"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Saturday, September 4, 2021

கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியரே! சரணம் !!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய ஆவணி மாத ஆயில்ய நாளில் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் பெருமானின் தரிசனம் பெற இருக்கின்றோம். நெஞ்சார நினைப்பவர்க்கு என்றும் நிழலாக இருப்பவர் நம் குருநாதர் ஆவார். இன்றைய தரிசனம் பெறுவதற்கு முன்னர் நம் குருநாதர் அருளிய சில அருள்வாக்கை இங்கே பகிர்கின்றோம். இவை அனைத்தும் தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலில் நம் குருநாதர் ஸ்ரீ அகத்தியர் பெருமான் அருளியவை ஆகும். இந்தப் பதிவின் மூலம் தஞ்சாவூர் சித்தர் அருட்குடிலிற்கும், திரு கணேசன் ஐயாவிற்கும் நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சென்ற வாரம் நமக்கு கிடைத்த தரிசனம் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.


காண கண் கோடி வேண்டும் எம் குருவே... எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கும் எம் தாயே... என்று உணர்த்தவே வெண் பட்டு உடுத்தி, வெண் தாமரை தரிசனம் தருகின்றீர்.

அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தை சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்  சற்குருவே!  அகத்தியா! வா!...வா!...வா!... 

என்று உம்மை தொழுது கொண்டே இருக்க அருள்வீரே! 

அடுத்து..சில அருள்வாக்குகள் பகிர உள்ளோம்.









அடுத்து சென்ற ஆண்டில் கிடைத்த ஆயில்ய தரிசனம் ஆகும். ஆரம்ப காலத்தில் கூடுவாஞ்சேரியில் பூக்கள் வாங்கி தரிசனம் செய்ய தயார் ஆவோம். பின்னர் தாம்பரம் சென்று பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்கி மாலை கட்டி, நம் குருநாதருக்கு அழகு பார்க்க ஆரம்பித்தோம். இதோ உங்கள் பார்வைக்கு தருகின்றோம்.




வீட்டில் பூ மாலை கட்டி தயார் செய்தோம். அப்படியே கூடுவாஞ்சேரி கோயிலுக்கு செல்வோமா?




பூசை பொருட்கள்அனைத்தும் தயார் நிலையில்.


பஞ்சாமிர்த அபிஷேகத்தில் நம் குருநாதர் 



அபிஷேகத்தில் இடையே குருநாதரை பாக்களால் போற்றினோம்.




திருநீற்று அலங்காரத்தில் நம் குருநாதர்.



கருணை வடிவாக நம் குருவை கண்டோம்.


லோக ஷேமத்திற்காக சங்கல்பம் செய்த காட்சி 





கற்பூர ஆராதனையில் 




குருவே 
திருவே 
எம்மை ஆளும் தாயே 
தந்தையே 
தமிழே 
உம்மை போற்றுவதே 
எங்கள் பணியாக!







மலர்க்கூட்டத்தில் மன்னனின் தரிசனம். வேறென்ன வேண்டும்? இது ஒன்றே போதும். 




ஊரப்பாகத்தை சேர்ந்த திரு.கந்தசாமி ஐயா வழிபட்ட நிலையில்.


காதலாகிக் கசிந்து கண்ணீர் வழிந்தோட, குருமார்களை போற்றினோம். சித்தர் துதிகளை படித்தோம்.

நீ கவலைப்படாம போ... நான் பாத்துக்குறேன் என்ற தொனியும், கருணையும், அபயமளிக்கும் தோற்றமும்தான் பரவசத்தைத் தந்து கொண்டிருக்கின்றது.

அன்றைய நாள் இனியதொரு அனுபவமும், பரவசமும். கண் நிறைய அபிஷேகமும், மனம் நிறைய குருநாதரின் அருளும் பெற்றோம். 

இன்றைய ஆயில்ய ஆராதனையில் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி பிரார்த்தனை செய்கின்றோம்.

மீள்பதிவாக:-

ஓம் எம் அப்பன் அகத்தீசனே போற்றி! போற்றி!! - ஆவணி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 05.09.2021 - https://tut-temples.blogspot.com/2021/09/05092021.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - ஐப்பசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 08.11.2020 - https://tut-temples.blogspot.com/2020/11/08112020.html

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான் - புரட்டாசி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 12.10.2020 - https://tut-temples.blogspot.com/2020/10/12102020.html

 எமையே ஆள்கின்ற அகத்தீசனே போற்றி! - ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 15.09.2020 - https://tut-temples.blogspot.com/2020/09/15092020.html

 ஒரே கல்லுல ரெண்டு மாங்கா : ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு & அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 18.08.2020 - https://tut-temples.blogspot.com/2020/08/18082020.html

அகத்தீசனே சரண் சரணம் - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆடி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/07/blog-post_21.html

ஓம் அகத்தீஸ்வராய நமஹ - கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆனி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_24.html

அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - கூடுவாஞ்சேரி அகத்தியர் வைகாசி மாத ஆயில்ய கூட்டுப் பிரார்த்தனை! - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_26.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு  - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html

பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html

குருவடி பொற்றாள் சரண் சரணம் - தை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/02/blog-post_92.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_10.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - கார்த்திகை மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 2 - https://tut-temples.blogspot.com/2019/12/2_14.html

ஞானத்தேவே! வருக! வருக!! - ஐப்பசி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை & கந்த ஷஷ்டி விரத காப்பு கட்டுதல் அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_21.html

மதியேது விதியேது கதியுந்தன் பொற்பாதமே - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_25.html

குருநாதர் ஸ்ரீ அகத்தியர் வழிபட்ட தலம் - ஸ்ரீ இருவாலுக நாயகரை தரிசிக்க வாங்க! - https://tut-temples.blogspot.com/2019/10/blog-post_35.html

மெய்ஞ் ஞான குருபரனை பூசை பண்ணு - அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 25.09.2019 - https://tut-temples.blogspot.com/2019/09/25092019.html

No comments:

Post a Comment