"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Sunday, June 6, 2021

சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை - 07.06.2021

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

சித்தர்கள் அறிவோம் என்ற தொடரில் பல சித்தர்களை நாம் தொட்டு காட்டியுள்ளோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில்  அருள்மிகு   சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி  தரிசனம் பெற இருக்கின்றோம்.

இன்று சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகளின் 23-ஆம் ஆண்டு குருபூஜை திருக்கச்சூரில் உள்ள ஜீவ சமாதி கோயிலில் நடைபெற்று வருகின்றது.

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே  ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது. சரி..இனி அங்கே செல்வோமா?



தர்மமிகு சென்னை எப்படி சித்தர்களின் அருளில் திளைக்கின்றதோ, செங்கல்பட்டு ஊரும் சித்தர்களின் அருளில் நிலை பெற்று உள்ளது. இதற்கு சான்றாக ஸ்ரீ ராகவா சுவாமி, குழந்தை வேல் சுவாமிகள், ஸ்ரீ மாதாவானந்த சுவாமி,ஸ்ரீலஸ்ரீ பதஞ்சலி சுவாமிகள், ஸ்ரீ பொன்மார் சித்தர், சதனபுரி மஹாத்மா ஸ்ரீ ராமச்சந்திர குரு சுவாமிகள்,ஸ்ரீலஸ்ரீ சுப்பையா சுவாமிகள்,பிரம்ம ஸ்ரீ எத்திராஜா  ராஜயோகி சுவாமிகள்,ஸ்ரீலஸ்ரீ முத்து சுவாமி,புலிப்பாக்கம் வியாக்ரபுரீஸ்வரர் கோயில் என சொல்லிக்கொண்டே போகலாம். நாம் எப்பேர்ப்பட்ட நாட்டில் வாழ்ந்து வருகின்றோம் என்பது இது போன்ற அருள் நிலையில் தான் வெளிப்படும். இதனை நாம் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளில் காணலாம்.

அகத்திய மஹரிஷி அருள் நாடி வாக்கு

1) ஒரு ஆத்மா மீண்டும் இந்த பூமியிலே பிறக்க வேண்டிய ஒரு சூழல் வரும்போது, இதுவரை எடுத்த மொத்த ஜென்மங்கள் எத்தனை? அதில் கழித்த பாவங்கள் எத்தனை? சேர்த்த புண்ணியங்கள் எத்தனை? இந்த விகிதாசாரத்தின் அடிப்படையிலே ஓரளவு புண்ணியம் இருந்தால்தான் மனிதனாகவே பிறக்க முடியும். அதற்கே அவன் சேர்த்து வைத்த புண்ணியம் செலவாகி விடும். 

2)மிகுதி புண்ணியம் இந்த பூமியிலே மேல்திசை நாடுகளிலே பிறக்காமல் இஃதொப்ப பாரத கண்டத்திலே, கர்ம பூமியிலே பிறப்பதற்கே சில புண்ணியம் வேண்டும். 

3) அதனினும் இறை மறுப்புக் குடும்பத்தில் இல்லாமல், இறையை நம்பக்கூடிய குடும்பத்தில் பிறப்பதற்கே, சில புண்ணியங்கள் வேண்டும். 

4) அஃதோடு மட்டுமல்லாமல் மகான்களின் தொடர்பு கிடைப்பதற்கும், ஸ்தல யாத்திரை செல்வதற்கும், தர்மங்களில் நாட்டம் வருவதற்கும் புண்ணியம் தேவைப்படும். 

5) பிறகு ஆணாக, பெண்ணாக, ஆரோக்கியமான உடல் கிடைக்க புண்ணியங்கள் வேண்டும். பெண்ணாக பிறப்பதற்கு புண்ணியம் வேண்டும். 
பெண் என்றால் பெண் தோற்றத்தில் மட்டுமல்ல. அந்தப் பெண் உணர்வை நன்றாக உணரக் கூடிய, பெண்மைக்குரிய குணங்கள் மேலோங்கி நிற்கக்கூடிய சாத்வீகமான பெண்ணாக பிறப்பதற்க்கென்றே சில புண்ணியம் தேவைப்படும். 

6) அதன் பிறகுதான் ஏனைய விஷயங்கள். கல்வி, பணி, பொருளாதாரம் என்று புண்ணியத்தைப் பகுத்துக் கொண்டே வந்தால் ஒரு நிலையில் புண்ணியம் தீர்ந்து விடும். 

7) எதோடு புண்ணியம் தீர்ந்து விடுகிறதோ, அதன் பிறகு அந்த ஆத்மாவிற்கு போராட்டமாகத்தான் இருக்கும். அதை(புண்ணியத்தை)த்தான் அவன், அந்த ஊரிலே பிரார்த்தனை செய்து, தர்மங்களை செய்து, சத்தியத்தைக் கடைபிடித்து சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொது நாம் சொல்வது புரியும் என்று நினைக்கின்றோம். ஆம். இங்கே தமிழ் நாட்டில் நாம் பிறப்பதற்கு நாம் செய்த புண்ணியமே காரணம் ஆகும். சரி, விசயத்திற்கு வருவோம். சித்தர்கள் தரிசன யாத்திரையில் நாம் அடிக்கடி திருக்கச்சூர் சென்று வந்தோம். மண்ணே மருந்து, மலையே மருந்து என்று சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் போற்றி வருகின்றோம்.

இங்கே தான் குருவும் சீடரும் என்று மெளனகுரு வீராசாமி சுவாமிகள் ஜீவ சமாதி உள்ளது.


திருக்கச்சூர் மலை அடிவார சித்தர் கோயிலில் நாம் இருக்கின்றோம். நம்மை வரவேற்கும் சுவாமிகள் தரிசனம் பெற்று உள்ளே செல்ல உள்ளோம்.


இதோ..இன்று குருபூஜை காணும் சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகள் தரிசனம் பெறுகின்றோம்,

இங்கே தான் இரண்டு அருளாளர்கள் அருள் தந்து கொண்டு இருக்கின்றார்கள். திருக்கச்சூர் தரிசனம் சென்றால் நமக்கு எப்படியும் குறைந்து 6 மணி நேரம் தேவைப்படும். திருக்கச்சூர் கிரிவலம் சுமார் 2 மணி நேரம் அடுத்து மருந்தீஸ்வரர் தரிசனம் 2 மணி நேரம், அடுத்து இங்கே சித்தர்கள் கோயில் தரிசணம்  மணி நேரம் என்று எடுத்து கொள்ளலாம். உள்ளே நுழைந்த உடன் சீடர் சற்குரு குழந்தைவேல் சுவாமிகள் தரிசனம் பெறலாம்.



இங்கே அமைதியை அன்பில் உணர்த்தினார்கள். அமைதியாக அமர்ந்து நம்மை உள்சென்று பார்க்கலாம். சுவர் முழுதும் ஏகப்பட்ட தகவலை உள்வாங்கினோம்.










சீடர் தரிசனம் பெற்ற பின்னர் எதிரே குருவின் தரிசனம் பெற்றோம். நம் நண்பர் திரு.சத்யராஜ் தரிசித்த போது 



 அங்கே ஐயாவின் உயிர்ப்பின் மேலே லிங்க பிரதிஷ்டை. ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமானாக இங்கே இருக்கின்றார்.



இது போன்ற உயிர்நிலைக்கோயில்களுக்கு சென்று நம் ஆற்றலை பெருக்கி கொள்ளுங்கள். இன்று 23 ஆம் ஆண்டு குருபூஜை காணும் சிவசற்குரு கண்ணாயிரம் (எ) மெளனகுரு வீராசாமி சுவாமிகள் தரிசனம் அனைவரும் பெற்று இருப்பீர்கள் என்று நாம் நம்புகின்றோம். 

இன்றைய நன்னாளில் போகர் சித்தர் குருபூஜையும் நடைபெற்று வருகின்றது. பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது.

அனைவரும் வீட்டிலேயே ஒரு நெய் விளக்கேற்றி வைத்து சித்தர்கள் போற்றியை துதித்து, 
ஓம் ஸ்ரீ போக சித்தரே போற்றி என்று உங்களால் முடிந்தவரை உருவேற்றி வழிபாடு செய்யுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

ஸ்ரீ போகர் சித்தர் குரு பூஜை - 07.06.2021 - https://tut-temples.blogspot.com/2021/06/07062021.html

மண்ணே மருந்து; மலையே மருந்து - சித்தர்கள் வாழும் திருக்கச்சூர் கிரிவலம் - https://tut-temples.blogspot.com/2020/08/blog-post_3.html

வள்ளலாரும் அகத்தியரும்! - https://tut-temples.blogspot.com/2021/06/blog-post.html

No comments:

Post a Comment