அன்பின் நெஞ்சங்களே.
அண்மையில் நாம் "மோட்ச தீபம்" என்ற ஒரு உயரிய வழிபாட்டில் கலந்து கொள்ள இறையருளும் குருவருளும் நம்மை பணித்தார்கள். மோட்ச தீபம் என்ற வார்த்தை பற்றி மட்டுமே கேள்விப்பட்டு இருந்தோம். பொதுவாகவே தீப வழிபாடு மிக மிக உயர்ந்தது. எந்த கோயிலுக்கு சென்றாலும் பூவும், தீபமேற்ற நெய் அல்லது எண்ணெய் வாங்கி சென்று வழிபடுங்கள். தேங்காய், பழம் வைத்து வழிபாடு செய்வதை விட, பூக்களும், தீபமும் சால சிறந்தது. மோட்சம் என்றால் இறந்தவரின் ஆன்மா நற்கதி அடைய வேண்டி தீபமேற்றி பிரார்த்தனை செய்வது ஆகும். அப்படி என்றால் நாம் ஏற்றும் அகல் விளக்கிலேயே முன்னோர்களின் ஆன்மா நற்கதிக்கு பிரார்த்திக்கலாம் என்றால் ..இது அப்படி இல்லை.இதற்கென சில முன்தயாரிப்புகள் செய்ய வேண்டும்.

உடலை விட்டுப் பிரிந்த ஆத்மா மறுபிறவி இல்லாமல் மோட்சம் அடைவதற்காக
திருக்கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றுவது ஐதீகம்.குறிப்பாக அப்பர்
சுவாமிகளுக்கு சிவபெருமான் கயிலைக் காட்சி அருளிய
திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு
என்றும் கூறுகின்றார்கள். குறிப்பாக இந்த தீபத்தை மருத்துவ துறையில்
இருப்பவர்கள், கோவிலில் ஏற்ற வேண்டும். நம்மைப் பொறுத்த வரையில் பதிவின்
ஆரம்பத்திலேயே வழிபாட்டில் மிக மிக உயர்ந்த வழிபாடு என்று இந்த வழிபாட்டை
சொல்லி தான் ஆரம்பித்தோம். நாம் யாருக்காக பிரார்த்திக்கின்றோம்/ வழிபாடு
செய்கின்றோம்? நமக்கு, நம் குடும்பத்திற்கு, நம் உற்றார் உறவினர்களுக்கு
என்று அடுத்த தான் செல்கின்றோம். கண்ணனுக்கு தெரிந்து உடல் பெற்று வாழும்
உயிர்களுக்கு வழிபாடு/பிரார்த்தனை/ அன்னசேவை என செய்கின்றோம். ஆனால்
கண்ணுக்கு தெரியாமல் உடல் இன்றி வெறும் ஆத்மா மட்டும்
வாழுகின்றார்களே..அவர்களுக்கு யார் உணவிடுவது? பிரார்த்திப்பது? என்பது
போன்ற பல கேள்விகளுக்கு விடையாக இருப்பதே இந்த மோட்ச தீபம் வழிபாடு
ஆகும். அப்படியானால் இது மிகவும் உயர்ந்த வழிபாடு தானே? ஐயம் ஏதும்
இல்லையே....
இந்த மோட்ச தீப பூஜைக்கு என்று பச்சரிசி, பருத்திக்கொட்டை, நவ தானியங்கள்,பச்சைக் கற்பூரம்,கல் உப்பு, மிளகு, வெண்கடுகு எண்டு சுமார் 15 பொருட்களுக்கு மேல் தேவைப்படும். இவற்றை நன்கு நீரில் கழுவி, சூரிய ஒளியில் காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த அளவுகோல் எதற்கு என்கின்றீர்களா? மோட்ச தீபத்திற்கு திரி தயார் செய்ய,
காடாத்துணியை சரியாக அளவிடவே. நாம் இந்த தயார் நிலைகளை பார்த்துக் கொண்டு
இருந்தோம். இந்த வழிபாட்டிற்கு கூடவே உதவி செய்ய ஐந்தாறு நபர்கள் தேவை.
அப்பொழுது தான் இந்த படிநிலைகளை நாம் செய்ய முடியும். ஒவ்வொரு
வழிபாட்டிற்கும் அப்படித் தான். நாம் வேண்டுவதெல்லாம், இது போன்ற எந்த பூசை
என்று கேள்விப்பட்டாலும் முடிந்தால் பொருளுதவி செய்யுங்கள். இல்லையென்றால்
உடலுதவி செய்யுங்கள்.
தீபத்திற்கு திரி தாயாராகி விட்டது.இனி தீபத்திரிக்கு உள் பொருட்களை இட்டு, ,முடிச்சு உண்டாக்க வேண்டியது தான்.
இந்த வழிபாட்டிற்கென 21 தீபங்கள் ஏற்ற வேண்டும். 21 தீபங்கள் என்பது நம்முடைய 21 தலைமுறையைக் குறிப்பதாகும். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே. 11 நாட்கள் எரியும்
இந்த தீபத்தைப் பார்ப்பவர்களுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல 21 தலைமுறைக்கு
புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். அந்த அளவிற்கு சிறப்பும்
மகத்துவமும் வாய்ந்தது திருவண்ணாமலை திருக் கார்த்திகைதீப திருவிழா.
திருக்கார்த்திகை தீபம் தரிசிப்பவர்களது 21 தலைமுறை பிறவா வரம் பெறும்
என்கிறது புராணம். ஜோதிப் பிழம்பாக ஓங்கி ஒளிரும் அண்ணாமலையார் தீபத்தை
வணங்குபவர்களுக்கு இம்மை நீங்கி மறுப்பிறப்பு என்பதே இருக்காது.
மேலும் இந்த வழிபாட்டில் நாம் நம்
முன்னோர்கள் ( ஆறறிவு ) மட்டுமின்றி, ஏனைய உயிர்களுக்கும், உதாரணமாக ஓரறிவு
முதல் ஐந்தறிவு வரையும் நாம் வழிபாடு செய்கின்றோம்.
இதோ, 21 தீபத் திரிகள் தயார் செய்யப்பட்டுவிட்டது. நன்கு இறுக்கி, நூலில்
கட்டி, திரியைத் தயாரிக்க வேண்டும். நாம் பூசை முடியும் வரை தீபம் எரிய
வேண்டும். திரி நன்கு நேராக இருக்க வேண்டும். கோணல் மாணலாக இருக்கவே
கூடாது. தீபத்திரி பார்ப்பதற்கு லிங்கத் திருமேனியின் மேற்புறம் போல்
இருக்க வேண்டும். சரி..இந்த வழிபாடு எங்கு செய்யப்படுகின்றது? 21
தீபத்திரிகளில் உங்கள் மனம் செலுத்தி ,உங்கள் முன்னோர்களை நினைத்து
வையுங்கள். அடுத்த பதிவில் மோட்ச தீபம் ஏற்றுவோம்.
- எதிர்வரும் பதிவுகளில் மோட்ச தீபம் ஏற்றுவோம்.
மீள்பதிவாக:-
சென்னையில் நெரூர் - அனைவரும் வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_28.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html
சென்னையில் நெரூர் - அனைவரும் வருக! வருக!! - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_28.html
இரை தேடுவதோடு இறையும் தேடு - பாம்பன் சுவாமிகள் 90 ம் ஆண்டு குரு பூஜை - https://tut-temples.blogspot.com/2019/05/90.html
முருகனுக்கும் (உருத்திர பசுபதிக்கும்) அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_68.html
இவரை எம்முன் கொண்டு நிறுத்துக - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_29.html
ஒலிபுனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_57.html

எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_20.html
விரிபொழில்சூழ் குன்றையர் விறன்மிண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_69.html
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_98.html
செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post.html
எங்களின் ஓராண்டு பயணம்...தேடல் உள்ள தேனீக்களாய் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_82.html
அகத்தியர் அருளிய திருமகள் துதி - அட்சய திருதியை சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_87.html
அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_6.html
சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் குரு பூஜை - 06/05/2019 - https://tut-temples.blogspot.com/2019/05/06052019.html
பஞ்சேஷ்டி அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_13.html
No comments:
Post a Comment