அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
குருவே சரணம். குருவின் தாள் என்றும் பணிகின்றோம். அகத்தியம் என்பது
பெருங்கடல். அதில் நாம் தினமும் சிறிது நீர்துளிகளை மட்டும் பருகி
வருகின்றோம். ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் வந்த பிறகு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக குருநாதர் அருளில் திளைத்து வருகின்றோம். கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் வழிபாட்டில் தொடங்கிய பயணம், தற்போது வரை நீண்டு கொண்டே வருகின்றது. ஒவ்வொரு சேவையிலும் குருமார்களின் ஆசியை, அன்பை நாம் நன்கு உணர முடிகின்றது.தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு தெய்வீக விவாஹ விழா - 01.09.2021 அன்று நடைபெற்றது. 03.09.2021 வெள்ளிக்கிழமை அன்று குருவின் பிரசாதம் பெற்றுக்கொண்டோம். குருவின் அன்பிற்கு, கருணைக்கு எல்லையேது! என்பதை இதன் மூலம் உணர்ந்து கொண்டோம்.
இத்துடன், இன்று
(04/09/2021) ஓதியப்பர் (சுப்ரமண்யரின்) திருநட்சத்திரம். மனம் ஒன்றி,
அவரை நினைத்து, ஏதேனும் ஒரு நல்ல கர்மாவை செய்து, அவர் அருள்
பெற்றுக்கொள்ள வேண்டிய நாள்.இன்றைய சேவையும், வழிபாடும் குருமார்களின் ஆசியால் சிறப்பாக நடைபெற்றது.
இன்றைய ஓதியப்பர் அவதாரத்திருநாள் வழிபாடாக சின்னாளப்பட்டி ஸ்ரீ சதுர்முக முருகப் பெருமானுக்கு 10 லி பாலாபிஷேகத்துடன் நம் தளம் சார்பில் லோக க்ஷேமம் பொருட்டு வழிபாடு செய்தோம்.
மேலும் இன்று காலை, மதியம் என இரு வேளையும் வடை, பாயசத்தோடு மேட்டுப்பட்டி வள்ளலார் சபையில் குருவருளால் அன்னதானம் செய்தோம்.சுமார் 25 அன்பர்கள் இன்று பசியாறினார்கள்.
இவை அனைத்தும் எளிதாக நடக்குமா என்ன? அந்த பரம்பொருளின் விருப்பமும், குருமார்களின் ஆசியினால் மட்டுமே சாத்தியம் என்பது கண்கூடு. கூடுவாஞ்சேரி ஸ்ரீ மாமரத்து விநாயகர் கோயிலில் வழக்கம் போல் நமது சேவைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.இத்துடன் புது முயற்சி ஒன்றும் குருவருளால் நடைபெற்றுள்ளது.
நம் தேடல் உள்ள தேனீக்களாய் - TUT குழுவின் புதிய சேவையாக மருத்துவ சேவை குருவருளால் தொடர உள்ளோம். 2020 ஆம் ஆண்டில் குருநாதர் வாக்கில் ஆதூர சாலை என்று நமக்கு கூறினார். இதனையொட்டி நாம் மருத்துவ சேவையாக பொருளுதவி செய்து வந்தோம். இன்று மாலை கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயிலில் பௌர்ணமி வழிபாடு முடித்து, அன்பர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் மூலிகை கஷாயம் பிரம்ம ஸ்ரீ எத்திராஜ ராஜயோகி சுவாமிகள் ஜீவசமாதி கோவில் மூலம் இன்று மாலை 6 மணிக்கு தர உள்ளோம். அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு குருவருளும், திருவருளும் பெற வேண்டுகின்றோம்.
ஆம்.சென்ற ஆடி பௌர்ணமி அன்று நோய் எதிர்ப்பு சக்தி கசாயம் அனைவருக்கும் வழங்கப்பட்டது... உதவி செய்த திரு ராஜா திரு சிவகுரு திருமதி ஜனனி செல்வி ஜெயந்தி மற்றும் உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
அடுத்து தீப எண்ணெய் நம் தளம் சார்பில் ஊரப்பாக்கம் ஸ்ரீ எத்திராஜ் சுவாமிகள் கோயிலுக்கு வழங்கப்பட்டது.
மேலும் கூடுவாஞ்சேரி அன்னசேவை, முதியோர்கள் அன்னசேவை என தொடர்ந்து செய்து வருகின்றோம்.
இவற்றுடன் சில தான ,தர்ம சேவைகள் நம் தளத்தின் மூலம் குருவருளால் நடைபெற்று வருகின்றது. பொது வெளியில் நம்மால் அனைத்தையும் பகிர வாய்ப்பில்லை. குருவின் வழியை பின்பற்றுவதை தவிர நாம் ஒன்றும் அறியவில்லை.
குருவின் வழியில் நடப்பது அவ்வளவு எளிதன்று. என்றும் குருவின் பதமும், பாதமும் பிடித்து நம் சேவைகளை தொடர்வோம். இந்தப் பதிவின் மூலம் நாம் பெற்று வரும் குருவின் ஆசியை தொட்டுக்காட்டி இருக்கின்றோம். ஆங்..சொல்ல வந்த செய்தியை மறந்து விட்டோமே..
ஆவணி மாத ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - 05.09.2021
மெய் அன்பர்களே.
நிகழும்
மங்களகரமான பிலவ வருடம் ஆவணி மாதம் 20 ஆம் நாள் 05.09.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று ஆயில்ய நட்சத்திரமும், சித்த யோகமும்
கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர்
ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு அபிஷேகம்,
அலங்காரம் செய்து ஆராதனை செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து
சித்தர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.
மீள்பதிவாக:-
No comments:
Post a Comment