அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
இன்று ஆனி மாத ஆயில்ய நட்சத்திரம். போற்றினால் உமது வினை அகலுமப்பா என்ற நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமான் வாக்கிற்கிணங்க நாம் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய தரிசனம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பெற்று வருகின்றோம். எண்ணிக்கையில் என்ன இருக்கின்றது? எண்ணங்களில் தான் அனைத்தும் இருக்கின்றது..ஆம். எண்ணமே வாழ்க்கை. ஒவ்வொரு முறை ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனையில் நாம் மெய் உருகி வருகின்றோம் என்பதே உண்மை. ஆடி மாத பௌர்ணமி முதல் நம் வழிபாட்டில் மீண்டும் ஒரு சிறப்பு உள்ளது. குரு பூர்ணிமா அன்று அந்த வழிபாடு தொடர உள்ளோம். இதற்கு வழக்கம் போல் நம் குருநாதர் அகத்திய பெருமான் ஆசி அளித்து உள்ளார்.விரைவில் அந்த வழிபாடு பற்றி அறிவிப்பு செய்ய குருவின் தாள் பணிகின்றோம். பதிவின் இறுதியில் இன்றைய பிரார்த்தனை ஒன்றை குருவிடம் சமர்பித்துள்ளோம். நீங்களும் படித்து பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகின்றோம்.

நெஞ்சார மனதில் நினைத்து வழிபட்டு வரும் அடியார்களுக்கு நிழல் போன்று இருக்கும் நம் குருநாதரின் அருளை இன்றைய பூசையில் யாம் பெற்றோம். மிக நீண்ட நாள் கழித்து 24 நிமிட சித்தர்கள் பூஜை தொகுப்பை படித்து அக மகிழ்ந்து குருவிடம் ஆசி பெற்றோம். மீண்டும் கூடுவாஞ்சேரி ஸ்ரீ அகத்தியர் தரிசனம் பெற உங்களை அழைக்கின்றோம்.
வழக்கம் போல் பூஜைக்கு தேவையான பொருட்களை சேர்த்து, ஒவ்வொன்றாக சரி செய்து வைத்தோம்.
ஆயில்ய ஆராதனைக்கு முன்பு நம் குருநாதர் ஸ்ரீ அகத்திய பெருமானின் அருட்காட்சி பெற்றோம்.
இதோ..நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அபிஷேகம் இனிதே ஆரம்பம்.
மூலிகை பொடி அபிஷேகம் தொடர்ந்தது.
அடுத்து பஞ்சாமிர்த அபிஷேகத்திற்கு அனைவரும் தயாராகுங்கள்.
பால் அபிஷேகமும் தயிர் அபிஷேகமும் இங்கே கண்டோம்.
அடுத்து சந்தன அபிஷேகத்திற்கு தயாரானோம்.
அடுத்து விபூதி அலங்காரம் காண உள்ளோம்.
சந்தன அபிஷேகம் மற்றும் விபூதி அலங்காரத்தில் நம் குருநாதரின் தரிசனத்தை காண முடிகின்றது. மேலும் ஒருமுறை மேலே சென்று மீண்டும் தரிசனம் பெற்றுக்கொள்ளுங்கள். அடுத்து அலங்காரம் நோக்கி நம் மனது சென்றது.
அடுத்து 24 நிமிட சித்தர்கள் போற்றி தொகுப்பை படித்தோம்.
அடுத்து குருக்கள் பதிகம் பாடி லோக ஷேமத்திற்கு பிரார்த்தனை செய்தார். இதோ தீப தரிசனம் காண உள்ளோம்.
இந்த ஜோதி தரிசனம் நம்முள் உள்ள அகத்தின் ஈசனை காட்ட வேண்டி பிரார்த்தனை செய்தோம். மீண்டும் தீப தரிசனம் பெற்றோம். இப்போது நாம் பெறுவது ஒரு முக ஜோதி தரிசனம் ஆகும்.
இப்போது மீண்டும் நாம் பஞ்ச முக தீப தரிசனம் பெற உள்ளோம்.
நம் அகத்துள் உள்ள ஈசனாம் அகத்தீசனை ஜோதி கொண்டு விழிப்படைய செய்வோம். இது தான் அருட்பெருஞ்ஜோதியுடனான ஸ்ரீ அகத்தியர் தரிசனம் ஆகும். அருட்பெருஞ்ஜோதியை கொண்டும் நம் குருநாதரின் அருட்பார்வையை பற்றி விடலாம். இதன் மூலம் இறையை நாம் நம் உள்ளத்தில் தரிசிக்கலாம். குருநாதர் கூறுவது போல் இறையை அன்பால் நம் உள்ளத்தில் தரிக்க, தரிக்க..அந்த இறை சிக்கலாம். ஆக மொத்தத்தில் இறையை "தரி"சிக்கலாம்.
அடுத்து பிரசாதம் விநியோகம் செய்து நாமும் பெற்றுக்கொண்டோம்.

இன்றைய பூசை சங்கல்பம்
அப்பனே அகத்திய பெருமானே! ஆதி மகாலட்சுமி அருளால் சன்மார்க்கத்தில் நிற்கும் அன்பர்களுக்கு அருட் செல்வம்,பொருட் செல்வம் கிட்ட ஆசி புரிய வேண்டுகிறோம்.
ஆதி பராசக்தியே,உமையொரு பாகனாக நின்ற எங்கள் அன்னையே திருமணத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கும் சன்மார்க்க அன்பர்களுக்கு மனமொத்த மங்கை / மணாளன் அமைய வேண்டுகிறோம்.
இகபர சுகமளிக்கும் ஈசனே,குழந்தை வரம் வேண்டி ஏங்கி நிற்கும் அன்பர்களுக்கு சித்தர்கள்,ஞானியர்,சன்மார்க்கத்தை விரும்பும் குழந்தைகள் பிறக்க வேண்டுகிறோம்.
உணவு மற்றும் ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் பல்கி பெருக மழைக் கடவுளான இந்திராணி சமேத இந்திரரையும்,வாருணி சமேத வருணரையும் வேண்டுகிறோம்.
எட்டா கனி போல் இருக்கும் சித்தர்களின் மாமறை மீண்டும் வெளிப்பட வேண்டுகிறோம்.
ஏழாம் பாவத்தால்,மன சஞ்சலத்தில் இருக்கும் சன்மார்க அன்பர்களின் மனக்குறை தீர வேண்டும்.
ஐவகை நிலங்களில் இயற்கை வளங்கள் அன்னை பூமாதேவி மற்றும் ஆதிசேசன் அருளால் பெருக வேண்டும்.
ஒப்பற்ற மெய்ஞானம் உலகெங்கும் பரவ வேண்டும்.
ஓங்கார சொருபமான ஞான ஸ்கந்தரின் அருளால் சன்மார்க அன்பர்களுக்கு நாதம் பெருக வேண்டும்.
ஔஷதங்கள் சித்தர்களின் கருணையால் மீண்டும் பொலிவு பெற வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment