இன்றைய பதிவில் ஒரு குட்டிக் கதை ஒன்றைப் பார்க்கலாம். மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது என்று எல்லாரும் சொல்வார்கள். அது போல் தான் இந்தக் கதையும். சிறிய கதை தான், தெரிந்த கதையாகவும் இருக்கலாம். ஆனால் கதையின் நீதி அளப்பரியது.
சரி. கதைக்குள் செல்வோம் வாருங்கள்.
வழக்கமாக சொல்ற மாதிரி..ஒரு ஊர்ல...இரண்டு தேவதைகளுக்கு சந்தேகம் வந்தது. இறைவனிடம் பலர் வந்து வேண்டிக் கொள்கின்றனர். அப்படி வேண்டும் போது "இறைவா. உன்னை அனுதினமும் வணங்குகின்றேன்" என்று சொல்கின்றனர்.இதில் உண்மையான பக்தன் யார் எனபதே சந்தேகம். அவர்கள் இருவரும் நேராக கடவுளிடம் சென்று இந்த சந்தேகத்தை கேட்டனர்.
அப்போது இறைவன் "தேவதைகளே..! இந்த ஊரில் நீங்களே நேரில் சென்று அனைவரையும் விசாரித்து வந்து எனது உண்மையான பக்தன் யார் என்று நீங்களே சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். உடனே அந்த இரு தேவதைகளும் புறப்பட்டு, அந்த ஊருக்கு சென்று ஒவ்வொருவராக விசாரிக்க தொடங்கினர்.
ஒருவன், "நான் கோவிலுக்குப் போகாத நாளே இல்லை... தினமும் மூன்று வேளை கடவுளை வணங்குகிறேன்," என்றான்.
அடுத்தவன், "நான் வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் கோவிலுக்கு போவேன்," என்றான்.
மற்றவன், "நான் வாரத்தில் ஒரு நாள் நிச்சயம் கோவிலுக்குச் செல்லுவேன்," என்றான்.
இன்னொருவன், "எனக்கு கஷ்டம் வரும் சமயத்தில் கடவுளிடம் முறையிடுவேன்," என்றான்.
இப்படியாக பலரும் ஏதோ ஒரு சமயத்தில் கடவுளை நினைப்பவராகவே இருக்க, "இதில் யார் உண்மையான பக்தன்' எனக் கண்டு பிடிப்பது எப்படி என்ற குழப்பம் தேவதைக்கு ஏற்பட்டது.
அப்போது அந்தவழியே அவசரமாகச் சென்று கொண்டிருந்த ஒருவனை நிறுத்தி, "அய்யனே! உனக்குக் கடவுள் பக்தி உண்டா? நீ எப்போது கடவுளை வழிபடுவாய்?'' என்று ஒரு தேவதை கேட்டது.
அதற்கு அவன், "எனக்குக் கடவுளை நினைக்கவே நேரமில்லை... அவசரமாக சிலருக்கு உதவி செய்ய வேண்டியிருக்கிறது. நான் போகிறேன்...'' என்று பதில் கூறிவிட்டு ஏழைகளுக்கு உதவிட அவன் விரைந்தான்.
தேவதைகள் கடவுளிடம் திரும்பி வந்து நடந்ததை அப்படியே விவரித்தன.எல்லாவற்றையும் கேட்ட கடவுள் மவுனம் சாதித்தார்.
"தேவனே ... உண்மையான பக்தன் யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?'' என்று தேவதைகள் கேட்டன.
"கண்டுபிடித்துவிட்டேன்!'' என்றார் கடவுள்.
"யார் பிரபு? தினமும் மூன்று வேளை கோவிலுக்கு வருபவர்தானே?'' என்று கேட்டன தேவதைகள்.
கடவுள் புன்னகைத்தபடியே, "இல்லை... இல்லை... கடைசியாக என்னை நினைக்கக்கூட நேரமில்லாது ஏழைகளுக்கு சேவை செய்ய ஓடினானே... உண்மையில் அவன் தான் எனது உண்மைப் பக்தன்,'' என்றார்.
உண்மை புரிந்தது தேவதைகளுக்கு. தேவதைகளுக்கு மட்டுமா புரிந்தது? நமக்கும் புரிந்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். ஏற்கனவே சொல்லியபடி சின்ன கதை தான். ஆனால் கதையின் நீதி பெரிது. நீங்கள் நினைப்பது போல, தினமும் கோயிலுக்கு சென்று வணங்கும் ஒவ்வொருவரும் உண்மையான பக்தர்கள் கிடையாது. இறைவனிடம் எந்த எதிர்பார்ப்புமின்றி, தன் கடமை செய்து, பிறருக்கு உதவும் நல்ல உள்ளமும், எண்ணமும் உடையவர்களே உண்மையான பக்தர்கள்.
பக்தர்கள் எனும் நிலையிலிருந்து நாமும் உண்மையான பக்தர்களாக மாறலாமே ?
வாழ்க்கை படகில் ஓடிக் கொண்டிருந்தேன். சுமார் மூன்று ஆண்டுக்கு முன்பு
அகத்தியர் வனம் அறிமுகம் கிடைத்தது. பல்வேறாய் தொண்டு செய்பவர்களுடன்
அறிமுகம் கிடைத்தது. அன்ன தர்மம் செய்வது பற்றி நினைத்தேன். அகத்தியர் வனம்
மலேசியா குழு அன்னதானம் செய்வதை பார்த்தேன்.
ஜீவ அமிர்தம், rightmantra சுந்தர் என நட்பு வட்டத்தின் அனுபவம் உதவியுடன்
என் அலுவலக நண்பர்கள் உதவியுடன் (தமிழ்மணி, அரவிந்த், மணிகண்டன் & மனோ)
2016 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதம் சுமார் 10 உணவு பொட்டலங்கள் தயார்
செய்து கூடுவாஞ்சேரி சுற்றி உள்ள பகுதிகளில் கொடுத்தோம்.
நமது முதல் அன்னதானம் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ம் தேதி (14.02.2016)
நடைபெற்றது. மார்ச் மாதம் மேலும் சில நண்பர்கள் கை கோர்த்தனர். அன்பு
தொண்டு இல்லம், கூடுவாஞ்சேரி வள்ளலார் கோவில், திருப்போரூர் முருகன் கோவில்
என மாதம்தோறும் குருவருளால் தொண்டு செய்தோம்.அப்போது நாம் வேறெதுவும்
நினைக்கவில்லை. பின்னர் நண்பர்களின் துணையுடன் தேடல் உள்ள தேனீக்களாய் -
TUT என்ற பெயரில் நம் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பணி கோவில் சுத்தம் செய்தல், ஆசிரமத்திற்கு உதவுதல் என நீண்டது. நம்
குழு சார்பில் மரம் நடு விழா, மோட்ச தீபம், ஆலயங்களுக்கு தீப எண்ணெய்
வழங்குதல், உழவாரப்பணி, அன்னதானம், மாதந்தோறும் சித்தர்கள் வழிபாடாக ஆயில்ய
ஆராதனை, மலை யாத்திரை என தொடர்ந்து வருகின்றோம். தற்போது 100
உறுப்பினர்களுடன் "தேடல் உள்ள தேனீக்களாய்" என்ற பெயருடன் இயங்கி
வருகின்றோம்.
எப்படி ஆரம்பித்தோம் என்று இப்போது நினைத்து பார்த்தாலும் பிரமிப்பாய்
உள்ளது. அனைத்திற்கும் காரணம் தேட நாம் தான் முயலுவோம். ஆனால் அந்த
பரம்பொருள் நம்மை வழிநடத்தி வருவதை பார்க்கும் போது நாம் இன்னும்
ஆன்மிகத்தில் இப்போது தான் காலடி எடுத்து வைத்துள்ளதாக உணர்கின்றோம். நம் கையில் ஒன்றுமே இல்லை. அனைத்தும் குருமார்களின் ஆசியோடு தான் நடைபெற்று வருகின்றது.
TUT அன்னசேவை பற்றி இன்னும் பேசுவோம். இந்தப் பதிவுகளை பார்க்கும் போது
நாம் இங்கே அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டும், கடந்து வந்த பாதை
என்ற நிலையிலும் பார்க்க விரும்புகின்றோம். முதன் முதலாக கூடுவாஞ்சேரியில்
சுமார் 10 உணவு பொட்டலங்கள் கொடுத்தோம்.
அடுத்து நம் அலுவலக நண்பர் திரு, சிவகுமார் அவர்களின் துணையுடன் வேளச்சேரி
மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்ன சேவை செய்து உள்ளோம். சுமார் 100
நபர்களுக்கு உணவு கொடுக்கும் பொருட்டு இந்த சேவை வேளச்சேரியில் தொடங்கி
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வரை தொடரும். இது போல் சில மாதங்கள்
அன்னசேவை தொடர்ந்துள்ளோம். இதற்கு நம்முடன் கரம் கோர்த்த அன்பர்களுக்கு
நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் நம்முடன் இணைந்த மலேஷியா
அகத்திய அடியார் பெருமக்களுக்கும் நன்றி கூறுகின்றோம்.
அடுத்து நம்மால் கூடுவாஞ்சேரியில் இருந்து வேளச்சேரி வரை சென்று வர
முடியவில்லை. கூடுவாஞ்சேரி வந்து ஓராண்டு கழித்து நமக்கு வள்ளலார் கோயில்
பற்றி தெரிந்தது. பின்னர் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் மதியம் அன்னசேவை செய்து வந்தோம். இந்த சேவை மேலும்
தொடர வேண்டும் இனி மாதம் தோறும் அமாவாசை அன்னதானம் என்று செய்து வந்தோம்.
அமாவாசை அன்னதானம் இன்று வரை நம் தளம் சார்பில் நடைபெற்று வருகின்றது.
அடுத்து அமாவாசை அன்னதானம் மற்றொரு வழியில் தன்னை பெருக்கி கொண்டது. ஆம்.
நம் தளத்தின் மூலம் நடைபெற்று வரும் மோட்ச தீப வழிபாடு மூலம் அன்று சுமார்
100 பேருக்கு உணவு வழங்கி வருகின்றோம். நமக்கே இது ஆச்சர்யமாக உள்ளது?
இந்த அமாவாசை மோட்ச தீப அன்னசேவைக்கு சுமார் ரூ.3000 ஆகும். ஆனால் கடந்த
ஓராண்டுக்கும் மேலாக இந்த தொண்டு நடைபெற்று வருகின்றது.
இப்படியே தொடர்ந்த அன்னதானம் மேலும் பல தன்னலமற்ற சேவை அமைப்புகளோடு
இணைந்து நடந்து வருகின்றது. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், மதுரை ஸ்ரீ
அகத்தியர் இறையருள் மன்றம், திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் என தொடர்ந்து
வருகின்றது. இங்கு சிலவற்றை தான் குறிப்பிட்டு கூறியுள்ளோம். இந்த 2020 ஆம்
ஆண்டு அன்னசேவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் செய்தோம். நம் தளத்தின்
ஆணிவேராக அன்னசேவை தான் தற்போது வரை நடைபெற்று வருகின்றது. இது தவிர சில
நாட்களில் சிறப்பு அன்னதான சேவையும் நம் தளம் சார்பில் நடைபெறும்.குறிப்பாக
ஆடி, புரட்டாசி மாத அமாவாசை நாட்களில் இது போன்ற சேவை தொடரும்.
ஆங்..சொல்ல மறந்து விட்டோம். சென்ற 2019 ஆண்டில் புரட்டாசி அமாவாசை ஒட்டி
நம் தளம் சார்பில் மகாளயபட்ச நாட்கள் முழுதும் இது போன்ற சேவை செய்தோம்.
இங்கே நாம் சொல்லி இருப்பவை சில துளிகள் மட்டுமே. ஒவ்வொரு அன்னசேவையின் போது நம்முடன் வந்து உறுதுணையாக இருக்கும் அன்பர்களுக்கு இங்கே நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எப்படி ஆரம்பித்தோம் என்று புரியவில்லை. ஆனால் மூன்றாண்டு நிறைவில் மன மகிழ்வுடன் வாழ்தலுக்கான புரிதல் கிடைத்துள்ளது.
எங்கள் சேவை விரிவடைய பொருளுதவி செய்யலாம். எங்களுடன் நேரிடையாக பங்கேற்றும் உதவலாம்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கந் தாழ்"
நாங்கள் விதைப்பது அன்பு மட்டுமே.
வழி நடத்தும் பேராற்றலுக்கு நன்றி,
அக மகிழ்கின்றோம். அவன்அருளாலேஅவன் தாள் வணங்கி !!!.
நன்றி
மீண்டும் ஒரு முறை வழக்கம் போல் உறுதுணையாகவும் உற்ற துணையாகவும் இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களை இங்கே வணங்கி, வாழ்த்தி மகிழ்கின்றோம்.
- மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (5) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-5.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (4) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-4.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (3) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-3.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... (2) - https://tut-temples.blogspot.com/2020/04/tut-2.html
சார்வரியே வருக! தென்காளகஸ்தி திருக்காளாத்தீஸ்வரர்-ஞானம்பிகை திருக்கோயில் செல்வோம் வாருங்கள்!! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_76.html
தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html
TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html
அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_93.html
கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html
Great service. Keep it up!
ReplyDeleteThanks ayya for your comments
Delete