"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Monday, October 4, 2021

உலகம் தழைக்க வந்துஉதித்த உருவே வருக! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்று அக்டோபர் 5 ஆம் தேதி.. வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று. வள்ளலார் வருகையால் மடம் சங்கமானது. சத்திரம் சாலையானது. கோவில் சபையானது.இன்று தமிழகம் முழுதும் வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் சார்பில் பல இடங்களில் அன்னசேவை, அகவல் பாராயணம் என பல்வேறு வகைகளில் கொண்டாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வள்ளலார் வாழும் சித்தர் ஆவார். மரணத்தை வென்ற மாபெரும் மகான் ஆவார். வாடியப்பயிரை கண்டபோதெல்லாம் வாடியவர். அன்னசேவையை அணையா அடுப்பு மூலம் ஆரம்பித்து வைத்தவர். எட்டும் இரண்டும் பற்றி பேசியவர். பெயருக்கு ஏற்றார் போல் வள்ளலாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.





வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !

05-10-2021 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்கள் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்க உற்ற நாளை ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக ஒவ்வொரு ஆண்டும் உலகம் எங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. 

உலகில் தோன்றிய ஞானிகள்  அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்பம் அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும் 


வள்ளலார் பாடல்!

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.! 

என்னும் பாடல்வாயிலாக  தாவரம் முதல் மனிதர்கள்வரை  துன்பப் படுவதை சகிக்க முடியாமல் வாடினேன் இளைத்தேன்  உள்ளம் பதைத்தேன் துடித்தேன்  நடுக்குற்றேன் என்கிறார் அதுதான்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்  அதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்


வள்ளலார் பாடல்

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் தன்னை இறைவன் எதற்காக வருவிக்க உற்றார் என்ற விபரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.வள்ளலார் வருவிக்க உற்ற நாளை சன்மார்க்கிகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கிறோம் அது அவசியமானதுதான் வள்ளலார்  சொல்லியவாறு வாழ்க்கையில் நாம் கடைபிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும்

ஆன்மீகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக கடவுளைப் பற்றியும் வழிபாடுபற்றியும் கடவுளிடத்தில் இருந்து அருளைப் பெறுவது பற்றியும் பேசிக் கொண்டே வருகிறது.மேலும் சிற்றின்பம் பற்றியும் பேரின்பம் பற்றியும் பேசாத அருளாளர்களே இல்லை என சொல்லலாம். மனித குலம் பரத்தில் சென்று அருளைப்பெற்று வாழ்வது சரியான முறையான வழிஅல்ல. இகத்தே  அதாவது இந்த பஞ்ச பூத உலகமாகிய இவ்வுலகிலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு வகையான வாழ்க்கை முறைகளில் தடம் மாறாமல் வாழ்ந்து பின்பு உலகப் பற்று அற்று இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே இகத்தே பரத்தைப் பெற்று வாழும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்.

முதலில் சில காட்சிப்படங்களை கீழே இணைத்துள்ளோம். ஒரு முறை படித்தால் ஒன்றும் புரியாது. மீண்டும் மீண்டும் படித்தால் தான் மனதுள் இவரை நிலைநிறுத்த முடியும். நமக்கும் சேர்த்து தான் இங்கே சொல்கின்றோம்.







 நம் தேடல் உள்ள தேனீக்களாய் தளமும் கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயிலில் பலமுறை அன்னதானம் செய்துள்ளோம். அடுத்து வள்ளலார் சீடர்கள் பலரின் அறிமுகம் கிடைத்துள்ளது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா, வள்ளலார் மோகன் ஐயா, காந்திராஜன் ஜானகிராமன் ஐயா, கொளப்பாக்கம் சந்தானம் ஐயா, தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா  என அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களில் ஒவ்வொருவரின் சேவை,தொண்டு பற்றி நேரில் சென்று அளவளாவி தனிப் பதிவாகவே அளிக்கலாம். சிலரை நம் தளத்தில் பதிவிட்டு இருக்கின்றோம். குறிப்பாக சன்மார்க்க நேசன் திரு. M.A. ஹுசைன் ஐயா பற்றியும், தயவு சித்தாஸ்ரமம் திரு.சரவணன் ஐயா பற்றியும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.  மேலும் கூடுவாஞ்சேரி வள்ளலார் சன்மார்க்க சபை மாதந்தோறும் அன்னதானத்தோடு, கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பூச நட்சத்திர பூசையும் செய்து வருகின்றார்கள்.















சென்ற ஆண்டில்   புரட்டாசி மாத மகாளய பட்ச அன்னசேவை கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் நடைபெற்றது. அப்போது சபை பெரியோர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் அன்னசேவை செய்ய கூறினார்கள். நாம் இதனை கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு அன்றே சிறு முன்தொகையாக ரூ.500 கொடுத்துவிட்டு வந்தோம். இது நாம் வழக்கமாக செய்யும் அன்னசேவை போல் தான் இருக்கின்றது. எனவே இனிப்பு, உளுந்த வடை சேர்த்து பிரிஞ்சி சாதம் இன்றைய அன்னசேவையில் சேர்த்தோம்.

இருப்பினும் மனதில் ஒரு நிறைவு நமக்கு ஏற்படவில்லை. அப்போது தான் பெங்களூரிலிருந்து நம் அன்பர் அன்னசேவைக்கு தேவையான அரிசி,பருப்பு, மளிகை பொருட்கள் வாங்கித் தரும்படி கூறினார்கள். அட..இது நமக்கு தோன்றாமல் போய் விட்டதே என்று கருதினோம். உடனே இதனையும் ஏற்பாடு செய்தோம். மேலும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கேற்ற இலுப்பெண்ணெய் உள்ளதா என்று கேட்ட போது இரண்டு லிட்டர் உள்ளது என்று கூறினார்கள். எனவே இலுப்பெண்ணை 15 கிலோ கொண்ட ஒரு டின் வாங்கி தரலாம் என்று தீர்மானித்தோம்.

இதோ..அனைத்தும் குருவருளால் நிறைவேறியது.


                                                                                                                                                                                                








அடுத்து ஒரு நாள் அன்னசேவைக்கு தேவையான அரிசி, பருப்பு,மளிகை பொருட்கள் தந்த போது 


15கி எடை கொண்ட இலுப்பெண்ணை டின் ஒன்றும் கூடுவாஞ்சேரி வள்ளலார் சபையில் கொடுத்துள்ளோம்.


பொருளுதவி செய்த அனைவருக்கும் நன்றி கூறி, இப்பதிவை நிறைவு செய்ய விரும்புகின்றோம். சென்ற ஆண்டில் இதே நாள் அக்டோபர் 5 ஆம் தேதியை நாம் ஒன்றும் செய்யாமல் கடந்தோம். ஆனால் இந்த 2020 ஆம் ஆண்டில் குருவருளால் நம்மால் முடிந்த அளவில் சுமார் 100 அன்பர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம், ஒரு நாள் அன்னதானம் செய்ய தேவையான அரிசி,பருப்புடன் மளிகை பொருட்கள், தீபமேற்ற இலுப்பெண்ணை கொடுத்துள்ளோம் என்றால் அனைத்தும் குருமார்களின் வழிகாட்டல் தான் என்பதை மீண்டும் இங்கே நாம் உணர்கின்றோம்.

இந்த ஆண்டில் சேவைகள் பற்றி அடுத்த பதிவில் பேசுவோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.


மீள்பதிவாக:-

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் இன்று - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post_5.html

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை - https://tut-temples.blogspot.com/2020/10/blog-post.html

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_25.html

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_72.html

திருஅருட்பா அமுது உண்போம் - https://tut-temples.blogspot.com/2019/12/blog-post_30.html

No comments:

Post a Comment