அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - அகத்தியரின் அருள் பொழியும் இடம். ஈர்த்தெம்மை ஆட்கொண்ட இடம். நம் சிந்தையை மாற்றும் இடம். தாமிரபரணி தாயின் அருள் நிறைந்த இடம் என கூறலாம். நாம் முதன் முதலில் வெளியூருக்கு சென்று பூசை பார்த்த இடம். அகத்தியம் படிக்க உகந்த இடம். அகத்திய அடியார்களை ஒன்று சேர்க்கும் இடம். வருடத்திற்கு ஒரு முறை எனும் நாம் தாமிரபரணி தாயை வணங்குவதை வழியாக வைத்துள்ளோம். முதன் முதலாக சுமார் 7 பேர் சந்தித்தோம். சென்ற ஆண்டு நம் TUT நண்பர்களோடு சென்று தரிசித்தோம். இம்முறை அகத்தியரின் அருள் பெற காத்திருக்கின்றோம்.
ஓம் அகத்தீசப் பெருமானே போற்றி
ஓம் அகிலம் போற்றும் அறிவுக்கடலே போற்றி
ஓம் அட்டமா சித்துகள் பெற்றவரே போற்றி
ஓம் அகத்தியர் மலை மீது அமர்ந்தவரே போற்றி
என்றும் நம் குருநாதரை போற்றிக் கொண்டே இருக்கலாம். ஏனென்றால் போற்றினால் நமது வினை அகலுமப்பா!
இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை
நடந்தே வந்தடையலாம். இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு
மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும்
உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை
அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் இந்த இடம், ஒரு பெரிய
சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும்.இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த
எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை
சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று. ஆம்.பார்ப்பதற்கு அப்படித் தான் இருக்கின்றது. கூட்டமாக இங்கே சென்றால் கவனமாக இருக்க வேண்டும்.
தனிமையில் இரண்டு , மூன்று பேரோடு செல்வது நலம். இங்கு இருந்து தான் நம் குருநாதர் ஈசனின் திருமண காட்சியைக் கண்டுள்ளார். நாமும் இந்த ஆண்டு பங்குனி உத்திரம் அன்று சென்று நம் குருவின் அருள் பெற்று வந்தோம்.அந்த தரிசனம் வெகு சிறப்பாக இருந்தது.
அப்படியே பங்குனி உத்திர வழிபாட்டை தருகின்றோம்.
அன்று பங்குனி உத்திரம் பிரம்ம கால அகத்தியர் வாக்கு நமக்கு வழங்கப்பட்டது. அதன் சூட்சுமம் இதோ பின்வருமாறு;
நதி வழிபாடும்
நந்தி வழிபாடும்
ஆதி வழிபாடு ஆகும்
உலகம் உய்ய தேவை நதி , நந்தி
திமில் காளைக்கு மட்டுமே உண்டு, திமில் மூலம் விண்சக்தி பெற முடியும். கோ உலகின் சூட்சம்ம்
நந்தி. இறை வழிபாட்டிற்கு கோ ஆற்றல் தேவை
இதே போல் உயிர்கள் உய்ய தேவை நதி. இரண்டும் கெட்டால் உலகம் மலடாகும். இதனை சரிப்படுத்திக் கொள்ள அகத்தியர் இந்த வழிபாட்டை அறிவுறுத்தினார்
நதி வழிபாட்டில் ஆயிரம் பேர் கூடுவார்கள். கங்கா வழிபாடு. நந்தி வழிபாட்டிலும் ஆயிரம் பேர் கூடுவார்கள். பிரதோஷ வழிபாடு உதாரணமாக
நதி வழிபாடு தாய் வீட்டிற்கு செல்வது. இந்த உடல் நிலைக்க நீர் அவசியம். தாயின் ஸ்பரிசம் நீரில் உணரலாம்.ஆயிரமாயிரம் வேள்வி தரும் ஆத்மானுபவம் இந்த வழிபாட்டில் பெறலாம். நதி, நாதம், நந்தி உணர்த்தவே இந்த வழிபாடு. முருக வழிபாடு இதில் இலங்கும்
சித்த மரபில் நீர் முக்கியம். நகாரத் தொடர்பு இதில் அடங்கும். நகாரமே ஆதி..நமசிவாய, நாராயணாய , நதி , நந்தி
வேல் வழிபாடு சித்த மார்க்கத்தின் அடிநாதம். இன்று கலச நீர் (அருகில் உள்ள நீர் ) எடுத்து மாவிலை, மஞ்சள் வைத்து பூமியில் வேல் இட்டு வரிபடுக.நீர்,பால்,பஞ்ச திரவியமாக அபிஷேகம் செய்க
வேல் வழிபாடு தர்மம் நிறுத்தும். பூமி உய்விக்கவும் வழி செய்யும். முருக வழிபாட்டில் சிந்து கவி தேவை.நாதமாக உருகி பாடுக.
அபிஷேகம் செய்த வேலை கல்யாண தீர்த்த அகத்திய முனிவ தம்பதிகளிடம் வைத்து மஞ்சள் பூசி வழிபட்டோம்.
அதற்கு முன்னர் சிவபுராணம் பாடி பரவசப்பட்டோம். எப்படியோ கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகன் கோயிலில் ஆரம்பித்த பங்குனி உத்திரம் கொண்டாட்டம், கல்யாண தீர்த்த அகத்தியரிடம் வேண்டி முழுமை பெற்றது. இதில் நந்தி வழிபாடு, நதி வழிபாடு,வேல் வழிபாடு என அனைத்தும் ஒருங்கே பெற்றோம். இது அனைத்தும் முருகன் அருள் முன்னின்று நடத்தியது என்பதை நாம் உணர்ந்தோம்.
மீண்டும் ஒரு முறை
ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
"நீதி தழைக்கின்ற" போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!
இரண்டும் ஆண்டுகளுக்கு முன்னர் பக்தி என்றால் கிலோ என்ன விலை ? என்று இருந்தோம். சென்ற ஆண்டு இரண்டு கோயில், விநாயகர், பெருமாள், முருகன், சிவன்,சக்தி, பௌர்ணமி தரிசனம், திருக்கல்யாணம் என நமக்கு கிடைத்தது. இந்த ஆண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து கல்யாண தீர்த்தம் வரை யாத்திரை..சித்தர்கள் வழியில் வழிபாடு என்றால் பதிவின் தலைப்பை படியுங்கள். உண்மை உணர்த்தப்படும்.
இந்த பயணத்தில் நமக்கு தெரிந்த கோயில்களில் நம் தளம் சார்பில் சிறிய உதவிகள் செய்து வருகின்றோம்.அது போன்ற தகவல் ஸ்ரீ கல்யாண தீர்த்தம் கோயிலில் நடக்கும் மாதாந்திர பௌர்ணமி பூசையில் நம் பங்கை அளித்து வருகின்றோம்.
இதோ...ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ் இங்கே பகிர்கின்றோம்.

அடுத்த நாள் பங்குனி உத்திரம் அன்று பாபநாசம் ஆற்றில் நந்தி வழிபாடு
பிரசாதத்தை நன்கு சங்கல்பம் செய்து ஆற்றில் சமர்பித்தோம். இதே முறையை
கல்யாண தீர்த்தத்திலும் செய்தோம்.
அப்படியே கல்யாண தீர்த்தம் சென்று வேல் வழிபாடு செய்ய விருப்பினோம். அங்கே
இருந்த ஒரு சுவாமிகள் நாம் வைத்திருந்த வேலிற்கு திருநீறு அபிஷேகம் செய்து
கொடுத்தார்.
அபிஷேகம் செய்த வேலை கல்யாண தீர்த்த அகத்திய முனிவ தம்பதிகளிடம் வைத்து மஞ்சள் பூசி வழிபட்டோம்.
சித்தர்கள் போற்றி தொகுப்பு, முருக மந்திரங்கள் என சுமார் 1 மணி நேரம் வழிபாடு செய்து அங்கிருந்து புறப்பட்டோம்.
அதற்கு முன்னர் சிவபுராணம் பாடி பரவசப்பட்டோம். எப்படியோ கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகன் கோயிலில் ஆரம்பித்த பங்குனி உத்திரம் கொண்டாட்டம், கல்யாண தீர்த்த அகத்தியரிடம் வேண்டி முழுமை பெற்றது. இதில் நந்தி வழிபாடு, நதி வழிபாடு,வேல் வழிபாடு என அனைத்தும் ஒருங்கே பெற்றோம். இது அனைத்தும் முருகன் அருள் முன்னின்று நடத்தியது என்பதை நாம் உணர்ந்தோம்.
மீண்டும் ஒரு முறை
ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
"நீதி தழைக்கின்ற" போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!
இரண்டும் ஆண்டுகளுக்கு முன்னர் பக்தி என்றால் கிலோ என்ன விலை ? என்று இருந்தோம். சென்ற ஆண்டு இரண்டு கோயில், விநாயகர், பெருமாள், முருகன், சிவன்,சக்தி, பௌர்ணமி தரிசனம், திருக்கல்யாணம் என நமக்கு கிடைத்தது. இந்த ஆண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து கல்யாண தீர்த்தம் வரை யாத்திரை..சித்தர்கள் வழியில் வழிபாடு என்றால் பதிவின் தலைப்பை படியுங்கள். உண்மை உணர்த்தப்படும்.
இந்த பயணத்தில் நமக்கு தெரிந்த கோயில்களில் நம் தளம் சார்பில் சிறிய உதவிகள் செய்து வருகின்றோம்.அது போன்ற தகவல் ஸ்ரீ கல்யாண தீர்த்தம் கோயிலில் நடக்கும் மாதாந்திர பௌர்ணமி பூசையில் நம் பங்கை அளித்து வருகின்றோம்.
இதோ...ஸ்ரீ கல்யாண தீர்த்தம் - மாதாந்திர பௌர்ணமி பூசை - 38 ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ் இங்கே பகிர்கின்றோம்.
வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு அகதியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.
மீண்டும் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_22.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 6 - நம்பிமலை! - https://tut-temples.blogspot.com/2019/09/6.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 5 - கணபதியே வருவாய் - https://tut-temples.blogspot.com/2019/09/5.html
அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_83.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 4 - ஓம் ஏகமாய் சிவசாயுச்சியம் நின்றவரே போற்றி! - https://tut-temples.blogspot.com/2019/07/4.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 3 - https://tut-temples.blogspot.com/2019/06/3.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி -2 - https://tut-temples.blogspot.com/2019/06/2.html
கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (10/11/2019 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - https://tut-temples.blogspot.com/2019/05/10112019.html
No comments:
Post a Comment