நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில் அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.
இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. 2018 ம் ஆண்டு ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த தை மாதம் மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை,மார்கழி,தை என ஏழு மோட்ச தீப வழிபாடு குருவருளால் முழுமை பெற்றுள்ளது.எண்ணைக்கையில் என்ன உள்ளது? எண்ணங்களில் தான் அனைத்தும் உள்ளது.
சார்வரி வருட வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு வருகின்ற 22.05.2020 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற உள்ளது. தற்போது
நிலவி வரும் சூழலில் அரசாங்க உத்தரவால் அனைத்து கோவில் விழாக்களும்,வழிபாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.எனவே அடியார் பெருமக்கள் வெள்ளிக்கிழமை (22.05.2020) அன்று மாலை 5 மணி அளவில் குருமார்களின் நாமம் ஓதி, விளக்கேற்றி இல்லத்திலே முன்னோர்களின் ஆசி வேண்டி வழிபாடு செய்ய
வேண்டுகின்றோம்.
சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானகுடில் மூலம் கோவை பச்சாபாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக
திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர்
சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு
என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில்
இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின்
ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை
சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு
செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு
என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும்
உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால்
கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும்
வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது
போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த மோட்ச தீபம் வழிபாடு
ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும்
இல்லையே....
அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி
உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால்
2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி
மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020
ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக
நடைபெற்றது. வருகின்ற வைகாசி அமாவாசை வழிபாடு வழக்கம் போல் நடைபெற உள்ளது. அடியார் பெருமக்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யுமாறு வேண்டுகின்றோம்.
சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானக்குடில் மூலம் கோவை பச்சப்பாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.
உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக
திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர்
சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு
என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில்
இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின்
ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை
சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு
செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு
என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும்
உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால்
கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும்
வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது
போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த மோட்ச தீபம் வழிபாடு
ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும்
இல்லையே....
அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி
உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால்
2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை அன்று கூடுவாஞ்சேரி
மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020
ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக
நடைபெற்றது.
சித்திரை மாத மோட்ச தீப வழிபாடானது ஆத்ம தீப வழிபாடாக குருநாதர் ஸ்ரீ அகத்தியர் ஆசியால் நடைபெற்றது.இதோ உங்கள் பார்வைக்கும் சமர்ப்பிக்கின்றோம். அதற்கு முன்பாக மோட்ச தீபம் பற்றி சில வார்த்தைகள் உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம்.
10
ம் ஆண்டில் வெற்றி நடை போட்டு வரும் உலக பக்தர்கள் தினம் மலரில் நம்
குழுவால் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு பற்றி செய்தி வெளியாகி உள்ளது.அதனை
அப்படியே பகிர்கின்றோம்.
இந்த மலரில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிநடத்தும் மோட்ச தீப வழிபாடு பற்றி 4 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது. துணுக்குக்கு இடம் தராமல் மிகவும் பரந்து 4 பக்க கட்டுரைக்கு இடம் தருவது இவர்களின் உண்மை உள்ளத்தை பறைசாற்றுகின்றது. இந்தப்பதிவில் நாம் உலக பக்தர்கள் தினம் குழுவிற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். மேலும் மோட்ச தீப வழிபாட்டிற்கு மாதம் தோறும் பொருளுதவி, நேரிலே வந்து நேரத்தை செலவழித்து உடலுதவி செய்து வரும் அனைவரின் பாதம் பணிகின்றோம்.
இனி சித்திரை மாத ஆத்ம தீப வழிபாடு பற்றிய அனுபவம் காண்போம். ஆத்ம தீப வழிபாடு என்றதும் நமக்கும் புதிதாக இருந்தது. ஸ்ரீ அகத்தியர் ஞானக் குடில் திரு. பாலா ஐயாவிடம் இதற்கு ஆசி கேட்டு அன்றைய தினம் மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு சென்றோம்.
முதலில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானை வழிபட்டோம்.
பின்னர் ஆத்ம தீப வழிபாட்டிற்கு தீபம் தயார் செய்த போது
இதோ...ஆத்ம தீபம் ஏற்றப்பட்ட நிலையில்.
பின்னர் அப்படியே தீபத்தின் முன் அமர்ந்து நாம் வழக்கமாக பிரார்த்தனை செய்தோம். ஒவ்வொரு முறையும் தீபத்தின் அழகு, அருள் கண்டு ரசித்தோம். நீங்களும் இதனை உள்வாங்கும் பொருட்டு பகிர்கின்றோம். மிக மிக மெதுவாக தீபத்தின் அருளை அப்படியே பெற்றுக் கொள்ளுங்கள்.
மோட்ச தீப மந்திரம், பீஜ மந்திரம் ஜெபம் செய்தோம். மீண்டும் தீப தரிசனம் பெற்றுக் கொள்ளுங்கள்.
குருநாதர் ஸ்ரீ அகத்தியரின் முன்னர், குருவின் குருவாம் முருகப்பெருமானின் முன்னர் இது போன்று தீபமேற்றி வழிபாடு செய்தது நம்மை இன்புற செய்தது. இந்த மோட்ச தீப வழிபாடு நம்மை புது அனுபவத்திற்கு இட்டு சென்றது. நேரம் ஆக, ஆக தீபம் காற்றில் அங்கும் ,இங்குமாக பல சொரூபங்களில் கண்டோம்.
சுமார் 1 மணி நேரம் அங்கேயே இருந்தோம். காற்றில் தீப சொரூபம் மாறிக்கொண்டு இருந்தது நமக்கு ஆச்சர்யம் தான். ஏனெனில் பலத்த காற்று அவ்வப்போது வீசிக்கொண்டிருந்தது. பின்னர் குருநாதரிடம் விண்ணப்பம் வைத்து விட்டு, அங்கிருந்து விடை பெற்றோம். இங்கே நாம் ஒரு செய்தியை கூற விரும்புகின்றோம். அன்றைய தினம் நம்மால் வழக்கமான வழிபாடு செய்ய வாய்ப்பு இருந்தது. ஆனால் குருநாதர் சொல்லிய வண்ணம் ஆத்ம தீப வழிபாட்டை செய்தோம். இதோ. வைகாசி மாதம் முதல் வழக்கமான மோட்ச தீப வழிபாடுகள் தொடர உள்ளது. தற்போது உள்ள சூழலில் அனைவரும் வீட்டிலிருந்த படியே கூட்டுப்பிரார்தனையில் இணைய வேண்டுகின்றோம்.
மேலும் ஒரு சிறப்பு செய்தியாக,
கூடுவாஞ்சேரி விநாயகர்
என்னப்பா? எப்போது பார்த்தாலும் கூடுவாஞ்சேரி விநாயகர் தானா? என்று நாம் பேசும்போதும், நம் தளத்தின் பதிவுகளிலும் நாம் கண்டு வருகின்றோம். இன்று (20.05.2020) தான் அதற்கு சிறப்பான ஆசி நம் முருகப்பெருமானிடம் இருந்து கிடைத்தது. அகத்தியர் சூட்சுமத்தில் பூஜிக்கும் கணபதி என கூடுவாஞ்சேரி விநாயகர் என்று முருகப்பெருமான் அருள் வாக்கு கொடுத்துள்ளார்.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
மாசி அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 23.02.2020 - https://tut-temples.blogspot.com/2020/02/23022020.html
தை அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 24.01.2020 - https://tut-temples.blogspot.com/2020/01/24012020.html
கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 26.11.2019 - https://tut-temples.blogspot.com/2019/11/26112019.html
ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 27.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/26102019.html
மஹாளய அமாவாசை மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 28.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/28092019.html
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி அகத்தியர் ஆயில்ய பூசையும், ஆவணி மோட்ச தீப வழிபாடும்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_87.html
ஆன்மிகமலர்.காம் இணைய இதழுக்கு நன்றி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_95.html
ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html
தீபங்கள் பேசும்...இது ஆடி அமாவாசை மோட்ச தீப சிறப்பு வழிபாடு (31/07/2019) - https://tut-temples.blogspot.com/2019/07/31072019.html
ஆனி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 02/07/2019 - https://tut-temples.blogspot.com/2019/07/02072019.htm
No comments:
Post a Comment