அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
கடந்த சில பதிவுகளாக தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தலங்களை தரிசித்து வருகின்றோம். இன்றும் மீண்டும் அங்கேயே தொடர்கின்றோம்.
கோயிலுக்கு செல்லும் பாதை
கோயிலின் முன்பகுதி
அடடா ! என்ன அழகு! மூலவர் கண்ணீசுவரமுடையார் முன் அருள்மிகு நந்தீஸ்வரர் தரிசனம் ! இரு விழிகள் போதாது.
அனைவரும் தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மேற்கொண்டு இத்திருத்தல சிறப்புகள் பற்றி அறிவோம்.
ஸ்ரீ கண்ணீசுவரமுடையார் கோயிலின் தீர்த்தம் அருகில் ஓடும் முல்லை நதியின் தீர்த்தமே.இது அபிஷேகத்திற்கும், பக்தர்களுக்கும் வழங்கப் படுகின்றது.இந்த நீர் சுருளி மலை மற்றும் தேக்கடியில் இருந்து வருகின்றது. எனவே பல மூலிகைகள் நிறைந்து நோய்கள் தீர்க்க வல்லது.
நாம் தற்போது தேனிக்கு செல்லும் போதெல்லாம் வீரபாண்டி செல்லத்தவறுவதில்லை. அன்னையின் அருளிலும், அப்பனின் அன்பிலும் திளைக்க இப்படியொரு திருத்தலம் கிடைத்தது யாம் செய்த புண்ணியமே. இது போல் காணக் கிடைக்காத தலங்கள் தேனியில் பொதிந்து கிடக்கின்றன. முருகன் அருள் முன்னிற்க அரிகேசரி நல்லூர் கோயில் தரிசனம் பெறுவோம்.
முந்தைய பதிவுகளுக்கு :-
கேட்ட வரம் அருளும் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரிஅம்மன் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
கடந்த சில பதிவுகளாக தேனி மாவட்டம் வீரபாண்டியில் உள்ள தலங்களை தரிசித்து வருகின்றோம். இன்றும் மீண்டும் அங்கேயே தொடர்கின்றோம்.
தேனி மாவட்டம் - மண் மணம் மாறாத ஊர், தென்றல் தவிழும் ஊர் என்று
சொல்வார்கள்.திரைப் படப் பாடல் ஒன்றில் தென்மேற்கு பருவக் காற்று தேனிப்
பக்கம் வீசும் போது சாரல் என்ற வரிகள் வந்து மனதில் தாலாட்டுகின்றன.நம்
முன்னோர்கள் இயற்கையைத் தான் தெய்வமாக வழிபட்டார்கள்.தேனியில் பற்பல
கோயில்கள் இடம் தெரியாமல் இருக்கின்றது. உதாரணமாக,தேனி என்றாலே வீரபாண்டி
கௌமாரியம்மன் கோயில் தான் நம் நினைவிற்கு வரும். வீரபாண்டி கௌமாரியம்மன்
கோயில் அருகிலேயே கண்ணீசுவரமுடையார் கோயில் உள்ளது.இது எத்தனை பேருக்குத்
தெரியும்? இது போன்ற ஆலயங்களில் நாம் ஆன்ம தரிசனம் பெற வேண்டாமா?
இதோ... இன்றைய பதிவில் வீரபாண்டி கண்ணீசுவரமுடையார் அருள் பெற
இருக்கின்றோம். நாம் முதலில் கண்ணீசுவரமுடையார் தரிசனம் செய்து பின்பு
கௌமாரிஅம்மன் தரிசனம் செய்தோம்.ஆனால் முதலில் அம்மனை தரிசித்து,அப்புறம்
தான் கண்ணீசுவரமுடையார் தரிசனம் பெற வேண்டும் என்பது இங்குள்ள ஐதீகம். எது
எப்படியோ, வீரபாண்டி சென்றாலே,ஒரே கல்லுல ரெண்டு மாங்கா போலத்
தான்.இருக்காதா பின்னே. அருகருகில் அம்மன் மற்றும் கண்ணீசுவரமுடையார்
தரிசனம் என்றாலே மனம் துள்ளி குதிக்கும்.
வீரபாண்டியில் இறங்கி, அப்படியே பாலம் இருக்கும் வழியாக நாம் நடந்து
வந்தால்,அங்கே ஒரு பெயர்ப் பலகை உண்டு. அந்த சாலையின் வழியாக சென்றால்,
இயற்கை அன்னையின் தாலாட்டில் நாம் களிப்புறலாம். அங்கே பாயும் ஆறு, மரங்கள்
என இயற்கை அன்னை இன்பத்தை அள்ளித் தருகின்றாள்.நாம் என்ன தான் இங்கே
வடித்து எழுதினாலும், நேரில் சென்று அனுபவித்தால் தான் உண்மை புரியும்.
கோயிலுக்கு செல்லும் பாதை
கோயிலின் முன்பகுதி
இந்த திருக்கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது. இவ்வாலய
மூர்த்தியின் பெயர் கண்ணீசுவரமுடையார்.அன்னையின் பெயர் அறம் வளர்த்த
நாயகி.அருகில் ஓடும் முல்லையாற்றில் நீராடி அம்மையப்பனை வேண்ட,தீராத
நோயெல்லாம் தீர்ந்து,பாவங்கள் நீங்கும் எனபது சிறப்பிக்கத்தக்க செய்தி.
பாண்டிய மன்னனுக்கு கண் கொடுத்த தெய்வம் இவர் தான்.
இத்திருக்கோயிலில் பல கல்வெட்டுக்கள் இருந்ததாகவும்,ஒரு காலத்தில் பல
மண்டபங்களையும்,கோபுரங்களையும் உள்ளடக்கி இருந்ததாகவும் தெரிகின்றது. ஆனால்
இன்று சிறிய அமைப்புடன்,மரங்களுக்கிடையில் மன அமைதியை தரும் வண்ணம் கோயில்
உள்ளது.
திருக்கோயிலின் அமைப்பைக் காணும் போது,முதலில் நம் மனத்தைக் கவருவது
இயற்கையே. மரங்களின் வனப்பில் கோயில் உள்ளது.மூலவர் கண்ணீசுவரமுடையார்
கிழக்கு நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கின்றார். அப்படியே இடது பக்கம்
அன்னையின் தரிசனம், மூலவரின் வலது பக்கம் சந்தானக்
குரவர்கள் உள்ளனர். வெளிச் சுற்று பிரகாரங்களில் விநாயகர்,முருகன் என
உள்ளனர். அருள்மிகு தட்சிணாமூர்த்தி, அருள்மிகு சண்டீஸ்வரர்
சன்னதியும்,பைரவர்,துர்க்கை ,நவகிரக நாயகர்கள் என கோயில் முழுதும் அருள்
ததும்பி வழிகின்றது.
அடடா ! என்ன அழகு! மூலவர் கண்ணீசுவரமுடையார் முன் அருள்மிகு நந்தீஸ்வரர் தரிசனம் ! இரு விழிகள் போதாது.
அனைவரும் தரிசனம் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். மேற்கொண்டு இத்திருத்தல சிறப்புகள் பற்றி அறிவோம்.
ஸ்ரீ கண்ணீசுவரமுடையார் கோயிலின் தீர்த்தம் அருகில் ஓடும் முல்லை நதியின் தீர்த்தமே.இது அபிஷேகத்திற்கும், பக்தர்களுக்கும் வழங்கப் படுகின்றது.இந்த நீர் சுருளி மலை மற்றும் தேக்கடியில் இருந்து வருகின்றது. எனவே பல மூலிகைகள் நிறைந்து நோய்கள் தீர்க்க வல்லது.
தல வரலாறு
வைகை நதியின் கரையின் அடர்ந்த காட்டுப்
பகுதியில் அசுரன் ஒருவனை வெல்வதற்காக சக்திதேவியின் அம்சமான கௌமாரி
ஒரு சிவலிங்கம் செய்து அதன்முன் தவமியற்றி வந்தார். இதையறிந்த அசுரன்
கௌமாரியைத் தூக்கிச் செல்ல முயன்றான். இதைத் தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்த
கௌமாரி அருகிலிருந்த அருகம்புல்லை எடுத்து அவனை நோக்கி வீசினாள். அந்த
அருகம்புல் முக்கழுப்படையாக உருவெடுத்து அசுரனை இரண்டாகப் பிளந்து கொன்றது.
இதைப் பார்த்த தேவர்கள் வானிலிருந்து மலர்களைத் தூவினர். அவள் பூஜித்து
வந்த சிவலிங்கத்திற்கு "திருக்கண்ணீசுவரர்" எனப் பெயரிட்டாள்.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டின் மன்னன் வீரபாண்டியன் தனது ஊழ்வினைகளால் இரண்டு கண்களின் பார்வையை இழந்தான். தனக்கு கண் பார்வை வேண்டி பல கோயில்களுக்குச் சென்றான். ஒரு நாள் அவனது கனவில் தோன்றிய இறைவன் இந்த கண்ணீசுவரமுடையார் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கண் பார்வை கிடைக்கும் என்று சொன்னார். அதன்படி அந்த மன்னனும் இந்தப் பகுதிக்கு வந்து கௌமாரியை வணங்கி ஒரு கண்ணின் பார்வையும், கண்ணீசுவரமுடையாரை வணங்கி மற்றொரு கண்ணின் பார்வையையும் பெற்றான். அதன் பின்பு கண்ணீசுவரமுடையாருக்கு கற்கோயில் அமைத்து வழிபாடு செய்தான்.

சிறப்புக்கள்
கண்ணீசுவரமுடையார் கோயிலில் கண்ணீசுவரமுடையார் மற்றும்
உடனிருக்கும் அம்மனாக அறம் வளர்த்த நாயகி இருக்கிறார். பாண்டிய
மன்னனுக்குக் கண் பார்வை தந்த இந்தக் கோயிலில் வணங்கிச் செல்பவர்களுக்கு
அனைத்து நோய்களும் நீங்கி விடும் என்று கருத்து இப்பகுதி மக்களிடையே
இருக்கிறது.
இந்தக் கோயிலின் தீர்த்தமாக கோயிலுக்கு அருகே ஓடும் முல்லை நதியின் நீர்
பயன்படுத்தப்படுகிறது. இந்த நீர்தான் அபிசேகத்திற்குப்
பயன்படுத்தப்படுகிறது.
இந்தக் கோயில் குறித்த தகவல்கள் சின்னமனூர் அரிகேசரி நல்லூர் தல புராணத்தில் பதினான்காம் படலத்தில் இடம் பெற்றிருக்கிறது.
இந்தக் கோயிலில் இந்தப் பகுதி மக்களில் பெரும்பான்மையாகத் திருமணம் செய்து கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்து சமயக் கோயிலில்கள் அனைத்திலும் செய்யப்படும் தினசரி பூசைகள் இந்தக்
கோயிலிலும் செய்யப்படுகின்றன.இந்தக் கோயிலில் தை மாதச் சங்கராந்தி,
தைப்பூசம், மாசி மாத மகா சிவராத்திரி, பங்குனி மாத உத்திரம், சித்திரை மாத
சிவராத்திரி பிறப்பு, வைகாசி மாத விசாகம், ஆடி மாத அமாவாசை, ஆவணி மாத
விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா , ஐப்பசி மாத
தீபாவளி, கார்த்திகை மாத கார்த்திகை விழா, மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி
போன்ற நாட்களில் சிறப்புப் பூசைகள் செய்யப்படுகின்றன.
நாம் தற்போது தேனிக்கு செல்லும் போதெல்லாம் வீரபாண்டி செல்லத்தவறுவதில்லை. அன்னையின் அருளிலும், அப்பனின் அன்பிலும் திளைக்க இப்படியொரு திருத்தலம் கிடைத்தது யாம் செய்த புண்ணியமே. இது போல் காணக் கிடைக்காத தலங்கள் தேனியில் பொதிந்து கிடக்கின்றன. முருகன் அருள் முன்னிற்க அரிகேசரி நல்லூர் கோயில் தரிசனம் பெறுவோம்.
முந்தைய பதிவுகளுக்கு :-
கேட்ட வரம் அருளும் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரிஅம்மன் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post.html
சித்திரை மாத சிறப்பு தரிசனம் - வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_1.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment