"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, March 18, 2023

தவத்திரு. சித்ரமுத்து அடிகள் அருளிய அருளொளி - நலன் வளரும் குறைகள் அணுகாது

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

காரணமின்றி காரியமில்லை. அவனின்றி ஓரணுவும் அசையாது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நம்மை வழிநடத்தி வரும் குருமார்களின் பாதம் என்றும் பணிகின்றோம். நம் தளத்தில் இதற்கு முன்னர் பதிவிட்ட இரண்டு வழிபாடுகளான மாசி மக கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா, அக்னிதீர்த்தக்கரை 10,008 தீப வழிபாடு என இரண்டும் குருவருளால் மிக மிக சிறப்பாக நடைபெற்றது. குருவருளால் இரண்டு வழிபாட்டிலும் கலந்து கொள்ளும் பாக்கியம் இச்சிறியேனுக்கு கிடைத்தது. மிக  விரைவில் தரிசனப் பதிவுகளாக தர குருவருள் நம்மை வழிநடத்தட்டும். ஞானியர் ஓட்டத்தில் தவத்திரு. சித்ரமுத்து அடிகள் பற்றி அவ்வப்போது கேட்டிருக்கின்றோம். சுவாமிகள் அருளிய அருளொளி நூல் பற்றி கேள்விப்பட்டு இருக்கின்றோம். எப்போது நமக்கு அருளொளி கிடைக்கும் ஏங்கிய நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை கடையத்தில் நடைபெற்ற முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாடு நமக்கு அன்று பிள்ளையார் சுழி போட்டு திறந்தது. ஆம்! அன்றைய நாள் விழாவில் திரு.ஆத்மநாதன் ஐயா அவர்களின் தொடர்பில் சென்ற வியாழக்கிழமை அன்று சரியாக குருநாளில் அருளொளி நமக்கு கிடைத்தது. இதுவும் குருவருள் தான் என்று நமக்கு உணர்த்தப்பட்டது.

 
ஸ்ரீ சித்திர முத்து தேவாய நம 

சிந்தையை திருத்தி நாளும் திருவருள் தந்த தேவா 
வந்து எனக்கு பாதம் அதை உளம் பதிய வைத்தாய் 
எந்தையே இனி நான் உன்னை ஐந்தர பிடித்தேன் அப்பா 
விதையாய் வாருங்கள் தந்து வினை தவிர் சித்திர முத்தே 



சித்திர முத்து அடிகளார்

சித்தர்கள் தமிழ் மரபின் விதிவிலக்குகள். விதி விலக்காக இருந்து நமக்கு வாழ்வியல் போதித்து வருபவர்கள். அறியா பயணத்தில் அன்பை உணர்த்துபவர்கள், பிழைத்தலில் பயணிக்கும் நம்மை வாழ்வியல் நோக்கி நகர்த்துபவர்கள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். ஆனால் நாம் அவர்களிடம் இருந்து முரண்பாட்டு உறவை விடுத்து , இயல்பான உறவுக்காக சிந்திக்கலாம். இப்படி பல மகான்கள் உள்ளனர். சிலர் தம்மை உலகிற்குக் காட்டி விட்டும் சிலர் காட்டாமலும் மறைந்துள்ளனர். மகான்கள் மக்களோடு வாழ்ந்து, சமயம் வரும் போது பூத உடலை உதறிவிட்டு மறைந்துவிடுகின்றனர். இப்படிப்பட்ட மகான்கள் பூத உடலோடு இருக்கும் போது யாரும் அவர்களை உணர்ந்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடைய மறைவுக்குப் பின்பு தான் அவர்களுடையப் பெருமைகள் உலகிற்கு வெளிப்படுகின்றது. அப்படி தன்னை வெளிக்காட்டியவர்களுள்   ஒருவர் தவத்திரு சித்திர முத்து அடிகளார் ஆவார். அவரைப் பற்றி நமக்கு கிடைத்த தகவல்களை இங்கே அறியத் தருகின்றோம்.

 ராமநாதபுரத்தில் உள்ள பனைக்குளத்தில் சுவாமிகள் 1900 ம் ஆண்டு அவதரித்தார்.  சுவாமிகள் எட்டு மாத  குழந்தையையாய் இருந்த போது, அவரது தாயார் இவுலகை விட்டு மறைந்தார். தாயின் மறைவுக்கு பின்னர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். அதுவும் நீண்ட காலம் நிலைக்க வில்லை. சுவாமிகளின் ஆறாம் வயதில் அவரது பாட்டியும் இறைவனடி சேர்ந்தார். இதன் பின்னர் அவர்களது உறவு வழியில் சீனியாயிஅம்மாள் மற்றும் ராமாய்அம்மாள் கண்காணிப்பில் வளர்ந்தார்.

 சுவாமிகளின் இளமைப் பருவம் சற்று கடினமாகவே இருந்தது. அவர்களது வளர்ப்புத்தாய் முத்துநாச்சி சுவாமிகளை துன்புறும் விதமாக நடத்தினார். அவரது பள்ளிப்படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்தததோடு, அவரை அத்தியூத்தில் கள் இறக்கும்  தொழிலுக்கு செல்ல வைத்தார். இந்நிகழ்வின் போது சுவாமிகளுக்கு வயது 12.

சுவாமிகள் இளம்வயதில் போதிய உணவு, உறக்கம் இன்றி இருந்தார். ஒரு நாள் கள் இறக்க பனை மரம் ஏறும் போது, கை கால்களில்  பலத்த அடி பட்டது. ஓராண்டு காலம் படுக்கையிலேயே ஓய்வு எடுத்தார். உடல் நலம் பெற்றதும், ஆடு மாடு மேய்ச்சல் தொழிலுக்கு சென்றார்.சுவாமிகள் 1922 ஆம் ஆண்டு மலாயாவில், கோலா கங்சார் என்னும் இடத்தில் கள் இறக்கும் தொழிலை செய்தார்.பிறகு 1928-ஆம் ஆண்டில், மறுபடியும் தமிழகத்துக்கு திரும்பினார்.பின்னர் ஆலங்குளம் ஸ்ரீ காளையப்பா நாடாரின் மகள் சிவகாமி அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்.ஒரு குழந்தையும் பிறந்து, பிறகு சில வாரங்களில் அக்குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு மீண்டும் மலாயாவிற்கு வந்தார். தைப்பிங் எனும் ஊரில் தங்கி, கள் இறக்கும் தொழிலை மறுபடியும் தொடங்கினார். 



முதுமைப் பருவத்தில்

சுவாமிகள் தென்காசியை சேர்ந்த இருசப்ப முதலியார் மூலம் ஜோதிடம் மற்றும் அறிவியல் கற்றார்.
அதன் பிறகு தவத்திரு ஜெகந்நாத் சுவாமிகளை காணும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. சுவாமிகள் இவரை தன்னுடைய சீடனாக ஏற்றுகொண்டார்.  அதற்க்கு பிறகுதான் சித்திர முத்து அடிகள், அவருடைய வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொண்டார். மீண்டும் தமிழகத்துக்கு திரும்பினார். அப்போது சித்திர முத்து அடிகளுக்கும் அவர் துணைவியாருக்கும் ஒரு ஆன் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு தன் குருவான ஜெகந்நாத் சுவாமிகளின் பெயரை சூட்டினார் சித்திர முத்து அடிகள்.



                           
                                                             இறை அன்பர்களுடன்

மீண்டும் 1940ல் மலாயா வந்தார். இம்முறை சில யோகமுறைகளை மக்களிடையே பரப்பினார். காவி  உடுத்த ஆரம்பித்தார். தற்போது சுவாமிகள் ஆன்மிக வழிகாட்டியாக திகழ ஆரம்பித்தார். மலாயாவில் உள்ள இந்திய தேசிய ராணுவத்தில் சில பொறுப்பும் வகித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில், 1947 இந்தியா வந்து சேர்ந்தார். சுவாமிகளைத் தேடி ஏகப்பட்ட அடியார் கூட்டம் வர ஆரம்பித்தது. குருவின் நிலைக்கு சுவாமிகள் உயர்த்தப்பட்டார்.
                                         

இந்தியாவில் ஜீவ காருண்யம் மற்றும் இராமலிங்க அடிகள் சொன்ன சுத்த சன்மார்க்கத்தின் கருத்துக்களை பரப்பினார். அவருடைய இல்லத்தை அருளொளி மடம் என்று பெயரிட்டு, ஆன்மிக சத்சங்கங்களை நடத்தலானார். இதன் பொருட்டு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வந்தார். இன்றும் சுவாமிகள் பிறந்த ஊரில் உள்ள மக்கள் அசைவம் சாப்பிடுவது கிடையாது. ஓரிருவர் என்றால் கூட பரவாயில்லை. ஒட்டு மொத்த கிராமம் என்றால் சுவாமிகள் அருளின்றி வேறென்ன?

மீண்டும் 1951 ம் ஆண்டு மலேஷியா சென்றார். இம்முறை பற்பல ஆலயங்களுக்கு சென்று ஆன்மிக சத்சங்கங்கள் செய்யலானார். ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில், அருளொளி முருகன் கோயில், மகா மாரியம்மன் திருக்கோயில், பிள்ளையார் கோயில், கந்தசாமி கோயில், ஆதி ஈஸ்வரன் கோயில், ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில், சிங்கப்பூர் மாரியம்மன் கோயில் என பட்டியல் நீளும். 

 இவ்வாறாக இந்தியாவிலும்,  மலாயாவிலும் ஏகப்பட்ட கணக்கில் அடங்கா சேவைகளை செய்தார்.

                              நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உடன் சித்திர முத்து அடிகளார்
                               


ஒரு மழலையுடன் சித்திர முத்து அடிகளார்





அடியாருடன் சித்திர முத்து அடிகளார்



சித்திர முத்து அடிகளாருக்கு பாத பூசை செய்யும் காட்சி 


                                              பொது மக்களுக்காக உரை ஆற்றும் போது



                              அடியார் கூட்டத்தில் சித்திர முத்து அடிகளார்         

   


சித்திர முத்து அடிகளார்


 இளமைப் பருவத்தில்  சித்திர முத்து அடிகளார் 



                 சித்திர முத்து அடிகளாரின் அருள் படமும், அவர் பயன்படுத்திய பொருட்களும்





சித்திர முத்து அடிகளார் மற்றும் அவர் தம் குருநாதர் ஸ்ரீ ஜெகந்நாத சுவாமிகள் 



   
                         சித்திர முத்து அடிகளார்  பயன்படுத்திய பொருட்கள்
 




சுவாமிகள் ஏகப்பட்ட பாடல்களை எழுதி உள்ளார்.இவை அனைத்தும் தொகுக்கப் பெற்று "அருள் ஒளி " என்ற நூலாக வெளிவந்துள்ளது. "குருமதி மாலை"  என்ற ஆன்மிக தொகுப்பில் போலி குருமார்களை பற்றி சாடி உள்ளார். திருப்புகழ் திரவியம், பேரின்ப குரல், மரண சிந்தனை, நிறை நெறி மொழிகள், சீர் திருந்து மனிதா, கருணை கண்ணீர், கிருபை பிரகாச பொக்கிஷம், அருளொளி மலர் , காந்தியின் திருவருட் புலம்பல் என நூல் பட்டியல் நீளுகின்றது.

1958 ஆம் ஆண்டில் ஆலங்குளத்தில் ஆத்ம சாந்தி நிலையத்தை சுவாமிகள் தோற்றுவித்தார். இது பின்னாளில் தாய்வீடு என்று அழைக்கப்படுகின்றது. இங்கே சித்திரை மாதம் 7 ம் நாளில் தீப தரிசன திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது.( சுவாமிகளின் அவதாரத் திருநாளை முன்னிட்டு )




 1960 ஆம் ஆண்டு அருளொளி மன்றம் மலேஷியாவில் உருவாக்கப்பட்டது. மலேஷியா அரசில் அமைச்சர் பொறுப்பில் இருந்த திரு V.T. சம்பந்தன் இதற்கு உறுதுணையாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.இதன் பொருட்டு மலேஷிய அரசும் அருளொளி மன்றம் நிறுவுவதற்கு இடம் தானமாக கொடுத்து உதவியது. அதிகாரபூர்வமாக 11 பிப்ரவரி 1973 அருளொளி மன்றம் செயல்படத் தொடங்கியது. பின்னர் அருளொளி மன்றம் இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, லண்டன் போன்ற நாடுகளிலும் உதயமானது.

1995 ஆம் ஆண்டு மே 5 ம் நாளில் சுவாமிகள் முக்தி அடைந்தார்.

 அன்று 
பனைக்குளத்தில் சுடர்விட்ட ஆத்மஜோதி 

இன்று 
பாரெங்கும் நிறைந்த ஆனந்த பரஞ்சோதி 

கருணை 
வடிவான சித்திர முத்து ஞானஜோதி 

காண 

 வாரீர் ஜெகத்தீரே பரிபூரண ஆனந்தஜோதி 

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் 104 வது ஜெயந்தி விழா - 01.12.2022 - https://tut-temples.blogspot.com/2022/11/104-01122022.html

 கோஅருணை சலத்தில் நின்ற "குகை நவசிவாயலிங்கம்" - ஸ்ரீலஸ்ரீ குகைநமசிவாயர் 522 ஆம் ஆண்டு குரு பூஜை  - https://tut-temples.blogspot.com/2022/11/522.html

பகவான் ஸ்ரீ யோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஜெயந்தி விழா - 01.12.2021 - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

 யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் யோகி ராம் சுரத் குமார் ஜெய குரு ராயா! - https://tut-temples.blogspot.com/2019/11/blog-post_38.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 116 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2021/09/116.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html


கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html

Wednesday, March 8, 2023

கடையத்தில் ஓர் கருணை விழா - முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாடு - 12.03.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

மாசி மாத ஆயில்ய வழிபாடு, மாசி மக ஹோமத் திருவிழா, மாசி மக 10008 தீப வழிபாடு என அனைத்தும் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி பாபநாசம் சென்று அனைத்திலும் கலந்து கொண்டு ,அகத்திய அடியார்களை சந்தித்தது, ஒவ்வொரு இறை அனுபவம் என நம்மை குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வழிநடத்தி வருவது கண்டு மனம்,மொழி,மெய்களால் வணங்கி மகிழ்கின்றோம்.

வள்ளலார் 200 விழாவினையொட்டி தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓர் கருணை விழா வருகின்ற 12.03.2023 அன்று முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாடு நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை இன்றைய பதிவின் மூலம் பகிர விரும்புகின்றோம்.

மவுனகுரு ஆசிரமமும், அனைத்து வள்ளலார் சங்கங்களும் இணைந்து முன்னெடுப்பாக இந்த விழாவினை நடத்த உள்ளார்கள். அழைப்பிதழை பார்க்கும் முன்னர்  வள்ளலார் பற்றி சில செய்திகளை காண்போமா?

வள்ளலார் வருகையால் மடம் சங்கமானது. சத்திரம் சாலையானது. கோவில் சபையானது.இன்று தமிழகம் முழுதும் வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் சார்பில் பல இடங்களில் அன்னசேவை, அகவல் பாராயணம் என பல்வேறு வகைகளில் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வள்ளலார் வாழும் சித்தர் ஆவார். மரணத்தை வென்ற மாபெரும் மகான் ஆவார். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். அன்னசேவையை அணையா அடுப்பு மூலம் ஆரம்பித்து வைத்தவர். எட்டும் இரண்டும் பற்றி பேசியவர். பெயருக்கு ஏற்றார் போல் வள்ளலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.



உலகில் தோன்றிய ஞானிகள்  அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்பம் அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் 


வள்ளலார் பாடல்!

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.! 

என்னும் பாடல்வாயிலாக  தாவரம் முதல் மனிதர்கள்வரை  துன்பப் படுவதை சகிக்க முடியாமல் வாடினேன் இளைத்தேன்  உள்ளம் பதைத்தேன் துடித்தேன்  நடுக்குற்றேன் என்கிறார் அதுதான்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்  அதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்


வள்ளலார் பாடல்

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் தன்னை இறைவன் எதற்காக வருவிக்க உற்றார் என்ற விபரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.வள்ளலார் வருவிக்க உற்ற நாளை சன்மார்க்கிகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கிறோம் அது அவசியமானதுதான் வள்ளலார்  சொல்லியவாறு வாழ்க்கையில் நாம் கடைபிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும்

ஆன்மீகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக கடவுளைப் பற்றியும் வழிபாடுபற்றியும் கடவுளிடத்தில் இருந்து அருளைப் பெறுவது பற்றியும் பேசிக் கொண்டே வருகிறது.மேலும் சிற்றின்பம் பற்றியும் பேரின்பம் பற்றியும் பேசாத அருளாளர்களே இல்லை என சொல்லலாம். மனித குலம் பரத்தில் சென்று அருளைப்பெற்று வாழ்வது சரியான முறையான வழிஅல்ல. இகத்தே  அதாவது இந்த பஞ்ச பூத உலகமாகிய இவ்வுலகிலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு வகையான வாழ்க்கை முறைகளில் தடம் மாறாமல் வாழ்ந்து பின்பு உலகப் பற்று அற்று இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே இகத்தே பரத்தைப் பெற்று வாழும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்.


இனி அழைப்பிதழை கீழே பகிர்ந்து உள்ளோம்.







மவுனகுரு ஆசிரமத்திற்கும் நமக்குமான தொடர்பு குருவருளால் கிடைத்தது. இணையத்தில் கிடைத்த தொடர்பில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தைப்பூச சேவையாக நம் தளம் சார்பில் அரிசி,பருப்பு போன்ற மளிகை பொருட்கள் கொடுக்கப் பணிக்கப்பட்டோம்.பின்னர் ஒரு முறை நேரில் சென்று மவுனகுரு ஆசிரமம் கண்டோம். மிக மிக அற்புதமாக அன்றைய சந்திப்பு இருந்தது. இயற்கை எழில் கொஞ்ச, பச்சைப் பசேலென தோரண மலை பின்புறத்தில் இருந்தது  ஆசிரமம். சல சல என்ற நீரோடை என அனைத்தும் மனதிற்கு இதமாக இருந்தது. ஆசிரமம் என்ற உடன் பெரிய அளவில் நாம் இங்கே எதிர்பார்க்க வேண்டாம். வள்ளலார் வழிபாடு செய்வதெற்கென ஒரு இடம் , அருகில் கட்டுமான வேலைப்பாடுடன் தங்குவதற்கென கட்டடம் கட்டிக் கொண்டு இருந்தார்கள். மூலிகை கஞ்சி கொடுத்தார்கள். பின்னர் வள்ளலார் வழிபாடு செய்து அங்கிருந்து அன்று விடை பெற்றோம். தற்போது கடையம் மட்டுமின்றி, கோவை,திருப்பூர் என மவுனகுரு ஆசிரமம் தன் கிளைகளை பரப்பி அன்னசேவையுடன், வள்ளலார் வழிபாடு , மருத்துவம் என்று அனைத்து சேவைகளும் செய்து வருகின்றார்கள்.

ஏற்கனவே கூறியது போல், மவுனகுரு ஆசிரமமும், அனைத்து வள்ளலார் சங்கங்களும் இணைந்து நடத்தும் முதல் தென்மண்டல சுத்த சன்மார்க்க மாநாட்டில் அனைவரும் கலந்து கொண்டு திருவருளும்,குருவருளும் பெறும்படி வேண்டுகின்றோம்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி... தனிப்பெருங்கருணை அருட்பெருஜோதி... - https://tut-temples.blogspot.com/2021/01/blog-post_24.html

 உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2021/10/blog-post_4.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

Thursday, March 2, 2023

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!! - 03.03.2023

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட அருளார்களின் குருபூஜை அமைவது உண்டு. ஏற்கனவே இது போன்ற ஒரு தலைப்பில் யோகி ராம் சூரத் குமார் மற்றும் ஸ்ரீலஸ்ரீ அழுக்கு சித்தர் பற்றி கண்டுள்ளோம். இன்றைய பதிவில் இன்று  நடைபெற உள்ள குருபூஜை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றோம். இருவரும் ஒரே மாவட்டத்தில் இருந்து அருள்பாலித்து வருகின்றார்கள். ஒருவர் கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள். மற்றொருவர் ஸ்ரீமத் லிங்கு சுவாமிகள். இருவரும் திண்டுக்கல் மாவட்டத்தில் அருளாட்சி நடத்தி வருகின்றார்கள் என்பது கண்கூடு.

இன்றைய நாளில் இரு குருமார்களின் குருபூஜை நடைபெற்றுள்ளது. காலம் தாழ்த்தி நாம் இங்கே பதிவை அளித்தாலும், உங்கள் மனதில் இந்த இரு மகான்களை பற்றி நீங்கள் இருத்த வேண்டும் என்ற விருப்பமே இந்தப் பதிவின் நோக்கம் ஆகும்.

கணக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் நன்கு அனைவராலும் அறியப்பட்டு வருகின்றார்கள். ஸ்ரீமத் லிங்கு சுவாமிகள் பற்றி யாருக்கும் அதிகளவு தெரியவில்லை. நமக்கும் இங்கே தெரியவில்லை. அதுவும் சென்ற ஆண்டு குருபூஜையில் நாம் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இத்தனை நாளாக நாம் பலமுறை ஸ்ரீ அகஸ்தியர் ஞானக் குடிலுக்கு செல்லும்போதெல்லாம், வழியில் ஒரு சித்தர் கோயில் இருப்பதை நாம் கண்டதில்லை. சென்ற ஆண்டு சந்தைக்கு காய்கறி வாங்க சென்ற போது, ஆட்டோவில் குருபூஜை நடப்பது பற்றி ஒலிபெருக்கி மூலம் கூறியது கண்டு ,கேட்டு நாம் உடனே அந்த சித்தர் கோயிலுக்கு சென்று வழிபட்டோம். இதுவல்லவோ குருவின் கருணை! குருவின் அருள்!! இந்த ஆண்டும் நாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்க, மீண்டும் நமக்கு இருவரின் குருபூஜை அழைப்பிதழ் கிடைத்து விட்டது.

முதலில் ஸ்ரீமத் லிங்குசுவாமிகள் 100 ஆம் ஆண்டு குருபூஜை அழைப்பிதழை கண்டு இன்புறுவோம்.




சென்ற ஆண்டில் 99 ஆவது குருபூஜையில் நாம் அருள் பெற்று, நம் தளம் சார்பில் சிறு தொகை கொடுத்து, வழிபாட்டில் பூக்கள் இணைத்து, அங்கிருந்த அன்பர்களுக்கு சிவபுராணம் கொடுத்தோம். அன்று நமக்கு கிடைத்த அருள்பிரசாதம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.




அடுத்து நாம் காண உள்ளது கன்னக்கம்பட்டி மூட்டை சுவாமிகள் தரிசனம் ஆகும்.






       

இவர் சுமார் 20 ஆண்டுகளாக பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கந்தலான உடையுடன் ஒரு மிகப்பெரிய மூட்டையை எந்நேரமும் கையில் வைத்துக் கொண்டு சுற்றி தெரிவார்.

மேலும் ஒரு முழுக்கை சட்டையை மடித்து விட்ட வாரும் தலையில் ஒரு முண்டாசுத் துணையையும் கட்டியிருப்பார். பெரும்பாலும் இவர் தன்னுடைய வேஷ்டியை எப்பொழுதும் மடித்து கட்டிய காணப்படுவார். மேலும் இவர் உடுத்தக்கூடிய துணிகள் அனைத்தும் கந்தலானதாகவே காணப்படுகின்றது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு மிகப்பெரிய மூட்டையை எங்கு சென்றாலும் தன்னுடன் தூக்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். மேலும் அதில் என்ன உள்ளது என்று யாரேனும் பார்க்க வந்தால் அவர்களை அடித்து துரத்துவதையும் வேலையாய் வைத்திருக்கிறார்.இவ்வாறு இவர் இருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இவரை மூட்டை சுவாமிகள் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

தமிழகத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலான முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலைக்கு அருகில் உள்ள ஊர் தான் கணக்கன்பட்டி.

இவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் பழனிச்சாமி என்பதாகும்.

பொது வாழ்வில் நாட்டம் கொண்ட இவர் அனுதினமும் கடவுளுக்கு பணியாற்றி வந்தார். பச்சை நிறம் கொண்ட முழு கை சட்டையும் மற்றும் அழுக்கான வேட்டியை மட்டுமே இவர் எந்நேரமும் உடுத்தி காணப்படுவார்.மேலும் இவர் ஒரு பெரிய மூட்டையை வைத்துக் கொண்டு எங்கு சென்றாலும் அதனை தூக்கிக் கொண்டே திரிவார். அந்த மூட்டையை எவரேனும் தொழ வந்தால் உறக்கமாக கத்தி அவர்களை விரட்டி விடுவார்.

கடவுளின் அனுக்கிரகத்தால் பல்வேறு வகையான அற்புதங்களை நிகழ்த்தி பின்னர் ஜீவ சமாதி அடைந்தார்.

• எந்நேரமும் பரட்டை தலை மேல் ஒரு துண்டை வைத்து முண்டாசு கட்டியிருப்பார்.

• பச்சை நிற கலர் கொண்ட முழுக்கை சட்டையும் மற்றும் ஒரு கிழிந்த கந்தலான வேட்டியையும் கட்டியிருப்பார்.

• பழனியில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஆங்காங்கே சுற்றித்
திரிவார்.

• பழனியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணக்கன்பட்டி என்னும் ஊரில் தெருக்களில் உள்ள வீடுகளிலும் அவ்வூரில் உள்ள அவ்வப்போது படுத்து உறங்கிக் கொண்டிருப்பார்.

• இவர் எங்கு சென்றாலும் ஒரு அழுக்கு மூட்டையை கையில் எடுத்துக் கொண்டு சுற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

• ஆரம்பத்தில் இவரைக் கண்ட அவர் ஊர் மக்கள் இவர் ஒரு பைத்தியம் என்று கல்லால் அடித்தும் விரட்டப்பட்டிருக்கின்றார்.

• இவ்வாறு இவர் அழுக்கு மூட்டையை கையில் வைத்து கொண்டு சுற்றி தருவதால் பழனி சுற்றுவட்டார மக்கள் இவரை மூட்டை சுவாமிகள் என்று அழைத்து வந்துள்ளனர்.

• பழனியில் மொத்தம் இரண்டு பேரும் மலைகள் உள்ளன அவற்றில் ஒன்று பழனி முருகன் கோவில் மற்றொன்று இடும்பன் கோவில் ஆகும். பல்வேறு நாட்கள் அந்த இரும்பன் கோவில் தங்கி காலத்தை கழித்து வந்துள்ளார்.

கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகளிடம் யாராவது வந்து பணமோ பொருளோ அல்லது நல்ல உடையோ வாங்கி கொடுத்தால் அவர்களை கம்பெடுத்து அடித்து விரட்ட தொடங்குவார்.மேலும் யாரேனும் பணம் கொடுத்தாலும் அந்த பணத்தினையும் வாங்க மாட்டார்.

வெளிநாட்டில் இருந்து வந்தது தம்பதி ஒருவர் தன்னுடைய மகனுக்கு வாய் பேச முடியாமல் அவதி உற்ற நிலையில் பழனி மலை முருகனை தரிசிக்க காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கணக்கன்பட்டி வழியே வந்து கொண்டிருந்த பொழுது, இந்த கணக்கன்பட்டி சித்தர் அவர்களை காரில் இருந்து வழி மறுத்து இறங்கச் சொன்னார். இவர்களும் செய்வதறியாது தெரிவித்துக் கொண்டு வேறு வழியில்லாமல் காரில் இருந்து இறங்கினார்.

உடனே இந்த கணக்கன்பட்டி மூட்டை சித்தர் காரில் இருந்து இறங்கிய பெண்மணி இடம் எதிரில் இருக்கும் கடையில் போய் ஒரு பிரியாணி வாங்கிக் கொண்டு வா என்று கூறியிருக்கிறார். அவரும் வேறு வழி இல்லாமல், ரோட்டிற்கு எதிரே உள்ள ஒரு கடையில் பிரியாணி வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் அப்பெண் மற்றும் அவர்கள் குடும்பம் முழுவதும் ஒரு சுத்த சைவ குடும்பமாகும். பிரியாணியின் சுவையைப் பிடிக்காமல் மூக்கை பிடித்துக் கொண்டு பிரியாணி வாங்கி வந்தர் அந்த பெண்மணி.

பிரியாணி வாங்கி வந்தவுடன் சித்தரானவர் அதனை உன்னுடைய மகனுக்கு கொடு என்றார். தடுமாற்றத்துடன் அந்தப் பெண்ணோ தான் வாங்கி வந்த சாப்பாட்டு பொட்டலத்தை பிரித்து பார்த்தார். என்ன ஒரு ஆச்சரியம் பிரியாணி வாங்கி வந்த அந்த பொட்டலத்தில் சாம்பார் சாதம் இருந்தது.

இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த அந்தப் பெண் மற்றும் அவரது குடும்பத்தார் அவரை காலில் விழுந்து வணங்கி விட்டு பழனியை நோக்கி சென்றனர்.

வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுதே எதிரில் ஒரு வாகனம் வேகமாக இவர்களை நோக்கி வந்திருக்கிறது அப்போது அதனை கண்ட அந்த சிறுவன் அம்மா வண்டி வருகிறது என்று கற்றுத் தொடங்கினான்.

இதுவரை வாய் பேசாதிருந்த தன்னுடைய மகன் அந்த சித்திரை கண்டதும் பாய் பேசியதை கண்டு ஆனந்தம் அடைந்து அவரை மறுபடியும் வந்து வணங்கி விட்டு சென்றனர்.

இவ்வாறாக கணக்கன்பட்டி சித்தர் வரலாறு பல்வேறு சுவாரசியமான செய்திகள் இந்த சித்தரை கண்ட பின்பு நடந்துள்ளதாக எண்ணற்ற மக்கள் கூறுகின்றனர்.






குறிப்பாக ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய அமாவாசை பௌர்ணமி மற்றும் புனர்பூஜை போன்ற நாட்களில் அபிஷேகம் ஆராதனை என்று அவருடைய தொண்டர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோவிலின் நடை திறந்திருக்கும்.


இன்று குருபூஜை காணும் இருவரின் அருள் அனானிவருக்கும் கிடைக்கட்டும்.

ஞானியர்களின் ஓட்டம் இன்னும் தொடரும்.

அவன் அருளாலே அவன் தாள் பணிந்து 

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

இன்று குரு பூஜை இருவருக்கும்! குருவே சரணம்!!  - https://tut-temples.blogspot.com/2020/12/blog-post.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி - ஸ்ரீ ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் 38 ஆவது குருபூஜை விழா (21.10.2020) - https://tut-temples.blogspot.com/2020/10/38-21102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 90 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 20.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/90-20102020.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 89 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - 4.10.2019 - https://tut-temples.blogspot.com/2019/10/89-4102019.html

புரட்டாசி திருவாதிரை - ஸ்ரீமத்ஸ்ரீ பிரம்மஸ்ரீ ஓதசுவாமிகள் 115 ஆவது மகாகுரு பூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/115.html

புரட்டாசி திருவாதிரை - ஓம் ஸ்ரீ சத்குரு பாட்டி சித்தர் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழா - https://tut-temples.blogspot.com/2020/10/5.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - பகுதி 2 - https://tut-temples.blogspot.com/2020/10/2.html

சித்தர்கள் அறிவோம்! - திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_6.html

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி - பட்டினத்தார் குருபூசை 13.08.2019 - https://tut-temples.blogspot.com/2019/08/13082019.html

TUT தளம் கொண்டாடிய மாணிக்கவாசகர் குருபூசை  - https://tut-temples.blogspot.com/2019/08/tut.html

எம்பாவாய்...மாணிக்கவாசகர் திருக்கோயில் தரிசனம் - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_98.html

சேக்கிழார் வழிபட்ட நகைமுகவள்ளி சமேத கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயில் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_8.html

சித்தர் தரிசனம்: ஸ்ரீ சற்குரு சுவாமிகள் குரு பூசை - https://tut-temples.blogspot.com/2019/07/blog-post_2.html

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_26.html

சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_12.html

சித்தர்கள் அறிவோம்! - போகர் பரணி நட்சத்திர வழிபாடு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_31.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_90.html

ரோம மகரிஷி ஆடி சுவாதி நட்சத்திர 13 ஆம் ஆண்டு விழா - https://tut-temples.blogspot.com/2020/07/13.html

 உயிர்நிலை கோயில்களின் அருளை உள்வாங்குங்கள்! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post.html

கருணைக் கடலே... கண்ணப்ப சுவாமிகளே போற்றி !! - குருபூசை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_1.html

ஊழ்வினை போக்கும் TUT உழவாரப் பணி அறிவிப்பு & ஒரு நாள் ஆன்மிக யாத்திரை - https://tut-temples.blogspot.com/2019/09/tut_93.html

 சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4) - https://tut-temples.blogspot.com/2019/09/4_25.html

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - https://tut-temples.blogspot.com/2019/09/3.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2) - https://tut-temples.blogspot.com/2019/09/2.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_92.html

தீராத நோய்களைத் தீர்க்கும் திருமகன் ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகள் - குரு பூஜை அழைப்பிதழ் - 07.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/07032020.html

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - 04.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/04032020.html

களையெடுத்துப் பயிர் விளைத்த ஸ்ரீ கணக்கன்பட்டி சுவாமிகள் குருபூஜை அழைப்பிதழ் - 05.03.2020 - https://tut-temples.blogspot.com/2020/03/05032020.html

நமது பிரார்த்தனைகள் அப்படியே ஆகட்டும் - பகவான் ஸ்ரீ ராமதேவர் சித்தர் குருபூஜை விழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post.html

சின்னையா மற்றும் பெரிய ஐயா பாதம் போற்றி - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_29.html

குருவருள் வேண்டின் திருவருள் சித்திக்கும் - ஸ்ரீமத் பொன்னம்பல சுவாமிகள் 186 ஆம் ஆண்டு குரு பூசை - https://tut-temples.blogspot.com/2020/02/186.html

சித்தர்கள் அறிவோம்: மலையாள சாமி (எ) ஸ்ரீலஸ்ரீ மௌன குரு சுவாமிகள் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_46.html

அழகர் மலையில் வாசம் செய்யும் ஸ்ரீ ராமதேவர் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_83.html