"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, September 9, 2019

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... தொடர்ச்சி

 அன்பார்ந்த மெய்யன்பர்களே...

அனைவருக்கும் வணக்கம்.

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள் என்ற பதிவில் மகேஸ்வர பூசை பற்றி கண்டோம். அந்த பதிவின் தொடர்ச்சியை இங்கு தொடர்கின்றோம். மகேஸ்வர பூசை சுமார் 1  மணி அளவில் முழுமை பெற்றது. அடுத்து மாலை அன்னசேவை செய்வதற்காக பணிகள் தொடங்கப்பட்டது.




மாலை அன்னதானம் செய்வதற்கென குழம்பு, இட்லி, சப்பாத்தி என தயாரானது. இரண்டு இட்லி, இரண்டு சப்பாத்தி என ஒரு உணவுப் பெட்டலம் தயார் செய்தார்கள். கீழே நீங்களே பாருங்கள்.



இதனை செய்வதற்கென ஆசிரமத்தில் இருந்து சிலரும், மேற்கொண்டு சரவணபவா சுவாமிகள் சிரமேற்கொண்டு தானே உணவுப் பொட்டலம் காட்டுகின்றார். உதவிக்கென அவரது குழந்தைகளும் இருந்தார்கள். நம்முடன் பேசிக் கொண்டே இந்த பணியை செய்து கொண்டிருந்தார். நமக்கு என்ன ஆச்சர்யம் என்றால் இவர்கள் இந்த சேவையை கடந்த 7 ஆண்டுகளாக சலிப்பின்றி செய்வது தான்.









நாம் ஒரு பொழுது அன்னசேவை செய்வதற்கே போதும்..போதும் என்றாகிவிடும். இவர்கள் அனுதினமும் சலிப்பின்றி செய்வது என்றால் அதற்கு அன்னபூரணியின் அருள் வேண்டும். இந்த அருள் ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்திற்கு பரிபூரணமாக கிடைத்து வருகின்றது. ஏனெனில் காலை சுமார் 50 பேருக்கு திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் அன்னசேவை, மதியம் சுமார் 80 சாதுக்களுக்கு மகேஸ்வர பூசையுடன் அன்னம்பாளிப்பு, அடுத்து மாலை சுமார் 70 சாதுக்களுக்கு உணவு தருகின்றார்கள். மேலும் சுமார் 100 பேருக்கு உணவுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு திருஅண்ணாமலை பெரியகோயில் அருகில் உள்ள சாதுக்களுக்கு தினமும் செய்து வருகின்றார்கள். இங்கும் காலை முதல் மாலை வரை அடுப்பு தன் அக்னி தர்மத்தை செய்து வருகின்றது.

சாதுக்கள்  மாலை உணவு உட்கொள்ள தயாராகும் நிலையை கீழே பகிர்ந்துள்ளோம்.








         
                                              வாழை இலை  கொடுக்கப்படும் காட்சி



அப்படியே ஆசிரமம் வெளியே வந்து பார்த்தோம்.
கோழி,சேவல்,முயல், பசுக்கள்,வாத்துகள்,ஆடு,நாய்   என பார்ப்பதற்கே ரம்மியமாக இருந்தது. ஆசிரமங்களில் இது போன்ற ஜீவன்களை நாம் வளர்க்க வேண்டும். இதன் மூலம் நாம் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.




















      உணவு உட்கொள்ளும் முன்பு இறைவனுக்கு நன்றி செலுத்துதல். ஏதோ சாதுக்கள் தான் இப்படி வணங்கி உணவு உட்கொள்ள வேண்டும் இல்லை. பொதுவாக உணவு உட்கொள்ளும் முன்பு இறைக்கு இந்த இரை கொடுத்ததற்கு நன்றி என்று கூறி உணவு உட்கொள்ள வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பு உணவை சுற்றி நீர் ஊற்றி சாப்பிடுவார்கள். சரி..ஆழமாக மற்றொரு நாள் பாப்போம். இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, இறை நன்றி சொல்லி, இரை சாப்பிட வேண்டும் என்பதே...இதை நம் பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் இதே முறையை பின்பற்றுவார்கள். நாமும் தினமும் இதனை கைக் கொணர வேண்டும்.









நம் தட்டில் வைக்கப்படும் உணவு வெறும் பணம் கொடுத்தவுடன் கிடைத்து விடுவதில்லை. எத்தனை விவசாயிகளின் வியர்வை சிந்தி தருகின்ற விளைச்சலில் நம் தட்டில் வந்து கிடைக்கின்றது. தற்போது சுத்தமான நீர் இல்லை, காற்று இல்லை, நிலம் இல்லை. ஆனால் இறையின் அருளால் எப்படியோ நாம் சாப்பிடுவதற்கு உணவு கிடைக்கின்றது. இதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டாமா? நன்றி சொல்லி உணவு உண்ண பழகுங்கள்.இதுவே உங்களை உயர்த்தும்.






திருஅண்ணாமலை பெரிய கோயிலுக்கு சென்று அன்னசேவை செய்ய உணவுப் பொட்டலங்கள் தயார். 








இது போல் தான் சப்பாத்தி,இட்லி சாப்பிடுவதற்கென ஒரே பொட்டலத்தில் குருமா ஊற்றி கட்டிக் கொடுக்கின்றார்கள். அடுத்து பொட்டலங்களை ஒரு பெட்டியில் கட்டிக் கொண்டு பெரிய கோயில் நோக்கி சென்று அங்கிருக்கும் சாதுக்களுக்கு தருகின்றார்கள். இதோ 13 ஆகஸ்ட் இரவில் செய்த அன்னதானக் காட்சிகளை இங்கே பகிர்கின்றோம்.









இது போல் தான் அனுதினமும் அன்னசேவை செய்து வருகின்றார்கள். சென்ற வாரம் இரவில் ஒரு 8 மணி அளவில் அலைபேசியில் அழைத்தோம். ஐயா ..இங்கு மழை பெய்து வருகின்றது. பெரிய கோயிலுக்கு சென்று  உணவு தர வேண்டும் என்று கூறும் போது தான் நம் கண்களில் நீர் வந்தது. அது ஆனந்த கண்ணீர் தான்.

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


மீள்பதிவாக:-

அறம் செய விரும்பு - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் ஒரு நாள்... - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_40.html

கிரிவலம் - திருஅண்ணாமலையாருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_7.html ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_15.html ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_75.html

1 comment: