அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
சித்தர்கள் நம்மை வாழ்விக்க வந்தவர்கள். பார்ப்பதற்கு பித்தர்கள் போன்று தோன்றலாம். சிவத்தை ஜீவனில் உணரும் போது பித்தம் தெளிந்து சித்தம் வெளிப்படும். சிலர் குருவாக, சிலர் சற்குருவாக, சிலர் சத்குருவாக என வாழையடி வாழையாய் ஞானம் போதிக்க வருபவர்கள். சென்னையில் மட்டுமா சித்தர் பரம்பரை உள்ளது என்று நினைத்த நமக்கு தமிழ் நாடு என்ற அளவில் விரிந்து பார்த்தோம். அத்தனையும் தாண்டி பாண்டிச்சேரியில் இன்னும் உயிர்ப்பாக சித்தர்களின் அருளை உணர முடிகின்றது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் சித்தர்களின் பாதம் பட்டுள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தமிழ்நாடு முழுதுமே ஞான பூமி. சிவ பெருமானின் 64 திருவிளையாடல் தமிழ் நாட்டில் தானே நடைபெற்றது. இதனால் தான் தென்னாடுடைய சிவனே போற்றி என்றும் போற்றி வருகின்றோம்.
இந்த வரிசையில் நாம் பல சித்தர்கள்,மகான்கள், ஞானியர்கள் தரிசனம் நம் தளத்தில் பெற்று வருகின்றோம். இதற்கு முந்தைய பதிவில் மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி அறிந்தோம். இங்கே நாம் சித்தர்கள், மகான்கள் பற்றி எளிதாக தொட்டுக்காட்ட இயலவில்லை. ஒவ்வொரு பதிவிலும் குருவின் அருளை நன்கு நாம் உணர முடிகின்றது. மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி பலமுறை கேள்விப்பட்டிருந்தாலும் இந்த ஆண்டில் நாம் பதிவாக தர காரணம் திரு. யாணன் அவரகள் ஆவார். ஆம். திரு. யாணன் அவர்கள் மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி தொடர் பதிவாக காணொளிகள் வெளியிட்டிருந்தார். இந்த காணொளிகள் மூலம் நமக்கு மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் பற்றி உணர்த்தப்பட்டு, நாம் பதிவு குருவருளால் வெளியிட்டோம். இது போன்று தான் நம் தலத்தில் ஒவ்வொரு பதிவும் குருவின் உத்தரவால் தான் அருளப்பட்டு வருகின்றது.
இந்த ஞானியர்களின் ஓட்டத்தில் வருகின்ற திங்கட்கிழமை 29 ஆம் ஆண்டு குரு பூஜை காணும் விளமல் ஸ்ரீ குரு முனியசுவாமிகள் பற்றி அறிய இருக்கின்றோம்.
ஸ்ரீ குரு முனியன் சுவாமிகள் 1930-ம் வருடம் ஏழைக் குடும்பத்தில் அவதரித்த ஒரு அவதூத மகான்.திருவாரூர் மடப்புரம் கு ரு தட்சிணாமூர்த்தி கள் சுவாமிகள் மடம் அருகே தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் மறு அவதாரமாக மடத்தை சுற்றியே திரிவார்.
மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் எடுத்த அவதாரத்திற்கும், விளமல் ஸ்ரீ குரு முனியன் சுவாமிகள் என்று எடுத்த அவதாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் கடைசி காலத்தில் நிர்வாண சுவாமிகள் சுவாமிகள் ஆனார். விளமல் ஸ்ரீ குரு முனியன் சுவாமிகள் இளமையிலேயே நிர்வாண சுவாமிகள் ஆனார். இருவரும் திருவாரூரில் பல சித்துக்கள் செய்துள்ளார்கள். இருவரின் குரு பூஜையும் ஆவணி மாதத்தில் நடைபெற்று வருகின்றது. ஆவணி மாதம் உத்திரம் நட்சத்திரம் மடப்புரம் மகான் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குருபூஜை ஆகும். ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரம் ஸ்ரீ குரு முனியன் சுவாமிகள் குரு பூஜை ஆகும்.
No comments:
Post a Comment