அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவே சரணம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். அகத்தியம் என்பது
பெருங்கடல். அதில் நாம் தினமும் சிறிது நீர்துளிகளை மட்டும் பருகி
வருகின்றோம். ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் வந்த பிறகு, நாளொரு மேனியும்,
பொழுதொரு வண்ணமுமாக குருநாதர் அருளில் திளைத்து வருகின்றோம். கூடுவாஞ்சேரி
ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் தொடங்கிய பயணம், தற்போது வரை நீண்டு கொண்டே
வருகின்றது. ஒவ்வொரு சேவையிலும் குருமார்களின் ஆசியை, அன்பை நாம் நன்கு உணர
முடிகின்றது. இன்றைய நாள் நாம் இரண்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இதனை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகின்றோம்,
தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு குருவருளால் கூடுவாஞ்சேரியில் அன்னசேவை செய்து வருகின்றது. இந்த அன்னசேவை தற்போது கடந்த 5 மாதங்களாக சின்னாளபட்டியிலும் நடைபெற்று வருகின்றது. இந்த தொண்டில் நாம் திண்டுக்கல்லில் அன்னசேவை செய்வதற்கு மாதம் தோறும் அரிசி 1 சிப்பம் வாங்கி தந்து வருகின்றோம்.
இன்றைய ஐப்பசி பூச நட்சத்திரத்தில் குருவருளால் உளுந்தூர்பேட்டையில் அன்னசேவை தொடர உள்ளோம். இதன் பொருட்டு பாத்திரம்,அரிசி என சிறுதொகை அகத்திய அடியாரிடம் கொடுத்துள்ளோம். பண பரிமாற்றம் இத்துடன் இணைத்துள்ளோம்.மேலும் அன்னசேவைக்கான அரிசி மூட்டை நம் குழு சார்பில் வாங்கி தருவதாக கூறியுள்ளோம்.
TUT குழுவின் மூலம் சேவையாற்றி வரும் அனைவருக்கும் இந்தப்பதிவின் மூலம் நன்றி கூறுகின்றோம்.
1. கூடுவாஞ்சேரி - அன்னதானம் -திரு.சத்யராஜ்
2. சின்னாளப்பட்டி - நித்திய அன்னதானம்/சிறப்பு நாட்கள் - திரு.ராகேஸ்
3. திண்டுக்கல் - அன்னதானம் - திரு.செல்வம்
4. உளுந்தூர்பேட்டை - அன்னதானம் - திரு.ஞானம்
அடுத்த சிறப்பு செய்தியாக TUT குழு மூலம் தினசரி பதிகங்கள் படித்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வருகின்றோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பதிகங்கள்/பாடல்கள்/ இறை நாமங்கள் உச்சரித்து, பிரார்த்தனை நிறைவில்லோக ஷேமத்திற்காக செய்து வருகின்றோம். இன்று 50 ஆவது நாளை கூட்டுப் பிரார்த்தனை குரு நாளாக ஸ்ரீ அகஸ்திய சதகம் படித்து செய்ய உள்ளோம்.
இவை இரண்டும் TUT குழுவின் பயணத்தில் புதிய தொடக்கமாக கருதுகின்றோம். இவை அனைத்தும் குருவருளால் மட்டுமே சாத்தியமாகின்றது.
இனி புரட்டாசி மாத ஆயில்ய தரிசனம் காண இருக்கின்றோம். புரட்டாசி மாத ஆயில்ய வழிபாடு மூன்று தலங்களில் மிக சிறப்பாக நடைபெற்றது .TUT குழு வழிபாடு 3 கோவில்களில் குருவருளால் சிறப்பாக நடைபெற்றது
1. கூடுவாஞ்சேரி ஶ்ரீ அகத்தியர் வழிபாடு. நன்றி திரு.சத்யராஜ்
2. தென்காசி இளஞ்சி முருகர் ஶ்ரீ அகத்தியர் பாதம் வழிபாடு . நன்றி திரு.மாதவன்
3. மதுரை பசுமலை ஶ்ரீ அகத்தியர் வழிபாடு
அனைத்து வழிபாட்டிலும் லோக ஷேமத்திற்காக பிரார்த்தனை செய்தோம்
புரட்டாசி ஆயில்யம் நமக்கு பல அருள்நிலைகளை அள்ளித் தந்துள்ளது. வழக்கம் போல் கூடுவாஞ்சேரியில் புரட்டாசி ஆயில்யம் பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் பூஜையில் துளசி சாற்றி குருநாதருக்கு வழிபாடு செய்யப்பட்டது. நாமும் நம் குருநாதர் வாக்கிற்கிணங்க புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடும், ஆயில்ய வழிபாடும் ஒரு சேர மதுரை பசுமலை ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் தரிசனம் பெற்றோம்.
தென்காசி இளஞ்சி முருகர் ஶ்ரீ அகத்தியர் பாதம் வழிபாடு அருள்நிலையை இங்கே சமர்ப்பிக்கின்றோம்.
அடுத்து மதுரை பசுமலை ஸ்ரீ அகத்தியர் தரிசனம் காண இருக்கின்றோம்.
இந்த மூன்று தரிசனத்தையும் இணைத்துப் பாருங்கள். இதோ..கீழே தருகின்றோம்.
1. தேடல் உள்ள தேனீக்கள் குழு சார்பில் புரட்டாசி 5 சனிக்கிழமை இனிப்பு தருதல்
2. மூன்றாம் சனிக்கிழமை நம் தளம் சார்பில் குருவருளால் அன்னதானம்
3. அன்றைய தினம் புரட்டாசி ஆயில்ய வழிபாடு. பெருமாள் ஆசியாக உணர்த்தப்பட்டோம்
4. குருநாதர் அருளிய வாக்கை மேற்கொண்டோம். ஆலயத்தில் 30 நிமிட தியானம்
5. ஆலய தல விருட்சம் 108 முறை சுற்றுனோம்
6. ஆயில்ய வழிபாடாக ஶ்ரீ அகத்தியர் வழிபாடு, சனிக்கிழமை பெருமாள் வழிபாடு. துவாதசி அன்னதானமாக அமைந்தது.
7. மிக நீண்ட மாதங்கள் கழித்து, ஆயில்ய வழிபாட்டில் , சித்தர்கள் போற்றி படித்து வழிபாடு
8. மதுரை பரமசிவன் ஐயாவுடன் சந்திப்பு, அவரிடமிருந்து நம் தளத்திற்கு பொருளுதவி பெற்றோம்.
9. இந்தக் கோயில் திருப்பணி முதல் தொலைபேசியில் அகத்தியம் ஊட்டும் வடிவு அம்மாவை முதன்முதலாக அன்று நேரில் சந்தித்தோம்
10.
நம் தளம் சிறப்பான தரிசனம், பூசை, அன்னதானம், தீப எண்ணெய் தானம், ஆலய
திருப்பணி அன்பர்கள் மரியாதை என அனைத்தும் குருவருளால் மிகச்சிறப்பாக
அமைந்தது
இது போல் ஏராளமான சிறப்புகளை, ஆசிகளை நம் குழு அன்று பெற்றது.
அன்றைய நாள் இனியதொரு அனுபவமும், பரவசமும். கண் நிறைய அபிஷேகமும், மனம் நிறைய குருநாதரின் அருளும் பெற்றோம்.
ஐப்பசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 29.10.2021
மெய் அன்பர்களே.
நிகழும்
மங்களகரமான பிலவ வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் நாள் 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று ஆயில்ய நட்சத்திர தினத்தில் மாலை 5 மணி முதல்
கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம்,
அலங்காரம் செய்து ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து
சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
No comments:
Post a Comment