"அனைத்தும் இறைவா நீ!!!!!" சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம். சர்வம் சிவார்ப்பணம்.

Friday, June 25, 2021

ஆர்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - தானம் செய்ய பழகு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இந்த தொற்றுக்கிருமி காலத்தில் நம் குழு அன்பர்களின் உதவியால் வழக்கம் போல் நம் சேவைகள் தொடர்ந்து வருகின்றது. இன்றைய காலகட்டத்தில் தானம் செய்ய பழக வேண்டும்.திதிகளில் சிறந்தது துவாதசி திதி. மாதங்களில் சிறந்தது மார்கழி.  மந்திரங்களில் சிறந்தது காயத்ரி  அது போல் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பார்கள்.இதை எளிதாக சொல்லிவிடலாம் ,ஆனால் அனுபவித்து செய்யும் போது தான் இதன் உண்மை புரியும்.

தானம் என்றவுடன் அட.போப்பா...நாங்களே திண்டாடி வருகின்றோம் என்று நீங்கள் நினைப்பது நம் செவிகளில் விழுகின்றது. தவம் எப்படி பல நிலைகளில் உள்ளதோ, அதே போல் தானமும் பல வழிகளில் செய்யலாம். முதலில் நம் உடல்,மனம்   கொண்டு தானம் செய்ய பழகுங்கள். இந்த தானம் செய்ய செய்ய, பொருள் கொண்டு செய்யும் தானம் நமக்கு கிடைக்கும்.

கண்கள் - இரக்கத்துடன் பார்த்தல்

நாக்கு  - இனிய சொற்கள் பேசுதல் 

காது - பிறர் கூறும் வசைகள் பொறுமையுடன் கேட்டல், அடுத்தவரின் மனக்குமுறலை அக்கறையுடன் கேட்டல்

 கை,கால் - இவற்றைக்கொண்டு அடுத்தவருக்கு உதவுதல் 

மனம் - தினமும் உலகம் மேன்மைபெற வாழ்த்துதல் 

இவற்றை செய்வதற்கு பணம் வேண்டாம் அல்லவா? முதலில் சிறிது சிறிதாக முயற்சி பாருங்கள். நம்மில் பல மாற்றங்களை இந்த தானம் கொடுக்கும். இதனைத் தான் திருமூலர்  தெய்வம் பின்வருமாறு கூறுகின்றார்.


யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

திருமூலர் திருமந்திரம்

இந்த மந்திரம் வேதத்திற்கு சமமானதாகும்.

எளிமையான ஆனால் வலிமையான பதப்பிரயோகம் இதில் உபதேசிக்கப்பட்ட தர்மங்களை யாரும் எவ்வித கஷ்டமும் இல்லாமல் எப்போதும் செய்யலாம்.பகவான் பக்தியைத் தான் பார்க்கிறார். பக்தன் என்னை கொண்டு வந்திருக்கிறான் என்று பார்ப்பதில்லை. சில பச்சிலைகளைப் போட்டால் பரமேஸ்வரன் திருப்தி அடைந்து விடுகிறார்.

இதை யாரும் செய்யலாம். ஒரு பிடி புல்லை கோமாதாவான பசுவுக்கு ஊட்டலாம். இதில் முப்பத்து முக்கோடி தேவதைகளும் திருப்தி அடைந்து விடுகிறார்கள். இதையும் யாரும் எளிதில் செய்யலாம்.

தான் சாப்பிடும் ஆகாரத்தில் ஒரு கைப்பிடி ஒரே ஒரு கைப்பிடி அடுத்தவனுக்கு வழங்கலாம். இதுவும் யாரும் செய்யக் கூடிய எளிமையானதே.
இவைகளில் எதையும் செய்ய முடியவில்லையா பரவாயில்லை. அடுத்தவனோடு பேசும் போது கடுப்படிக்காதே. இதமாகப் பேசு. பதமாகப் பேசு. இல்லையென்று சொன்னாலும் அதையும் இனிமையாகச் சொல். இதையாவது செய்யலாமே.

நாம் மூச்சடக்க வேண்டாம். பேச்சடக்க வேண்டாம். நம்மை கடைத்தேற்றக் கூடிய எளிமையான அறங்கள் இவைகளில் எந்த ஒன்றையாவது செய்து பார்க்கலாமே.ஒரு கை புல், ஒரு கை பொரி அன்போடு படைத்தால் விநாயகர் வசப்பட்டு விடுவார்.சில துளசி இலைகளில் மகா விஷ்ணு வசப்பட்டு விடுவார்.சில துளி கங்கா தீர்த்தம் பரமேஸ்வரன் உச்சி குளிர்ந்து விடுகிறார்.சின்னச் சின்ன அகல் விளக்குகளில் மகாலட்சுமி பிரசன்னமாகி விடுகிறாள்.
இப்படி அன்போடு செய்யப்படும் பக்தியால் இறைவனை அடையலாம். ஆன்மீகம் என்றால் அன்புதான்.



இந்த அன்பைப் பிடித்து தான் அன்பை படித்து தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவும் அன்பர்களின் பொருளுதவியோடு அன்னசேவை போன்ற பல சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றது.




ஆர்க்கும் இடுமின், அவர், இவர் என்னன்மின்,
பார்த்திருந்து உண்மின், பழம்பொருள் போற்றன்மின்,
வேட்கை உடையீர், விரைந்து ஒல்லை உண்ணன்மின்,
காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே
நூல்: திருமந்திரம் 





எப்படிச் சாப்பிடவேண்டும் தெரியுமா?

முதலில், நாம் சமைத்த உணவை நாம்மட்டுமே சாப்பிடவேண்டும் என்று நினைக்கக்கூடாது. காக்கைகள் சாப்பிடுமுன் தன்னுடைய கூட்டத்தை அழைத்து, கிடைத்த உணவை அவற்றுடன் பகிர்ந்துகொள்கிறதல்லவா? அந்த குணத்தை நாமும் கற்கவேண்டும்.
ஆகவே, சமையல் தயாரானதும் சட்டென்று உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கிவிடக்கூடாது. யாராவது இரவலர்கள் வருகிறார்களா என்று பார்த்து, காத்திருந்து உண்ணவேண்டும்.

அப்படி இரவலர்கள் நம் வாசலில் வந்து நின்றால், பசி என்று வந்த அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உணவு இடவேண்டும். அவர் ஏழையா, பணக்காரரா, முதியவரா, இளையவரா, ஆணா, பெண்ணா, எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் பேதம் பார்க்காமல் உணவை வழங்கவேண்டும்.
அடுத்து, சாப்பாட்டைச் சரியானமுறையில் சமைத்து, அது கெட்டுப்போவதற்குள் சாப்பிடவேண்டும். பழைய, வீணானவற்றைச் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல.



நாம் உணவு உண்ணுதல் என்பது நாமே நமக்கு செய்யும் தானம் ஆகும்.எனவே பொறுமையாக உணவை ரசித்து,ருசித்து சாப்பிட வேண்டும். உணவு உண்ணுதற்கே இப்படி என்றால் அன்னதானம் போன்றவற்றிலும் பிறர் மனம் மகிழும் பொருட்டு , இவர் யார், அவர் யார் என்று பார்க்காது, தேவைப்படும் அன்பர்களுக்கு உணவு கொடுங்கள். 




எனவே தான் மீண்டும், மீண்டும் சொல்கின்றோம். அன்னதானம் செய்வது அனைத்தையும் கொடுப்பது ஆகும். அனைத்தும் என்றால் நம்மிடம் உள்ள பொருள், மனம் போன்றவை. அன்னதானம் போன்ற தானம் செய்ய முதலில் நம்மிடம் உள்ள பொருளை கொடுக்க தயாராக வேண்டும். பொருளை கொடுக்க மனம் தடுக்குமே? இவருக்கா? இவர் நன்றாக தானே உள்ளார்? இவருக்கு கொடுப்பதால் நமக்கு என்ன கிடைக்கும்? என்று மனம் 1008 கேள்விகளை எழுப்பும். இந்த நிலையையும் தாண்ட வேண்டும். அடுத்து பெறுபவர்கள் வேண்டும் அல்லவா? எனவே தான் கொடுக்கும் பொருள், கொடுக்கும் மனம், தானம் செய்ய வாய்ப்பு என மூன்றும் வேண்டும். இவை அனைத்தும் அந்த பரம்பொருளால் தான் தீர்மானிக்கட்டு வருகின்றது.

நம் தளம் சார்பில் பலவழிகளில் தானம் செய்து வருகின்றோம். அவற்றில் சில தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம்.

1. ஊரப்பாக்கத்தில் எத்திராஜ் சுவாமிகள் சித்தர் கோயில் வழியாக சுமார் 10 பேருக்கு மூன்று வேலை அன்னதானம் 
2. கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில் அன்னதானம் 
3. 1000 டன் அரிசி மூட்டைகள் வாங்கி அவற்றை கூடுவாஞ்சேரி வள்ளலார் கோயில், செங்கல்பட்டு ஸ்ரீ அகத்தியர் ஞானக்கோட்டம், திருவாரூர் ஓம்காரம் அமைப்பு, மதுரை திருச்சுனை ஸ்ரீ அகத்தியர் கோயில் என பகிர்ந்து கொடுத்துள்ளோம்.
4. கல்வி உதவி தொகை கொடுத்துள்ளோம்.
5. இது தவிர பல சேவை அமைப்புகளுக்கு பொருளுதவி செய்துள்ளோம். 
6. வள்ளிமலை அடிவார சாதுக்களுக்கு இனிப்பு வழங்கினோம்.( நேற்றைய ஸ்ரீமத் அருனகிநாதர் குருபூஜைக்காக)

இங்கு சிலவற்றை நீங்கள் அறிய வேண்டும் என்பதற்காக கூறியுள்ளோம். இவை அனைத்தும் நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் அருளால் மட்டுமே நடைபெற்று வருகின்றது. குருநாதரின் வாக்கை மீண்டும் தருகின்றோம்.



மீண்டும் சிந்திப்போம். 

மீள்பதிவாக:-

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - https://tut-temples.blogspot.com/2020/11/blog-post.html

TUT - ஆவணி மாத இறைப்பணி - https://tut-temples.blogspot.com/2020/10/tut_16.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் (1)  - https://tut-temples.blogspot.com/2019/08/blog-post_21.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - https://tut-temples.blogspot.com/2020/05/blog-post_11.html

அறம் செய்ய விரும்பு - https://tut-temples.blogspot.com/2019/09/blog-post_57.html

தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - நான்காம் ஆண்டில் ... - https://tut-temples.blogspot.com/2020/04/tut.html

 இன்றைய இறைப்பணியோடு கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_14.html

அனுஷத்தில் அவதரித்த மனுஷ தெய்வம் - மகா பெரியவா - https://tut-temples.blogspot.com/2020/06/blog-post_5.html

 தவமா? கூட்டுப்பிரார்த்தனையா? - https://tut-temples.blogspot.com/2019/06/blog-post_14.html

  நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்!  - https://tut-temples.blogspot.com/2019/05/blog-post_24.html

 TUT அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - https://tut-temples.blogspot.com/2020/03/tut.html

இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே ! மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temples.blogspot.com/2020/01/blog-post_12.html

நல்வினையாற்ற 19 வழிகள் - தானம் செய்ய பழகு - https://tut-temples.blogspot.com/2020/09/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - எதிர்பார்ப்பினைத் தவிர் - https://tut-temples.blogspot.com/2020/03/19_31.html

நல்வினையாற்ற 19 வழிகள் - வாழ்க்கையென்பது என்ன? - https://tut-temples.blogspot.com/2020/03/19.html

நல்வினையாற்ற 19 வழிகள் - https://tut-temples.blogspot.com/2019/12/19.html

No comments:

Post a Comment