அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நேற்றைய தின மாணிக்கவாசகர் குரு பூசை அனைத்து தலங்களிலும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. அதனையொட்டிய பதிவாக வேண்டத்தக்கது அறிந்த இறை பற்றி சில துளிகளை இங்கே காண உள்ளோம். நம் அருளாளர்கள் வழங்கிய முத்துக்களை தினசரி பாராயணம் செய்வதை நம் கடமையாக கொள்ள வேண்டும். பதிகங்கள் அனைத்தும் அருளாளர்கள் வழங்கியவை என்று சொல்வதை விட இறையே அருளாளர்களால் வழங்கியது என்று தெளிவாக புரிகின்றது. அதுவும் இந்த பெருந்தொற்றுக்காலத்தில் தினசரி பதிகங்கள் படிக்கும்படி நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்குரைத்து உள்ளார் திருநீலகண்ட பதிகம், கோளறு பதிகம் போன்ற பதிகங்கள், திருப்புகழ், கந்த ஷஷ்டி கவசம் போன்றவற்றை தினமும் பாராயணம் செய்வது நமக்கு எந்நாளும் நன்மையே தரும்.
அந்த வகையில் நம்மை ஈர்த்த திருவாசகம் - சிவபுராணம் குழைத்த பத்தில் இருந்து ஒரு பாடல்
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்ட முழுதுந் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டி என்னைப் பணிகொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும் அதுவே வேண்டின்அல்லால்
வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
பாடலை ஒரு அல்ல..பல முறை படித்து பாருங்கள். உங்களுக்குளாகவே அன்பு பிறக்கும்.நாம் வேண்டத்தக்கது அறிந்த, வேண்டியவற்றை தருகின்ற இறைவனே..உன்னைக் காண விரும்பிய பிரமன், திருமால் என்பவருக்கும் அருமையாய் நின்ற வனாகிய நீ நீயாகவே விரும்பி, என்னையாளாகக் கொண்டனை. என் பொருட்டு நீ விரும்பி எதனை அருள் செய்தனை; அதனையே யானும் விரும்புவதல்லது, நானாக விரும்புகின்ற பொருள் ஒன்று, உளதாகு மெனில் அந்தப் பொருளும் உன்னிடத்தில் நான் வைக்கின்ற அன்பே யன்றோ?
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்
குருவே சரணம் - ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம ஸ்வாமிகள் அவதார திருநாள் - https://tut-temples.blogspot.com/2021/05/blog-post.html
ஐந்தாம் ஆண்டில்...தேடல் உள்ள தேனீக்களாய் (TUT) குழு - https://tut-temples.blogspot.com/2021/04/tut.html
எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் சித்திரை ஆயில்ய ஆராதனை - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - https://tut-temples.blogspot.com/2020/04/blog-post_30.html
பட்டமரம் துளிர்க்குமடா கும்பன் சொன்னால்..- மாசி மாத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temples.blogspot.com/2020/03/blog-post_4.html
வைகாசி மாத மோட்ச தீப வழிபாடு - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - 22.05.2020 - https://tut-temples.blogspot.com/2020/05/22052020.html
No comments:
Post a Comment