"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, September 20, 2019

கூடுவாஞ்சேரியில் ஒரு திருவிழா - மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூஜை

 அடியார் பெருமக்களுக்கு வணக்கம்.

சென்ற ஆண்டு நாம் கூடுவாஞ்சேரியில் மலையாள சாமி உயிர்நிலை கோயில் இருப்பதாக தகவல் அறிந்தோம். ஆனால் விசாரித்து பார்த்த போது, கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் கோயில் அருகில் இவர் இருப்பதாக கேள்விப்பட்டோம். ஆனால் சென்று தரிசிக்க முடியவில்லை. சுவாமிகள் பற்றி நமக்கு கிடைத்த குறிப்புகள் இதோ.

மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள், கூடுவாஞ்சேரி.

சுவாமிகள் பூர்விகம் பற்றிய செய்திகள் தெரியவில்லை. கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் கோவிலில் பூசை செய்தவர். இவர் சித்த வைத்தியத்தை பற்றியும் தெரிந்து வைத்திருந்தவர். சித்துக்கள் பல செய்தவர். கோவிலின் முன் உள்ள குளத்தில் உள்ள தண்ணீரின் மேல் அமர்ந்து இருப்பதை மக்கள் பார்த்துள்ளனர். வாணி செட்டியார் என்பவர் இடம் இருந்து அறுபத்தி எட்டு ஏக்கர் நிலத்தை வாங்கி, 1912 ஆம் ஆண்டு திருக்கோயிலுக்கு எழுத்துவைத்தார். 17/7/37 ஆம் ஆண்டு மாலை 5 மணிக்கு சிவானந்தப் பெரு வாழ்வு எய்தினார். கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் உள்ள நந்திஸ்வரர் காலனி, குளக்கரை தெரு, 108 ஆம் எண்ணில் ஜீவசமாதி இருக்கிறது. ஆடி விசாகம் அன்று குரு பூஜை.

இதோ..இன்று ஆடி பிறந்து விட்டது. ஆடி விசாகம் அன்று  ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் குரு பூசை. சரி. விசயத்திற்கு வருவோம். சுவாமிகள் தரிசனம் ஓராண்டுக்கு பின்னர் நமக்கு எப்படி கிடைத்தது.? சுவாமிகள் குருபூஜை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அதெப்படி நாம் தரிசிக்கும் சித்தர்கள் குருபூஜை சரியாக நமக்கு கிடைக்கின்றது.  கிண்டி சாங்கு சித்தர் குருபூஜை, திருஒற்றியூர் உரோம மகரிஷி குருபூஜை,நமக்கெப்படி தெரியும்? எல்லாம் அவர் செயல் அன்றோ?சென்ற வாரம் சனிக்கிழமை நம் குழுவில் உள்ள திரு.சரவணன் அவர்களுக்கு பிறந்தநாள். சரவணன் ஐயா அவர்கள் அன்று அன்னபாலிப்பு செய்ய அன்பு கட்டளையிட்டார்கள். நாமும் அதற்கு திட்டமிட்டு ஏற்பாடு செய்தோம்.


சுமார் 20 உணவுப் பொட்டலங்கள் வாங்கி, அப்படியே நடந்து கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் வரை சென்றோம். யாரும் நம் கண்ணில் தட்டுப்படவில்லை. கோயிலில் அகத்தியர் தரிசனம் முடித்து, ரயில் நிறுத்தம் அருகே சென்றோம். அங்கே இருந்தவரிடம் உணவு கொடுத்தோம்.



கோயிலின் வெளியே உள்ள பூக்கடைக்காரருக்கு கொடுத்தோம். அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று நினைத்தோம். ஆனால் நம் எண்ணம் தவறு என்று அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். நாங்கள் கோயிலை பார்த்துக் கொண்டிருக்கின்றோம். கோயிலை கூட்டி,சுத்தம் செய்வது, அறிவிப்பு பலகையில் நிகழ்ச்சி எழுதுவது போன்றவை. இனி அடுத்த நிகழ்வில் இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று மனதில் நிறுத்தினோம்.




அடுத்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம் பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு உணவு கொடுத்தோம்.அப்படியே நந்தீஸ்வரர் கோயிலுக்கு சென்றோம்.செல்லும் பாதையில், நம் கண்ணில் கண்ட சிலருக்கு அன்னம் கொடுத்தோம். இது நாம் வழக்கமாக பின்பற்றும் முறை, அன்னம்பாலிப்போடு ஆலய தரிசனமும் பெற்று வருகின்றோம்.




அடுத்து,  நந்தீஸ்வரர் கோயிலுக்கு வெளியே உள்ளவர்களுக்கு அன்னம் கொடுத்தோம். இருக்கும் அனைத்து உணவுப் பொட்டலங்களை சரியாக இருந்தது. அடுத்து உள்ளே சென்று நந்தீஸ்வரர் தரிசனம் தான். உள்ளே சென்றதும் நம் கண்ணில் பட்ட காட்சி..இது தான் சித்தர்களின் அருள், குருவின் வழிகாட்டல் என்பது..நீங்களே பாருங்கள். நாம் எதை தேடிக் கொண்டு இருந்து, மறந்துவிட்டோமோ, அது மீண்டும் நம் கண்களில் மிக மிக சரியான நேரத்தில் அகப்பட...தெய்வ தரிசனம் பெற்றோம்.

சுமார் ஓராண்டுக்கு முன்னர் நாம் தேடிய சித்தர் நம் கண்ணில் பட்டதும் ஆனந்த கூத்தாடினோம். கோயிலுள் தரிசனம் முடித்து, குருக்களிடம் விசாரித்தோம். அவர்கள் கோயில் பின்புறம் சுவாமிகள் இருப்பதாக கூறினார். பிறகென்ன..உடனே புறப்பட்டுவிட்டோம். சுவாமிகள் தரிசனம் பெறுவதற்குத் தான் அன்றைய அன்னம்பாலிப்பு நடைபெற்றதாக உணர்த்தப்பட்டோம்.இது தான் காரணமின்றி காரியமில்லை என்பது. 








நந்தீஸ்வரர் ஆலயம் முழுதும் மீண்டும் ஒருமுறை தரிசித்தோம். அங்கிருக்கும் நந்தவனம் அடியார் பெருமக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. கோயில் முழுதும் பார்க்கவே அருமையாக பச்சைபசேலென அன்பின் ஆழமும், தாயின் கருணையும் கொண்டு மிளிர்ந்து வருகின்றது. விரைவில் நந்தீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றது. நாமும் நம் தளம் சார்பில் 5 மூடை சிமெண்ட் வாங்கிக் கொடுத்தோம்.
மீண்டும் அடுத்த பதிவில் மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் தரிசனம் பெறுவோம்.அதுவரை சற்று பொறுமை காக்கவும். அன்னம்பாலிப்பு செய்ய நமக்கு வாய்ப்பு வழங்கி, சித்தர்கள் தரிசனம் பெற உதவிய திரு.சரவணன் ஐயாவிற்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மீள்பதிவாக:-

 ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர குரு பூஜை - 04/01/2018 - https://tut-temples.blogspot.com/2019/09/04012018.html


அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html


 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 திரும்பிப் பார்க்கின்றோம்: அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - புரட்டாசி -2017 - https://tut-temples.blogspot.com/2019/08/2017.html

 ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/29082019.html

மகான்களின் வி(வ)ழியில்...- ஆதனூரில் இராகவேந்திர சுவாமிகள் ஆராதனை - 25.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/25082019.html

 திரும்பி பார்க்கின்றோம் : சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_36.html

 வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் (02/06/2019) - https://tut-temples.blogspot.com/2019/05/02062019.html

எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html

No comments:

Post a Comment