அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
ஜீவ நாடி அற்புதங்கள் என்ற தொடர் பதிவில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். நம் தளத்திற்கு முருகன் அருள் முன்னின்று நடத்துவதால் தான், நாம் செய்யும் அனைத்து சேவைகளும் அற்புதமாக நடைபெற்று வருகின்றது. இந்த பெருந்தொற்று காலத்தில் நம் தளம் சார்பில் குருநாதரின் அருளால் பல இடங்களில் சேவை செய்து வருகின்றோம். இதனை யொட்டி குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருள்வாக்கை இங்கே தருகின்றோம்.
இது தான் இப்போதைய தேவை..அகத்தியமே சத்தியம். சத்தியமே அகத்தியம். இதனுடன் தர்மத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.இவை இரண்டையும் நாம் கைக்கொண்டால் நம்மைத் தேடி இறை வரும் என்பதே உண்மை. இனி இன்றைய ஜீவ நாடி அற்புதங்கள் பகுதிக்கு செல்வோமா?
நமது ஞானஸ்கந்தர் நாடியில் மகர இராசியினருக்கு வரும் மூன்று முறை இந்த மகேஸ்வர பூஜை செய்ய வேண்டும் என்று வந்துள்ளது.பலர் செய்து ஏராளமான அதிசயங்களைப் பெற்றுள்ளனர். ஆசிரமம் எங்கு உள்ளது அவரது தொலைபேசி எண் வேண்டும் எனப் பலர் கேட்கிறார்கள்என்பதால் அந்த தகவலையும் சொல்லி விடுகிறேன். கிரிவலப் பாதையில் பழனி ஆண்டவர் சந்நதி பின்புறம் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் உள்ளது.
ஆசிரமத்தில் ஸ்ரீசரவணன் சுவாமிகளை 99448 00220 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எதற்காக இவ்வளவு விளக்கம் கொடுக்கிறேன் என்றால் மேற்படி சொன்ன நகைக்கடை அதிபர் திருவண்ணாமலையில் வேறு யாரிடமோ பணத்தை மட்டும் கொடுத்து பூஜை செய்யச் சொல்லி விட்டார். அவர்கள் செய்தார்களோ? இல்லையோ தெரியாது. மீண்டும் மூன்று மாதம் கழித்துஎன்னிடம் வந்தார். ஐயா! நாங்கள் மகேஸ்வர பூஜை செய்து விட்டோம்.இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று சொன்னார்கள். சரி ஏதேனும் காரணம் இருக்கும் என்று முருகனைப் பூஜித்து மீண்டும் சுவடியைப் பிரித்தேன். இப்போது அதே அகத்தியர் வந்தார். பின்வருமாறு உரைத்தார்.
“பூஜையது இல்லை
புண்ணியமாகவில்லை
புவனமதில் இதுபோலும்
பலருண்டு
சிலருண்டு சிறப்பாகச் செய்ய
முறையாகச் செய்துவா
முடியுமது காரியம்
முருகனது ஆசி! ஆசி! ஆசி!
இவரிடம் பணம் வாங்கிய நபர் பூஜை செய்யவில்லை என்றும்,புண்ணியம் உண்டாகவில்லை என்றும் இந்த உலகத்தில் இதுபோல் ஏமாற்றுபவர் பலருண்டு என்றும், சிலர் மட்டுமே சிறப்பாகச் செய்கிறார்கள் என்றும், அப்படி சிறப்பாகச் செய்யுமிடத்தில் முறையாகச் செய்து வந்தால நீ நினைத்த காரியம் முருகனது அருளால் முடியும் என்றும் முருகனது சீடர் அகத்தியர் உரைத்தார். அதன் பின்பு அவர் பணம் கொடுத்தவரை விசாரித்து பார்க்கும்போது அவர் வேறொருவரிடம் பணம் கொடுத்து விட்டதாகவும், அவர் செய்தாரோ இல்லையோ என்பது தெரியாது என்றும் பதில் உரைத்தார். அதன் பின்பு தான் ஸ்ரீதயவு சித்தாஸ்ரமம் பற்றியும் அதன் மகிமைகளையும் எடுத்துரைத்து சரவணன் சுவாமிகளிடம் தொடர்பு செய்து கொடுத்தேன்.
செய்து முடித்து 90 நாளில் ஒரு மிகப்பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தனது மகனுக்கு இந்த நகைக்கடை அதிபரின் மகளை மணம் முடித்துக் கொண்டார். ஏதோ சாதாரண பரிகாரம் செய்வது போன்று இந்த மகேஸ்வர பூஜையை எண்ணி விடக் கூடாது. இல்லை இது பணம் சம்பாதிக்கும் வழியோ என்று நினைத்து மேலும் பாவத்தை சேர்த்துக் கொள்ளக் கூடாது. என்னைப் பற்றி அனைவருக்கும் நன்றாகவே தெரியும். என்னை விட எனது குருநாதரையும் அனைவருமே அறிவார்கள். எனவே நாடியில் வருவது மகேஸ்வர பூஜை என்று தான் வரும் அதை எங்கு வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால் முறையாகச் செய்ய வேண்டும். அது தான் முக்கியம்.
தயவு ஆஸ்ரமத்தைப் பொறுத்த வரையில் மிகவும் சிறப்பாக முறையாக மகேஸ்வர பூஜையை செய்யப்படுவதால் ப்ராப்தம் இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் தான் இவ்வளவுவிளக்கம் இங்கு தர வேண்டியது அவசியமாகிறது.
அடியார்கள் சதா சர்வ காலமும் அந்த அருணாசலனையே துதித்து, அந்த அருணாசலத்திலே வாழ்ந்து அந்த அருணாசலனுக்கு தம்மை அர்ப்பணம் செய்த உண்மைத் துறவியாக வலம் வருகிறார்கள். எவர் ஒருவர் சிவ சின்னங்களான விபூதி, ருத்திராட்சம், ஜடாமுடி, கமண்டலம், தவக்கோல் ஆகிய ஐந்தும் தரித்திருக்கிறார்களோ அவர்கள் சிவனடியார்கள் மட்டுமில்லாது அவர்கள் உண்ணும் உணவு அந்த சிவனே உண்ணுவது போலாகும் என்றும் புராணங்கள் புலப்படுத்துகின்றன. சாஸ்திரங்கள் சாட்சி கூறுகின்றன. இதிகாசங்கள் இயம்புகின்றன. எனவே சாதாரண
மக்களுக்குச் செய்கின்ற அன்னதானம் ஒரு மடங்கு பலன் தரும் என்றால் அடியார்களுக்கு செய்யப்படுகின்ற அன்னதானம் ஆயிரம் மடங்கு பலன் தரும் என்பது அனுபவத்தின் கண்கூடு. சில உண்மைத் துறவிகள் நேரிடையாக நாம் தரும் உணவை ஏற்றுக் கொள்வதில்லை என்பதையும்வாசகர்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஜீவநாடி இரகசியங்கள் என்னும் தொடரில் வரும் உண்மைச் சம்பவங்கள் நூற்றில் ஒன்றுதான். இது போல் ஆயிரம் இரகசியங்களை அனுபவித்துவருகிறேன். பொதுவாக கர்ம வினை குறையாமல் எந்த காரியங்களும் பலிப்பதில்லை. நமது கர்மவினையை மிகச் சுலபமாகக் குறைக்க ஒரே வழி அன்னதானம் மட்டுமே,. அதனால் தான் மகேஸ்வர பூஜை மிக சிறப்பு
இன்னும் ஒரு மாணவன் என்னைத் தேடி வந்து ஜீவநாடி கேட்க வேண்டும் என்றார். வந்தவர் மீன ராசி. முருகப் பெருமான் பின்வருமாறு
“மகிமை புகழ் மீனமதில்
மேன்மையாய் அவதரித்து
மலைபோலும் துன்பத்தை
அனுபவிக்கும் காலமது
மந்தனது சரியில்லா
நிலை போலும் இக்காலம்
அட்டமத்து சனியாலும்
அடுக்கான துன்பமாகும்
படிப்பிலே வெற்றி என்றால்
பல வகையில் கஷ்டம்
பங்காக பதினெட்டு அடிவேலு உண்டு
பச்சரிசி மாவால் தீபம் பதினெட்டு போட்டு
மதுரமது வைத்து பூஜித்து பின்
தேர்வுக்கு செல் வெற்றியாம் ஆசி! ஆசி! ஆசி!
மீன இராசியில் பிறந்துள்ளதால் இந்த காலம் மலைபோலும் துன்பத்தை அனுபவிக்கும் காலம் ஆகும். மந்தன் என்று சொல்லப்படுகின்ற சனி பகவான் 8ல் இருப்பதால் அடுக்கடுக்கான துன்பம் வரும். படிப்பிலே வெற்றி உண்டு என்றாலும் பல வகையிலும் கஷ்டம் வரும் என்று பரிகாரம் உரைத்தார் ஸ்ரீஞான ஸ்கந்தமூர்த்தி.
திருவண்ணாமலை ஸ்ரீவகாப் ஜோதி அக்பர் சுவாமிகள் தனது மீனாட்சி நாடியில் சொன்னபடி நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்தில் 18 சித்தர்களை முருகப் பெருமானது 18 கண்களாகக் கொண்டு 18 அடிவேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமாவாசையிலும் பன்னீரால் அபிஷேகம் செய்து சந்தனக் காப்பு போட்டு பூஜை செய்ய வேண்டும் என்று மீனாட்சி நாடியில் வந்த முறைப்படி அப்படியே தவறாமல் செய்யப்படுகிறது. நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயம் இருக்கின்ற இடத்தில் பல சித்தர்கள் தங்கம் செய்த இடம் என்று நாடியில் சொல்லப்பட்டுள்ளது. இப்படி சிறப்புமிக்க ஆலயத்தில் உள்ள 18 அடி வேல் முன்பு 18 நெய்தீபம் பச்சை மாவில் ஏற்ற வேண்டும் என்றும், தேன் வைத்து பூஜிக்க வேண்டும் என்றும் அந்த மாணவனுக்கு முருகப்பெருமான் வாக்கில் உரைத்தார். அப்படி செய்தால் தேர்வில் வெற்றிபெறலாம் என்றும் உரைத்தார்.
இதைக் கேட்ட அந்த மாணவனும் அவ்விதமே செய்து யாரும் எதிர்பார்க்காத அளவில் மதிப்பெண் பெற்று தற்போது மேற்கல்வி படித்து வருகிறார். நமது ஸ்ரீஞானஸ்கந்த மூர்த்தி ஆலயத்திலும் சேவை செய்கிறார். எனவே நம்பினோர் கெடுவதில்லை என்பது நான்கு மறை தீர்ப்பு நம்பிக்கை இல்லாமல் அந்த இறைவனே வந்தாலும் ஒரு பலனும் நடக்காது என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.
ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
மீள்பதிவாக:-
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 44 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/06/44.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 43 - அந்தநாள் >> இந்த வருடம் - [2021-22] - https://tut-temples.blogspot.com/2021/04/43-2021-22.html
ஜீவ நாடி அற்புதங்கள் பகுதி - 42 - ஓம் ஸ்ரீ ஞானஸ்கந்த மூர்த்தி புகழ் ஓங்கட்டும் - https://tut-temples.blogspot.com/2021/01/42.html
No comments:
Post a Comment