அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
செண்பகப்பொழில்
பேரைக் கேட்டாலே சும்மா இனிக்குதில்ல. ஆம், இது தான் தமிழ் மொழியின் அழகு. இது எந்த ஊர் என்று தெரிந்து விட்டதா? வேறென்ன? நம் தென்காசியின் மற்றுமொரு பெயர் தான் இது. செண்பகப்பொழில். சொல்ல சொல்ல இனிக்கின்றது. சோலைகளும், வனங்களும், பசுமையும் போர்த்திய ஊராக இருந்திருக்க வேண்டும் என்று எமக்கு தோன்றுகின்றது. ஆதலின் செண்பகப்பொழில் என்று பெயர் பெற்றுள்ளது இது போல் பல பெயர்கள் தென்காசிக்கு உண்டு. இது போன்ற செய்திகளை நம் தலைமுறைக்கு சொல்ல வேண்டும். முன்னொரு காலத்தில் எந்த ஊர் என்று கேட்டால் அந்த ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலின் பெயரை சொல்லி, ஊரின் பெயரை சொல்வது வழக்கம். அதனால் தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா என்ற பழமொழியும் உண்டானது.
தென்காசிக்கு மட்டுமா பல பெயர்கள். பல ஊர்களுக்கு பற்பல பெயர்கள் உண்டு. வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகில் உள்ள பனப்பாக்கத்தை விலாச காஞ்சி, திருத்தலபுரி, பனசையம்பதி, மயூரபுரி, புலியூர், இந்திரபுரி என்றெல்லாம் அழைப்பார்கள். இதே போல் தேனியில் உள்ள சின்னமனூர் அரிகேசநல்லூர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இது போன்ற தொன்மையின் சிறப்பின் மூலம் தமிழ்மொழியின் சிறப்பு விளங்கும்.
இன்று நாம் இந்தப் பதிவை அளிக்க இருக்கின்றோம் என்று நினைக்கவில்லை. ஆனால் குருவருள் இந்தப்பதிவு அளிக்க நம்மை கூட்டுவித்துள்ளது. இன்று எம் சகோதரர் தென்காசி பெரியகோயில் சென்று வெளியே இருந்து கோபுர தரிசனத்தை எமக்கு அனுப்பி வைத்தார். இதோ..இந்த நிகழ்வே இன்றைய பதிவில் வெளிப்பாடாக இருக்கின்றது.
அட..என்ன ஒரு அழகு. கம்பீரமும் சேர்ந்து அல்லவா நம்மை இழுக்கிறது. பதிவின் இறுதியில் மேலும் சில கோபுர தரிசன காட்சிகள் இணைத்துள்ளோம். அதைப் பார்க்கும் போது இந்த தலத்தின் கோபுரத்தின் அழகும், கம்பீரமும் நம்மை இன்னும் அன்பில் ஆழ்த்தும்.
முதலில் கோபுர தரிசனம் பார்த்து விடலாமா?
இன்றைய பதிவில் தென்காசி தேவனை சந்திக்க உள்ளோம். அதற்கு முன்பாக தென்காசி பற்றி சில செய்திகள் அறிவோம். கண்டிப்பாக தென்காசி செல்பவர்கள் அப்படியே தோரணமலை முருகனையும் வழிபாடு செய்து வாருங்கள். நாமும் சுமார் 4 முறை தென்காசி ஸ்ரீ காசி விசுவநாதர் தரிசனம் பெற்று வந்திருக்கின்றோம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக தரிசனம் நமக்கு அமைந்துள்ளது.
தென்காசியும் பல பெயர்களால் வழங்கப் பட்டு வந்துள்ளது. இந்த வகையில் தென்காசியும் பல பெயர்களை உள்ளடக்கியது. சச்சிதானந்தபுரம், முத்துத் தாண்டவ நல்லூர், ஆனந்தக் கூத்தனூர், சைவ மூதூர், தென்புலியூர், குயின்குடி, சித்தாவாசம், செண்பகப் பொழில், சிவமணவூர், சித்திர மூலத்தானம், மயிலைக்குடி, கேசிகைஎன பட்டியல் நீளுகின்றது. இதில் நமக்குப் பிடித்த பெயர் செண்பகப்பொழில். பேரே ஊரின் பெருமை சொல்கின்றது.
முதலில் கோயிலின் தல புராணம் பற்றி சிறிதாக. தற்போது தான் நாம் கதை வடிவிலும், உரை நடை வடிவிலும் தல புராணம் படித்து வருகின்றோம். ஆனால் பன்னெடுங் காலத்தில் இப்படி உரைநடை வடிவில் இவை அறியப் படவில்லை. மாறாக செய்யுள் வடிவில், பாக்களாக பல படலங்களில் இவை இருந்திருக்கின்றன. பாடல் வடிவில் இப்போது நம்மால் உணர சற்று கடினம் தான். எனவே தான் தற்போது நாம் உரைநடை, கதை வடிவில் இவற்றை காண்கின்றோம். ஏதோ கதை தானே என்று எண்ணி அலட்சியப் படுத்தாது, பொருள் புரிந்து திருக்கோயில் மதிப்பை உணர்வோம். தென்காசி கோயிலும் பல படலங்களில் தல புராணத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
கோபுர தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். இதோ சிறு சிறு குறிப்புகளாக
சுவாமி : அருள்மிகு காசி விசுவநாதர்
அம்பாள்: அருள் தரும் உலகம்மை
தீர்த்தம் : சித்திர கங்கை, அன்னபூரணி தீர்த்தம், காசிதீர்த்தம்
தல விருட்சம்: செண்பக மரம்
திருப்பூசனைகள்: ஆறு காலப் பூசை
சுருக்கமாக தல புராணம், முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்.
கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html
குகைக்குள் வாழும் குகனே- தோரணமலை முருகா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_28.html
முதலில் கோயிலின் தல புராணம் பற்றி சிறிதாக. தற்போது தான் நாம் கதை வடிவிலும், உரை நடை வடிவிலும் தல புராணம் படித்து வருகின்றோம். ஆனால் பன்னெடுங் காலத்தில் இப்படி உரைநடை வடிவில் இவை அறியப் படவில்லை. மாறாக செய்யுள் வடிவில், பாக்களாக பல படலங்களில் இவை இருந்திருக்கின்றன. பாடல் வடிவில் இப்போது நம்மால் உணர சற்று கடினம் தான். எனவே தான் தற்போது நாம் உரைநடை, கதை வடிவில் இவற்றை காண்கின்றோம். ஏதோ கதை தானே என்று எண்ணி அலட்சியப் படுத்தாது, பொருள் புரிந்து திருக்கோயில் மதிப்பை உணர்வோம். தென்காசி கோயிலும் பல படலங்களில் தல புராணத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
கண்ணைக் கவரும் சிற்பங்கள், இரட்டை சிற்பங்களாக இரு வீரபத்திரர்கள், இரு தாண்டவ மூர்த்திகள், மன்மதன்,ரதி தேவி என்று கலைச் சிற்பங்கள், திருமால் , காளி தேவி என தனி அழகு சிற்பங்கள், செண்பக மரம், பலா மரம் என இரண்டு தல மரங்கள் என இந்த திருத்தலம் சிறப்பை கொண்டு விளங்குகின்றது.
சுவாமி : அருள்மிகு காசி விசுவநாதர்
அம்பாள்: அருள் தரும் உலகம்மை
தீர்த்தம் : சித்திர கங்கை, அன்னபூரணி தீர்த்தம், காசிதீர்த்தம்
தல விருட்சம்: செண்பக மரம்
திருப்பூசனைகள்: ஆறு காலப் பூசை
ஆவணி மூலத் திருவிழா, ஐப்பசி திருக்கல்யாணம் , மாசி மகத் திருவிழா இங்கு விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
சுருக்கமாக தல புராணம், முன்னொரு காலத்தில் செண்பகப்பொழிலைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆட்சி செய்த பராகிராம பாண்டிய மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம் செண்பக வனத்தில் உள்ளதாகவும், கோட்டையிலிருந்து ஊர்ந்து செல்லும் எறும்புகளைத் தொடர்ந்து சென்றால் அங்கு ஒரு லிங்கத்தைக் காணலாம் என்றும் அதற்கு கோயில் கட்டுமாறும் கூறினார். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர். அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோயிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது.
இத்தலம் உலகம்மன் கோயில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப்பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்.
இனிவரும் பதிவுகளில் தென்காசி தேவரையும், தல புராணத்தையும் இன்னும் சற்று விரிவாக காண, எம் பெருமானிடம் விண்ணப்பம் செய்கின்றோம்.
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக;-
முருகன் குமரன் குகனென்று தோரண மலை முருகனை அழைப்போம்! - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_24.html
கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை முருகா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_15.html
கும்ப முனி கும்பிடுந் தம்பிரானே - தோரண மலை தோழா போற்றி - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_5.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html
வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html
யாத்திரையாம் யாத்திரை பருவதமலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_42.html
பரம்பொருளைக் காண பருவத மலை யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_87.html
No comments:
Post a Comment