"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, June 22, 2019

நாயேன் பிழைக்கின்ற வாறுநீ பேசு! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம்

 அன்பு நெஞ்சங்களே...

உங்கள் அனைவரையும் இந்த பதிவின் மூலம் சந்திப்பத்தில் மிக்க மகிழ்ச்சி. நாம் நம் தளம் சார்பாக கொண்டாடிய பங்குனி உத்திரம் பற்றிய தகவல்களை இங்கே பதிய விரும்புகின்றோம்.

ஒவ்வொரு ஆண்டு வழிபாட்டை நாம் நினைத்துப் பார்க்கும் போது , நமக்கு  எப்படி முருகப் பெருமான் அருள் கொடுத்து வருகின்றார் என்று பார்க்கும் போது நாம் செய்யும் பிழைகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைவதை உணர முடிகின்றது.

இந்த முறை பங்குனி உத்திரம் ஒட்டி நமக்கு நந்தி வழிபாடு மேக்கொள்ள  சொல்லி பொதுவில் வாக்கு வந்திருந்தது. அன்றைய தினம் காலை கோயிலில் முருக வழிபாடு செய்து விட்டு அலுவலகம் வந்தோம். அன்று மதியம் பிருகு மகரிஷி அருள் நிலையம் சென்று நந்தி வழிபாட்டை பூர்த்தி செய்து, நீர்நிலைகளில் பூசைப் பொருட்களை விட வாங்கி வந்தோம்.



பொதுவாக  குருநாதர் அகத்தியர் மகரிஷியின் அருள் வாக்கில் யாரெல்லாம் திருமணத் தடை உள்ளார்களோ அவர்கள் இது போன்ற திருக்கல்யாணம் வைபவங்களில் கலந்து கொண்டால் மிக விரைவில் திருமணம் கைகூடும் என்பது திண்ணம். இது இந்த முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.சென்று ஆண்டு நாம் பங்குனி உத்திர திருக்கல்யாணம் வைபவம் கண்டோம். இந்த ஆண்டு நமக்கு முருகன் அருள் முன்னிற்க திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கே மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். அது மட்டுமா? இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தில் எம் அண்ணன் திரு.செல்லப்பன் அவர்களின் திருமணமும் நடைபெற்றது. இதற்கு மேல் முருகன் நமக்கு என்ன கொடுப்பார்? சரி. விசயத்திற்கு வருவோம்.


அன்று மருதேரி சென்று நந்தி வழிபாடு செய்து வந்தோம்.






நீர்நிலையில் விட பிரசாதம் வாங்கி வந்தோம்.
அன்று மாலை இல்லை இல்லை இரவு கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலுக்கு திருக்கல்யாணம் காண சென்றோம். கூட்டம் அலைமோதியது.





















உள்ளே சென்று மூத்தோனை வணங்கி விட்டு, திருக்கல்யாண வைபவத்திற்கு சென்றோம். எட்டி எட்டி பார்க்கும் அளவிற்கு கூட்டம். கல்யாணம் என்றாலே கூட்டம் இருக்கும். அதுவும் தெய்வீக திருக்கல்யாணம் என்றால் சொல்லவே வேண்டாம். மேளம் சத்தம் கயிலையில் கேட்டிருக்கும். சரியாக சுமார் 8 மணி அளவில் திருக்கல்யாணம் நடைபெற்றது. பின்னர் அனைவரும் திருஷ்டி  சுற்றி போட்டார்கள்.











கொஞ்சம் நேரம் இருவருக்கும் ஊஞ்சல் சேவை செய்தோம்.



இது போதும் நமக்கு என்று தோன்றியது. நம் தளம் சார்பில் அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்.

அடுத்த நாள் காலை நாம் திரு.செல்லப்பன் அண்ணன் திருமணத்திற்கு பாபநாசம் சென்றோம்.
அன்று பங்குனி உத்திரம் பிரம்ம கால அகத்தியர் வாக்கு நமக்கு வழங்கப்பட்டது. அதன் சூட்சுமம் இதோ பின்வருமாறு;


நதி வழிபாடும்
நந்தி வழிபாடும்
ஆதி வழிபாடு ஆகும்

உலகம் உய்ய தேவை நதி , நந்தி
திமில் காளைக்கு மட்டுமே உண்டு, திமில் மூலம் விண்சக்தி பெற முடியும். கோ உலகின் சூட்சம்ம்
நந்தி. இறை வழிபாட்டிற்கு கோ ஆற்றல் தேவை

இதே போல் உயிர்கள் உய்ய தேவை நதி. இரண்டும் கெட்டால் உலகம் மலடாகும். இதனை சரிப்படுத்திக் கொள்ள அகத்தியர் இந்த வழிபாட்டை அறிவுறுத்தினார்

நதி வழிபாட்டில் ஆயிரம் பேர் கூடுவார்கள். கங்கா வழிபாடு. நந்தி வழிபாட்டிலும் ஆயிரம் பேர் கூடுவார்கள். பிரதோஷ வழிபாடு உதாரணமாக

நதி வழிபாடு தாய் வீட்டிற்கு செல்வது. இந்த உடல் நிலைக்க நீர் அவசியம். தாயின் ஸ்பரிசம் நீரில் உணரலாம்.ஆயிரமாயிரம் வேள்வி தரும் ஆத்மானுபவம் இந்த வழிபாட்டில் பெறலாம். நதி, நாதம், நந்தி உணர்த்தவே இந்த வழிபாடு. முருக வழிபாடு இதில் இலங்கும்

சித்த மரபில் நீர் முக்கியம். நகாரத் தொடர்பு இதில் அடங்கும். நகாரமே ஆதி..நமசிவாய, நாராயணாய , நதி , நந்தி

வேல் வழிபாடு சித்த மார்க்கத்தின் அடிநாதம். இன்று கலச நீர் (அருகில் உள்ள நீர் ) எடுத்து மாவிலை, மஞ்சள் வைத்து பூமியில் வேல் இட்டு வரிபடுக.நீர்,பால்,பஞ்ச திரவியமாக அபிஷேகம் செய்க

வேல் வழிபாடு தர்மம் நிறுத்தும். பூமி உய்விக்கவும் வழி செய்யும். முருக வழிபாட்டில் சிந்து கவி தேவை.நாதமாக உருகி பாடுக.










அடுத்த நாள் பங்குனி உத்திரம் அன்று பாபநாசம் ஆற்றில் நந்தி வழிபாடு பிரசாதத்தை நன்கு சங்கல்பம் செய்து ஆற்றில் சமர்பித்தோம். இதே முறையை கல்யாண தீர்த்தத்திலும் செய்தோம்.






அப்படியே கல்யாண தீர்த்தம் சென்று வேல் வழிபாடு செய்ய விருப்பினோம். அங்கே இருந்த ஒரு சுவாமிகள் நாம் வைத்திருந்த வேலிற்கு திருநீறு அபிஷேகம் செய்து கொடுத்தார்.







அபிஷேகம் செய்த வேலை கல்யாண தீர்த்த அகத்திய முனிவ தம்பதிகளிடம் வைத்து மஞ்சள் பூசி வழிபட்டோம்.








சித்தர்கள் போற்றி தொகுப்பு, முருக மந்திரங்கள் என சுமார் 1 மணி நேரம் வழிபாடு செய்து அங்கிருந்து புறப்பட்டோம்.



அதற்கு முன்னர் சிவபுராணம் பாடி பரவசப்பட்டோம். எப்படியோ கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகன் கோயிலில் ஆரம்பித்த பங்குனி உத்திரம் கொண்டாட்டம், கல்யாண தீர்த்த அகத்தியரிடம் வேண்டி முழுமை பெற்றது. இதில் நந்தி வழிபாடு, நதி வழிபாடு,வேல் வழிபாடு என அனைத்தும் ஒருங்கே பெற்றோம். இது அனைத்தும் முருகன் அருள் முன்னின்று நடத்தியது என்பதை நாம் உணர்ந்தோம்.

மீண்டும் ஒரு முறை

ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே - நீதி
"நீதி தழைக்கின்ற" போரூர் தனிமுதலே - நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு!

இரண்டும் ஆண்டுகளுக்கு முன்னர் பக்தி என்றால் கிலோ என்ன விலை ? என்று இருந்தோம். சென்ற ஆண்டு இரண்டு கோயில், விநாயகர், பெருமாள், முருகன், சிவன்,சக்தி, பௌர்ணமி தரிசனம், திருக்கல்யாணம் என நமக்கு கிடைத்தது. இந்த ஆண்டு கூடுவாஞ்சேரியில் இருந்து கல்யாண தீர்த்தம் வரை யாத்திரை..சித்தர்கள் வழியில் வழிபாடு என்றால் பதிவின் தலைப்பை படியுங்கள். உண்மை உணர்த்தப்படும்.

 - முருகன் அருள் முன்னிற்க அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள் பதிவாக :-


 வைகாசி விசாகத்தை வரவேற்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_51.html

வைகாசி விசாக பெருந்திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_15.html

No comments:

Post a Comment