"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Wednesday, September 18, 2019

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில்

அன்பின் நெஞ்சங்களே..

அனைவருக்கும் வணக்கம். இன்றைய பதிவில்  பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் பற்றி காண உள்ளோம். ஏன் இந்த திருக்கோயில் தரிசனம் என்று நீங்கள் கேட்பது நம் காதில் விழுகின்றது. நமக்கும் ஏன் என்று தெரியவில்லை. ஆனால் வழிநடத்துவது அவன் அன்றோ ! அவன் வழியில் நாமும் செல்கின்றோம்.

எத்தனையோ கோயில் தேடி இருக்கின்றோம். ஆனால் இந்த கோயிலை தேடியது ஒரு பெரிய கதை. திருச்சி சென்ற நமக்கு தஞ்சாவூர் சித்தர் அருட்குடில் சார்பில்  உறையூரில் உள்ள காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 48 ஆம் நாள் நிறைவு இளநீர் அபிஷேகம் செய்வதாக தகவல் கிடைத்தது. நாமும் உறையூரில் இருக்கும் கோயில் என்று சாதாரணமாக சென்றோம். அங்கு விசாரித்ததில் வேறு ஒரு இடம் சொன்னார்கள். மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றி கடைசியில் கோயிலை அடைந்தோம். இன்னும் அந்த நிகழ்வு எம் சகோதரரோடு மனதுள் இருக்கின்றது. கோயிலைக் கண்டதும் சூரியனை கண்ட பனி விலகுவது போல் மனதில் இருந்த துன்பம் நீங்கி இன்பம் கண்டோம். தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலின் பூசை கண்டதும் பேரானந்தம் அடைந்தோம்.

பொதுவாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் என்று நிறைய திருக்கோயில்கள் நாம் பார்த்திருப்போம்.அதாவது காசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் தவிர சென்னை மற்றும் தமிழகம் முழுதும் இதே திருப்பெயரில் நம் தகப்பன் குடி கொண்டுள்ளார்.உதாரணமாக சென்னையில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில், சிவகாசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில், தென்காசி ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில்,மதுரை பழங்காநத்தம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் என்று பட்டியல் நீளுகிறது. காசியில் இறந்தால் முக்தி..இது சரியா? காசியில் இருந்தால் முக்தி.அதாவது புருவ மத்தியில் இருந்தால் முக்தி. எது எப்படியோ, நம் தமிழ் நாட்டில் உள்ள அனைவரும் காசிக்கு  சென்று ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் தரிசனம் பெற இயலுமா? அதனை நிறைவேற்றத் தான் ஒவ்வொரு ஊரிலும் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் என்ற பெயரில் நம் அப்பன் அருள்பாலிக்கின்றார். பாண்டமங்கலம் ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் தரிசனம் பெறுவோம் வாருங்கள்.

பாண்டமங்கலம் எங்குள்ளது? நாம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருச்சி சென்றிருந்தோம். தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை உறையூர்  ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் அபிஷேகம் உள்ளது என்று கூறினார்கள்.நாமும் சரி என்று புறப்பட்டு உறையூர் சென்று அங்கு  ஸ்ரீ காசி விஸ்வநாதரைத் தேடினோம்.  தேடினோம். தேடினோம்..தேடிக் கொண்டே இருந்தோம். முச்சக்கர வாகன ஓட்டிகளிடமும் விசாரித்தும் பயனில்லை. பின்னர் முச்சக்கர வாகனம் மூலம்  ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் அடைந்தோம். இந்த கோயில் சரியாக பாண்டமங்கலத்தில் உள்ளது. நம்மை ஏன் அங்கு இவர் அழைத்தார். நமக்கு எப்படி தெரியும். பதிவின் இறுதியில் உங்களுக்கே தெரியும்.






கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா? என்பது போல் தான் இருந்தது. கோயில் பார்க்க சிறியதாக இருந்தது. அருள் வெளிப்பாடு அளவின்றி கிடைத்தது. எந்தெந்த சித்தர் பெருமக்கள் இங்கே வாசம் செய்கின்றார்கள் என்று நமக்கு எப்படி தெரியும். பிரதோஷ பலன்கள் இவ்வளவு இருக்கின்றதா என்று வியக்கும் வண்ணம் கீழ்கண்ட செய்தி கண்டோம்.
அது சரி..ஏன் இந்த கோயிலுக்கு சென்றோம்? திருச்சி காவிரி ஆற்றில் நீர் வர வேண்டும் என்பதற்காக 48 நாள்கள் இந்த கோயிலில் அபிஷேகம் செய்தார்கள். சரியாக 48 நாள் கழித்து, காவிரியில் நீர் பெருக்கெடுத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதே கோயிலில் அபிஷேகம் மற்றும் பூசை ஏற்பாடு செய்து இருந்தார்கள். இப்படி ஒரு நிகழ்வில் நம்மை இணைத்துள்ளார் அந்த பரம்பொருள் என்று நினைக்கும் போதே கண்களில் நீர் பெருக்கெடுத்தது.


காசி விஸ்வநாதர்,காசி விசாலாட்சி தரிசனம் இங்கே பெறலாம்.








கோயிலின் தல வரலாறு நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கோயிலை பார்க்கும் போது, அருள் நிறைந்திருந்ததை உணர முடிந்தது. விநாயகர், முருகன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ பிரம்மா என அனைத்து சன்னிதிகளும் கண்டோம்.








இந்த திருக்கோயில் உறையூர் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோயிலுடன் இணைந்த கோயிலாகும்.


அன்று மாலை அபிசேகம் நடைபெற்ற நிகழ்வு இன்னும் நம்முள் உள்ளது. இங்கு பால் அபிஷேகம் செய்தார்கள். சிறிய கோயில் தானே. நாம் இரண்டு முதல் மூன்று லிட்டர் பால் அபிஷேகம் என்று பார்த்தால், நம் எண்ணம் தவறு என்று புரிந்தது. சுமார் 15 லிட்டருக்கு மேல் பால் அபிஷேகம். சுமார் 10 - 15 இளநீர் அபிஷேகம் என்று நன்றி செலுத்திய பூஜை நம்மை இன்னும் அன்பில் ஆழ்த்தியது. இதுதான் சித்தர் அருட்குடிலின் சிறப்பும் ஆகும். அபிஷேகத்தின் போது அடியார் ஒருவர் பல பாடல்கள், ஸ்லோகங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். கேட்கவே தித்திப்பாக இருந்தது. அவர் கூறினார், யார் வந்து இங்கு மனமொன்றி பிரார்திக்கின்றார்களோ, அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்றார். அதற்கு உதாரணமாக காவேரி தாயின் கருணை ஒன்றே போதும்.


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு:-


உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_70.html


இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html


முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html

இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html


ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html

விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html

 வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html

 செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html

No comments:

Post a Comment