"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, October 31, 2019

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

முருகன் அருள் முன்னின்று நம்மை வழிநடத்தி வருகின்றது. இந்த ஆண்டின் சஷ்டி விரதமும் சிறப்பாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பிரகாசித்து வருகின்றது. நம் குருநாதர் அகத்திய பெருமானும், குருவின் குருவாம் கந்த பெருமானும் நம் தலத்தில் தினமும் பவனி வருகின்றார்கள்.  சென்ற ஆண்டு போகிற போக்கில் விரதம் இருந்தோம். இதற்கே கருணைக்கடவுள் நமக்கு அள்ளிக்கொடுத்துள்ளார். ஓராண்டு விரத நிறைவிற்குள் சிக்கல் தரிசனம், திருச்செந்தூரில் மணவாழ்வும் எமக்கு கொடுத்துள்ளார். இந்த ஆண்டில் இன்னும் சிரத்தையாக விரதம் இருந்து வருகின்றோம்.

தினமும் முருகன் தரிசனம் நமக்கு தித்திப்பாக இருக்கின்றது. கூடுவாஞ்சேரி முருகன், திருப்போரூர் கந்தன், வல்லக்கோட்டை முருகன், வயலூர் முருகன் என்று தரிசனம் பெற்று வருகின்றோம். விரைவில் தனிப்பதிவில் அனைத்து தரிசனம் தருகின்றோம். சஷ்டி என்றால் சூரசம்காரம் என்று நினைவில் வருகின்றது.சூரசம்காரம் என்றால் திருச்செந்தூர் தானே. சஷ்டி பதிவுகள் திருச்செந்தூர் திருவிழா 2019 அழைப்பிதழ் இன்றி இனிக்குமா? சென்ற ஆண்டில் திருச்செந்தூர் திருவிழாஅழைப்பிதழ் பச்சை வண்ணத்தில் கண்களை கவர்ந்தது. இந்த ஆண்டும் காத்துக் கொண்டு இருந்தோம். கொக்கானது ஒற்றைக் காலை உயர்த்தி, மீனுக்காக காத்திருப்பது போன்று, நாம் திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2019 அழைப்பிதழ்  காண காத்திருந்தோம்.கிடைத்ததும் கண்களில் ஒற்றினோம். இதோ..இன்றைய பதிவில் தருகின்றோம்.










 திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2018 அழைப்பிதழ் மீண்டும் இங்கே பகிர்கின்றோம்.











இந்த ஆண்டு கந்த சஷ்டித் திருவிழா கூடுவாஞ்சேரியில் உள்ள மாமரத்து விநாயகர் கோயிலில் கொண்டாட குருவருள் கூடியுள்ளது. மோட்ச தீபத்திற்கு வரும் அன்பர்கள் அன்றைய தினம் காப்புக் கட்டிக்கொண்டு, 6 நாள் விரதம் இருந்து சஷ்டி திருவிழாவில் கலந்து கொள்ள குருக்கள் நம்மிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். நம் அன்பர்கள் சிலர் விரதம் இருந்து வருகின்றார்கள்.முருகன் அருள் முன்னின்று நடத்த நாம் காத்துகொண்டு இருக்கின்றோம்.

மீள்பதிவாக:-

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4) - https://tut-temples.blogspot.com/2019/10/4.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (4)

 முருகன் அருள் முன்னிற்க !

 இந்த பதிவில் நாம் தரிசனம் செய்த அழகனின் அருள் நிலைகளை காட்சிகளாக இங்கே அறியத் தருகின்றோம். கந்தன் அருள் அனைவரும் பெறுவோம். இது ஒரு மீள்பதிவாகும்.

சென்னையில் உள்ள முருகன் கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் பிரசித்தி பெற்றது. பாரிமுனை கந்தகோட்டம் கந்தசாமி, குன்றத்தூர் முருகன், வல்லக்கோட்டை முருகன்,திருப்போரூர் முருகன், அறுபடை முருகன் கோயில் என அனைத்து தலங்களிலும் முருகன் அருள் நம்மை திக்குமுக்காட வைக்கும். இதில் குன்றத்தூர் முருகன் தரிசனம் பெற உள்ளோம்.

சனிக்கிழமை காலை குன்றத்தூர் சென்றோம். அங்கே அருள்பாலிக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சென்று, கருணைக் கடலாம் கந்தனை வழிபட்டோம்.கூட்டம் சற்று குறைவாக இருந்தது. இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இங்கு முருகப் பெருமான் வள்ளி,தெய்வானையுடன் வடக்கு நோக்கி இருக்கின்றார். திருமணத் தடை உள்ளவர்கள் இங்கே அதிகம் வேண்டிக் கொள்கின்றார்கள் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாம்.













குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்.ஹ்ம்ம்..குன்றத்தூரிலும் குமரனுக்கு கொண்டாட்டம் என்று நமக்கு தோன்றியது. கந்த ஷஷ்டி திருவிழாவினை ஒட்டி, இலட்சார்ச்சினை நடந்து கொண்டிருந்தது. உற்சவரை தரிசனம் செய்த காட்சிகள் தான் மேலே நீங்கள் பார்ப்பது.அழகன் அழகன் தான்.












குன்றத்தூர் முருகன் சேக்கிழார் குரு பூஜையின் போது, மலையில் இருந்து இறங்கி வந்து, கீழே உள்ள சேக்கிழார் கோயிலுக்குச் சென்று காட்சி தரும் வைபவம் இன்றளவும் நடைபெற்று வருகின்றது.இந்த ஆண்டு சேக்கிழார் குருபூஜை நிறைவு பெற்று விட்டது என்று நாம் நினைக்கின்றோம். முருகன் அருள் முன்னிற்க அடுத்த ஆண்டு சேக்கிழார் குரு பூஜை காண வேண்டுகின்றோம்.

பொதுவாக குன்றத்தூர் ஒரு புனித பூமி. குன்றத்தூர் முருகன் கோயில், சேக்கிழார் பிறந்த ஊர். கந்தலீஸ்வரர் திருக்கோயில்,திருஊரகப் பெருமாள் கோயில் ,திருமுறை விநாயகர் கோயில் என்று திரும்பும் இடமெல்லாம் திருக்கோயில்கள் தான்.











கருணைக்கடலாம் கந்தனை நன்கு தரிசனம் செய்யுங்கள். உள்ளே மூலவரை பார்க்க சென்றோம். நாம் அப்படியே வெளியே வரும் சமயம், குருக்கள் தீபாராதனை காட்டினார். அப்படியே முருகனின் அழகில்,அருளில்,தமிழில்,அன்பில், கருணையில், ஆற்றலில் உறைந்து நின்றோம்.அடுத்து கந்த சஷ்டி திருவிழாவில் சிறப்பு சேர்க்கும் விதமாக, மாலையில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றது. நாம் சென்ற பதிவில் கந்த புராணச் சொற்பொழிவு கூடுவாஞ்சேரியில் உள்ள நந்தீஸ்வரர் கோயிலில் நடைபெறுவது பற்றிய அழைப்பிதழை இணைத்து இருந்தோம். அந்த அனுபவத்தை அடுத்த பதிவில் காண்போம்.

மீள்பதிவாக:-

 கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_31.html

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html
 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html
 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html
 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html
 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html
 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html
 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

கந்த சஷ்டி வழிபாடு & ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ்

அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பதிவில் கந்த சஷ்டி வழிபாடு தரிசனமும், ஆதி நடராசர் திருச்சபையின் முற்றோதல் அழைப்பிதழ் தர விரும்புகின்றோம். இந்தப் பதிவை நாம் கொடுக்க உள்ளோம் என்று நாம் நினைக்கவில்லை ஆனால் நம்மை வழிநடத்தும் குருவருளால் இது சாத்தியமாகின்றது.நம் தளத்தில் கந்த சஷ்டி பதிவுகள் தினமும் தரப்பட்டு வருகின்றது. இந்த கந்த சஷ்டி விழா காலத்தில் இவற்றை படித்து கருணைக்கடலாம் கந்த கடவுளின் பதம் பற்றுங்கள்.

வழக்கம் போல் இன்று காலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில் சென்று சஷ்டி விரத காப்பு கட்ட விரும்பினோம். வருண பகவான் வளங்களை வாரித் தந்து கொண்டு இருக்கின்றார். காப்பு கட்டி முடித்ததும் கடைக்கு சென்று சில பொருட்களை வாங்க வேண்டி இருந்ததால், கடைக்கு செல்லலாமா அல்லது வேலி அம்மன் கோயில் செல்லலாமா என்று யோசித்துக் கொண்டே வேலி அம்மன் கோயில் சென்று முருகப் பெருமான் தரிசிக்க காத்திருந்தோம். நம்மை ஏன் குருவருள் இங்கே பணித்தார்கள் என்று மனதுள் ஓடிக் கொண்டே இருந்தது.

அப்போது தான் அங்கே ஆதி நடராசர் திருச்சபை சார்ந்த திரு.ராஜ்குமார் ஐயா இருந்தார்கள். அப்படியே ஐயாவிடம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர்கள் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் இந்த மரமண்டைக்கு உரைத்தது. நம் தளம் சார்பில் ஒன்றும் செய்யவில்லை என்று? பணப்பையில் இருந்த ரூ.500 அவர்களிடம் கொடுத்தோம். அடுத்து ஐயா அவர்கள் நவம்பர் மாத முற்றோதல் நிகழ்வுகளை பற்றி கூறினார். அட..இதற்குத் தான் நம்மை குருவருள் அழைத்துள்ளது என்பதும் நமக்கு புரிந்தது. பதிவின் இறுதியில் இணைத்துள்ளோம்.

சரி. முற்றோதல் பற்றி சிறிது காண்போமா?

பொதுவாக முற்றோதல் என்று சொன்னாலே அது திருவாசக முற்றோதல் என்று தான் பொருள் கொள்ளும்படி கூறப்பட்டு வருகின்றது. முற்றோதல் என்று சொல்லும்போது நமக்கு ஒரு சந்தேகமும் வந்துவிட்டது. முற்றோதல் என்பது சரியா? இல்லை முற்றோதுதல் என்பது சரியா? என்று. சரி. நாம் விசயத்திற்கு வருவோம்.

முற்றோதல் என்பது குழுக்களாக தமிழ் மொழியில் உள்ள பக்தி  நூலை ஒருவரே படிக்காமல், குழுவில் உள்ள அனைவரும் படிக்கும் படி செய்வது ஆகும். பொதுவாக சைவ ஆதீனத் திருமடங்கள், கோயில்களில் இந்த முற்றோதல் நடைபெறுவதுண்டு. சைவர்கள் மிகுதியாகக் கையாளும் வழக்கம் இது. திருவாசக முற்றோதல்; திருமந்திர முற்றோதல் வழக்கத்தில் உள்ளவை. நாலாயிரப் பிரபந்த

முற்றோதலும் உண்டு. ஆனால் நாம் திருவாசக முற்றோதல் என்று நிறைய கேட்டிருப்போம். இந்த முற்றோதல் நிகழ்வில் கண்டிப்பாக குழந்தைகள் பங்கு பெற வேண்டும். அப்போது தான் பக்தி வளரும். புத்தி தெளியும். ஐந்தில் வளைத்தால் தான் ஐம்பதில் வளைக்க முடியும். 
முற்றோதல் என்ற நிகழ்வு பற்றி நாம் அறிந்து ஒரு சில முற்றோதல்களிலும் கலந்து கொண்டது இன்னும் நமக்கு இறை பற்றி சிந்திக்க வைக்கின்றது. rightmantra.com நிகழ்த்திய அகத்தியர் தேவாரத் திரட்டு முற்றோதல் நம்மை வலுப்படுத்தியது. அடுத்து தாமோதரன் ஐயாவின் திருவாசகம் முற்றோதல் கண்டுள்ளோம்.கேட்டுள்ளோம். முற்றோதலில் நாம் திளைக்க திளைக்க நாம் சிவ புண்ணியம் சேர்ப்பது உறுதி, சிவ புண்ணியம் கொஞ்சமாவது இருந்தால் தான் இது போன்ற  முற்றோதல் நிகழ்வுகளில் பங்குபெற முடியும்.
திருவாசகம் மட்டும் முற்றோதல் செய்தல் என்ற நிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். தமிழில் இல்லாத பக்தி நூல்களா? சென்ற நூற்றாண்டில் ஒலிநாடாக்கள் சில தொடங்கின: அபிராமி அந்தாதி - சீர்காழி, டிஎம்எஸ் பாடியுள்ளனர் முற்றோதலாய். பாம்பே சகோதரிகளின் திருமுருகாற்றுப்படை முற்றோதல் ஒலிநாடா கிடைக்கும். திருப்பாவை அரியக்குடி, எம்எல்வி, பாலக்காடு கேவிஎன், வடமொழியில் சுப்ரபாதங்கள் (எம் எஸ்), கீதை முற்றோதல் ஒலிநாடாக்கள் உண்டு, யுட்யூபில் இருக்கலாம். 


 இன்று கேட்பொலி (ஆடியோ), காணொளி (யுட்யூப்) போன்றன இருப்பதால் தமிழில்
உள்ள ஏராளமான புராணங்களையும், இலக்கியங்களையும் முற்றோதுவித்து ஏற்றலாம். ஓய்வு நேரத்தில் உலகெல்லாம் உள்ள தமிழர்கள் கேட்டுப் பயன்பெறுவர்.சீறாப்புராணம், தேம்பாவணி போன்றனவும் முற்றோதலாமே.


முற்றோதல் செயலை பெரியவர்கள் மட்டுமின்றி யாவரும் செய்யலாம்.ஆர்வம், தணியாத வேகம், காதல், தான் ஓதிக்கொண்டுள்ள நூலின் மீது உண்மையான பக்தி--அல்லது பற்று--இவையும் இவற்றுக்கு மேலும் உள்ளவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் பெரியவர்களே என்கிற காரணத்தினால்,வயது,கல்வி தடையின்றி,ஈடுபாட்டின் அடிப்படையில் நடைபெறுவது முற்றோதலாகும்.















முருகனருள் பெற்று இன்று காப்பு கட்டிக்கொண்டோம்.



இதிலே..ஒரு செய்தி தவறாக உள்ளது. அது என்ன என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.


மொத்தம் 11 முற்றோதல் நிகழ்வுகள் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.


அடுத்து வேலி அம்மன் கோயிலில் உள்ள முருகன் அருள் பெற்றோம். 

இந்தப்பதிவை அளிக்க தான் குருவருள் நம்மை வேலி அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றுள்ளது என்று நினைக்கும் போது, நம்மை வழி நடத்தும் குருமார்களின் பாதத்தை என்றும் பிடிக்க விரும்புகின்றோம். மேலும் இங்கு நாம் முற்றோதல் பற்றி அறிந்தமையால் நம் மனதில் புது எண்ணம் பிறந்தது. அதனை பற்றி பிறகு செயல்படுத்தி விட்டு பேசுவோம். வழி நடத்தும் குருமார்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு ஓதிமலையும்,வள்ளிமலையும் என்ற தொகுப்பை மீள்பதிவாக  கீழே தருகின்றோம். 

மீள்பதிவாக:-

ஆடி வெள்ளி தரிசனம் காண வாருங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_73.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_26.html

 சித்தன் அருள் - ஒதிமலையை பற்றி அகத்தியரின் அருள்! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_50.html

 ஓதிமலை ஆண்டவரே போற்றி! வள்ளிமலை வள்ளலே போற்றி!! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_28.html

 ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_87.html

 நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! -https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_76.html

 தேவி வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் - வள்ளிமலை அற்புதங்கள் (3) - https://tut-temples.blogspot.com/2019/08/3_26.html

 வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2) - https://tut-temples.blogspot.com/2019/08/2_24.html

 வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1.html

Wednesday, October 30, 2019

பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா மற்றும் சந்தனக்காப்பில் ஐப்பசி ஆயில்ய தரிசனம்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக !

என்ற பதிவில் பனப்பாக்கம் திருக்கோயில் பற்றி சிறிது அறிந்தோம். அந்தப் பதிவில் 24/11/2017 அன்று அருள்மிகு ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அருள்மிகு ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு 108 கலச பூஜை விழா நடைபெறுகின்றது என்று குறிப்பிட்டு அழைப்பிதழ் இணைத்திருந்தோம். அன்றைய தினம் அகத்தியர் அருளிய அருள் நிலைகளை இங்கே அனைவரும் அறியத் தருகின்றோம்.


பனப்பாக்கம் பற்றியும் அந்த திருத்தலத்தின் மகிமையைப் பற்றியும் அறிந்த பிறகு நம்மால் இருப்பு கொள்ள முடியவில்லை. பின்னே சும்மாவா? உமாதேவி,நந்திதேவர்,இந்திரன்,பிரம்மன், திருமால், தக்கன், இராகவன், மன்மதன்,இயமன், வீரபத்திரர்,அகத்தியர் , வேதியர் என அனைவரும் இங்குள்ள  மாயூரநாதரை  தரிசித்துள்ளனர் என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவர்களின் திருப்பாதம் பட்ட இடத்தில் நாம் சென்று தரிசனம் செய்தால் நிச்சயமாக நம்மிடம் உள்ள துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெறலாம்.சரி. இனிபனப்பாக்கம் செல்வோமா ? இத்தலத்தில் புலியும்,மயிலும் வந்து வழிபட்டுள்ளார்கள் என்பதை திருப்பனசை புராணம் மூலம் அறியலாம்.





முழுமுதற் கடவுளை வழிபடுவோம்.



இன்னும் சிறப்பாக ! புலியும் ,மயிலும் வழிபட்ட தலம் என்று உரைக்கும் காட்சி மேலே 

தல விருட்சம் 

தல விருட்சம் என்றால் ஏதோ ..சாதாரண மரம் என்று நினைத்து விடாதீர்கள். ஒவ்வொரு தளத்திற்கென்று ஒரு விருட்சம் உண்டு. அந்த காலத்தில் ஏதேனும் நோய்,நொடி இருந்தால் அப்படியே தீர்த்த யாத்திரை செல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஒவ்வொருதிருக்கோயிலுக்கு சென்று, குளத்தில் நீராடி. அப்படி நீராடும் போது, அந்த திருத்தலத்தின் விருட்சங்களில் உள்ள இலை,பூ உதிர்ந்து அவை குளத்து நீரிலே அதன் ஊட்டத்தை பரப்பி இருக்கும். எனவே நீராடிய பின்னர், நோயாவாது,நொடியாவது பறந்து விடும். அப்படி சரியாக வில்லை என்றால், அடுத்த திருக்கோயில். இப்படி தீர்த்த யாத்திரை மூலம் ஆரோக்கியம் காத்தவர்கள் நம் முன்னோர்கள். ஆனால் நாம் வெறும் கேள்விக்குறியே மிஞ்சுகிறது ?




ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகத்தியர் திருவடி சரணம் !



போற்றினால் எமது வினை அகலுமப்பா !
உன் பதம் போற்ற இப்பிறவி ஒன்று போதுமோ?
அறிந்திலேன் யான்... மீண்டும் ஒரு பிறவி வாய்க்கின் 
நின் பாதம் போற்ற அருள் தாருமய்யா !!









108 கலச பூஜை செய்கின்ற அருட் காட்சி. அடுத்து அலங்காரம், தீபாராதனை.












நாளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகின்றது அல்லவா?








சித்தர் அடியார்களுக்கு மேலும் சிறப்பான தரிசனமாக, உத்திராட்ச மண்டபத்தில், சந்தன காப்பு அலங்காரத்தில் பணப்பாக்கம் அகத்திய முனிவ தம்பதி தரிசனம் தர இருக்கின்றோம். ஐப்பசி ஆயில்ய தரிசனம் இங்கே பகிர்கின்றோம். பதிவின் ஆக்கத்தில் நமக்கு இந்த எண்ணம் தோன்றவில்லை.ஆனால் பதிவை முழுமை செய்யும் போது  குருநாதர்  நம்மை வழிநடத்துகின்றார் என்பது உணர்வில் பதிக்கின்றோம். 










நந்திதேவர் அருளிய அகத்தியர் துதியை இனிவரும் பதிவுகளில் அளிக்க குருவிடம் வேண்டுகின்றோம்.

மீள்பதிவாக:-

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_84.html