அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்றைய திருவருட்பிரகாச வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சார்பில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாம் சின்னாளப்பட்டி வந்த பிறகு, வள்ளலார் சபை எங்கே என்று தேடினோம். அப்பொழுது ஒரு நாள் நம் நண்பர் திரு. சரவணன் ஐயா அவர்களுடன் பேசும் பொழுது அவர் மேட்டுப்பட்டி வள்ளலார் கோயில் பற்றி கூறினார். உடனே அங்கு சென்று நேரில் பேசி ஆவணி மாதம் - சனிக்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் அன்று 04.09.2021 அன்று காலை மற்றும் மதியம் அன்னதானம் செய்யும்படி வேண்டினோம். உடனே நம் வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது. இதில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்பது எம் காதில் விழுகின்றது. இன்றைய நாளில் நம் குழுவிற்கு வள்ளலார் வழங்கி வரும் ஆசி பற்றியும், நம் சேவை பற்றியும் தொட்டுக்காட்ட இந்தப் பதிவில் விரும்புகின்றோம்.
அதற்கு முன்பாக சில காட்சிப்படங்களை இங்கே தருகின்றோம்.
மேம்போக்கான கருத்தாக இவற்றை பார்க்க வேண்டாம். மிக மிக ஆழமான செய்தி இதில் அடங்கி உள்ளது. ஆம். வள்ளலார் பெருமானின் ஆசியினால் தான் மகாளய பட்சம் - 15 ம் நாள் சேவை தொடர்ந்து இந்த ஆண்டில் கூடுவாஞ்சேரியிலும், சின்னாளபட்டியிலும் நடைபெற்று வருகின்றது. இது தான் அற்புதம். இது தான் அதிசயம் என்பதும் ஆகும்.
அடுத்து நம் தளத்தின் சேவைகள் பற்றி இங்கே தொட்டுக்காட்ட விரும்புகின்றோம்.
கூடுவாஞ்சேரி வள்ளலார் சபை
தேடல் உள்ள தேனீக்கள் குழுவின் சேவையில் கூடுவாஞ்சேரி வள்ளலார் சபைக்கு தனிச்சிறப்பு என்றும் உண்டு.2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகாளயபட்ச அன்னசேவை பற்றி இங்கே காண உள்ளோம்.
கூடுவாஞ்சேரி வள்ளலார் சபை சென்றோம்.அங்கே அறிவிப்பு பதாகையை நம் அன்னசேவை பற்றி கூறி இருந்தார்கள்.
அங்கே உள்ள பிரார்த்தனை கூடத்தில் சென்று உலக மக்கள் அனைவரும் இன்பமாக வாழ வேண்டி பிரார்த்தனை செய்தோம்.
பிரார்த்தனை முடித்து அன்னசேவைக்காக ஆயத்தப் பணியில் ஈடுபட்டோம்.
நன்கு
கமகமவென மணக்கும் சாம்பார் சாதம் தயாராக இருந்தது. இந்த அன்னசேவையும்
காரணமின்றி அமையவில்லை. ஏதோ ஒரு காரணத்தோடு தான் அமைந்தது. அதற்கான
காரணத்தை பதிவின் இறுதியில் பேசுவோம்.
அருட்பெருஞ்சோதி தெய்வம் ...நம்மை ஆண்டு கொண்ட தெய்வம். வள்ளலார் தரிசனம்..ஜோதி வழிபாடு என செய்தோம். அடுத்து நம் இறைப்பணி ஆரம்பம்.
சமூக இடைவெளி கடைப்பிடித்து முக கவசம் அணிந்து அன்பர்களுக்கு உணவு வழங்கினோம்.
இதோ..அடுத்து
நம் நண்பர் திரு.சத்யராஜ் அவர்கள் அன்னமிடுகின்றார். இங்கே நாம் அன்பைத்
தான் கொடுக்கின்றோம். ஏனெனில் அன்பு இருந்தால் தான் இது போன்ற அறச்செயல்களை
நாம் செய்ய முடியும். அதே போன்று இங்கே நாம் கொடுக்கின்றோம் என்று
எள்ளளவும் நினைக்கவில்லை. இவை அனைத்தும் குருநாதரின் அருளால் தான்
நடைபெற்று வருகின்றது. நாம் வெறும் கருவியே.
சுமார்
50 பேர் அளவில் அங்கே அன்னசேவை செய்தோம். அடுத்து நம்மிடம் ஒரு போர்வை
இருந்தது. அதனை நாம் வழக்கமாக மோட்ச தீப வழிபாட்டிற்கு அகல் வாங்கும்
கடையில் உள்ள அன்பருக்கு கொடுத்தோம். அதனை நீங்கள் கீழே காணலாம். மொத்தம்
வாங்கிய 3 பார்வைகளில் இரண்டு கூடுவாஞ்சேரியிலும், 1 போர்வை, 2 குடை
செங்கல்பட்டில் கொடுத்துள்ளோம்.
மொத்தத்தில்
இந்த ஆண்டில் ஆவணி மாத இறைப்பணியில் மகாளய பட்ச சேவையும் இணைத்தால் நம் தள
அன்பர்களின் பொருளுதவி மற்றும் அருளுதவியினால் சென்ற ஆண்டை விட தொண்டும்
,சேவையும் அளவிலும் தரத்திலும் குருவருளால் உயர்ந்துள்ளதை கண்டு மெய்
சிலிர்க்கின்றோம். பதிவின் இடையில் காரணமின்றி காரியமில்லை என்று சொன்னது
பற்றி கேட்கின்றீர்களா? ஆம். இந்த அண்ணா சேவை கூடுவாஞ்சேரி வள்ளலார்
கோயிலில் முழுமை செய்து பேசிய போது ,சபை பெரியோர்கள் அக்டோபர் 5 ஆம் தேதி,
வள்ளலார் வருவிக்கவுற்ற தினம் என்று கூறி, நம்மை அன்னசேவை செய்யப்
பணித்தார்கள். ஆஹா. ..பழம் நழுவி பாலில் அல்லவா விழுகின்றது என்று கூறி,
அன்றைய தினமே முன்தொகையாக ரூ.500 கொடுத்து விட்டு வந்தோம். இது தான்
குருவருள் வழி நடத்தும் செயல் ஆகும்.
சென்ற ஆண்டில் ஆவணி மாத இறைப்பணி மிக அருமையாக நடைபெற்றது. நம்மை வழிநடத்தும் குருமார்களின் பதம் பற்றி எப்போதும் நடப்போம்.
திருவருள் பயணம்:-
2021 ஆம் ஆண்டில் புத்தாண்டு பரிசாக நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழு சார்பில் கொடுக்க விரும்பி
20 அன்பர்களுக்கு சந்தா செலுத்தினோம். 20 அன்பர்களின் வீட்டிலும் திருவருள் பயணம் மூலம் வள்ளலார் வருகை புரிந்து வருகின்றார். இது நம் தளம் சார்பில் குருவருளால் நடத்தப்பட உள்ள ஞான தான சேவையாகும்.
அடுத்து சின்னாளபட்டிக்கு வந்த பிறகு நம்மை நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியப்பெருமானும், வள்ளல் பெருமானும், கந்தக் கடவுள் இன்னும் சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்கள். தற்போது நடைபெற்று வரும் பெருந்தொற்றுக்காலத்தில் மூவரும் (ஸ்ரீ அகத்தியப்பெருமானும், வள்ளல் பெருமானும், கந்தக் கடவுள் முருகப் பெருமானும் ) அவர்கள் அருளும் அருள்நிலைகளை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நன்கு யோசித்துப் பார்த்தால் ஸ்ரீ அகத்தியப்பெருமானும், வள்ளல் பெருமானும், கந்தக் கடவுள் ஆன்மிக இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை திரவுவருள் பயணம் இதழ் மூலம் நாம் கண்டும், கேட்டும், பார்த்தும் வருகின்றோம். இந்த வரிசையில் நம்மை ஸ்ரீ அகஸ்தியர் ஞானக்குடில் வழிநடத்தி வருகின்றார்கள். இதனை பொதிகைமலை யாத்திரை பதிவில் ஏற்கனவே கூறியுள்ளோம்.
கந்தக்கடவுள் முருகப்பெருமான் என்று பார்க்கும் போது ஸ்ரீ சதுர்முக முருகர் கோயில் மூலம் நாம் அருள் பெற்று வருகின்றோம். ஓதிமலை சிறப்பு வழிபாடு ஸ்ரீ சதுர்முக முருகர் கோயிலில் நாம் செய்ய குருவருளால் பணிக்கப்பட்டு, குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் நம் பூசையை ஏற்றுக் கொண்டதாக வாக்குரைத்துள்ளார்கள். மேலும் பல சூட்சும செய்திகளை நமக்கு அருள்வதாக கூறியுள்ளார்கள்.
அடுத்து நாம் வள்ளலார் அருள் பற்றி இங்கே பேச உள்ளோம்.
மேலே நீங்கள் காணும் அருள்நிலை சாது ஸ்ரீ கருணாம்பிகை - 51வது குருபூஜை விழா காணும் வாய்ப்பில் நாம் பெற்ற தரிசனம் ஆகும்.
அடுத்து நமக்கு வள்ளலாரின் பூரண அருள் பெற்ற சன்மார்க்கி திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா தரிசனம் பெற்றோம். இந்த அனுபவத்தை தனிப்பதிவாக தருகின்றோம்.
அன்றைய தினம் நம் தளம் சார்பில் சிறு தொகை காணிக்கையாக கொடுத்தோம்.
அடுத்து சின்னாளப்பட்டியில் வள்ளலார் சபை தேடிய போது இரண்டு சபை கிடைத்தது. இவற்றைப்பற்றியும் தனிப்பதிவில் காண்போம். திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணானந்தா சுவாமிகள் சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டி வள்ளலார் சபையை திறந்து வைத்தார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தோம்.
நம் தளம் சார்பில் 1 சிப்பம் அரிசி வாங்கி கொடுத்துள்ளோம். இந்த சேவை மாதந்தோறும் தொடரும்.
அடுத்து இங்கே அறப்பணி செய்கின்ற இரு அன்பர்களுக்கு நம் தளம் சார்பில் சிறு மரியாதை செய்துள்ளோம்.
அடுத்து சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் செல்லும் வழியில் உள்ள மற்றுமொரு சன்மார்க்க சங்கம் தரிசனம் பெற்றோம்.
குருவருளால் அவ்வப்போது தீபமேற்றி , அகவல் பாராயணம் எம் இல்லத்தில் செய்து அன்னசேவை செய்து வருகின்றோம். உங்கள் அனைவருக்கும் அந்த அருள்நிலைகளை மேலே பகிர்ந்துள்ளோம். மேலும் இன்றைய சிறப்பு நாளில் 41 ஆவது நாள் - கூட்டுப் பிரார்த்தனையாக அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் 108 முறை கூறி , அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணத்துடன் நடைபெற்றது என்பதையும் இங்கே தெரிவிக்க விரும்புகின்றோம்.
மேட்டுப்பட்டி வள்ளலார் கோயிலில் ஒரு அன்பர் நமக்கு நன்றி தெரிவித்த காட்சியை பகிர்ந்து நாமும் அனைவருக்கும் நன்றி கூறி, பதிவை குருவருளால் நிறைவு செய்கின்றோம்.
அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
- மீண்டும் அடுத்த பதிவில் பேசுவோம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment