளதாக நாம் நினைக்கின்றோம். மீண்டும் ஒரு அற்புதமான வாக்கு ஒன்றையும் பகிர்கின்றோம்.


சில வருடங்களுக்கு முன்பு குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அன்று மூத்தோன் குறித்து உரைத்த அற்புதமான வாக்கு.

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமாய் இஃதொப்ப எமது வாக்கை கேட்க வேண்டும் என்று எண்ணி, அஃதும், முன்னர் கூறிய வாக்கினை மீண்டும் கேட்க வேண்டும் என எண்ணி, அதனை பலருக்கும் பகிர வேண்டும் என எண்ணி, இன்னவன் இதழ் ஓதுபவன் இஃதொப்ப ஓலை தன்னை எடுத்திட்டாலும் இஃதொப்ப செயல் சிறப்பு என்று கூறுவதற்கு இல்லை. இல்லையப்பா, ஒரு முறை கூறிய வாக்கை அதைப்போல மீண்டும் கூற ஜீவ அருள் ஓலையில் விதி. என்றாலும் சில சமயம் கூறுகிறோம், சில காரணங்களுக்காக.

இருப்பினும் அதனையே வலிமையாய் பிடித்துக் கொண்டு அடிக்கடி எமை நாடுவது சிறப்பல்ல. என்றாலும் இதன் மேலும் பிரம்ம முகூர்த்த நாழிகை பூர்த்திக்கு பிறகும் கேட்பது சிறப்பல்ல என்றாலும் இஃதொப்ப ஆர்வம் கொண்ட சேய்கள் அஃதொப்ப சேய்கள் தன் மன வருத்தம் கொண்டிடாமல் இருக்க இஃதொப்ப நல்விதமாய் இன்று மட்டும் இஃதொப்ப சில்வாக்கை கூறுகிறோம், இறையருளால்.

இறையருளால் இத்தருணம் இதனை கூறுவதால் இதனையே அன்றாடம் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது சிறப்பல்ல என்பதை புரிந்து கொள்வது எம் சேய்களுக்கு அவசியம் ஆகும். ஆகுமப்பா, இஃதொப்ப நல்விதமாய் பரிபூரண சரணாகதி இறை வழிபாடும். தன்னலம் கருதா தொண்டும், சாத்வீக எண்ணமும், வாழ்வும் அவசியம். இஃதொப்ப வழியில் எமை நாடும் சேய்கள் நாளும் செல்ல இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். 

இயம்புகிறோம், சில்வாறாய் முன்னர் கூறிய மூத்தோன் குறித்த வாக்கு தன்னை, ஆனாலும், சற்றே இத்தருண கிரக நிலைக்கு ஏற்ப மாற்றித்தான், மாற்றித்தான் கூறுவதால் அஃதொப்ப வாக்கு வேறு, இஃதொப்ப வாக்கு வேறு என எண்ணாமல் அனைத்தும் இறையருள் என்று எண்ணுவதே சிறப்பு அப்பா. இஃதொப்ப நன்றாய் எமது வாக்கை புரிந்துகொண்டு இறை வழியில் வர நல்லாசிகள். எம் சேய்கள் அனைவருக்கும்.

மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இம்மண்ணின் மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்றால் வேழ முகத்தோன் என்ற பொருள் கொண்ட அஃதொப்ப மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.  
எதற்கும் முன்பாக, எச்செயலுக்கும் முன்பாக மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப தடைகள் வாராது செயல் நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, 
என்றென்றும், எதற்கும் முன்மாதிரியாக மூத்தோனை வணங்கு. நல்விதமாய் செயல் நடக்க மூத்தோனை வணங்கு.
நற்காரியம் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு. 
நலம்தான் தொடர என்றென்றும் மூத்தோனை வணங்கு. 
நன்மைகள் நாளும் பெருக நாள்நாளும் மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் பாவ வினைகள் குறைய நன்றாய் மூத்தோனை வணங்கு. 

நவில்கின்றோம், விருக்ஷத்தின் அடியில், வன்னி விருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருக்கும் மூத்தோனை வணங்கு. தேக நலம் பெருகும். 
நவில்கின்றோம் நன்றாய், விருக்ஷத்தின் அடியில், அரச விருக்ஷத்தின் அடியில் உள்ள மூத்தோனை வணங்கு. அஃதும் தேக நலத்தோடு வம்ச விருத்தியையும் நல்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய் இஃதொப்ப கிழக்கு திசை பார்த்த மூத்தோனை வணங்கு. நல்விதமாய் இஃதொப்ப லோகாய வெற்றிகள் கிட்ட வாய்ப்பை நல்கும்.
நவில்கின்றோம், மேல் திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்து கொள்ள, எதனையும் நன்றாய் புரிந்துகொள்ள அஃது உதவுவதோடு தேகத்தையும் காக்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய், தென் திசை பார்க்க உள்ள மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்துகொள்ளலாம். இஃதொப்ப அச்சங்கள் குறைய, எஃது குறித்தும் அச்சங்கள் குறைய இஃதொப்ப வழிபாடு உதவும். 
நவில்கின்றோம், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வட திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. இஃதொப்ப நன்றாய், வட திசை நோக்கிய மூத்தோனை வணங்க நாள் நாளும் செல்வம் பெருகுவதோடு நன்றில்லா ருண குழப்பம் தீருமப்பா.

இஃதொப்ப கூறுகிறோம் மீண்டும், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் காரியங்கள் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
எஃதொப்ப செயல் துவங்கும் முன்னர் மூத்தோனை வணங்கு. எச்செயல் ஆனாலும் அதற்கு முன் மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப நன்றாய் பயணத்தின் முன் மூத்தோனை வணங்கு. இயம்புகிறோம், சுப மங்கள நிகழ்வுக்கு முன்னால் மூத்தோனை வணங்கு. 
இயம்புகிறோம் மேலும் நன்றாய், காரிய தடை கண்டு கலங்காமல் இருக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்னும் வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.

கூறுகிறோம் நன்றாய், வாசியோகம் சித்திக்க மூத்தோனை வணங்கு. 
நல்விதமாய் வாழ்வு நிலை சித்திக்க மூத்தோனை வணங்கு. நவில்கின்றோம் நன்றாக காரியங்கள் யாவும் வசப்பட்டு நிச்சயமாய் அனைத்தும் கிட்ட மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கூறுகிறோம், உள்ளிருக்கும் ஆத்ம ஒளியை தரிசிக்க மூத்தோனை வணங்கு. 
உள்ளே இருக்கும் அஃதொப்ப ஒளி தன்னை உணர மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், அனைத்து கிரக தோஷம் குறைய மூத்தோனை வணங்கு. 
குறிப்பாக, சிகியின் தாக்கம் குறைய மூத்தோனை வணங்கு. கூறுகிறோம் மேலும், சர்ப்ப தாக்கம் குறைய, முழுமையாய் சர்ப்ப தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், மங்கல தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
நன்றாய், குண்டலினி சக்தியை உணர்ந்து, உணர்ந்து மேலேற்ற மூத்தோனை வணங்கு. 
நவில்கின்றோம் இஃதொப்ப லோகாயம் தாண்டி மேலேற, மேலேற, ஆத்ம வழியில் மேலேற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப மூச்சடக்கி இஃதொப்ப முக்காலம் தவத்தில் இருக்கும் அஃதொப்ப பயிற்சி சித்திக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கிரகங்கள் மாறும் காலம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 

அன்றாட வாழ்வில் எதிர்படும் அனைத்து சிக்கலையும் குறைக்க அஃதொப்ப கர்ம வினை தடுத்து, தடுத்து வாட்டும் நிலை மாற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. ஆசிகள்.


ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.

தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள்.

இனி, நாம் பொருளுதவி வேண்டி விண்ணப்பம் வைக்கின்றோம்.

iசென்னை - திருநின்றவூர், நம் ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் முடிக்கப்பட வேண்டிய எஞ்சிய உள்ள மிக முக்கிய பணிகளின் அடிப்படையில் ஒவ்வொன்றாக  பின்வருமாறு :

1. முதல் முக்கிய பணி :

ஆலயத்தின் பிரதான மண்டபத்திற்குள்  ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் மூலவர் சந்நிதி, 
ஸ்ரீ சொர்ணாம்பிகை அம்பாள் சந்நிதி, நடராஜர் சந்நிதி என அமைக்கப்படுள்ளது.

மண்டபத்தில் உள்ள சந்நிதிகளின் பாதுகாப்பிற்கு சுற்றிலும் நான்கு புறம் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

எழுப்பியுள்ள சுவற்றில் இருந்து மேல்தளம்(Ceiling) வரை மூன்று அடிக்கு இரும்பு அல்லது ஸ்டீல் மூலம் கிரில் கம்பிகள் அமைக்கும் பணிகள் நான்குபுற சுவர்களிலும் முடிக்கப்பட வேண்டி இருக்கிறது.

இதனுடன் மண்டபத்தின் முக்கிய பாதுகாப்பிற்கு இரும்பு அல்லது ஸ்டீலால் ஆன இரண்டு பெரிய பாதுகாப்பு கதவு (Gate) செய்யப்பட வேண்டும்.

மற்ற சந்நிதிகளுக்கும் பாதுகாப்பு கதவு (Gate) என மாெத்தம் ஐந்து கதவுகள்(Gate) இரும்பு அல்லது ஸ்டீலால் செய்யப்பட வேண்டும்.

2. இரண்டாவது முக்கிய பணி :

ஐம்பொன்  அல்லது பஞ்சலோகம்  சிலை செய்தல் :

05 ஐம்பொன்  (பஞ்சலோகம் ) சிலைகளை நாம் செய்யவிருக்கிறாேம்.

1. நடராஜர் சிலை

2. சிவகாமி அம்பாள் சிலை

3. விநாயகர் சிலை

4. முருகர் சிலை.

5. மாணிக்கவாசகர் சிலை

இந்த ஐந்து சிலைகளை உருவாக்குவதற்கு நமக்கு

1. தங்கம்,
2. வெள்ளி,
3. செம்பு(காப்பர்),

போன்ற பொருட்கள்  தேவைப்படுகிறது.

சிலைகள் செய்ய செம்பு என்கிற காப்பர் அதிகம் தேவைப்படுகிறது.ஆடலரசன் நடராஜர் பெருமானின் அருளைப் பெற, அடியார்கள் தங்களால் முடிந்ததை பொருளாகவோ, பணமாகவோஅளிக்கலாம்.

05 சிலைகள்(நடராஜர், சிவகாமி அம்பாள், விநாயகர், முருகர், மாணிக்கவாசகர்) செய்வதற்குண்டான ஆட்கள் கூலி பணமாக தேவைப்படுகிறது.

ஒவ்வாெரு சிலைக்கும் ஒரு அடியார் வீதம், விருப்பம் உள்ள அடியார்கள் யாராவது வந்து சிலைகள் செய்வதற்கு உண்டான செலவை ஏற்றுக் கொள்ளலாம் 
அந்த தெய்வத்தின் பரிபூரண அருளைப்பெற ஒரு பெரும் பாக்கியம் இது.

3. மூன்றாவது முக்கிய பணி :

ஆலய பிரதான மண்டபத்திற்கு கிரானைட் கற்கள் பதித்தல் :

தேவைப்படுவது :

1. சிமெண்ட் 20 மூட்டைகள்.

2. மணல் 03 யூனிட்

3.  மண்டபத்தின் தரையில் 1000 சதுர அடிக்குண்டான கிரானைட் பதிக்க ஆட்களுக்குண்டான கூலி

மண்டபத்திற்கு உள்சுவர், வெளிசுவர் பூசுவேலை செய்ய 15 மூட்டை சிமெண்ட், கோபுரத்தில் 11 பொம்மைகள் அமைக்க 05 மூட்டை சிமெண்ட் என எல்லா பணிகளுக்கும் சேர்த்து மொத்தமாக  50 சிமெண்ட் மூட்டைகள் தேவைப்படுகிறது.

4. நான்காவது முக்கிய பணி :

அகத்தியர் சந்நிதிக்கு எதிர்புறத்தில் 15 அடி நீளம், 40 அடி அகலம் காெண்ட ஷீட்டுகள் காெண்ட பந்தல் அமைக்கும் பணி.

அடியார்கள் தங்களால் முடிந்ததை  பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து சேவை புரியலாம்.

ஆலயத்தில் நடைபெற்று வரும் சில பணிகளை இங்கே  தங்கள் அனைவரின் பார்வைக்கு தந்துள்ளோம்.
















ஆலயத் திருப்பணிக்கு நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள் :

பெயர் : ஸ்ரீஅகத்தீஸ்வரர் அறக்கட்டளை (Sri Agatheeshwarar Trust),

வங்கி : கனரா வங்கி (Canara Bank),

A/C No : 6161101002984

IFSC Code : CNRB0006161

MICR: 600015165

கிளை : திருநின்றவூர் கிளை (Thirunindravur Branch),

என்றும் இறைபணியில் :

திரு. கஜேந்திரன் அவர்கள்,

+919789053053(Whatsapp)
+919080590956





ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய சேவையில் பங்கு கொண்டு அனைவரும் இறையருள் பரிபூரணமாக பெறுவாவோமாக!

திருச்சிற்றம்பலம்!

மீள்பதிவாக:-

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 29 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2020/05/29.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - திருவோணம் நட்சத்திரம்!  - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_12.html

 ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 28 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/04/28.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 27 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/27.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 26 - அகத்தியர் ஆசி...வாழ்க வளமுடன்...- https://tut-temples.blogspot.com/2020/03/26.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 25 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21] - https://tut-temples.blogspot.com/2020/03/25-2020-21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 24 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2020/03/24.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 23 - மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 08.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23-08032020.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2018 - https://tut-temples.blogspot.com/2019/06/2018.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temples.blogspot.com/2019/06/2019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி... - https://tut-temples.blogspot.com/2019/06/2019_15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 22 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்! - https://tut-temples.blogspot.com/2020/02/22_14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 21 - ஈதலே இன்பம் - https://tut-temples.blogspot.com/2020/02/21.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 20 - மதுரை அருள்மிகு லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்திய முனீந்திரர் ஆலய கும்பாபிஷேக அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 19 - ஸ்ரீ ஞான ஸ்கந்தர் அருளிய அகத்தியர் ஆலய பொது நாடி வாக்கு - https://tut-temples.blogspot.com/2020/02/19.html

ஜீவ நாடியில் முருகன் அருள் வாக்கு - ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தி ஸ்தலம் - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_88.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 18 - https://tut-temples.blogspot.com/2020/01/18.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 17 - ஓம் அகத்தீசாய நம: - https://tut-temples.blogspot.com/2020/01/17.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 16 - https://tut-temples.blogspot.com/2020/01/16.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 15 - https://tut-temples.blogspot.com/2019/12/15.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 14 - திருக்கழுக்குன்றம் சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2019/12/14.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 13 - https://tut-temples.blogspot.com/2019/12/13.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 12 - அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை - https://tut-temples.blogspot.com/2019/11/12_20.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 11 - https://tut-temples.blogspot.com/2019/11/11.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 10 - மகா குரு அகத்தியரின் நாம ஜெபம் ( லிகித ஜெபம்)  - https://tut-temples.blogspot.com/2019/11/10.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 9 - நம்பிமலை - நேத்ர தோஷ நிவாரணி!  - https://tut-temples.blogspot.com/2019/11/9.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 8 - அருள்மிகு ஸ்ரீ சோமநாத பாஷாணலிங்கேஸ்வரரே போற்றி - https://tut-temples.blogspot.com/2019/10/8.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 7 - ஒளஷதகிரி நாயகரே துணை - https://tut-temples.blogspot.com/2019/09/7.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை!  - https://tut-temples.blogspot.com/2019/09/6.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html

ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -1 - https://tut-temples.blogspot.com/2019/05/1.html

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html

No comments:

Post a Comment