TUT தள வாசகர்களே...
அனைவருக்கும் அன்பு வணக்கஙகள்.
இன்றைய பதிவில் தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு சார்பில் நடைபெற்று வரும் மற்றொரு சேவை பற்றி அறிய இருக்கின்றோம். இந்த சார்வரி ஆண்டில் 4 ஆம் ஆண்டில் குருவருளால் அடியெடுத்து வைக்கின்றோம். இதனை சிறப்பிக்கும் பொருட்டு தேடல்
உள்ள தேனீக்களாய் (TUT) குழுவின் அன்னதான சேவை, உழவாரப் பணி சேவை ,ஸ்ரீ
அகத்தியர் ஆயில்ய ஆராதனை,ஆலய தரிசனம், மலை யாத்திரை பற்றி பார்த்தோம். இன்றைய பதிவிலும் நம் தளம் சார்பில் செய்து வரும் புதிய சேவை பற்றி தொடர உள்ளோம்.
அன்னதானம், உழவாரப் பணி , ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய வழிபாடு, மோட்ச தீப வழிபாடு , மலை யாத்திரை மூலம் குருவருளைப் பற்றிடவும்,
பெற்றிடவும் முடிகின்றது. அவ்வப்போது நம் தளத்தில் யாத்திரை மேற்கொண்டு
வந்தாலும், இது நமக்கு ஆன்ம தரிசனம், இறையுணர்வு, அறநெறி, இயற்கை வளம் என
பல வழிகளில் நம்மை செப்பனிட உதவுகின்றது.
2016 ஆம் ஆண்டில் நாம் அன்னதானம், உழவாரப்பணி என்று ஆரம்பித்த நாம் 2017 ஆம் ஆண்டில் தேடல் உள்ள தேனீக்களாய் - (TUT) குழுவிற்கென்று வலைத்தளம் ஏப்ரல் 14 ம் தேதி ஆரம்பித்தோம். இதனை அப்படியே நம் ஆண்டு விழா என்று கணக்கில் வைத்து வருகின்றோம். 2017 ஆம் ஆண்டில் தான் ஆயில்ய பூசை நமக்கு குருவருளால் கிடைத்தது. 2016 முதல் நமக்கு ஜீவ நாடி அறிமுகம் கிடைத்தது. ஜீவ நாடி உத்தரவுப்படி சில வழிபாட்டு முறைகளை நாம் தொடங்கினோம். அதுவரையில் கூடுவாஞ்சேரியில் உள்ள ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் பற்றி யாம் அறியவில்லை. ஆனால் கூடுவாஞ்சேரி வந்து சுமார் 2 ஆண்டுகள் அப்போது ஆகி விட்டது. பின்னர் ஒரு நாள் நமக்கு ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயில் தரிசனம் கிடைத்து. அன்று தான் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் தரிசனமும் கண்டோம். அப்போது தான் ...அடடா..குருநாதரை நம் வீட்டு அருகிலே இருப்பது அறியாது இத்தனை நாட்களை வீணாக்கி விட்டோமோ என்று தோன்றியது. இது தான் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையும் கதை என்றும் தோன்றியது. பின்னர் முதல் வழிபாடாக ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு 2017 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 8 ம் நாள் (21.08.2017) திங்கட்கிழமை நடைபெற்றது. அடுத்து வந்த ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தியை அதாவது மார்கழி மாத ஆயில்ய பூசையை 108 தீபமேற்றி வழிபாடு செய்தோம். இங்கிருந்து தான் நமக்கு தீப வழிபாடு பற்றி உணர்த்தப்பட்டது.
சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ அகத்தியர் ஞானகுடில் மூலம் கோவை பச்சப்பாளையத்தில் உள்ள அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் கோயிலில் நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள்.அடுத்து நாம் நம் TUT தளம் சார்பில் இந்த வழிபாடு மேற்கொள்ள ஜீவநாடி உத்திரவு கேட்டோம். நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருளாசியால் 2018 ஆம் ஆனதில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம் நாள் அமாவாசை (11.08.2018) அன்று கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் மோட்ச தீப வழிபாடு நடைபெற்று வருகின்றது. 2020 ஆண்டு பங்குனி மோட்ச தீப வழிபாடும் சுமார் 10 பேர் அளவில் சிறப்பாக நடைபெற்றது. வருகின்ற சித்திரை மாத மோட்ச தீப வழிபாடு தற்போதுள்ள 144 தடை உத்தரவால் நடைபெறவில்லை. ஆனால் குருநாதரின் அருளால் அன்றைய தினம் ஆத்ம தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம்.
சரி..இந்த சேவையில் நமக்கு இயல்பாக அமைந்தது ஆலய தரிசனம் ஆகும். நம் தளத்தில் உழவாரப்பணி செய்வதற்கு நமக்கு குருவருள் அவ்வப்போது சில ஆலயங்களை தரிசனம் செய்ய கூட்டுவிக்கும். பின்னர் நாம் அவற்றை நம் தளம் சார்பில் ஆலய தரிசனமாக எடுத்துக்கொள்வோம். இது ஒரு புறமிருக்க, சித்தன் அருள் வழங்கும் அந்த நாள் இந்த வருடம் தொகுப்பில் உள்ள யாத்திரைகளை நாம் அவ்வப்போது தரிசனம் செய்து வருவது வழக்கம். இவற்றில் சில மலை யாத்திரையும் அடங்கும்.
முதன் முதலாக நாம் நம் தளம் சார்பில் சுமார் 8 பேருடன் பர்வத மலை யாத்திரை சென்று வந்தோம். அடுத்து அகத்திய அடியார்களோடு கல்யாண தீர்த்தம் மற்றும் அத்திரி மலை யாத்திரை சென்று வந்தோம். அடுத்து தேடல் உள்ள தேனீக்களாய் குழு மூலம் மீண்டும் கல்யாண தீர்ததம் தரிசனம் மேற்கொண்டோம்.
சென்ற மாதம் கல்யாண தீர்த்தம் செல்லும் போது அனுமதி எளிதாக கிடைக்கவில்லை. எனவே தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற தல யாத்திரைகளுக்கு சென்று வாருங்கள். சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் காலை முதல் மாலை 5 மணி வரை அபிஷேகம், அலங்காரம் என்று கல்யாண தீர்த்தத்தில் தரிசனம் பெற்றதுண்டு. ஆனால் இப்போது கல்யாண தீர்த்தம் தரிசனம் பெறுவதற்கு முறையான அனுமதி பெற வேண்டி உள்ளது.
1. பர்வத மலை
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி
6. வள்ளிமலை
7. திருஅண்ணாமலை
8. நம்பி மலை
9. சபரி மலை
10. பொதிகை மலை
11. தேனி சண்முகநாதன் மலை
12. தேவதானப்பட்டி மிருகண்ட மகரிஷி மலை
13. கோவில்பட்டி அருகே குருமலை
14. சதாசிவ கோனா மலை
15.தோரண மலை
16. மருத மலை
17. மங்கலதேவி கண்ணகி கோவில்
என பல யாத்திரைகள் சென்று வந்துள்ளோம். இதில் பருவத மலை யாத்திரை 4 முறையும், சதுரகிரி 2 முறையும், சபரி மலை 5 முறையும், வள்ளிமலை 4 முறையும், வெள்ளியங்கிரி 3 முறையும் சென்று வந்துள்ளோம். எண்ணைக்கையில் என்ன இருக்கின்றது ? எண்ணத்தில் தான் அத்தனையும் இருக்கின்றது.
2. ஓதி மலை
3. சதுரகிரி
4. அத்திரி மலை
5 .வெள்ளியங்கிரி
6. வள்ளிமலை
7. திருஅண்ணாமலை
8. நம்பி மலை
9. சபரி மலை
10. பொதிகை மலை
11. தேனி சண்முகநாதன் மலை
12. தேவதானப்பட்டி மிருகண்ட மகரிஷி மலை
13. கோவில்பட்டி அருகே குருமலை
14. சதாசிவ கோனா மலை
15.தோரண மலை
16. மருத மலை
17. மங்கலதேவி கண்ணகி கோவில்
என பல யாத்திரைகள் சென்று வந்துள்ளோம். இதில் பருவத மலை யாத்திரை 4 முறையும், சதுரகிரி 2 முறையும், சபரி மலை 5 முறையும், வள்ளிமலை 4 முறையும், வெள்ளியங்கிரி 3 முறையும் சென்று வந்துள்ளோம். எண்ணைக்கையில் என்ன இருக்கின்றது ? எண்ணத்தில் தான் அத்தனையும் இருக்கின்றது.
இவ்வாறு 2016 ஆம் ஆண்டில் அன்னசேவையில் ஆரம்பித்த நம் தொண்டு இன்று ஆலய தரிசனம், உழவாரப்பணி, மோட்ச தீப வழிபாடு, சித்தர்கள் வழிபாடாக ஆயில்ய ஆராதனை என சென்று கொண்டிருக்கின்றது. இந்த 2020 ஆம் ஆண்டில் மேலுமொரு சேவையை குருவருளால் தொடர்ந்து உள்ளோம். இந்த சேவை நம் மோட்ச தீப வழிபாட்டினால் தான் அருளப்பட்டுள்ளது. நாம் ஏற்கனவே பலமுறை சொல்லி இருக்கின்றோம். நம் தளத்திற்கும் தீப வழிபாட்டிற்கும் ஏக பொருத்தமாக இருக்கும். ஆம் ஆலய தீப எண்ணெய் தானம் வழங்கிய சேவையைப் பற்றி இங்கே சொல்ல விரும்புகின்றோம்.
எப்போதுமே நம் சேவை குருவருளால் தான் நடைபெற்று வருகின்றது என்பது கண்கூடு. இந்த ஆலய தீப எண்ணெய் தானமும் முதல் முறையாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் இருந்து தான் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி விழாவில் 108 தீபமேற்றி வழிபாடு செய்ய 10 லி கொண்ட இலுப்பெண்ணை டின் வாங்கி உபயோகம் செய்தோம். இதோ..நீங்களே அந்த 108 தீப தரிசனத்தை பாருங்கள்.
108 தீபமேற்றி அகத்தியர் தரிசனம் பெற்றது இன்னும் மனசுக்குள் மத்தாப்பாக மிளிர்கின்றது.
அடுத்து மீதம் இருந்த இலுப்பெண்ணெய்யை சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமத்தில் இந்த ஆண்டு குருபூசைக்காக வழங்கினோம். அடுத்து நம் ஆலய தீப எண்ணெய் வழங்கும் சேவை கொளத்தூரில் உள்ள
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலயத்தில் வழங்கினோம். இதுவும் நாம் திட்டமிட்டு செய்யவில்லை. ஆனால் குருவருளால் இந்த சேவை அங்கு நடைபெற்றது. இந்த ஆண்டு சிவராத்திரி முன்னேற்பாடு கலந்துரையாடலுக்கு நம்மை ஸ்ரீ ஸ்ரீ துளஸீஸ்வரர் கோயில் நிர்வாகி திரு.ரமேஷ் அவர்கள் நம்மை அழைத்தார். நாமும் சரி. அங்கு ஒரு இலுப்பெண்ணை டின் கொடுக்கலாம் என்று முடிவு செய்து சென்றோம். இதோ அன்றைய கூட்டம் நிறைவு பெற்று, விளக்கேற்றி வழிபாடு செய்து நம் தளம் சார்பில் இலுப்பெண்ணை தானம் வழங்கினோம். சில காட்சிகளை இங்கே உங்களுக்காக பகிர்கின்றோம்.
அடுத்து நாம் ஏற்கனவே ஒரு ஆலயத்திற்கு இலுப்பெண்ணெய் வழங்குவதாக சொல்லி இருந்தோம். முதன் முதலில் இந்த ஆலயத்திற்கு தான் தர வேண்டும் என்று தீர்மானம் செய்தும் இருந்தோம். ஆனால் நம்மை வழிநடத்தும் குருவருள் நம்மை வேறு விதமாக பணிக்க செய்வதை நாம் ஏற்றுகொள்ளத் தான் வேண்டும், இந்த முறை அந்த ஆலயத்திற்கு இலுப்பெண்ணை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டோம்.எப்படி? எப்போது வழங்க உள்ளோம் என்பதை குருவருள் தீர்மானிக்க காத்திருந்தோம். அந்த நாளும் வந்தது. ஆம். இந்த ஆண்டு மஹா சிவராத்திரி வழிபாடு எங்கே செல்வது என பல திட்டங்கள் தீட்ட, கடைசியில் ஆவடி பக்கம் சென்று தரிசனம் செய்ய நம்மை குருவருள் கூட்டுவித்தது. உடனே..மஹா சிவராத்திரி அன்று வெள்ளிக்கிழமை இரவு 6 மணி அளவில் இரண்டு இலுப்பெண்ணை டின்கள் வாங்கி ஆவடி நோக்கி சென்றோம். இந்த தரிசனத்தை மற்றொரு பதிவில் தனியாக தருகின்றோம்.
ஒரு டின் இலுப்பெண்ணை பஞ்சேஷ்டி அருகில் உள்ள நத்தம் ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயிலில் வழங்கினோம். இந்த திருக்கோயில் பற்றி தனிப்பதிவில் காண்போம்.
மீதம் இருந்த மற்றொரு இலுப்பெண்ணை நாம் ஆவலோடு முதலில் தருவதாக சொன்ன அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் வழங்கினோம். எப்படியோ நாம் நினைத்தது போல் இந்த கோயிலிலும் இலுப்பெண்ணை வழங்கி விட்டோம். தற்போது நிலவி வரும் ஊரடங்கு காரணமாக நம் இந்த சேவையை தொடர இயலவில்லை. சூழ்நிலை சரியானதும் மீண்டும் குருவருளால் இந்த சேவை தொடரும் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த ஆலய தீப எண்ணெய் தான சேவைக்கு பொருளுதவி செய்த அனைவருக்கும் நம் தளம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால்
மூன்றாண்டு நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.
எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.
வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,
அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!.
நன்றி
மீண்டும் ஒரு முறை வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும்
இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.
- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
No comments:
Post a Comment