"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Thursday, September 9, 2021

மூத்தோனை வணங்கு - விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தள வாசகர்களுக்கும், நம் சேவைகளில் பங்கு கொண்டு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.  

இன்றைய பதிவில்  பிள்ளையார்பட்டி கதாநாயகனை தரிசித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது? இதனை போன்ற பதிவை 2019 ஆம் ஆண்டிலும் தொடர்ந்தோம். இன்றும் அதனை தொடர விரும்புகின்றோம். நம் தளத்திற்கும், விநாயகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஏனென்றால் இன்று வரை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் அருளாலும், முருகப் பெருமான் ஆசியாலும் நம் தளத்தின் சேவைகள் தொடர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் மோட்ச தீப வழிபாடு, உழவாரப் பணி தவிர ஏனைய சேவைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 

நம்  தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழு ஆரம்பித்த புதிதில் முதன் முதலாக விநாயகர் சதுர்த்தி வழிபாடு கொண்டாடிய விதம் இன்னும் நம் நெஞ்சில் இனிப்பாக இருக்கின்றது. 




மூத்தோனை வணங்குகின்றோம். தற்போது நாம் சந்தித்து வரும் பல பிரச்சினைகளில் இருந்து நாம் விடுபட மூத்தோனை வணங்குவோம். கிரக ரீதியாகவும் பார்க்கும் போது ராகு,கேது கோள்களின் ஆதிக்கத்தினால் தான் வைரஸ் காய்யச்சல் பரவி வருகின்றது என்றும் சொல்கின்றார்கள். விநாயகர் கேதுவின் அம்சம் ஆவார்.நம் குருநாதர் அகத்திய பெருமானும் கேதுவும் அம்சம் ஆவார். எனவே குருவாகவும், திருவுமாகவும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ அகத்தியர் தரிசனமும், ஸ்ரீ விநாயகர் தரிசனமும் ஒருங்கே இங்கே பெற முடிகின்றது. 

            


ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்று பாடி ஸ்ரீ விநாயகர் பாதம் பற்றுவோம். போற்றுவோம்.



சில வருடங்களுக்கு முன்பு குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் விநாயகர் சதுர்த்தி நன்னாள் அன்று மூத்தோன் குறித்து உரைத்த அற்புதமான வாக்கு. தஞ்சை ஸ்ரீ அகத்தியர் ஜீவ அருள் நாடியில் படிக்கப்பட்ட வாக்குகள் இங்கே பகிர உள்ளோம்.

இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமாய் இஃதொப்ப எமது வாக்கை கேட்க வேண்டும் என்று எண்ணி, அஃதும், முன்னர் கூறிய வாக்கினை மீண்டும் கேட்க வேண்டும் என எண்ணி, அதனை பலருக்கும் பகிர வேண்டும் என எண்ணி, இன்னவன் இதழ் ஓதுபவன் இஃதொப்ப ஓலை தன்னை எடுத்திட்டாலும் இஃதொப்ப செயல் சிறப்பு என்று கூறுவதற்கு இல்லை. இல்லையப்பா, ஒரு முறை கூறிய வாக்கை அதைப்போல மீண்டும் கூற ஜீவ அருள் ஓலையில் விதி. என்றாலும் சில சமயம் கூறுகிறோம், சில காரணங்களுக்காக.

இருப்பினும் அதனையே வலிமையாய் பிடித்துக் கொண்டு அடிக்கடி எமை நாடுவது சிறப்பல்ல. என்றாலும் இதன் மேலும் பிரம்ம முகூர்த்த நாழிகை பூர்த்திக்கு பிறகும் கேட்பது சிறப்பல்ல என்றாலும் இஃதொப்ப ஆர்வம் கொண்ட சேய்கள் அஃதொப்ப சேய்கள் தன் மன வருத்தம் கொண்டிடாமல் இருக்க இஃதொப்ப நல்விதமாய் இன்று மட்டும் இஃதொப்ப சில்வாக்கை கூறுகிறோம், இறையருளால்.

இறையருளால் இத்தருணம் இதனை கூறுவதால் இதனையே அன்றாடம் வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்வது சிறப்பல்ல என்பதை புரிந்து கொள்வது எம் சேய்களுக்கு அவசியம் ஆகும். ஆகுமப்பா, இஃதொப்ப நல்விதமாய் பரிபூரண சரணாகதி இறை வழிபாடும். தன்னலம் கருதா தொண்டும், சாத்வீக எண்ணமும், வாழ்வும் அவசியம். இஃதொப்ப வழியில் எமை நாடும் சேய்கள் நாளும் செல்ல இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். 

இயம்புகிறோம், சில்வாறாய் முன்னர் கூறிய மூத்தோன் குறித்த வாக்கு தன்னை, ஆனாலும், சற்றே இத்தருண கிரக நிலைக்கு ஏற்ப மாற்றித்தான், மாற்றித்தான் கூறுவதால் அஃதொப்ப வாக்கு வேறு, இஃதொப்ப வாக்கு வேறு என எண்ணாமல் அனைத்தும் இறையருள் என்று எண்ணுவதே சிறப்பு அப்பா. இஃதொப்ப நன்றாய் எமது வாக்கை புரிந்துகொண்டு இறை வழியில் வர நல்லாசிகள். எம் சேய்கள் அனைவருக்கும்.

மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இம்மண்ணின் மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்றால் வேழ முகத்தோன் என்ற பொருள் கொண்ட அஃதொப்ப மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.  
எதற்கும் முன்பாக, எச்செயலுக்கும் முன்பாக மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப தடைகள் வாராது செயல் நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, 
என்றென்றும், எதற்கும் முன்மாதிரியாக மூத்தோனை வணங்கு. நல்விதமாய் செயல் நடக்க மூத்தோனை வணங்கு.
நற்காரியம் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு. 
நலம்தான் தொடர என்றென்றும் மூத்தோனை வணங்கு. 
நன்மைகள் நாளும் பெருக நாள்நாளும் மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் பாவ வினைகள் குறைய நன்றாய் மூத்தோனை வணங்கு. 

நவில்கின்றோம், விருக்ஷத்தின் அடியில், வன்னி விருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருக்கும் மூத்தோனை வணங்கு. தேக நலம் பெருகும். 
நவில்கின்றோம் நன்றாய், விருக்ஷத்தின் அடியில், அரச விருக்ஷத்தின் அடியில் உள்ள மூத்தோனை வணங்கு. அஃதும் தேக நலத்தோடு வம்ச விருத்தியையும் நல்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய் இஃதொப்ப கிழக்கு திசை பார்த்த மூத்தோனை வணங்கு. நல்விதமாய் இஃதொப்ப லோகாய வெற்றிகள் கிட்ட வாய்ப்பை நல்கும்.
நவில்கின்றோம், மேல் திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்து கொள்ள, எதனையும் நன்றாய் புரிந்துகொள்ள அஃது உதவுவதோடு தேகத்தையும் காக்கும். 
நவில்கின்றோம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நன்றாய், தென் திசை பார்க்க உள்ள மூத்தோனை வணங்கு. நன்றாய் புரிந்துகொள்ளலாம். இஃதொப்ப அச்சங்கள் குறைய, எஃது குறித்தும் அச்சங்கள் குறைய இஃதொப்ப வழிபாடு உதவும். 
நவில்கின்றோம், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வட திசை நோக்கிய மூத்தோனை வணங்கு. இஃதொப்ப நன்றாய், வட திசை நோக்கிய மூத்தோனை வணங்க நாள் நாளும் செல்வம் பெருகுவதோடு நன்றில்லா ருண குழப்பம் தீருமப்பா.

இஃதொப்ப கூறுகிறோம் மீண்டும், மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
நாள் நாளும் காரியங்கள் தடையின்றி நடக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
எஃதொப்ப செயல் துவங்கும் முன்னர் மூத்தோனை வணங்கு. எச்செயல் ஆனாலும் அதற்கு முன் மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப நன்றாய் பயணத்தின் முன் மூத்தோனை வணங்கு. இயம்புகிறோம், சுப மங்கள நிகழ்வுக்கு முன்னால் மூத்தோனை வணங்கு. 
இயம்புகிறோம் மேலும் நன்றாய், காரிய தடை கண்டு கலங்காமல் இருக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோன் என்னும் வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு.

கூறுகிறோம் நன்றாய், வாசியோகம் சித்திக்க மூத்தோனை வணங்கு. 
நல்விதமாய் வாழ்வு நிலை சித்திக்க மூத்தோனை வணங்கு. நவில்கின்றோம் நன்றாக காரியங்கள் யாவும் வசப்பட்டு நிச்சயமாய் அனைத்தும் கிட்ட மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கூறுகிறோம், உள்ளிருக்கும் ஆத்ம ஒளியை தரிசிக்க மூத்தோனை வணங்கு. 
உள்ளே இருக்கும் அஃதொப்ப ஒளி தன்னை உணர மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், அனைத்து கிரக தோஷம் குறைய மூத்தோனை வணங்கு. 
குறிப்பாக, சிகியின் தாக்கம் குறைய மூத்தோனை வணங்கு. கூறுகிறோம் மேலும், சர்ப்ப தாக்கம் குறைய, முழுமையாய் சர்ப்ப தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. 
கூறுகிறோம், மங்கல தோஷம் நீங்க மூத்தோனை வணங்கு. மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
நன்றாய், குண்டலினி சக்தியை உணர்ந்து, உணர்ந்து மேலேற்ற மூத்தோனை வணங்கு. 
நவில்கின்றோம் இஃதொப்ப லோகாயம் தாண்டி மேலேற, மேலேற, ஆத்ம வழியில் மேலேற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
இஃதொப்ப மூச்சடக்கி இஃதொப்ப முக்காலம் தவத்தில் இருக்கும் அஃதொப்ப பயிற்சி சித்திக்க மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 
இஃதொப்ப கிரகங்கள் மாறும் காலம் மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. 

அன்றாட வாழ்வில் எதிர்படும் அனைத்து சிக்கலையும் குறைக்க அஃதொப்ப கர்ம வினை தடுத்து, தடுத்து வாட்டும் நிலை மாற மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு.
வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு, வேழ முகத்தோனை வணங்கு. 
மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு, மூத்தோனை வணங்கு. ஆசிகள்.

ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ அருள்நாடி வாக்குகளை படித்து,பொருள் உணர்ந்து அதன் படி நடந்து அனைவரும் பயன் பெறுங்கள்.

இனி விநாயகசதுர்த்தி திருவிழா 2021 பிள்ளையார்பட்டியிலிருந்து காண இருக்கின்றோம்.
                                                                                                                                                                            பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர்  திருக்கோயில் காலை கொடியேற்றம், மாலை வெள்ளி மூஷிக வாகனம். நாள்:01.09.2021






பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர்  திருக்கோயில்  மாலை தங்க சிம்மவாகனம் - 02.09.2021






 பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பகவிநாயகர்  திருக்கோயில் மாலை வெள்ளி நாகவாகனம் - 03.09.2021





பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் திருக்கோவில் விநாயகர் சதுர்த்தி திருவிழா 4ஆம் நாள் 04.09.2021 மாலை அலங்காரம்




பிள்ளையார்பட்டி விநாயகர் சதுர்த்தி திருவிழா 5ஆம் நாள் 05.09.2021 மாலை விழா அலங்காரம்




பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சதுர்த்தி விழா ஆறாம் நாள் 06.10.2021







பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சதுர்த்தி விழா ஆறாம் நாள் 07.10.2021






பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 8ஆம் நாள் 08.09.2021 மாலை விழா அலங்காரம்





பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழா 9ஆம் நாள் 09.09.2021 மாலை விழா அலங்காரம்







அனைவரும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தரிசனம் 
பெற்று இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். நாளை விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் விளக்கேற்றி கொண்டாடி, கம் என்று இருந்து, அந்த இறையின் நிலைத்தன்மை நம்முள் பெற முயற்சிப்போம்.

ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் ஆலயம் ரயில் நிலையம் அருகில் கூடுவாஞ்சேரி விநாயகர் சதுர்த்தி பெருவிழா  10/09/2021 வெள்ளிக்கிழமை அதை முன்னிட்டு (09/0921)தேதி வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் தொடக்கம் முதல் கால பூர்ணாகுதி  இரவு 8 மணிக்கு வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தி அன்று காலை 06-00 மணிக்கு கணபதி ஹோமம் இரண்டாவது கால பூஜை   07-30 மணிக்கு மகா அபிஷேகம் காலை 08-30 மணிக்கு மகா தீபாராதனை 11 மணிக்கு உற்சவர் 1008 மோதக சகஸ்ரநாம அர்ச்சனை மூலவர் மாலை 4-00 மணிக்கு மூலவருக்கு சந்தன காப்பு அலங்காரம் 1008 மோதக சகஸ்ரநாம அர்ச்சனை அனைவரும் வருக விநாயகப்பெருமான் பேரருள் பெறுக அரசு சொல்லுகின்ற அனைத்து நெறிமுறைகளையும் கடைபிடித்து இறைவழிபாட்டை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


மீண்டும் ஒருமுறை நம் தளத்தின் பதிவுகளை பகிரும் அன்பர்களுக்கும் நம் தளம் சார்பில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_59.html

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி, விநாயகர் சதுர்த்தி - சிறப்பு பதிவு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் பாதம் போற்றுவோம் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_22.html

 கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமர சுயம்பு சித்தி விநாயகர் சதுர்த்தி பெருவிழா அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_35.html

 விநாயகர் சதுர்த்தி தின விழா ...தொடர்ச்சி (1) - https://tut-temples.blogspot.com/2019/08/1_30.html

 TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temples.blogspot.com/2019/08/tut_29.html

No comments:

Post a Comment