அன்பர்களுக்கு அன்பு வணக்கங்கள்.
நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் கலைமகள், திருமகள் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் சண்டி ஹோமம் பற்றி சில செய்திகள் பார்த்து இருக்கின்றோம். ஹோமம் செய்வதால் நமக்கு என்ன பலன் என்று வேடிக்கையாக வினவுவதை விட்டுவிட்டு, ஹோமம் செய்வது ஆன்மிகத்தில் நம் படிநிலை உயர்த்தும் வழிபாடு என்று உணர் வேண்டும்.
ஹோமம் என்பதற்கு சரியான தமிழ் சொல் யாகம் என்பதே. யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருள் கொள்க. இறைவனுக்கு கருதும் பொருட்களை அர்பணித்தலே யாகம் ஆகும். யாகம் செய்வதும் பஞ்ச பூத வழிபாடு ஆகும். இது நம் தமிழ் மரபில் இருந்துள்ளது. இதுவும் தீப வழிபாட்டை ஒத்த வழிபாடு ஆகும். யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
கீழே சில யாகங்களின் பெயர்களை அறிய தருகின்றோம்.
அஸ்வமேத யாகம்
புத்திர காமேஷ்டி யாகம்
சத்துரு சங்கார யாகம்
இராசசூய வேள்வி
கனகதாரா யாகம்
அமாவாசை நிகும்பலா யாகம்
கிரிகொரஹ யாகம்
சத சண்டி யாகம்
சந்தான கோபால யாகம்
புஷ்ப யாகம்
நிகும்பலா யாகம்
இந்த நவ சண்டி மஹாயாகம் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சென்ற ஆண்டு நம் தளம் சார்பில் ஒரு அத்தியாயத்திற்கு உபயம் செய்தோம்.
இனி சண்டி ஹோம காட்சிகளை காண்போமா?
சிவாச்சாரியார் குமார் குருக்கள் சண்டி ஹோமம் பற்றி சில நிமிடம் விளக்கி கூறினார்.
TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (3) - https://tut-temples.blogspot.com/2019/10/tut-3.html
கொலுவும் திருவும் - நம் வாசகர் வீட்டு கொலு அனுபவமும், நவராத்திரி அழைப்பிதழும் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_33.html
நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html
நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக இருக்கின்றது. இந்த கால கட்டத்தில் கலைமகள், திருமகள் அருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் சண்டி ஹோமம் பற்றி சில செய்திகள் பார்த்து இருக்கின்றோம். ஹோமம் செய்வதால் நமக்கு என்ன பலன் என்று வேடிக்கையாக வினவுவதை விட்டுவிட்டு, ஹோமம் செய்வது ஆன்மிகத்தில் நம் படிநிலை உயர்த்தும் வழிபாடு என்று உணர் வேண்டும்.
ஹோமம் என்பதற்கு சரியான தமிழ் சொல் யாகம் என்பதே. யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருள் கொள்க. இறைவனுக்கு கருதும் பொருட்களை அர்பணித்தலே யாகம் ஆகும். யாகம் செய்வதும் பஞ்ச பூத வழிபாடு ஆகும். இது நம் தமிழ் மரபில் இருந்துள்ளது. இதுவும் தீப வழிபாட்டை ஒத்த வழிபாடு ஆகும். யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கினி ஹோத்திரம், தரிசபூர்ணமாஸம், சாதுர்மாசியம், பசு பந்தம், சோமம், தேவயக்ஞம், பிதுர் யக்ஞம், பூதயக்கியம், மனுஷ்ய யக்கியம், பிரம யக்கியம் ஆகிய பத்து யக்கியங்கள் பற்றியும் விஷ்ணு புராணம் குறிப்பிடுகிறது. இவற்றில் இறுதி ஐந்தும் பஞ்ச மகாயெக்கியங்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. சிபி சக்ரவர்த்தி நூறு அஸ்வமேத யாகங்களை செய்ததால், இந்திர பதவி கிடைத்ததாக விஷ்ணு புராணத்தில் குறிப்புகள் உள்ளன.
கீழே சில யாகங்களின் பெயர்களை அறிய தருகின்றோம்.
அஸ்வமேத யாகம்
புத்திர காமேஷ்டி யாகம்
சத்துரு சங்கார யாகம்
இராசசூய வேள்வி
கனகதாரா யாகம்
அமாவாசை நிகும்பலா யாகம்
கிரிகொரஹ யாகம்
சத சண்டி யாகம்
சந்தான கோபால யாகம்
புஷ்ப யாகம்
நிகும்பலா யாகம்
சண்டி
ஹோமம், உலகத்தின் அன்னையாகத் திகழும் சண்டி தேவியைக் குறித்து
செய்யப்படும் சக்தி வாய்ந்த ஹோமம் ஆகும். நிறைவான வாழ்க்கை வாழ விடாமல்
நம்மைத் தடுக்கும் திருஷ்டி தோஷங்கள் போன்றவற்றைப் போக்குவதற்கும்,
இப்பிறவி, முற்பிறவியில் ஏற்பட்ட சாபங்களைக் களைவதற்கும், உடல், ஆன்மா
போன்ற இரண்டையும் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், இந்த ஹோமம்
வரப்பிரசாதமாக விளங்குகிறது.
சாக்த வழிபாட்டில் கடுமையான உக்கிரத்துடன் இருக்கும் பராசக்திக்காக நடத்தப்படுவதே சண்டி ஹோமம். அப்படி உக்கிரத்துடன் இருக்கும் பராசக்தியே சிவன், விஷ்ணு, பிரம்மா என மும் மூர்த்திகளை படைத்தார் என்கிறது புராணம். தேவியின் மீது நம் அன்பை காட்ட, தேவியின் அருள் பெற்று நம் தேவைகளை நிறைவேற்றி கொள்ள என இரு விதமாக இந்த ஹோமம் செய்யப்படலாம். சாக்த வழிபாட்டில் அனைத்து ஹோமங்களூக்கும் தலையாய ஹோமம் இது என கூறலாம்.
கேட்டதை உடனே அருளும் சக்தி படைத்தது இந்த ஹோமம். மிக அதீத பொருட்செலவு மற்றும் மிக உக்ரமானது என்பதால் இந்த ஹோமம் அடிக்கடி நிகழ்த்தப்படுவதில்லை. ஒவ்வொரு அத்தியாய பாராயணத்தின் பொழுதும் தேவிக்கு அக்னியில் புடவை சாற்றப்படும். மொத்தம் பதினான்கு புடவைகள் சாற்றப்படும். உக்ரகம் அதிகம் என்பதால் வீட்டில் செய்யப்படுவதில்லை. கோவில்கள் அல்லது மடங்கள், மண்டபங்கள் போன்றவற்றில் மட்டுமே செய்விக்கப்படுகிறது. எவ்வளவு பரிகாரங்கள் செய்தும் பலன் இல்லாத நிலை,கிரகங்களினால் பிரச்சனைகள், பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர இந்த ஹோமத்தை செய்தோ அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளை பெறலாம்.
பாராயண பலச்ருதியிலேயே இந்த பாராயணத்தை செய்பவருக்கு மட்டுமின்றி இதை உடனிருந்து கேட்பவருக்கும் அதீத பலன்கள் கிட்டும் என கூறப்பட்டுள்ளது. மஹாலக்ஷ்மி, சரஸ்வதி,மஹாகாளி என மூவருக்குமே செய்யப்படும் இந்த ஹோமத்தில் 700 ஸ்லோகங்கள் வரை கூறப்படும். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை அணுகுவதை தவிர வேறு வழி இல்லை.
இத்துணை விளக்கங்களை கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் காணலாம்.
இந்த நவ சண்டி மஹாயாகம் கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோயிலில் நவராத்திரி விழா நிறைவில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. சென்ற ஆண்டு நம் தளம் சார்பில் ஒரு அத்தியாயத்திற்கு உபயம் செய்தோம்.
இனி சண்டி ஹோம காட்சிகளை காண்போமா?
சிவாச்சாரியார் குமார் குருக்கள் சண்டி ஹோமம் பற்றி சில நிமிடம் விளக்கி கூறினார்.
அக்கினி நன்றாக வார்க்கட்ட நிலையில்...
மேலே சென்ற ஆண்டில் நடைபெற்ற யாக காட்சிகளை காணலாம். அடுத்த பதிவில் அழைப்பிதழ் பகிர்கின்றோம்.
முந்தைய பதிவுகளுக்கு:-
TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - https://tut-temples.blogspot.com/2019/09/tut-2.html
TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temples.blogspot.com/2019/09/tut.html
நவராத்திரி அழைப்பிதழுடன் வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_28.html
நவராத்திரி விழா கொண்டாட வாருங்கள் - அருள்மிகு சுந்தர மகாலிங்கசுவாமி நவராத்திரி திருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_5.html
No comments:
Post a Comment