அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம்முடைய சனாதன தர்மத்தில் தான் எத்தனை எத்தனை திருவிழாக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நம்மை ஈர்க்கிறது. இப்போது தான் நவராத்திரி திருவிழா முடித்து சற்று இளைப்பாறும் நேரத்தில் அடுத்து அன்னாபிஷேகம் கொண்டாட்டம் வந்தது. கூடுவாஞ்சேரியில் நாம் ஆரம்ப காலங்களில், ஒரு முறை அன்னாபிஷேகம் பற்றி கேள்விப்பட்டு, அங்கு சென்று விசாரித்த போது, அன்னாபிஷேகம் முடிந்து விட்டதாக கூறினார்கள். அடுத்து மெல்ல, மெல்ல நாம் நம் சனாதன தர்மத்தை கடைபிடிக்க ஆரம்பித்த போது நம் முன்னோர்கள் நமக்கு வகுத்து கொடுத்த திருவிழாக்கள் பற்றி அறிந்து கூடுமானவரை பங்கு பெற்று வருகின்றோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் அன்னாபிஷேக தரிசனம் மற்றும் சேவை குருவருளால் செய்து வருகின்றோம்.
இந்த ஆண்டிலும் நம் தளம் சார்பில் அன்னாபிஷேக சேவை, தரிசனம் பல திருத்தலங்களில் நமக்கு கிடைத்தது.அவற்றை இங்கே தொகுத்து தருகின்றோம்.
1. முதலில் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலய தரிசனம் காண்போம்.
2. அடுத்து திருச்சி மாவட்டம். பெருகமணி கிராமம் ஆனந்த வல்லி உடனுறை அகத்தீஸ்வர ர் ஆலய அன்னாபிக்ஷேகம். இத்தல வழிபாட்டிற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை குருவருளால் வழங்கினோம்.
3. அடுத்து சென்னை - திருநின்றவூர் அருகில் உள்ள பாக்கம் - இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள சிவாலயம் அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்
4. அடுத்து நூம்பல் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் தரிசனம் காண உள்ளோம்.
5. ஆதனூர் அருள்மிகு காமாட்சி அம்மன் சமேத அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அன்னாபிஷேக காட்சிப்படங்கள்.
6. பாபநாசம் சிவன் கோயில் அன்னாபிஷேக தரிசனம்.
7. குருமலை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அன்னாபிஷேகம் சிறப்பு பூஜை நடைபெற்றது
8. வடுகபட்டி அன்னை ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஆத்ம லிங்கேஸ்வரர் திருக்கோயில் அன்னாபிஷேகம்.
9. மே நல்லூர் காளத்தீஸ்வரர் அன்னாபிஷேகம்
10. மருதம் சிவன் அன்னாபிஷேகம் பூஜை
11. மஞ்சள்நாயகி உடனுறை சுடலீஸ்வரபெருமான் திருவடி போற்றி போற்றி
12. ஸ்ரீ அங்கம்மாள் உடனுறை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோயில், சித்தாலப்பாக்கம்
இத்தல வழிபாட்டிற்கு நம் தளம் சார்பில் சிறு தொகை குருவருளால் வழங்கினோம். மேலும் ஒரு தலத்திற்கும் இது போல் குருவருளால் வழங்கியுள்ளோம். நமக்கு தகவல் கிடைத்தவுடன் அனைவருக்கும் தெரிவிக்கின்றோம்.
இது போல் அனைத்து சைவ ஆலயங்களில் ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிசேகம் வழிபாடு நடைபெற்றுள்ளது. நம் தளம் சார்பில் அன்றைய தினம் அன்னாபிஷேக வழிபாட்டிற்கு சிறு தொகையும், பழனி கிரிவலப்பாதையில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்யும் அன்பருக்கு நம் தளம் சார்பில் சிறு தொகை குருவருளால் வழங்கியுள்ளோம். மேலும் அன்றைய தினம் நம் இல்லத்தில் இனிப்பு, தக்காளி சாதம்,தயிர் சாதம் செய்து அன்பர்களுக்கு வழங்கினோம். இவை அனைத்தும் நம்மை வழிநடத்தும் குருமார்களின் ஆசியினால் தான் என்று கூறி பதிவை முழுமை செய்கின்றோம்.
சற்று யோசித்துப் பார்க்கும் போது, தற்போது அன்னாபிஷேக நாளில் குருவருளால் நம் தளம் சார்பில் அன்னசேவை செய்ய வாய்ப்பு கிடைக்கின்றது என்றால் குருவின் அருளிற்கு எல்லையேது!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment